Friday, July 15, 2005

தமிழ்மணத்தில் இறுதி வார்த்தைகள்..



இளமைக் கொலுவிருக்கும்
இனிமை சுவையிருக்கும்
இயற்கை மணமிருக்கும் - பருவத்திலே
பெண் இல்லாமல் சுகமில்லை உலகத்திலே.

கறுப்பியின் அலுவலகம் ஜீலை கடைசி வாரம் ஸ்காபுரோ எனும் நகரத்திலிருந்து பெரி எனும் நகரத்திற்கு (கிட்டத்தட்ட 100 கிலோ மீட்டர் தொலைவிற்கு) இடம் மாறுகின்றது. எனவே கறுப்பி வேலையை விடவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றாள்.

இனி என்ன செய்வது? 5நிமிடக்கார் ஓட்டத்தில் அலுவலகத்திற்கு வேண்டிய நேரம் வந்து வேண்டிய அளவு நேரம் தமிழ்மணத்தில் விளையாடி வேண்டிய நேரம் வீட்டிற்குப் போய்க்கொண்டிருந்த கறுப்பிக்கு இனி ஒரு புதிய அலுவலக்த்திற்குச் சென்று கொஞ்சம் சீரியஸாக வேலை செய்வது என்பது எவ்வளவு சாத்தியம் என்று புரியவில்லை.

கொஞ்சம் கண்களைச் சிமிட்டி, முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு, நான் பேசாமல் "House wife" ஆக இருந்து விடுகின்றேனே என்றால் (இப்போதெல்லாம் ஆண்கள் நல்ல உசாராக இருக்கின்றார்கள்) கணவர் முறைக்கின்றார். எனக்கு ஒரு அலுவலகத்திற்குச் சென்று வேலை செய்யப் பிடிக்கவில்லை. வீட்டிலும் இருக்க முடியாது. என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கின்றேன். திரைப்படத்துறை சம்பந்தமாக ஏதாவது படிக்கும் எண்ணமும் உள்ளது. எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை.

பூமியில் பிறப்பதும்
வானத்தில் பறப்பதும்
அவரவர் எண்ணங்களே
நெஞ்சினில் துணிவிருந்தால் - ஜிக்கு ஜிக்கு ஜிக்கு
நிலவுக்கும் போய் வரலாம் - ஜிக்கு ஜிக்கு ஜிக்கு

அலுவலகத்தில் இருந்து கொண்டு கிடைக்கும் நேரங்களில் தமிழ்மணத்தில் நினைத்ததை எழுதவும், வம்பளக்க முடிந்தது. ஆனால் வீட்டிற்குப் போனால் மின்கணனிப்பக்கம் போவதில்லை. (முக்கியமாக ஏதாவது செய்ய இருந்தால் தவிர). வீட்டில் இருந்தால் தொலைக்காட்சி பார்ப்பதும் வாசிப்பதுவும் மட்டுமே பிடித்திருக்கின்றது. எனவே இந்தக் காரணங்களால் கறுப்பி இனிமேல் அதிகம் தமிழ்மணப் பக்கம் வலம்வரமாட்டாள்.
எனவே தமிழ்மண நண்பர்களிடமிருந்து விடை பெறும் நேரம் வந்து விட்டது என்று நம்புகின்றேன். முடியும் போது நுனிப்புல் மேய்வது போல் பிடித்த தளங்களை ஒருமுறை மேயும் சந்தர்ப்பங்களில் சில பின்னூட்டங்கள் நிச்சயமாக இடுவேன். (முடிந்தால் அவ்வப்போது ஏதாவது எழுத முயலலாம்)

மறைந்த கலைச்செல்வனின் துணைவியார் லஷ்சுமி மீண்டும் நண்பர்களின் உதவியுடன் “உயிர்நிழல்” சஞ்சிகையைக் கொண்டு வர உள்ளார் என்று தெரிந்து கொண்டேன். கறுப்பியின் பல சிறுகதைகள் உயிர்நிழலில்தான் வெளியானது. எனவே தொடர்ந்தும் நேரம் கிடைக்கும் போது உயிர்நிழலுக்கு எழுத வேண்டும் என்றே விரும்புகின்றேன். செப்ரெம்பர் மாதம் இடம்பெறஉள்ள குறும்படவிழாவிற்கான படப்பிடிப்பு படித்தொகுப்பு என்பனவற்றில் தற்போது ஈடுபட்டுள்ளோம். 2006ம் ஆண்டு மேடை ஏற உள்ள நாடகங்களின் ஒத்திகையும் செப்ரெம்பர் மாதம் தொடங்க உள்ளோம். எனவே அனேகமான கறுப்பியின் நேரங்கள் இவற்றுடன் போய் விடும்.

