Wednesday, April 27, 2005

இனியும் அழவேண்டாம் சகோதரிகள்

மழைத் தூறல்களையும் மீறி நீண்ட வரிசையில் பல நிறத்து மக்கள் கால் கடுக்க நின்று, மண்டபம் நிறைந்த காட்சியாக ஆரம்பிக்கப்பட்டது, ஈழத்தமிழ் பெண்ணொருத்தியின் இலட்சிய வாழ்வின் விவரணப் படம். துக்கம் நெஞ்சை அடைத்தாலும் கூடவே பெருமையும் வந்து முட்டிக்கொண்டது.

ராஜினி சைக்கிளில் செல்கையில் சுட்டுக்கொல்லப்பட்ட காட்சியுடன் படம் ஆரம்பிக்கின்றது. தொடர்ந்து பின்நோக்கிச் சென்று அவரின் குடும்ப அங்கத்தவர்கள் ராஜினியுடனான தமது அனுபவங்களைப் பகிர்ந்து செல்கின்றார்கள். முக்கியமாக அவரது மூத்த சகோதரி நிர்மலாவும் அவரது கணவர் தயபாலாவும் பல தகவல்களைத் தந்து விவரணப்படத்தை நகர்த்திச் செல்கின்றார்கள். கட்டுப்பாடும் மதவழிபாடும் நிறைந்த குடும்பத்தில் வளர்ந்த தனது பெண்கள் பெரியவர்களா வளர்ந்த போது தமக்கான வழியைத் தேர்ந்தெடுத்து தடைகளின்றி முன்னேறியதைப் பெருமையுடன் கூறினார் ராஜினியின் தந்தை. எனது சமூகம், எனது மக்கள் என்ற பார்வையோடு சுயநலமற்றுப் போர் சு10ழலில் பாதிக்கப்படும் மக்களுக்காக உதவும் வகையில் தனது சொந்த வாழ்வைத் தியாகம் செய்யத் துணிந்தார் என்பதை கணவர் தயபாலாவும் கண்கலங்கக் கூறினார்.
மூத்த சகோதரியான நிர்மாலா நித்தியாணந்தன் தங்கையின் மரணத்திற்கு மறைமுகமாகத் தானும் ஒரு காரணம் என்று கூறினார். ராஜினி மருத்துவராக இருந்த போது தான் விடுதலைப் புலிகளுடன் இணைந்து வேலை செய்ததால் காயப்பட்ட பல போராளிகளை ராஜினியிடம் அழைத்துச் சென்று சிகிச்சை செய்திருக்கின்றார் என்றும் பின்னர் ஐந்து வருட சிறைத்தண்டனை அனுபவித்து வந்த தன்னை விடுவிப்பதற்காக ராஜினி தனித்து நின்று போராடிய போது சிறையில் இருந்து விடுதலைப்புலிகளால் நிர்மலா விடுவிக்கப்பட்டு இந்தாயாவிற்குச் சென்றதும் ராஜினிக்குள் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்து விடுதலைப்போராளிகளுடன் தன்னை இணைத்துக் கொண்டு அவர்களுக்குப் பல உதவிகளைச் செய்து வந்தார் என்றும் கூறினார்.

ராஜினியின் இரு மகள்களும் தமது தாயைப் பெருமையுடன் நினைவு கூர்ந்தனர். ராஜினி மருத்துவத்துறையிலும் சமூகசேவையிலும் அதிகம் ஈடுபட்டிருந்தமையால் அவரது குழந்தைகள் ராஜினியின் பெற்றோருடனே வசித்து வந்தார்கள். இடதுசாரியான ராஜினியின் கணவனும் இலங்கை ராணுவத்தால் தேடப்பட்டு வந்தமையால் பலகாலமாக மறைமுகமாக வாழ்ந்து வந்திருக்கின்றார். ராஜினியும் குழந்தைகளும் அவரைச் சந்திப்பது மிகவும் அரிதாகவே இருந்திருக்கின்றது. பல சிங்கள நண்பர்கள் தமிழ் மக்களுக்கு உதவப்போய் உயிர் விட்டிருக்கின்றார்கள் என்று தயபாலா அவர்களையும் நினைவு கூர்ந்தார்.

இந்தியாவில் இருந்த போது போராளிகளாக இருந்தவர்களுக்கு போராட்டம் பற்றிய குறைந்த பட்ச அறிவு கூட இல்லாமல் தலைமை இடும் கட்டளைகளைக் கேள்வி இன்றி நிறைவேற்றும் வெறும் இயந்திரமாக இருந்தார்கள் என்றும் இயக்கம் சம்பந்தமாக நிர்மலா எழுப்பிய கேள்விகள் நிராகரிக்கப்பட்டதும், உதாசீணம் செய்யப்பட்டதும் தந்த ஏமாற்றம் நிர்மலா நித்தியாணந்தன் இயக்கத்தில் இருந்து தன்னை விடுவித்து லண்டன் செல்லக் காரணமாக இருந்து என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து வந்த காலங்களில் விடுதலைப்புலிகளின் நடத்தை ராஜினிக்கும் ஏமாற்றங்களைத் தரத் தொடங்கியதால் அவர் தன்னை இயக்கத்தில் இருந்து விடுவித்துக் கொண்டு போரால் பாதிக்கப்பட்ட (முக்கியமாகப் பெண்களுக்கு) மக்களுக்கு உதவி செய்யத் தொடங்கினார். விடுதலைப்புலிகள், இலங்கை இராணுவம், இந்திய ராணுவம் போன்றவற்றின் நடவடிக்கைகளை கேள்வி எழுப்பும் வண்ணம் ராஜினியும் அவரது நண்பர்களும் (பெயர்கள் குறிப்பிடப்படவில்லை) இணைந்து ஒரு தொகுப்பாக "முறிந்த பனை" எழுதிய காலத்தில் வேலை விடயமாக ராஜினி லண்டன் சென்றிருந்த போது அவரது வீடு நுழைந்து இந்திய ராணுவம் அவரது பல எழுத்துக்களை அழித்துச் சென்றதால் அவரை ஊர் திரும்ப வேண்டாம் என்று பலர் கேட்டுக்கொண்ட போதும் தனது மாணவர்களின் கல்வியை முதன்மைப் படுத்தி ஊர் திரும்பிய ராஜினி திருநெல்வேலியின் வைத்து செப்டெம்பர் மாதம் 21ம் திகதி துப்பாக்கிச் சு10ட்டினால் கொல்லப்பட்டார். இந்தத் தகவலைத் தந்த அவரது சகோதரி நிர்மலா விடுதலைப்புலிகள் ராஜினியின் கொலைக்குத் தாம்தான் காரணம் என்று தன்னிடம் ஒத்துக்கொண்டதாகவும் கூறினார்.

இந்தியப்படை இன்ரலக்சுவல்சுடன் பிரச்சனை பற்றிக் கதைக்க வேண்டும் என்று பல்கலைக்கழகத்திற்குச் சென்ற போது எல்லோரும் தயங்கி நிற்க ராஜினி துணிந்து அவர்களுடன் உரையாடினார் என்றும் மேலோட்டமாகக் கூறப்பட்டது.

சின்ன வயதில் தாம் களித்த சந்தோஷமான நாட்களை மீட்டுப்பார்த்தனர் அவரது மற்றைய சகோதரிகளான வாசுகியும், சுமதியும். இளம் வயதிலிருந்தே தாம் மாக்ஸையும், சே குவோராவையும், மாவேசேதுங்கையும் படித்து ஒரு நாட்டிற்கும் மக்களுக்கும் எது தேவை என்பதைப் புரிந்து வைத்திருந்ததாகவும் அவர்கள் கூறினார்கள்.

நிர்மலா விடுதலைப்புலிகள் மேல் பல குற்றச்சாட்டுக்களை வைத்தார். இங்கே நான் அதை விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால் தனது சகோதரியைக் கொன்றது விடுதலைப்புலிகள் என்பதை மிகவும் திடமாகச் சொன்னார். கேள்வி பதில் நேரத்தில் அவரிடம் வைத்த கேள்விகளுக்குத் தயங்காமல் பதிலளித்தார்.

"இனியும் அழவேண்டாம் சகோதரிகள்" என்ற இந்த விவரணப்படம் எம் மக்களால் எப்படிப்பார்க்கப்படுகின்றது. கனேடிய மக்களால் எப்படிப்பார்க்கப்படுகின்றது என்பதை விமர்சனங்கள் வரும் போதுதான் நாம் தெரிந்து கொள்ள முடியும்.

என் பார்வையில் ராஜினி திரணகம வை படித்ததில் மூலம் மட்டும் அறிந்து வைத்திருந்தேன். ஆனால் இப்போது நேராக ஒரு பெண்ணின் கல்வித் தகைமை, சமூகசேவை, இலட்சியம், எதற்கும் தயங்காமல் அடி எடுத்து வைக்கும் துணிவு என்பனவற்றைப் பார்த்துக் கண்கலங்கிப் பெருமை கொள்ள முடிகின்றது. இருந்தும் ஈழத்தில் வாழ்ந்து ஈழமக்களுக்காத் தன் உயிரைக் கொடுத்த ஒரு பெண்ணைப் பற்றிய உண்மைகளை வெளியில் கொண்டு வருவதற்கு வேறு ஒரு நாட்டை நாம் சார்ந்து நிற்க வேண்டிய அவலமான நிலை. இத்திரைப்படத்தை இயக்கிய Helene Klodawsky பேசுகையில் ராஜினியைப் பற்றித் தகவல்களைத் திரட்ட முயன்று அவர்களை அறிந்தவர்களிம் சென்று கேட்ட போது அவர்கள் கண்களில் மரண பயம் தெரிந்தது. எனவே ராஜினியின் குடும்பங்களை மட்டும் வைத்து இந்த விவரணப்படத்தைச் செய்ய வேண்டிய கட்டாயம். அது மட்டுமல்ல புலம்பெயர்ந்து இருக்கும் ராஜினியின் நண்பர்கள் கூட தம் முகத்தை மறைத்தே தகவல்களைத் தர முன் வந்திருக்கின்றார்கள் என்றும் கூறினார். இப்படியாக இருக்கிறது எமது நாட்டு நிலமை.

