Wednesday, March 30, 2005

புரிய முனைதல்

மூர்க்கமாய் திணிக்கப்பட்ட
நம்பிக்கைகளுடன்
சுருண்டு கிடந்த எனை
சிறகு விரித்து புள்ளினமாக்கி விட்டீர்கள்.

தேடலை தூண்டி விட்டு
வினாக்களை விழுங்கி
அராஜகத்தின் நிழலையும்
நிராகரிக்க கற்றுத் தந்தீர்கள்.

குனிந்த தலையை
நிமிர வைத்துப் பாராட்டி
ஆழ்கடலின் மௌனத்திற்கு இழுத்துச் சென்று
பேசவும் கற்றுத் தந்தீர்கள்

பரந்து!
விரித்த சிறகுடன்
மேலே பறந்து தூரமாய் மறைந்து
புள்ளியைக் காண முனைகையில்
மீண்டும் இழுத்து வந்து
மாராப்பு விலகுது
இழுத்து மூடு என்று
மூளியாக்கி
சிறகைத்
கத்தரிக்கின்றீர்கள்.