எனவே தோழர்களே நன்றாக இருங்கள். வாழ்வை நன்றாக அனுபவியுங்கள். நிறம்ப வாசியுங்கள், எழுதுங்கள், படம் காட்டுங்கள் குடியுங்கள் சாப்பிடுங்கள் இத்யாதி இத்யாதி.. அனுபவியுங்கள். கறுப்பி உங்களுடன் சண்டை பிடித்திருந்தால் ஒன்றையும் மனதில் வைத்திருக்காதீர்கள். கறுப்பியின் மனது வெள்ளை(கள்ள) மனது. அட்ரா அட்ரா அட்ரா.

My E-mail. thamilachi2003@yahoo.ca
Web - www.nirvanacreations.ca

எல்லோருக்கும் நல்வாழ்த்துக்கள். Love You All

33 comments:

-/பெயரிலி. said...

கறுப்பி வலை நீங்கி (நாம்) வாழ்க வளர்க!
புதிய இடம் வதைக்காமல் இருக்க வாழ்த்து ;-)

சினேகிதி said...

porave porave..karupi porave...
vellai kalla ullamulla karupi porave....
aatukal soup iki aapu vachitu porave....
cocktail soup i cancel panitu porave...
en seiven iyagooo...
porave porave..karupi porave...

dondu(#11168674346665545885) said...

Hello pretty young lady,
So it is farewell? You will be missed by all.
Regarding the lines quoted by you:
1. "இளமைக் கொலுவிருக்கும்
இனிமை சுவையிருக்கும்
இயற்கை மணமிருக்கும் - பருவத்திலே
பெண் இல்லாமல் சுகமில்லை உலகத்திலே"
From film "Hello Mr. Zamindar, screened 1965, starring Gemini Ganesan, Savitri, M.R.Radha et al. Story stolen from "If I were you" by P.G.Wodehouse.

2. "பூமியில் பிறப்பதும்
வானத்தில் பறப்பதும்
அவரவர் எண்ணங்களே
நெஞ்சினில் துணிவிருந்தால் - ஜிக்கு ஜிக்கு ஜிக்கு
நிலவுக்கும் போய் வரலாம் - ஜிக்கு ஜிக்கு ஜிக்கு"
From film "Shanti Nilayam, starring Gemini Ganesan, Kanchana, Nagesh and others, screened 1969. Some scenes plagiarized from the film "Sound of Music".

Are you a fan of Gemini Ganesan? Well, I am.

Do try to keep in touch with Tamilmanam and all the best in your further endeavours.

Regards,
Dondu Raghavan

சினேகிதி said...

பிரகாஷ்ராஜ் ஐயா படத்தில செத்துப்போனமாதரி நடிப்பார்..யார் யாரெல்லாம் தனக்காக அழுவாங்க என்று பார்க்க.கண்ணதாசனும் அப்படிp செய்தவர் என்று யாரோ சொன்னவை.(இதுக்கும் கறுப்பின்ர இந்தப் பதிவுக்கும் கடவுள் சத்தியா சம்பந்தமே இல்லை.)

contivity said...

கறுப்பி அவர்களே.. நான் எல்லாம் இப்போது தான் வலைப்பதிய வந்தேன். என்னை ஊக்கப் படுத்திவிட்டு இப்படி பாதியிலெயெ கழண்டுக்கலாமா?

பரவாயில்லை.. புதிய அலுவலகத்திலும் சிறப்பாகப் பணிபுரிய வாழ்த்துக்கள்..

Thangamani said...

புதிய பணியிடத்தில் சிறக்க வாழ்த்துக்கள்! அங்க கணினி இல்லையா என்ன? எப்படியோ நல்லா இருங்க! அலாஸ்காவுல வலைப்பதிவர் மாநாடு நடந்தா உங்களுக்குச் சொல்லுறேன்.

பத்மா அர்விந்த் said...

கறுப்பி
மீண்டும் படிப்பதும் ஒரு சுகமே. எதுவாயினும் வாழ்த்துக்கள்.

U.P.Tharsan said...

அடடா என்ன ஒருத்தர் ஒருத்தராக செல்கிறீர்களே! என்ன நடந்தது.

சன்னாசி said...

வழக்கம்போல, "போய் வருக". ;-)

புதிய பணியிடம்/பணி நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள்.