ஈழத்தமிழ்பேசும் மக்கள் மத்தியிலுள்ள அநேகமான புத்திஜீவிகள் கொல்லப்பட்டுவிட்டார்கள்.சராசரியாக 80 வீதமான புத்திஜீவிகள் படுகொலை செய்யப்பட்டபின் இப்போது 'ஊரோடு ஒத்தோடும்; கூட்டம'; மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இரஜினியை வெளியுலகுக்குக் காட்டும் படம் நிச்சியம் ஜனநாயகத்துக்கான புதியபோரை ஈழத்தில் புதியவடிவில் தோற்றுவிக்கும்.
ப.வி.ஸ்ரீரங்கன்

Monday, April 25, 2005

ரஜனியின் கொம்பிரமைஸ்

பலரும் பத்தும் :-சந்திரமுகியின் அலை இன்னும் ஓயவில்லை. கனடாவில் சந்திரமுகி எனும் தலைப்பைக் கவனிக்க கறுப்பி முன்வந்திருக்கிறன். ரோசாவசந்தின் பதிவைப் பார்த்துவிட்டு (சயந்தன் மௌனித்ததால்) வெள்ளி இரவு நண்பர்களுடன் பொப்கோன் கோப்பி சகிதம் (படம் போர் எண்டால் கவனத்தை வேறு ஏதாவதில் செலுத்தலாம் என்று) சென்று பார்த்தேன். விஜெயின் சச்சின் உம் சந்திரமுகியும் ஒரே திரையரங்கில் ஓடுவதால் சனக்கூட்டம் நிறைந்து வழிந்தது. விசாரித்ததில் சச்சினுக்கு வரும் கூட்டம்தான் அதிகம் என்றார்கள். காரணம் புரியவில்லை. (இளையவர்கள் அதிகம் என்பது ஒருகாரணமாக இருக்கலாம்)

திரையரங்கு அரைவாசியாக நிறைந்திருந்தது. பதிவுகளில் படித்துப் படித்து ஓரளவுக்குத் திரைக்கதை தெரிந்திருந்ததால் அதிகம் எதிர்பார்க்காமல் பார்க்கத்தொடங்கினேன்.
எழுத்தோட்டத்தின் போது வடிவேலுவின் பெயருக்கு அதிக வரவேற்புக் கிடைத்தது. சயந்தன் குறிப்பிட்டிருந்தது போல் சண்டைக் காட்சியில் ரஜனியில் கால் அடிப்பில் திரையரங்கு சிரிப்பால் நிறைந்தது. அடிக்க உயத்தியகாலை நிலத்தில் வைக்காமல் கொடுத்த மூவ் இற்கு காலுக்க கூளுக்கப் போகுது சு10ப்பர் ஸ்டார் கீழ விடுங்க என்ற குரல் திரையரங்கை மீண்டும் சிரிக்க வைத்தது.
பாபா திரைப்படத்தின் தோல்விக்குப் பின்னர் வெளியான ரஜனி திரைப்படம் இது. நடிகராக திரைஉலகத்திற்குள் புகுந்த பின்னர் உழைத்தது போதும் என்று விலகி ரசிகர்களின் மனதைப் புண்படுத்தக் கூடாது என்ற ஒரே நோக்கத்தோடு அவ்வப்போது திரையில் கடமைக்காகத் தலைகாட்ட எண்ணிவிட்டார் ரஜனி என்றே கறுப்பிக்குப் படுகின்றது.
அண்ணாமலை அருணாச்சலம் காலத்தில் இருந்த சுறுசுறுப்பு போய்விட்டது. பாபாவின் தோல்வி ஒரு பயத்தையும் கொடுத்திருக்கக் கூடும். எனவே கொஞ்சம் கொம்பிரமைஸ் பண்ணலாம் என்று எண்ணி விட்டாரோ என்றும் படுகின்றது.
காரணங்கள். ரஜனி சு10ப்பர் ஸ்டாரான பின்பு வந்த திரைப்படங்கள் எல்லாமே நாயகனின் பெயரில் வெளிவந்தவை. நாயகனைச் சுற்றியே திரைக்கதையும் அமைந்திருக்கும். சந்திரமுகி சு10ப்பர் ஸ்டார் ரஜனிக்காந்தின் வழமையான திரைப்படமில்லை. இது கங்கா எனும் பெண்ணிற்கு உண்டாகும் மனஅழுத்தம் சம்பந்தமான நோயைப் பற்றிய திரைக்கதையைக் கொண்டது. இதில் மனோதத்துவ நிருணராக (வைத்தியராக) வரும் நடிகன் வழமையான தமிழ்த் திரைப்படமாக இருப்பின் நிழல்கள் ரவிக்கோ நாசருக்கோ போயிக்கும். எனவே பல ஆண்டுகளின் பின்னர் வேறு ஒருவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு திரைப்படத்தில் மிகச்சாதாரணமாக ஒரு பாத்திரத்தை எடுத்து நடித்து ஒரு கொம்பிரமைஸ்சைப் பண்ணியிருக்கின்றார் சு10ப்பர ஸ்டார் அதற்குப் பாராட்டலாம் என்று மனதில் பட்டாலும் ஒரு பெயர் போன வைத்தியர் வடிவேலுவின் மனைவியுடன் விடும் ஜொள்ளு மிகக் கேவலமாக இருக்கின்றது. இப்படி இரண்டாந்தர நகைச்சுவையில் நடிக்க எதற்காக ரஜனி ஒத்துக் கொண்டார். புரியவில்லை.
அடுத்து திரைப்படத்தின் கதையைப் பார்ப்பின் விஞ்ஞானம் மருத்துவம் போன்றவற்றிற்குக் கொடுக்கும் முக்கியத்துவம் பேய் பிடித்தல் ஆவி உலவுதல் போன்றவற்றிற்கும் கொடுத்து ஒரு பெயர் போன சாமியாரை வரவழைத்து ஆவியை விரட்டும் விளையாட்டில் இரு விதமாக பார்வையாளர்களையும் திருப்திப்படுத்தும் எண்ணம் நிறைந்து நிற்கின்றது.

ரஜனிக்காந்;த் தோற்றத்தில் நிறம்பவே மாற்றம் தெரிகின்றது. வேகம் குறைந்து விட்டது எவ்வளவுதான் மேக்கப் போட்டாலும் முகத்தில் முன்பிருந்த அந்தக் குறும்பைக் காணவில்லை. (மேக்கப் அளவிற்க அதிகமாக லிப்டிக் சில காட்சிகளில் உறுத்துகின்றது)

சிவாஜி புரடக்ஷன் ஆகையால் பிரபுக்கு ஒரு சான்ஸ். பிரவுவோடு வந்து போன குஷ்பு இப்போது அக்கா அம்மா வேடத்திற்குப் போய் விட சின்னப் பெண் ஜோதிகா வந்து விட்டார்.
சந்திரமுகி முற்று முழுதாக ஜோதிக்காவின் நடிப்புத் திறமையைப் பரீட்சித்துப் பார்க்க எடுக்கப்பட்ட திரைப்படம். ஜோதிகாவின் இடத்தில் சிம்ரன் நடிப்பதாக இருந்ததாம். நிச்சயமாக ஜோதிகா அளவிற்கு சிம்ரன் எடுபட்டிருக்க மாட்டார் என்பது கறுப்பியின் கருத்து. சந்திரமுகியாக மாறும் போது ஜோதிகாவின் அந்தப் பெரிய கண்கள் மிகவும் பொருத்தமாக இருக்கின்றன. "Exorcist" திரைப்படத்தைப் பார்த்த போது ஏற்பட்ட உணர்வை ஜோதிகாவும் தந்திருக்கின்றார். இது அவரின் நடிப்பிற்குக் கிடைத்த வெற்றி.

சந்திரமுகி முக்கால்வாசி நேரம் வெறும் அறுவையாகப் போயினும் பின்பகுதிக்காக் பார்க்கலாம். வினித் ஜோதிகாவின் நடனக் காட்சி மனதில் நிற்கின்றது. மற்றவர்களும் மற்றவையும், வெறும் வேஸ்ட்.

Info - "No more tears Sister"

ரொறொண்டோவில் வாழும் புளொக் நண்பர்களுக்கான செய்தி இது.


The Canadian feature documentary will have its world premiere at the Hot Docs International Documentary Film Festival being currently held in Toronto. "No more tears Sister" will screen at 9. 45 pm on April 26th at the Isabel Bader theatre and at 7. 30 pm on April 28th at the Innis Town Hall.

Rajani Thiranagama: A true heroine
of our times

By D. B.S. Jeyaraj

More than fifteen years have! passed since Rajani Thiranagama nee Rajini Rajasingham was brutally gunned down at Thirunelvely, Jaffna on September 21st 1989 as she was cycling back home from the Jaffna University. She was Professor of Anatomy at the Jaffna Varsity medical faculty. The 35 year old mother of two daughters was also a human rights activist, feminist, critic of narrow nationalism and opponent of irresponsible militarism. No one has officially claimed responsibility for her killing and several attempts have been made by those close to the perpetrators to deflect blame elsewhere. Despite these moves the people at large know who the killers were though not many dared to say it publicly.

A decade and a half however fails to erase the indelible memories of Rajani among those who knew her. Her brutal murder has not been forgotten. Whenever the human rights violations of the Liberation Tigers of Tamil! Eelam are referred to in detail her name always crops up. Whenever the tragic plight of women caught up in Sri Lankas long drawn out "Machismo" war is highlighted her murder is usually focussed upon. Whenever the story of the Tamil liberation struggle going terribly wrong is discussed the murder of Rajani Thiranagama is always an issue cited.

She was truly a heroine of our times and an unforegettable symbol of its enveloping tragedy. As former UN special rapporteur on violence against women and current chairperson of the National Human Rights Commission of Sri Lanka Dr. Radhika Coomaraswamy observes . " Rajani had a vision for her people, the Sri Lankan Tamils. She envisioned a time when they would live in peace and dignity enjoying democratic rights and freedoms. Standing against oppression and brutality in all its forms, she is a beacon of light for a community living in fe! ar and struggling for self - respect. She will never be forgotten; an icon for everyone in Sri Lanka fighting for freedom ".

One agency that has remembered Rajani is the National Film Board of Canada. The land of the Maple leaf has made a name for itself in the realm of documentary films. "No More Tears Sister" - the anatomy of hope and betrayal is the title of an 80 minute film on the life and times of Rajani Thiranagama produced by the Canadian Film Board.. It is written and directed by Montreal based Canadian film maker Helene Klodawsky. The narrator Michael Ondatatje the Sri Lanka born reputed author now domiciled in Canada. A novel feature in recreating the life of Rajani is the portrayal of her mother by Sharika the younger daughter now in her early twenties.

The Canadian feature documentary will have its world premiere at the Hot Docs
International Do! cumentary Film Festival being currently held in Toronto. "No more tears Sister" will screen at 9. 45 pm on April 26th at the Isabel Bader theatre and at 7. 30 pm on April 28th at the Innis Town Hall.

Unlike most recreations of a contemporary personality the story of Rajani provided a stiff challenge for the filmmakers. There was very little documentation or authentic correspondence. Many of those who knew her or were associated with her were too scared to be filmed. Moreover filming in Jaffna where Rajani grew up, lived and died was out of the question because of the political climate. One also supposes that an element of screcy had to be maintained at all times due to the sensitive content and theme of the film.

Despite these problems that would have defeated most film makers of Cinema verite Helen Klodawsky has accomplished her task well. She was fortunate that family membe! rs and a few fellow human rights activists and feminists were courageous enough to come out openly. Rajanis parents the Rajasinghams, sisters Nirmala, Sumathy and Vasuki, Daughters Narmada and Sharika, husband Dayapala Thiranagama and some unnamed activists have all been interviewed and the life of Rajani unfolds on screen through their accounts mainly.

The vivid and perceptive comments made by Nirmala and Dayapala are the chief strengths of the film. The story of Rajani is inextricably inter- twined with that of her elder sister Nirmala a political activist cum feminist in her own right. Rajanis story cannot be told without without relating the story of Nirmala also. In that sense this film is as much about Nirmala as it is about Rajani. Nirmala has broken her long "public" silence on Rajanis death in this film. While not dwelt on
forcefully the film leaves no doubt in the viewers! mind about the forces behind
Rajanis assassination.

Dayapala Thiranagama comes off very well. Both Rajani and he came from contrastingly different backgrounds. He provides many fresh insights into Rajanis life. The scenes showing Nirmala and Dayapala in conversation are illuminating. A revealing moment of truth for anyone familiar with the rise and fall of the Tamil liberation struggle would be the one where the comment is made that political activism is no longer the armed struggle but that of upholding human rights.

The story of Rajani is interwoven with the violence of the ethnic conflict in Sri
Lanka. What made Helen Klodawsky the daughter of a concentration camp survivor herself take up this tale? This is what she says - "I wanted to understand how ethnic conflict and national struggles impact women - be they victims of war, militant fighters or peace build! ers. I wondered whether there was a feminist critique of both state and guerilla violence It was well known that the Sri Lankan
military and the opposition Liberation Tigers of Tamil Eelam were both guilty of torture, illegal detention, disappearances and extra - judicial executions. I wanted
to explore whether women were, on the one hand, torn between loyalties to their ethnic communities and on the other hand the community of women. Did oppressed minority women imagine fighting injustice in different ways than their male counterparts?

The story of Rajani Thiranagama - her courageous life, unique vision and tragic
assassination - offered a compelling narrative to pose many of my questions. Rajanis evolution into a spirited champion of the Tamil peoples rights in the seventies and eighties paralleled the escalation of ethnic conflict in Sri Lanka. Moved by her peoples complex ! struggle against ruthless state violence, she believed Tamil militancy was the answer and joined the Liberation movement. But when she witnessed the corruption and cruelty within, she felt compelled to document what she saw and urged her people to resist blind adherence to any leader or movement. Embracing feminism and a belief in human rights, she felt that women in particular were the primary casualties of war.

I believed that by following Rajanis life story and the circumstances surrounding
her untimely death, several themes could be explored. Nationalisms anti - nationalism; the lives of women as both participants and innocent victims of war
and the belief in armed struggle vs a critique of militarism.

Though "No More Tears " is set in Sri Lanka, a similiar story might have been explored in Africa, other parts of Asia, the middle - east, Eastern Europe or Latin
America. In the! sixties and seventies, Rajani was part of a generation of young
political activists in post - colonial societies around the world - activists who
dreamed of radically transforming their societies to achieve equality and justice
for all. But this idealism continues to be ruthlessly thwarted by narrow nationalist
agendas in countless Countries.

Cinematically, I wanted NO MORE TEARS SISTER to reflect the passion and beauty of Rajani's ideals. Together with my talented team including Francois Dagenais (director of photography)Patricia Tassinary (Editor) and Bertrand Chenier (Composer) I aimed at making a film that is political, feminist and aesthetic.


Courtesy:

http://tamilweek.com/Rajani_Thiranagama.html

Friday, April 22, 2005

Children of Heaven

கொசுறு - "சப்பாத்து" இது கறுப்பியின் திரைக்கதை, வசனம், இயக்கத்தில் வந்த குறுந்திரைப்படம். இப்படம் கடந்த வருடம் ரொறொண்டோவில் நிகழ்ந்த குறும்படவிழாவில் திரையிடப்பட்ட கறுப்பியின் குறுந்திரைப்படங்களுள் (மற்றயவை மனுசி, உஷ்) ஒன்று.


நிகழ்வு முடிந்த வந்த கிழமைகளில் கறுப்பி கனேடிய ஈழத்து எழுத்தாளரான காலம் சென்ற குமார்மூர்த்தி அவர்களின் "சப்பாத்து" எனும் சிறுகதையைத் திருடி விட்டாள் என்று அனாமதேய நபர் ஒருவர் திண்ணை, பதிவுகள், கனேடியப் பத்திரிகை என்று கிழித்து வைத்தார். வழக்கும் போடப்போறாராம் என்று பேச்சு அடிபட்டது. ஆனால் போடவில்லை ஏனோ தெரியவில்லை.இந்த வாரம் கறுப்பியின் சினிமா வாரம். பல தரமான படங்களைப் பார்த்த மகிழ்ச்சி. அந்த வகையில் உலகத்திரைப்படங்கள் வாடகைக்கு விடும் ஒரு கடையில் கிண்டிக்கிளறி எடுத்தவற்றில் ஒன்று "Children of Heaven". திரைப்படத்தைப் பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது காரணம் இதுவும் சப்பாத்திற்காக ஏங்கும் ஏழைக்குழந்தைகளின் கருதான் திரைக்கதையாகியிருக்கின்றது. ஏற்கெனவே "செருப்பு" எனும் பெயரில் ஈழத்திலிருந்து இதே கருவைக் கொண்ட ஒரு குறுந்திரைப்படமும் வெளி வந்திருக்கின்றது. இதில் யார் யாரைக் கொப்பி அடித்தார்கள். ம்..

"Children of Heaven"
Director: Majid Majidi


அலி ஒன்பது வயதுச் சிறுவன் குடும்பத்தில் மிகுந்த அக்கறையும் குடும்பச் சு10ழலையும் புரிந்தவன். தனது தங்கையான ஜேராவின் பிய்ந்து போன சப்பாத்தை (இருக்கும் ஒன்றை) தைக்கக் கொடுத்து வரும் வழியில் தொலைத்தும் விடுகின்றான். ஆவலோடு சப்பாத்திற்காகக் காத்திருந்த ஜேரா தனது ஒரே சப்பாத்துத் தொலைந்து போய் விட்டதை அறிந்து பாடசாலைக்கு எப்படிப் போகப் போகின்றேன் என்று கண் கலங்குகின்றாள். தனது தங்கையின் நிலை அலிக்கு வேதனையைக் கொடுத்தாலும் புதிய சப்பாத்து வாங்க அப்பாவிடம் பணம் இல்லை எனவே எனது சப்பாத்தை இருவரும் பகிர்ந்து கொள்ளுவோம் என்று பெண்களுக்கான காலை பாடசாலைக்கு ஜேராவும் ஆண்களுக்கான பின்னேரப் பாடசாலைக்கு அலியும் என அலியின் பழைய சப்பாத்தைப் பகிர்ந்து கொள்கின்றார்கள். சப்பாத்து மாற்றுவதற்காக பாடசாலை விட்டவுடன் ஜேரா வேகமாக ஓடி வருவதும் மாற்றியவுடன் பாடசாலைக்கு அலி ஓடிப்போயும் நேரம் காணாததால் பாடசாலைக்குத் தாமதாகச் சென்று அதிபரிடம் வசை வாங்கிக் கொள்ளுவதும் என்று வறுமைக் கோட்டிற்குக் கீழே இருக்கும் குழந்தைகளின் நிலையையும் அவர்களது கனவையும் தாங்கி நிற்கின்றது திரைக்கதை. படம் முழுவதிலும் தங்கை ஜேராவிற்கு எப்படியாவது ஒரு சப்பாத்து வாங்கிக் கொடுத்து விடவேண்டும் என்ற கனவு கண்களில் இழையோடுவதைக் காணலாம். பாடசாலையில் நிகழ இருக்கும் ஓட்டப்போட்டியில் மூன்றாவது பரிசாக சப்பாத்து அறிவிக்கப்பட்டபோது சந்தோஷமாக தங்கையிடம் எப்படியும் நான் மூன்றாவதாக வந்து உனக்கு அந்தச் சப்பாத்தைப் பெற்றுத் தருவேன் என்று விட்டுப் போட்டியில் கலந்து கொண்ட அலி முதலாவதாகத் தான் வரப்போவதை அறிந்து இரண்டு பேரை முன்னே விட்டு மூன்றாவதாக வருவதற்கு முயற்சி செய்து நாலாவதாக வந்தவன் காலில் தடக்கி விழுந்து பின்னர் எழுந்து ஆவேசமாக ஓடி முதலாவதாக வந்து பாடசாலைக்குப் பெயரை வாங்கிக் கொடுத்து கண்கள் கலங்க வீட்டிற்கு வருகின்றான்.கதையில் பிழை கண்டுபிடிக்க வேண்டுமென்றால் கண்டு பிடிக்க முடியும். ஆனால் சிறுவர்களின் யதார்த்தமான நடிப்பு மூன்றாம் உலகநாடுகளில் குழந்தைகளின் கனவு வாழ்வு நிலை என்று மனதை இருக்கமாகப் பிடித்து வைத்திருக்கின்றது திரைப்படம்.


தன்னுடைய தொலைந்து போன சப்பாத்தைப் போட்டிருக்கும் சிறுமியைக் கண்டதும் அவள் பின்னால் அலியும் ஜேராவும் சென்று அவளின் வீட்டைக் கண்டு பிடிக்கையில் அவளின் தந்தை பார்வை இழந்தவன் என்று தெரிந்த போது தம் நிலையின் கீழும் சிறுவர்கள் வாழ்கின்றார்கள் என்று புரிந்து வீடு திரும்புதல். ஊத்தைச் சப்பாத்தை கழுவிக் காய வைத்து சின்னச் சின்னச் சம்பவங்களில் தம்மைத் திருப்திப் படுத்துதல் என்று குழந்தைகளின் மனநிலையை நிறைவாகப் படம் பிடித்திருக்கின்றார்கள்.
வாழ்வு தொடங்கும் ஏக்கங்களுடனும் கனவுகளுடனும் நகரும் எதுவும் நிறைவேறாமலே. வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் மக்களின் நிலை இதுதான் என்பதை சீராகப் படமாக்கியிருக்கின்றார்கள்.

"Little things make all the difference in the world".

Thursday, April 21, 2005

சும்மா ஒரு அலசல்"மும்பை எக்ஸ்பிரஸ்" படம் பார்த்தேன். வழமையான தமிழ்த் திரைப்படம் காண்பிக்கப்படும் திரையரங்கில் இல்லாமல் ஆங்கிலத்திரைப்படம் காட்டப்படும் (சர்வதேச திரைப்படங்கள்) திரையரங்கம் ஒன்றில் மும்பை எக்ஸ்பிரஸ் காட்டப்பட்டதன் காரணம் தெரியவில்லை. இப்படியான திரையங்குகளில் திரை பிரமாண்டமாக இருக்கும். "மும்பை எக்ஸ்பிரஸ்" High Definition முறையில் படமாக்கப்பட்டதென்றும் தொழில் நுட்பத்தை முறையாகப் பயன்படுத்தாததால் பெரிய திரையில் படம் தெளிவாக இல்லை என்றும் என்னுடன் வந்திருந்த நண்பர் புறுபுறுத்தார்.
செவ்வாய்க்கிழமைகளில் கனேடிய திரையரங்குகளில் டிக்கெட் குறைந்த விலைக்குக் கிடைக்கும். எனவே இந்த நாளை நான் திரைப்படம் பார்க்கும் நாளாக வைத்திருந்தேன். எனது நண்பி ஒருத்தி "மும்பை எக்ஸ்பிரஸ்" பார்க்க வேண்டும். கனேடித் திரையரங்கில் காட்டப்படுவதால் டிக்கெட் குறைந்த விலைக்கெடுக்கலாம் என்று கேட்டுக்கொண்டதன் பேரில் அன்று நான் பார்க்க நினைத்து வைத்திருந்த “Born into Brothels “ ஐ விட்டு விட்டு மும்பை எஸ்பிரஸ் போய் பார்த்து விட்டு வந்தேன். ஆனால் ரிக்கெட் அதே விலைதான்.
கமலின் திரைப்படம் என்றால் பார்ப்பதற்கு நிச்சயமாக ஏதாவது இருக்கும் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் இருப்பதாலும் அண்மையில் வெளிவந்த தெனாலி,பஞ்சதந்திரம்,வசு10ல்ராஜா போன்ற படங்கள் நகைச்சுவையோடு போர் அடிக்காமல் ஒரு பொழுதைக் கழிக்க உதவியதாலும் பெருத்த நம்பிக்கையுடன் போயிருந்தேன்.
பார்த்த பின்பு கமலுக்கு என்ன நடந்தது என்ற கேள்விதான் எனக்குள்ளும் எஞ்சிப்போயிருந்தது. மும்பை எஸ்பிரசில் வேகமிருந்தது ஆனால் ஆழமில்லை.