SnackDragon said...

கறுப்பி ,
என்ன இப்படி திடீர்னு? சண்டைக்கு ஆள் குறையுதேன்னு நினைச்சாதான் கஷ்டமா இருக்கு.
எங்களுக்கும் ஒரு நல்ல நாள் வரும், இது போல ;-)

கறுப்பி said...

நன்றி அனைவருக்கும். புதிதாக ஏதாவது அலுவலக வேலை செய்யப்போகின்றேனா தெரியாது. அப்படிச் செய்தாலும் தமிழ்மணத்தில் வம்பளக்க முடியாது.

//Hello pretty young lady,\\ by Dondu
எனக்கு டோண்டுவை வரவரப் பிடிக்கின்றது.

shehithy Lol (*_*)

தமிழ்மணத்தை அடிக்கடி படிப்பேன். முடிந்தால் பின்னூட்டமிடுவேன். கார்த்திக்குடன் அவ்வப்போது சண்டையுமிடுவேன்.

Peyarili,Contivity, Thenthuli, Thangamani, U.P Tharshan, Madreesar thanks.
byee guys take care.

Online Security Tips and Tricks for Kids said...

கறுப்பி, உங்கள் எங்கள் வாழ்த்துக்கள்.. உங்கள் பதிவுக்கு அருமையான பின்னோட்டமிட்ட சினேகிதி பின்னோட்டம் உன்மையாகட்டும்..

சன்னாசி said...

//Madreesar//
நாசமாப் போச்சு! ;-)

சினேகிதி said...

Shankar entha pinotam pathi solringal?

"porave porave..karupi porave...
vellai kalla ullamulla karupi porave....
aatukal soup iki aapu vachitu porave....
cocktail soup i cancel panitu porave...
en seiven iyagooo...
porave porave..karupi porave... "

ITHUVA?

"பிரகாஷ்ராஜ் ஐயா படத்தில செத்துப்போனமாதரி நடிப்பார்..யார் யாரெல்லாம் தனக்காக அழுவாங்க என்று பார்க்க.கண்ணதாசனும் அப்படிp செய்தவர் என்று யாரோ சொன்னவை.(இதுக்கும் கறுப்பின்ர இந்தப் பதிவுக்கும் கடவுள் சத்தியா சம்பந்தமே இல்லை.) "

ITHUVA?

இளங்கோ-டிசே said...

கறுப்பி, புதுச் சூழல் நன்கு அமைய வாழ்த்துக்கள். இங்கு வராது போனாலும் உங்களை குறும்பட, நாடக விழாக்கள், இலக்கியக்கூட்டங்களில் சந்திக்கலாம் என்றே எண்ணுகின்றேன். எனக்கும் கார்த்திக் போலத்தான் கவலை, அடிபடவும் கடிபடவும் ஒருவர் குறைகிறாரே என்று. அதுவும் நீஙகளும் பெயரியும் விடியவெள்ளனவே 'சண்டைக்கோழிகள் ஆவதும், குஞ்சுக் கோழி போல பிறகு கார்த்திக் சண்டையில் தொத்திக் கொள்வதையும் அவ்வளவு இலகுவில் மறந்துவிடமுடியுமா என்ன :-)?

கறுப்பி said...

மாண்ட்ரீஸர் sorry

DJ Shankar thanks

கறுப்பி said...

பிரகாஷ்ராஜ் ஐயா படத்தில செத்துப்போனமாதரி நடிப்பார்..யார் யாரெல்லாம் தனக்காக அழுவாங்க என்று பார்க்க.கண்ணதாசனும் அப்படிp செய்தவர் என்று யாரோ சொன்னவை.(இதுக்கும் கறுப்பின்ர இந்தப் பதிவுக்கும் கடவுள் சத்தியா சம்பந்தமே இல்லை.) "

Ithu சினேகிதி

சினேகிதி said...

\\shehithy Lol (*_*)\\ Karumpy ennai ean shehithy akineengal?

சன்னாசி said...

//மாண்ட்ரீஸர் sorry//
அட, அதற்கடுத்துப் போட்டிருந்த ;-)ஐப் பார்க்கவில்லையா? இதெல்லாம் ஒரு விஷயமா!! நல்லவேளை உங்கள் மிக்ஸியில் அரைபட்டதில் இன்னும் 'மாண்ட'ரீசர் ஆகவில்லை!!

SnackDragon said...

how about maddresser? ;-)

கறுப்பி said...

hmmm I have to go now..