தரமான படங்களை மட்டும் தரவேண்டும் என்று பல காலமாக கமல் திரைக்கு வராமல் இருந்து பல தரமான திரைப்படங்களை வருடத்திற்கு ஒன்று என்று தந்து கொண்டிருந்தார். அதில் வெற்றி பெற்றவை பல தோல்வி பெற்றவையும் தான். உடைந்து, உழைத்துக் கொண்டிருக்கும் போது வயதும் ஏறுகின்றது என்பதை உணர்ந்ததாலோ என்னவோ நல்ல ஒரு கலைஞன் என்ற உணர்வில் மீண்டும் திரையில் ஓரளவிற்கேனும் வந்து போக வேண்டும் இல்லாவிட்டால் பார்வையாளர்கள் மறந்து போய் விடுவார்கள் என்பதை அறிந்து தற்போது பலவிதமான திரைப்படங்கள் முக்கியமாக நகைச்சுவைப்படங்களுக்குள் தன்னை இடையிடை புகுத்திக்கொண்டு விட்டார். நல்ல விடையம் ஆனால் கொஞ்சம் கவனம் வேண்டும்.

நல்ல கருத்துக்களைச் சொல்கின்றோம் என்று விட்டு உணர்ச்சிவசப்பட்ட நடிப்பால் கழுத்தறுக்கும் அனைத்துத் தமிழ் படங்களுள் விரல் நீட்டி ஒன்று இரண்டு பார்க்கும் படியாக உள்ளன. கமலின் ஆழமான திரைக்கதை கொண்ட படங்களை விடுத்து நகைச்சுவைத் திரைப்படங்களும் போர் அடிக்காமல் பார்வையாளர்களை வைத்துக்கொள்பவையா இருந்து வந்தது. எங்கோ, எதிலோ கமல் கோட்டை விட்டுவிட்டார். தொடர்ந்தும் இந்தத் தவறைச் செய்யாமல், தமிழ் திரைஉலகின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்து வருபவர் கொஞ்சம் கவனம் செலுத்தினால் நல்லது.
மோனிஷாவிற்கு நடிக்க வராது என்பதை மீண்டும் ஒருமுறை ஊர்ஜிதம் செய்துள்ளார். பசுபதிக்கு நடிக்க வரும் என்று மீண்டும் ஒருமுறை ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களும் மற்றவையும் மனதில் நிற்கவில்லை.

Monday, April 18, 2005

நம்பிக்கை தும்பிக்கை

என்னுடைய நண்பனின் பிறந்தநாளை முன்னிட்டு மதிய உணவிற்குச் சென்று சாப்பாட்டின் நடுவில் பலதையும் பத்தையும் அலசி அலசி பேச்சு நம்பிக்கையில் வந்து நின்றது. தான் 7ம் நம்பர் என்றும் தனக்கு 2ம் நம்பருடன் ஒத்துப்போகும்; என்றும் ஏதோ அவன் சொன்னான். நான் மௌனமாகச் சாப்பாட்டில் மூழ்கியிருக்க என்னுடைய நம்பர் என்னென்று கேட்டான். நான் தெரியாது என்றேன். என்னை ஒரு மாதிரிப் பார்த்து விட்டுக் கூட்டுத்தொகை என்னென்று கேட்டான். நான் என்னுடைய சலாட்டில் கொஞ்சம் அவனை எடுக்கச் சொன்னேன். நான் ஏதோ பேச்சை மாற்றுகின்றேன் என்றான் மீண்டும் என் நம்பரைக் கேட்க நான் இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லையென்றேன்.
அதன் பின்னர் பெரீரீரிய்ய லெக்சர் ஒன்றை அடித்தான்.
எடுத்த எடுப்பில் ஒன்றிலும் நம்பிக்கை இல்லை என்று கூறக்கூடாது ஆராய்ந்து பார்க்க வேண்டும். முதலில் நம்பிக்கை இல்லாமல் இருக்கும் ஒரு விடையமே காலப்போக்கில் எம் அனுபவத்தாலும் சில சம்பவங்களாலும் எம்மை நம்பிக்கைக்குள் தள்ளிவிடும். தன்னுடைய அனுவங்கள் தனக்கு நம்பர் பார்ப்பதில் மிகுந்த நம்பிக்கையைத் தந்திருக்கின்றது என்று சில உதாரணங்களைக் கூற முனைந்தான். "ஐயோ சாமி என்னை விட்டாக் காணும்" என்று நான் கெஞ்சினேன். உனது நம்பிக்கையை நான் மதிக்கின்றேன். அதே போல் எனது நம்பிக்கை இல்லாத நம்பிக்கைக்கு நீயும் கொஞ்சம் மதிப்புக் கொடுக்க வேணும் இப்பிடி உனது நம்பிக்கையை என்னில் திணிக்காதே என்றேன்.
அப்படியாயில் உனக்கு எதெதில் நம்பிக்கை இருக்கு என்று விட்டு

கடவுள்
சாத்திரம்
காண்டம்
மறுபிறவி
ஆவி
பேய்


இப்படி அடுக்கிக் கொண்டு போனான். எனக்கு இதில் ஒன்றிலும் நம்பிக்கை இல்லை. சொல்லப்போனால் ஒன்றிலுமே எனக்கு நம்பிக்கை இல்லை. மனிதன், இயற்கை, விஞ்ஞானம் இதைத் தவிர வேறு ஒன்றிலும் எனக்கு நம்பிக்கை இல்லை என்றேன். எனது வாழ்க்கை தவறானது என்றான். மனுசருக்கு எதிலாவது நம்பிக்கை இருக்க வேணும் என்றான். அவனது லெக்சர் எனக்குப் பசியைப் போக்கி விட்டது. கொஞ்சம் கோபமும் வந்தது. நான் கையெடுத்துக் கும்பிட்டு உன்னுடைய நம்பிக்கையை என்னில் திணிக்காதே என்று விட்டு வெளியேறிவிட்டேன்.
பின்பு கவலையாக இருந்தது. எதற்கு எனக்கு இந்தளவு கோபம் ஏதோ தன் கருத்தைச் சொல்கின்றான் சொல்லிவிட்டுப் போகட்டும் என்று விட்டு நன்றாகச் சாப்பிட்டிருக்கலாமோ என்றும் தோன்றியது.

ஒன்றிலும் நம்பிக்கை இல்லை என்ற என் கருத்துப் பல இடங்களில் பலரின் பார்வையில் என்னை ஒரு மாதிரியாகப் பார்க்க வைத்திருக்கின்றது முக்கியமாக ஒரு தமிழ் இந்துப் பெண்ணாக இருந்து கொண்டு ஒன்றிலும் நம்பிக்கை இல்லாமல்????

ஒன்றிலும் நம்பிக்கை இல்லாதவர்கள் இருக்கின்றீர்களா? நான் கட்சிக்கு ஆள் சேர்க்கின்றேன்.

Thursday, April 14, 2005

எனக்கேன் வம்பு..சந்திரமுகி, சந்திரமுகி, சந்திரமுகி.. எங்கை பாத்தாலும் சந்திரமுகி. பொழுது போக்கிற்காக ஆரம்பித்த சினிமாத்துறை தற்போது முக்கியமாக இந்தியாவில் ஒரு மாநிலத்தை ஆளும் சக்தியைப் பெற்றுக்கொண்டு விட்டது. ஒரு நாட்டின் வளத்தை மக்களை கட்டிக்காப்பதற்கு மக்களின் தேவை நாட்டு வளம் போன்றவற்றில் அக்கறை உள்ள பரிச்சயம் உள்ள ஒருவர்தான் தலைவராக வரவேண்டும் என்பது போய் கோடிகோடியாகப் பணம் சம்பாதிக்கும் ஒரு நடிகன் வரமுடியும் என்பது எவ்வளவு முட்டாள்தனம். நாட்டை ஆளுவதற்குப் கல்வி முக்கியமில்லை பேட்டை ரௌடியோ, ஒரு முன்னணி நடிகனோ வரமுடியும் என்பதைக் கிண்டலடித்து தமிழ் சினிமாவில்தான் காட்டுகின்றார்கள். அப்படியிருந்தும் இந்திய மக்கள் சினிமாக்காறரைத் தூக்கித் தலையில் வைத்துத் “தலைவன்” என்ற பெயர் சு10ட்டிக்கொண்டாடுவது சகிக்கமுடியாமல் இருக்கின்றது. பாமரமக்களை உபயோகித்து ரஜனி போன்றவர்கள் கோடிக்கணக்கில் தமது வங்கிக் கணக்கை நிறைத்துக் கொள்வதோடு மட்டுமல்ல அரசியலுக்குள் நுழைந்து இன்னும் தமிழ்நாட்டைக் குட்டிச்சுவராக்கும் எண்ணத்தோடு இருக்கின்றார்கள் என்பதை ஏன் மக்கள் புரிந்து கொள்கின்றார்கள் இல்லை.
நல்ல ஒரு நடிகனைக் கலைஞனை அவரின் திறமைக்காகப் பாராட்டலாம் மதிக்கலாம். ஆனால் ரஜனி? (முன்பு ஒரு காலத்தில் நடித்தார் “முள்ளும் மலரும் “ஆறிலிருந்து அறுபது வரை” “16 வயதினிலே” போன்ற படங்களில்) ஆனால் இப்போது அறுபதை அண்மித்த அல்லது தாண்டிய தலை நரைத்த, தாடி நரைத்த, ஒரு கிழவன் தன் மகளின் வயதான நடிகைகளுடன் நடிப்பது அதை மக்கள் ரசிப்பது அந்த வாக்கில் இன்னும் தன்னைக் கொழுக்க வைப்பது ஐயோ ஐயோ ஐயோ என்னத்தைச் சொல்ல? இதற்குக் காணரம்; தனது ரசிகர்கள் என்கிறார் ரஜனிக்காந்த். இளைஞனாக வந்து காதலித்து டூயட் பாடி சண்டை பிடித்து இதுதானாம் ரசிகர்களுக்குத் தேவை எனவே அவர் கொடுக்கின்றார். ரசிகர்கள் ஏன் இப்படிக் கோழைகளாக இருக்கின்றார்கள்?? இந்தியச் சினிமா ஏன் இப்படிச் சீர்கெட்டுப் போகின்றது. வெறுமனே வேகமாக நடப்பதற்கும் தலையைக் குலைப்பதற்கம் எறிந்து போட்டுச் சிகரெட் பிடிப்பதற்கும் ஏன் மக்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். எல்லாம் ரஜனியின் அதிஷ்டம். பஸ்ஸில் டிக்கெட் கிழிந்தவனுக்கு கோடீஸ்வரனாக வேண்டும் என்று தலையில் எழுதியிருக்கின்றது. தலையில் எங்கோ நல்ல இடத்தில சுளி இருக்குப் போல.
நான் இந்தியா சென்றிருந்த போது சாலிக்கிராமத்தில் விஜெயின் வீட்டைக் கண்டேன். வீட்டிற்கு முன்னால் குன்றும் குளியுமான வீதியில் மழை நீர் தேங்கிக் கிடக்கின்றது. அடுத்த தெருவில் வீதியில் மலம் கழிக்கும் குழந்தைகள். பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது. இந்த வீதியைக் கடந்து காரில் செல்வாராம் விஜெய் ஏ.சீ காருக்குள் ஏறிவிட்டால் வீதி பற்றிக் கவலை எதற்கு? இது சினிமாத்துறையால் தம்மைக் கொழுக்க வைத்த எல்லோருக்கும் பொருந்தும். பாமரமக்களின் டிக்கெட் பணம்தான் தமது வங்கிக் கணக்கை நிர்ணயிக்கிறது என்பதை இவர்கள் யாராவது சிந்தித்ததுண்டா?

இந்தியத் தமிழ் மக்களே என்னவோ பண்ணித் தொலையுங்கோ எனக்கேன் வம்பு நானும் சந்திரமுகி பார்க்க வேணும். ஜோதிகாவை எனக்குப் பிடிக்கும்.

Tuesday, April 12, 2005

ரெக்ஸ் எண்டொரு நாய்க்குட்டி..“கணன் மாமாவும், மாமியும் கனடா வந்து நிக்கினம்.. ஒரு கிழமைக்கு என்னோட தங்கச் சொல்லிக் கேட்டனான்.. உன்ர அறையிலதான் விடப்போறன் நீ தம்பியோட ஷெயர் பண்ணு” அம்மா சொல்லி விட்டுப் போய் விட்டாள். தம்பி அவசரமாக தன்ரை அறைக்குள் புகுந்து கொண்டான். என்னத்தை ஒளிக்கிறான், மறைக்கிறானோ தெரியாது. அம்மா யன்னல் சீலைகளைத் தோய்கிறது, கட்டிலுக்கு புது பெட்சீட் மாத்திற தெண்டு படு பிஸியாயிட்டா.

பாவம் அம்மா..அப்பா இருக்கேக்க ரெண்டு பேருமா வேலைகளை சேந்து செய்திச்சீனம்.. இப்ப ரெண்டும் பெடியள்.. அதுகளிட்ட என்னண்டு வீட்டு வேலை செய்யக் கேக்கிறதெண்டு நினைச்சுத் தானே கிடந்து முறிவா.. நான் கொஞ்மாவது ஏதாவது உதவுவன்.. ஆனால் தம்பி படிக்கிற மாதிரிப் போஸ் குடுத்துக் கொண்டு எந்த நேரம் பாத்தாலும் கொம்பியூட்டரைக் கிண்டிக்கொண்டு இருப்பான்.

கணன் மாமா.. எங்கட சொந்தாக்காறர் இல்லை.. ஊரில பக்கத்து வீடு.. மாமியும், அம்மாவும் நல்ல ப்ரெண்ஸ்.. குமுதம், ஆனந்தவிடகனில வாற தொடர்கதை பற்றிக் கதைக்கிறது, சேந்து சொப்பிங் போறது, படத்துக்குப் போறது எண்டு ஒண்டாச் சுத்தித் திரிவீனம். ஆனால் மாமாவும் அப்பாவும் பெரிசாக் கதைக்கிறதை நான் கண்டதில்லை.. சிலவேளகளில ரோட்டில எங்காவது கண்டா சும்மா சாட்டுக்கு “எப்பிடி” எண்டு ஆளையாள் கேட்டிட்டுப் போவீனம். அவ்வளவுதான்.. மாமாக்கு மூண்டு(ம்) பெட்டைகள்..

(நானும் தம்பியும் அவேலை பெட்டைகள் பெட்டைகள் எண்டு கதைக்கிறது அம்மாக்குப் பிடிக்கிறேலை.. “அதென்ன பெட்டைகள் மனேஸ் இல்லாமல்” எண்டு ஒருநாள் அம்மா சொல்லிப்போட்டுப் போக தம்பி “அதென்ன மனேஸ் இல்லாமல்” எண்டு அம்மா மாதிரி நௌ¤ச்சுக் காட்டிச் சிரித்தான், எனக்கு அது அவ்வளவாப் பிடிக்கேலை)

நான் நடுவானைக் கொஞ்ச நாளாச் சைட் அடிச்சன். அது பிறகு வேற ஒரு பெடினோட கதைச்சுக் கொண்டு திரியிறதைக் கண்டிட்டு விலகீட்டன்.

ஒரு நாள் மாமி எங்கட வீட்டை அவசரமா ஓடி வந்து அம்மாட்ட ஏதோ ரகசியமாச் சொல்லி மூக்கைச் சீறிச் சீறி அழுதா.. அம்மா என்னைக் கடைக் கண்ணால பாத்துப் பாத்து மெல்லமா ஏதோ மாமீன்ர காதுக்க குசுகுசுத்தா. நான் விறாந்தையில் லாவகமாகக் கதிரையில சரிஞ்சு இருந்து கொண்டு ஆனந்தவிகடனில கமலகாசன் வாணி கணபதியக் கலியாணம் கட்டப் போகுதாம் எண்ட கிசுகிசு வாசிச்சுக் கொண்டு இருந்தனான். சிறீதேவியைக் கட்டாதது எனக்கு நல்ல சந்தோஷம். அம்மா என்னைப் பாத்து “தம்பி பெரியாக்கள் கதைக்கேக்க நீ என்ன இஞ்ச, உள்ள போ” எண்டு என்னைக் கலைச்சுப் போட்டா.. நான் கனநேரமா மாமி அழுத விஷயத்தைச் சொல்லுவா எண்டு ஆனந்தவிகடனில முகத்தை மேஞ்சது வீணாப் போச்சுது. அம்மா இன்னும் என்னைப் பெரிய பெடியனாப் பாக்காததும் ஏமாற்றமா இருந்துது.

நான் சோம்பல் முறித்தபடி எழும்பி முன் ஒழுங்கேக்க வந்து யாரும் பெட்டைகள் சைக்கிளில வரீனமோ எண்டு பாத்துக்கொண்டு நிண்டன். (ஒண்டும் செய்ய இல்லாட்டி இதுதான் என்ர பொழுது போக்கு) மாமியின்ர கடைசிப் பெட்டைதான் ரியூசன் வகுப்புக்கு போறதுக்காக சைக்கிளோட வெளியில வந்துது. கொஞ்சம் கறுப்பா இருந்தாலும் நல்ல முகவெட்டும் வடிவும். இருந்தாலும் ரெண்டாவதை நான் மனசார விரும்பினதால கடைசிப் பெட்டையில ஒரு பிடிப்பு வரமாட்டன் எண்டிட்டிது. பெட்டைக்குப் பக்கத்தால சந்தோஷமாத் துள்ளிக் கொண்டு “ரெக்ஸ்” உம் ஓடி வந்துது. கையில இருந்த ஒரு துண்டு பிஸ்கோத்தை என்ர காலடியில போட்டு ரெக்ஸ்சை என்ர காலுக்க வரப்பண்ணிப் போட்டு ஒரு வில்லங்கமான சிரிப்போட கடந்து போச்சுது பெட்டை. நான் முகத்தை “உம்” எண்டு பிடிச்சுக் கொண்டு நிண்டன். ரெக்ஸ் பிஸ்கோத்தை திண்டிட்டு என்ர காலை நக்கீச்சு.. நான் அதின்ர தலையில தடவி விட்டன்.

வீட்டுக்கு ஒருக்கா கள்ளன் வந்த பிறகு மாமா எங்கையோ இருந்து இந்த உருண்ட வெள்ளை ரெக்ஸ்சை வீட்டை கொண்டு வந்து கட்டினார். மாமா வீட்டை ஆர் கடந்து போனாலும் அதிகமா ரெக்ஸ் குரைச்சுக் கொண்டு அவையள விட்டுக் கலைக்கும். அதால அதிகமா மாமா வீட்டைக் கடக்கிற எல்லாருமே கொஞ்சம் உசாரா விடுவிடு வெண்டுதான் நடந்து போவீனம். சைக்கிள்காறர் எண்டா பாஸ்ட்டா ஓடி வந்து வீட்டைக்கடக்கேக்க பாரில காலைத் து£க்கி வைச்சுக் கொண்டு போவினம். ஆனால் ரெக்ஸ் இதுவரைக்கும் ஒருத்தரையும் கடிச்சதெண்டு நான் கேள்விப்படேலை.. நாங்கள் பக்கத்து வீட்டில இருக்கிறதாலையும், மாமியோட சேந்து ரெக்ஸ் அடிக்கடி எங்கட வீட்டை வாறதாலையும் எங்க வீட்டில யாரைக்கண்டாலும் சந்தோஷத்தோட வாலை ஆட்டிக்கொண்டு வந்து காலை நக்கும்.

ஒருநாள் நான் வகுப்பு முடிஞ்சு வீட்ட சைக்கிள்ள வரேக்க,, மாமி வீட்டை பெரிய சத்தமா ரெண்டு மூண்டு நாய்களின்ர கத்தி குரைக்கிற சத்தம் கேட்டுது. நான் சைக்கிள மதிலோட சாய்சுப் போட்டு போய்ப் பாத்தன் ரெக்ஸ் ஒரு பெட்டை நாயோட ஒட்டிப்போய் இழுப்பட்டுக் கொண்டு நிண்டுது. மாமி வீடு பூட்டிக் கிடந்துது.. (பூட்டிக் கிடக்கோ இல்லாட்டி பெட்டைகள் வெளியில வர வெக்கப் பட்டு உள்ளுக்க நிக்கீனமோ எண்டு தெரியேலை.). நான் ஒரு தடிய எடுத்து அதுகளைக் கலைச்சன். ரெண்டும் கத்திக் கொண்டு இழுபட்ட படியே பின் வளவுக்க ஓடீற்றுதுகள்..