Montreesor? Thamil Paampu (*_*) is it correct?

Karthik whats your problem man?

snehithy I will see you one day.o.k

கிஸோக்கண்ணன் said...

கறுப்பி,

ஏனாம் பெரிக்குப் போகினம்?

\தொலைக்காட்சி பார்ப்பதும் வாசிப்பதுவும் மட்டுமே பிடித்திருக்கின்றது./
உங்களுக்கு எது விருப்பமோ அதை விருப்பத்தோடு செய்யுங்க.

ஆனால் பாருங்கோ, தொலைக்காட்சியிலுள்ள வன்முறையை (அல்லது ஏதாவது முறையை) பார்த்து மனம் நொந்து நீங்கள் வலைப்பதிவுக்கு அடிக்கடி வரத்தான் போகின்றீர்கள்.

எல்லாம் நன்மைக்கே!

வன்னியன் said...

கறுப்பியாவது போறதாவது.
வேணுமெண்டா இருந்து பாருங்கோ.
தமிழ்மணம் தமிழ்மணமெண்டு சொல்லிச்சொல்லியே அந்தப்பேர கொல்லிறியள்.
தமிழ்மணத்தில ஏதாவது வேல செய்தனியளோ கறுப்பி?

-/பெயரிலி. said...

கறிவேப்பிலி,
இந்த (*_*) உம் கொண்டே போறியள்? எனக்குத் தந்திட்டுப் போங்களன். உங்களுக்கு இனி தேவப்படாதெல்லே?

Narain Rajagopalan said...

ஆக கிளம்பி போறீங்க! எங்கிருந்தாலும் நல்லா இருங்க. அவ்வப்போது வந்து சண்டை போடுங்க.

NONO said...

வணக்கம்!! மீண்டும் வருக!!!!

சினேகிதி said...

\\snehithy I will see you one day.o.k\\

Karupy when would tat be???

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

போறாவே கறுப்பிதானே..
நல்லா எழுதிற பதிவை விட்டு… :o(

புது இடத்தில் வலைப்பதிவுகள் வாசிக்கக் கிடைக்க வாழ்த்துக்கள்.

எனக்கும் சில வேளைகளில் தோன்றுவதுதான்.. வீட்டில் நிற்பமென்டு..ஹ்ம்ம்!! நின்டா நல்லா இருக்கும். எத்தினையோ வேலைகள் செய்யலாம்.

நீங்க கெதியில திரும்ப எழுதுவீங்க என்டுதான் நான் நினைக்கிறன்!

ROSAVASANTH said...

சென்று வருக, நன்றாய் இருங்கள்!

ஜெ. ராம்கி said...

வாழ்த்துக்கள்... என்றைக்காவது சந்திப்போம்!

முகமூடி said...

எல்லாம் சரி கறுப்பி... அடுத்த பதிவு எப்போங்கறதயாவது ஒரு பதிவா போடலாமே?

தெருத்தொண்டன் said...

(அதுவும் கறுப்பி போன்ற அற்புதக் கலைஞர் விடைபெற்ற பின்) வலைப்பதிவுகளில் “வீணாக” நேரத்தைச் செலவழிப்பவர்களுக்கு என்ன தண்டனை?

இப்படி ஒரு பதிவு போட்டிருக்கிறேன்..
http://theruththondan.blogspot.com

நான் மிகச் சமீபத்தில்தான் வலைப்பதிவுக்கு வந்தேன். உங்கள் கழிப்பறை ஆய்வு தான் நான் வாசித்த உங்கள் முதல் பதிவு. அதில் நான் உள்ளிழுத்த நறுமணம் இன்னும் சுவாசத்தில் இருக்கிறது.

உங்கள் அர்த்தமுள்ள வாழ்வில் பொருள் சேரட்டும்..வாழ்த்துக்கள்.. புது வேலை..புதுக் கணினி..பழைய தமிழ்மணம்..அதே கறுப்பி. மீண்டும் அனைவருடனும்..
மீண்டும் உங்கள் நேரத்தை 'வீணாக்க" வரவேற்கிறோம்..எதிர்பார்க்கிறோம்.

கறுப்பி said...

சரி நண்பர்களே என் கடைசி வேலை நாள் இன்று, இங்கு எல்லோருக்கும் டாடா சொல்லியாச்சு. பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்னி(*_*). அப்பப்போது வந்து பின்னூட்டம் மூலம் கடிச்சு குதறிட்டுப் போறன். டா டா நண்பர்களே.