பிறகு கொஞ்ச நாளால ஒருநாள் நான் வெளியில வெளிக்கிட்டிக்கொண்டிருக்கேக்க அம்மா ஓடி வந்து “தம்பி நான் ஊத்தையா நிக்கிறனடா இதை ஒருக்கா மாமீட்டைக் குடுத்திட்டுப் போ” எண்டு ஒரு பெட்டிய நீட்டினா.. மங்கையர்மலரில சொன்ன “ரெசுப்பி” இப்பிடித்தான் அடிக்கடி பெட்டியோட அங்கையும் இஞ்சையும் கை மாறும். நான் சினத்தோட பெட்டிய வாங்கிக் கொண்டு மாமி வீட்டை போனன். மாமி வீட்டு விறாந்தையில சறத்தை மடிச்சுக் கட்டி, மஞ்சள் நிறத்தில நைலோன் ஆம்கட் ரீசேட் போட்ட தடிச்ச கறுப்பன் ஒருத்தன் ரெக்ஸ்சை அமத்திப்பிடிச்சுக் கொண்டு மாமாவோட ஏதோ கதைச்சுக் கொண்டு நிண்டான். ரெக்ஸ் என்னைக் கண்ட உடன மெல்லிய குரலில முனகிப் பிறகு குரைச்சுது. நான் தயங்கித் தயங்கிக் கிட்டப் போக மாமா என்ன ஒரு மாதிரிப் பாத்திட்டு உள்ள போ எண்டு தலைய ஆட்டினார். நான் பேசாமல் உள்ள போனன். மாமி மேசையில துணிய விரிச்சு வைச்சு அளந்து அளந்து ஏதோ வெட்டிக்கொண்டிருந்தா. அவவின்ர வயிறு உப்பின மாதிரி இருந்துது.

மூண்டு பெட்டைகளும் ரேடியோவில இசையும் கதையும் கேட்டுக்கொண்டு இருந்தீச்சுதுகள். நான் முகத்தை “உம்” எண்டு பிடிச்சுக் கொண்டு மாமீற்ர பெட்டிய நீட்டினன். மாமி வாங்கி மேசையில வைச்சுப் போட்டுத் துணி வெட்டிறதில கவனமா இருந்தா. இசையும் கதையுமில “காதலிலே தோல்வியுற்றான் காளை ஒருத்தன்” எண்டு பாட்டுப் பாடீச்சுது. நான் பெட்டைகளையும் மாமியையும் மாறி மாறி பாத்துக் கொண்டு நிக்க

(நான் மூத்த பெட்டைய மட்டும்தான் அக்கா எண்டு கூப்பிடுறனான், முந்தி எனக்கு அக்காவோட நல்லா ஒத்துப் போகும். அவ சொல்லுற வேலையெல்லாம் ஓடியோடிச் செய்வன்.. ஆனால் இப்பவும் அவ என்னைச் சின்னப் பெடியன் மாதிரி கண்ட கிண்ட வேலைகள் சொல்லுறதால நான் அவேன்ர வீட்டை போறதைக் குறைச்சுப் போட்டன்.. பத்தாததுக்கு ரெண்டாவது பெட்டை அக்காட்ட என்னைப் பற்றி ஏதோ அள்ளி வைச்சிட்டுது எண்ட சந்தேகமும் எனக்கு இருக்கு)

அக்கா என்னைப் பாத்து “என்ன பெட்டி வேணுமே” எண்டு கேட்டா.. நான் “இல்லை” எண்டு தலையாட்டினன். கடைசிப்பெட்டை என்னைப் பாத்துக் கண்ணால சிரிச்சுது. பிறகும் நான் போகாமல் நிக்கிறதைக் கண்ட மாமி “என்னடா” எண்டா.. “இல்லை மாமி ரெக்ஸை யாருக்கும் குடுக்கப் போறீங்களே?” எண்டன். கடைசிப் பெட்டை ஒரு மார்க்கமா சிரிச்சுக் கொண்டு அறைக்குள்ள ஓடிச்சுது. நான் வந்த கோவத்தில திரும்ப “அது ஒண்டுமில்லையடா இஞ்சதான் நிக்கும் நீ போ” எண்டு மாமி வாயுக்க ஒரு சிரிப்போட சொன்னா.. எல்லாமே எனக்கு ஒரு புதிரா இருந்துது.. ரெண்டாவது பெட்டை என்னை ஒரு பொருட்டாவே எடுக்கிறதில்லை.. நினைச்சா நான் அவவின்ர லவ் கதைய அம்மாட்டச் சொல்லி நாறடிச்சுப் போடுவன்.. ஆனால் ஏனோ மனம் கேக்கேலை.. நான் பேசாமல் திரும்பி நடக்க, பின் முத்தத்து வேப்பமரத்தில ரெக்ஸ்சை அந்த தடியன் கட்டி வைச்சிட்டு நிலத்தில இருந்து ஏதோ செய்து கொண்டிருந்தான்.. ரெக்ஸ் அனுங்கிக் கொண்டு நிண்டுது. நான் நிண்டு கொஞ்ச நேரம் பாக்க மாமா “இதெல்லாம் நீ பாக்கக் கூடாது போ” எண்டார். தயங்கித் தயங்கி நான் வெளியில் வர ரெக்ஸ் பெரிசாக் கத்திற சத்தம் கேட்டுது. ரெக்ஸ்க்கு ஏதோ செய்யிறான் அந்த தடியன்.. ஓடிப்போய் அதைக் காப்பாற்ற வேணும் எண்டு ஆசையா இருந்திச்சு.. நான் எட்டிப் பாத்தன்..மாமான்ர தலை மதிலால இன்னும் தெரிஞ்சுது.. அதால நான் திரும்பிப் போகாமல் பேசாமல் வந்திட்டன்.

அடுத்தநாள் நான் வெளியில வெளிக்கிடேக்க ரெக்ஸ் மாமா வீட்டு வாசலில நிண்டு மெல்லமாக் குரைச்சுது. நான் “ஓடி வா” எண்டு கையக் காட்டவும் வராமல் சினுங்சிச் சினுங்கிக் குரைச்சுது.. நான் கிட்டப் போக பின்பக்கத்தை ஒரு மாதிரி உயத்திப் பிடிச்சுக் கொண்டு கால்கள் ரெண்டையும் அகட்டிக் கொண்டு முனகிய படியே மெல்ல மெல்ல என்னட்ட நடந்து வந்துது. நான் அதை மெல்லமாத் து£க்கி தடவி விட்டன். பின்பக்கமா அதுக்கு ஒரு கட்டுப் போட்டிருந்துது.

மூண்டு பெட்டைகளுக்குப் பிறகு கனகாலத்தால மாமிக்கு ஒரு பெடியன் பிறந்துது. நானும் தம்பியும் மாமிக்குப் பிள்ளை பிறந்ததை கதைச்சுச் சிரிச்சதைக் கேட்டு அம்மா “வயசுக்கு ஒரு மரியாதை இல்லாமல் உதென்ன கதையும் சிரப்பும்” எண்டு கோவிச்சா.. தம்பி என்ர காதுக்கு “எங்களுக்குத் தங்கச்சி பிறக்காட்டிச் சரி” எண்டு சொல்ல நான் சிரிப்புத் தாங்கேலாம் வெளியில ஓடீற்றன். அம்மா என்னை முறைச்சுப் பாத்துப் போட்டுப் போட்டா..

கணன்; மாமான்ர தலை நரைச்சிருந்தாலும் நடையில தளர்ச்சி இல்லை.. மாமி தலைக்கு டை அடிச்சிருந்தா. முகந்தான் சுருங்கிப் போய் இருந்துது. எங்களைக் கண்ட உடன கட்டிப் பிடிச்சு அழுதா. அப்பா செத்தாப்பிறகு இப்பதான் காணுறா.. அதுதானாம் அந்த அழுகை. பெட்டைகள் மூண்டும் கலியாணம் கட்டி லண்டனில தான் இருக்குதுகள் எண்டா. ரெண்டாவது பெட்டைக்கு எத்தின பிள்ளை எண்டு வாயில வந்த கேள்விய நான் அடக்கிக் கொண்டன். எனக்கு எப்ப கலியாணம் எண்டு கேட்டா.. “அவன் யாரையோ லவ் பண்ணிறானாம் பெட்டை யூனிவேசிட்டியில படிக்குதாம் படிப்பு முடியத்தான் கலியாணம் எண்டு இழுத்தடிக்கிறான்” எண்டு அம்மா சொன்னா. நான் பெருமையாச் சிரிச்சன். தன்ர கடைசிப் பெடியன் லண்டனில் டொக்டருக்குப் படிகிக்கிறான் எண்டு என்ர பெருமையில மண்ணை அள்ளிப் போட்டா மாமி.

லண்டனிலும் பாக்க கனடா நல்லா இருக்குது எண்டும், சாப்பாடு, இடமெல்லாம் எங்கட ஊர் போல கிடக்குது எண்டும் மாமா சொன்னார். தான் இப்ப இடியப்பம் தோசை ஒண்டும் செய்யிறேலை எல்லாம் கடையில வாங்கலாம் எண்டு அம்மா கனடாப் பெருமையக் கொஞ்சம் கூட்டிச் சொன்னா. தான் கனடாவில வாங்கின சீலைகள மாமி அம்மாக்குக் காட்டினா. அம்மா முகத்தைச் சோகமா வைச்சுக் கொண்டு தான் இப்ப பெரிசாப் பட்டு ஒண்டும் கட்டிறேலை எண்டா.. எனக்கு விசர் வந்துது. தம்பி ரூமுக்க கொம்பியூட்டரில் கிணுகிணுக்கிற சத்தம் கேட்டுது. நாளைக்கு வேலைக்கு வெள்ளணைப் போக வேணும் இருண்டிட்டுது படுக்கலாம் எண்டா வழியக் காணேலை.. (நான் மூத்த ஆம்பிளப் பிள்ளையாம் விசிற்ரேஸ் வந்திருக்கேக்க அவையளோட இருந்து கதைக்க வேணுமாம்..அம்மான்ர மனேஸ் இஞ்சையும் வேலை செய்யுது) நான் சோபாவில இருந்து து£ங்கிக் கொண்டு இருந்தன். கதை கதையெண்டு கதைச்சு அலம்பி ஒரு வழியாக் கொட்டாவி விட்ட படியே ஒவ்வொருத்தரா படுக்கப் போச்சீனம். நான் பேசாமல் சோபாவில படுக்க அம்மா வந்து எழுப்பி “அவையள் கண்டாச் சரியில்லை.. போய்த் தம்பியோட படு” எண்டு பலவந்தமா அனுப்பினா. தம்பி கட்டிலில காலை விசிச்சுப் பரந்து படுத்திருந்தான். இண்டைக்கு நித்திரை கொண்ட மாதிரித்தான் எண்டு நான் ஒரு ஓரமா ஒதுங்கினன்.


கண் மூடி மூடித் திறக்க நான் அயருவதும் முழிப்பதுமாகப் புரண்டு கொண்டு கிடந்தன். மாமீன்ர ரெண்டாவது அடிக்கடி வந்து சிரிச்சிது. தம்பி சின்னதாக் குறட்டை விட்டான். நான் கையால அவன்ர வாயை மூடிப்பாத்தன் சரி வரேலை.. பெட் சீட்டை எடுத்து தலையைப் போத்து கண்களை இறுக மூடி ஒண்டு ரெண்டு எண்டு மனதுக்க எண்ணிக் கொண்டு கிடக்க, என்ர அறையில கட்டில் ஆடுற சத்தம் கேட்டுது. மாமி கிளுகிளுத்தா சின்னதாச் சிரித்தா.. பிறகு சினுங்கினா..மாமா ஏதோ ரகசிய குரலில குசுகுசுத்தார்.. மாமியின்ர குரல் இன்னும் சினுங்கியது.. பிறகு ரெண்டு பேற்ற மூச்சும் ஒரு மாதிரிக் கேட்டுது. என்னடா இது சோதினை எண்ட படி நான் தம்பியப் பாத்தன் அவன் வாய் திறந்து சொர்க்கத்தில கிடந்தான். நான் காதைப் பொத்திக் கொண்டு கிடக்க மாமியின்ர ஆ.. ஆ வெண்ட குரல் வந்து காதைப் பொத்தி அடிச்சிது.. பிறகு கொஞ்ச நேரத்தால ஓய்ஞ்சு போச்சுது. மாமா இருமுற சத்தம் கேட்டீச்சு.. எனக்கு கையெல்லாம் குளிந்து விறைச்சுப் போச்சு.. அடக்க முடியாமல் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு கிடந்த என்ர கண்களை நித்திரை வந்து மூட பின் கால்களை அகட்டிப் பிடித்த படி முனகலோடு அரக்கி அரக்கி நடக்கும் நான் மறந்து போயிருந்த “ரெக்ஸ்”; என் கண்களுக்குள் வந்து போனது.

Friday, April 08, 2005

Guyana 1838வரலாற்றைக் கூறும் திரைப்படங்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு இருப்பதுண்டு. தற்போதெல்லாம் History Channel இல் WWI, WWII படங்களை எத்தனை விதமாக எத்தனை கோணத்தில் காட்டினாலும் மிகவும் விரும்பிப் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. அந்த வகையில் "Guyana 1838" திரைபடம் திரையரங்கிற்கு வந்த போது கயானா நாட்டு வரலாறு வேண்டிய அளவிற்குத் தெரிந்திருந்ததால் மிகுந்த ஆவலுடன் சென்று பார்த்தேன்.

19ம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து கரும்பு தோட்டத்தொழிலுக்காக ஒரு மில்லியனுக்கு மேலான மக்கள் கயானா, ரினிடாட் போன்ற நாடுகளுக்கு அழைத்து வரப்பட்டு அங்கு அடிமைகளாக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாகியிருக்கின்றார்கள். வெறுமனே படிக்கும் போது எழாத உணர்வுகள் திரைமொழி மூலம் சொல்லப்படும் போது மக்களிற்கு அதிக தாக்கத்தைக் கொடுக்கும். அந்த வகையில் பார்த்தால் "Guyana 1838" பார்வையாளர்களுக்கு மிகுந்த தாக்கத்தை உண்டு பண்ணியாதா? எனின் பார்வையாளராகிய என் கருத்தின் படி இல்லை என்றே கூறுவேன். "Guyana 1838" ஒரு சுதந்திரமான திரைப்பட நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். மிகக் குறைந்த பணச்செலவில் ஒரு வரலாற்றுத் திரைப்படத்தை எடுத்தது தவறோ என்ற எண்ணத்தையே எனக்குள் விட்டுச் சென்றது. ஒரு விவரணப்படமாக மட்டும் வேண்டுமென்றால் இதனைப் பார்க்கலாம். ஆனால் விவரணப்படத்திற்கான விதிமுறைகள் இப்படத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை.திரைப்பட ஆரம்பத்தில் கறுப்பர்களுக்கும் வெள்ளையர்களுக்குமான பிரச்சனைகள் காட்டப்பட்டு குறைந்த ஊதியத்தில் கரும்புத் தோட்டத்தில் வேலை செய்ய மறுத்த கறுப்பர்களை நிராகரித்து விட்டு புதிதாக இந்தியாவிலிருந்து வேலையாட்களை கொண்டுவருகின்றார்கள் வெள்ளையர்கள். பல ஆயிரம் கறுப்பர்கள் அடிமைகளாக கயானாவில் வாழ்ந்து தனது உரிமைக்காகப் போராடியதையும் அடிமை நிலையை அவர்கள் எதிர்த்து நின்று போராடி வெற்றி கண்டதையும் இயக்குனர் மிக குறைந்த அளவு நடிகர்களை வைத்து (25க்கும் குறைந்த) காட்டியிருப்பது அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
அதே போல் ஒரு மில்லியனுக்கும் மேலான இந்திய மக்கள் என்று வரலாற்றின் மூலம் அறிந்திருந்த எமக்கு ஏனோதானோ என்று பத்துப் பதினைந்து நடிகர்களை வைத்து ஒரு நாட்டு மக்களின் பிரச்சனையை அலசியிருப்பது யதார்த்தமாக இல்லாததுடன் மிகவும் செயற்கையாகவே இருந்தது.
இருந்தும் சொல்ல வேண்டிய கருவை தவறாமல் எடுத்துச் சொல்லியிருக்கின்றார்கள். கறுப்பர்களை அவர்கள் விரும்பின் கூலிக்காக மட்டும் உபயோகப்படுத்தலாம் என்ற சட்டம் வந்த பின்னரும் அதனைச் சட்டை செய்யாததும் கூலிகள் என்ற பெயரில் இந்தியர்களுக்கு ஊதியம் தருவதாகவும் அவர்கள் விரும்பிய காலத்திற்கு வேலை செய்து விட்டு மீண்டும் திரும்பி தமது நாட்டுக்குப் போகலாம் என்று ஆசை வார்த்தை கூறி பல இந்தியக் குடும்பங்கள் பிரித்தும் அடிமையுமாக்கியதை முற்று முழுதாகக் காட்டியிருக்கின்றார்கள்.
இந்தியாவிலிருந்து வந்து அடிமை வாழ்க்கை வாழ்ந்து சொந்தங்களையும் தமது வேரையும் கூட இழந்து விட்ட இந்திய கயனா மக்களுக்கு தமக்கான சரியான தீர்ப்பு ஒருபோதும் வழங்கப்படவில்லை என்ற ஆதங்கம் தற்போதும் இருக்கின்றது. அவர்கள் பார்வையில்
"Guyana 1838" கூட பல உண்மைச் சம்பவங்ளை மறைத்து விட்டது என்றே கருதுகின்றார்கள்.

Thursday, April 07, 2005

பெண்சுதந்திரம் என்றால் என்ன?

நீங்கள் பெண்சுதந்திரம் எண்டுறதைப் பிழையா விளங்கியிருக்கிறீங்கள். பெண் சுதந்திரத்தின்ர அடிப்படையே தெரியாமல் எப்பிடிப் பெண்சுதந்திரம் பற்றிக் கதைக்கிறீங்கள்? பெண்சுதந்திரம் எண்டால் இதில்லை. பெண்சுதந்திரம் எண்டால் அதில்லை. அப்ப பெண்சுதந்திரம் எண்டால் என்ன?

கறுப்பியின்ர அனுபவத்திலையும் மற்றவர்கள் சொல்லக் கேட்டதும் படிச்சதும் எண்டு சில கருத்துக்களை நான் இங்க பகிர்ந்து கொள்ளப்போறன்.
பெண்சுதந்திரம் எண்டு தனியா ஒண்டு இல்லை. தனிமனித சுதந்திரம்தான் பெண்சுதந்திரத்தின்ர அடிப்படை எண்டுதான் கறுப்பி விளங்கி வைச்சிருக்கின்றாள். பெண்கள் ஆண்களாலையும் சமூகத்தாலையும் அடக்கு முறைக்கு ஆட்படுறதால “பெண்சுதந்திரம்” எண்டு அழுத்திச் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்குப் பெண்கள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.
சரி அப்ப தனிமனித சுதந்திரம் எண்டால்? ஒரு மனிதன் தனது விருப்பத்துக்கேற்ப சுதந்திரத்திற்கு ஏற்ப வாழுதல் எண்டு சொல்லலாம். உடன அப்ப கொலையும் செய்யலாமோ? எண்ட கேள்வி கூட ஒருக்கா கறுப்பியிடம் வைக்கப்பட்டது. தனிமனித சுதந்திரத்தை நீங்கள் முற்றாகப் புரிந்து கொண்டால் கொலை என்பது இன்னுமொருவரின் உயிரை எடுப்பது என்ற நிலையில் இன்னுமொருவரின் வாழும் சுதந்திரத்தை நீங்கள் பறிக்கும் போது அங்கே தனிமனித சுதந்திரம் அடிபட்டுப் போகிறது. சட்டங்களை மீறுதல் என்பதும் தனிமனித சுதந்திரத்திற்குள் அடங்கா.
கறுப்பியின் பார்வையில் தனிமனித சுதந்திரம் என்பது ஒரு ஆணோ பெண்ணோ தன் விருப்பப்படி எந்த ஒரு திணிக்கப்படும் தீர்வுகளுக்கும் அடிபணியாமல் வாழுதல் எனலாம். 18 வயது வரைக்கும் பெற்றோர்களின் பாதுகாப்பில் இருந்த பிள்ளைகள் பின்னர் தம்மை பெரியவர்களாக அடையாளம் கண்டு கொள்ளும் போது அவர்கள் தெரிவில் அவர்கள் தேடலில் அவர்களின் அறிவிற்கு ஏற்ப தமது எதிர்காலத்தைத் தீர்மானித்தல் இதற்குள் அடங்கும். இது எப்போதுமே சிறந்த தெரிவா இருக்கவேண்டிய அவசியமில்லை. பெற்றோர்களோ நண்பர்களே உறவுகளோ இவர்களின் தெரிவு தவறு என உணரும் பட்சத்தில் அறிவுரை கூறலாமே தவிர. தமது கொள்கைக் கேற்ப அவர்களை மாற்ற முயலக்கூடாது.
சரி இனி பெண்சுதந்திரம் என்று கூறிக்கொள்ளும் எமது சமுதாயம் பெண்களிடம் எதிர்பார்ப்பது என்ன என்று பார்த்தால். –
பெண்ணியம் பெண்சுதந்திரம் பேசும் எழுதும் கோட்பாடுகளுக்குள் வாழுபவர்கள் கூட தமது சிந்தனைக் கேற்ப தம்மால் வரையறுக்கப்பட்ட பெண்ணியம் எனும் ஒன்றுக்குள் பெண்சுதந்திரம் கதைக்கும் ஒருவர் நடந்து கொள்ளாத பட்சத்தில் நீங்கள் பெண்சுதந்திரத்தைத் தவறாகப் புரிந்து வைத்திருக்கின்றீர்கள் என்று மீண்டும் ஓரு அடக்குமுறைக்குள் பெண்ணைக் கொண்டு வர முயல்கின்றார். இதை கறுப்பி பல அனுபவங்கள் மூலம் கண்டுள்ளாள்.

"அம்பை" தனது பயணக்கதை ஒன்றில் தான் குடிப்பதாக எழுதியிருந்தது பலரால் அப்ப பெண்ணியம் எண்டாக் குடிக்க வேணுமோ என்று கிண்டல் அடிக்கப்பட்டது. இங்கும் தீர்மானிக்கப்பட்ட வரையறைக்குள் தமது பெண்ணியக் கருத்துக்களைக் கொண்டவர்கள் தமது பெண்ணியக் கருத்துக்குள் குடிப்பது என்பது அடங்காத பட்சத்தில் நாகரீகமற்ற முறையில் கிண்டல் அடிப்பதாகவே கறுப்பி விளங்கிக் கொள்கின்றாள். அதே நேரம் ஒரு ஆண் எழுத்தாளர் தான் குடிப்பதாக கூறும் போது அது ஒருவராலும் கண்டுகொள்ளப்படுவதில்லை. இங்கே பெண்ணியம் பேசுபவர்களாலேயே பெண்கள் தரமற்றவர்களாக இல்லாவிட்டால் ஆண்களைப் போல வாழ முற்படுகின்றார்கள் என்று அடையாளப்படுத்தப்படுகின்றாள். ஒரு பெண் அவளுக்கு குடிப்பது என்பது பிடித்திருக்கும் பட்சத்தில் அவளின் தீர்மானத்தின் படி அவள் குடிப்பது அவள் சுதந்திரம். குடிப்பதோ, புகைப்பிடிப்பதோ, ஏன் கன்ஜா அடிப்பதோ, போதை மருந்து பாவிப்பதோ, உடலுக்குக் கெடுதல் என்பது சாதாரண எந்த மனிதனுக்கும் தெரிந்த விடையம். ஒருவரின் தெரிவில் தனது உடல் பற்றிய அக்கறை இல்லாத பட்சத்தில் அவர் அதனை உபயோகிப்பது அவரின் விருப்பமேயன்றி வேறொன்றுமில்லை. பெண் அதனைச் செய்யும் போது உடலுக்குத் தீங்கானது என்று அறிவுரை கூறலாம் அதைவிடுத்து பெண்ணியம் பேசுவதால் பெண்சுதந்திரம் என்று பிழையாக விளங்கிக்கொண்டு (விளங்க என்ன இருக்கு) ஆண்களை பிரதிமை செய்கின்றார்கள் என்று கூறுவது அவர்கள் அறியாமையே.

தமிழ் சமுதாயக் கட்டுப்பாட்டிற்குள் வளர்ந்த பல தமிழ் பெண்கள் தற்போது புலம்பெயர்ந்து வேற்று நாட்டுக் கலாச்சாரத்திற்குள் தம்மைப் புகுத்தி வாழ முற்படுகின்றார்கள். இப்போது தமிழ்ச் சமுதாயம் ஒரு போதும் கண்டிராத பல வாழ்வு முறைகளை புலம்பெயர்ந்த பெண்கள் பின்தொடருகின்றார்கள். மீண்டும் பெண்கள் தவறான வழியில் போகின்றார்கள் அவர்களைத் தட்டி, நிமிர்த்தி சீராக்க வேண்டும் என்று பல மூத்தவர்களும், ஆண்களும் புலம்புவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து தனித்துவமாக வாழ முற்படும் ஒரு பெண்ணிற்கு புலம்பெயர் கூ10ழல் அதற்கேற்ப இசைவாக்கம் அடையும் தன்மையைக் கல்வி முறையாலும், வாழ்க்கை முறையாலும் கற்றுக்கொடுக்கின்றது. இனிமேலும் தமிழ் பெண்களை ஒன்றும் தெரியாதவர்களாகவும் மூத்தவர்களாலும், ஆண்களாலும் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு ஜந்தாகப் பார்க்கப்படல் கூடாது. தமது வாழ்வு முறை எதிர்காலம் என்பவற்றில் புலம்பெயர்ந்து வாழும் பெண்களுக்கு இருக்கும் திடமான அறிவு, தீர்மானம் சிலவேளைகளில் கறுப்பியை வியக்கவும் வைத்திருக்கின்றது.

புழுதி புளொக்கில் நிருபா கறுப்பியின் பின்னூட்டதிற்கு இட்ட பதிலைப் பார்க்கின்

//வெள்ளி சனி வந்து விட்டாலே டிஸ்கோவிற்காக தம்மைத் தயார்படுத்திக் கொள்கின்றனர் நீங்கள் குறிப்பிடும் „மிகவும் சுதந்திரமாக இருக்கும் பெண்கள்.“ பெண்களுக்கான சுதந்திரம் என்பது கிளப்புகளுக்குப் போவது என்கின்ற ஒரு அபிப்பிராயம் இருந்துவருகிறது. இது பெண்களின் விடுதலைபற்றிய சரியான விளக்கமின்மையையே சுட்டிநிற்கிறது\\

இதுவும் தீர்மானிக்கப்பட்ட முடிவே. சமூகசேவை என்பதோ இல்லாவிட்டால் (ஏதாவது நல்ல விடையங்கள்) எமது சமூகத்திற்குப் பெண்களுக்கு உதவும் வகையில் நடப்பதுதான் பெண்சுதந்திரம் என்று ஒரு வரையறைக்குள் எதையும் நாம் கூறிவிட முடியாது. சுதந்திரமாக வாழும் ஒரு பெண் கிளப்பிற்கும் போகும் அதே நேரம் சமூக சேவைகளையும் செய்ய முடியும் இது அவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களைக் கொண்டது. இங்கும் ஆணுக்கான சுதந்திரம்தான் பெண்களால் தொடரப்படுகின்றது என்ற கருத்துப் பலருக்கும் இருக்கின்றது. முற்றுமுழுதான நல்லதைத்தான் (தமிழ் மக்களால் தீர்மானிக்கப்பட்ட) பெண்ணியம் பேசுபவர்கள் செய்யவேண்டும் என்று இல்லாவிட்டால் இவர்கள் பெண்சுதந்திரத்தைத் தவறாக விளங்கிக் கொண்டுள்ளார்கள் என்று தமது வரையறைக்குள் எல்லாவற்றையும் முடித்துக்கொள்கின்றார்கள்.


பெண்சுதந்திரம் என்று ஒன்று தனியாக இல்லை. தனிமனித சுதந்திரம் என்பதே எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பது கறுப்பியின் அபிப்பிராயம்.

Wednesday, April 06, 2005

இருள்களால் ஆன கதவு


1
அந்த அகண்ட ஹோலில் அசைக்கப்படாமல் பலகாலமாகப் போடப்பட்ட பொருட்கள் மனதில் பதிந்து போய் விட்டிருந்தன. ஒன்று அரக்கப்பட்டாலோ இல்லைப் புதிதாக நுழைந்து கொண்டாலோ மீராவால் இலகுவில் அடையாளம் கண்டு கொள்ள முடியும்.
வழமை போல இன்றும் அதே சுவரின் மூலையில் சாய்ந்து, கலைந்த தலையும், சிவந்த கண்களுமாய் எங்கோ வெறித்துக் கொண்டே மகன் ரிஷிக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதாய் பாவனை செய்து கொண்டிருந்தாள் யசோ. அவளும் அந்த ஹோலின் ஒரு அசையாத பொருளாக மாறி வருகின்றாளோ என்ற அச்சம் மீராவிற்கு. அவள் தலை சாய்க்கும் பகுதி சிறிது நிறம் மாறிப்போயிருந்தது. தனியாக வீட்டு வேலைகளை அவள் செய்வதற்கு மீரா ஒரு போதும் அனுமதித்ததில்லை.. இருந்தும் எதையாவது செய்து வைப்பதை அவளால் தடுக்கவும் முடிவதில்லை..
கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் குற்றம் செய்து விட்டது போல் புத்தகங்களை வாரி எடுத்துக் கொண்டு தனது அறையை நோக்கி நடந்தாள் யசோ. மீரா ரிஷியை அணைத்து அவன் தலை தடவி அவள் முகம் பார்க்கு முன்னே யசோ மறைந்து விட்டிருந்தாள்.
முகுந்தன் சோபாவில் கால் அகட்டி விழுந்தான். மூன்று நாட்கள் தொடர்ந்து வேலை செய்ததால் வந்த களைப்பு. இனிச் சிறிது நேரம் கண்மூடி, சிறிதாக குறட்டை விட்டுத் திடுக்கிட்டெழுந்து தொலைக்காட்சியில் செய்தி பார்த்துப் பின்னர் அவளுக்கு சமையலுக்கு உதவுவான். யசோ வந்த பிறகு மீரா அவனை உதவிக்கழைப்பதில்லை. மீரா எல்லாக் களைப்பிலிருந்தும் வெளியே வந்து விட்டிருந்தாள். முகம் கழுவி, சமையலுக்கு ஆயத்தமானாள். முகுந்தன் ஹோல் பக்கமோ, குசினிப்பக்கமோ இருந்தால் அந்த இடங்களை யசோ தவிர்ப்பாள். தெரிந்ததால், முகுந்தனின் தோளில் தட்டி கோப்பியைக் கொடுத்து அறைக்குள் போய் படுக்கச் செய்தாள் மீரா.
யசோ நெற்றி நிறைந்த விபூதியோடு வெங்காயத்தை எடுத்து தோலை உரிக்கத் தொடங்கினாள். மீரா அவள் முகம் பார்ப்பதை தவிர்த்தாள். அணைத்து வாய்விட்டுக் கதறிய நாட்கள் போய் யசோவின் செய்கைகள் இப்போதெல்லாம் கொஞ்சம் எரிச்சல் தருகின்றன அவளுக்கு. சாப்பிடும் போது இந்தா எழும்பி விடுகிறேன் என்பதாய் கதிரை நுனியில் இருந்து கொண்டு ஒற்றைக் கறியோடு சோற்றை கொஞ்சமாக வாய்க்குள் திணித்து தண்ணீர் விட்டு மென்று விழுங்குவதும் தமிழ் படம் பார்ப்போம் என்று பலவந்தமாக ஹோலுக்கு அழைத்து வந்தால் வழுக்கி விழுந்து விடுவது போல் சோபாவில் வேண்டா வெறுப்பாக இருப்பதும் மீராவிற்கு போதும் போதுமென்றாகி விட்டது. இவளின் எதிர்காலம் என் கையில் என்பதாய் மீரா அங்கலாய்த்தாள்.
2
நீண்ட தலைமயிரை இறுக்கமாக இரட்டைப் பின்னல் பின்னி நுனியில் கறுப்பு ரிபணை அழகாகக் கட்டி விட்டு அகன்ற பெரிய கண்களுக்கு அளவாக ஐடெக்ஸ் இட்டு, நெற்றியில் சின்னதாக ஒரு கறுப்புப் பொட்டும், மெல்லிய ஒற்றை வரியில் விபூதி போல் பவுடரும் பூசி, வெழுத்த வெள்ளைச் சட்டை, ரை, சப்பாத்து என்று ரோட்டில் அவள் இறங்கும் போது தூரத்தில் காத்திருக்கும் ஆண் கூட்டம் நடந்தும், சைக்கிளை உருட்டிக் கொண்டும் அவளைப் பின் தொடரும். மீராவிற்கு அந்த ஆண்கள் இட்ட பட்டப் பெயர் “வில்லி” அக்கா யசோவிற்கு அவள் தான் பாதுகாப்பு. யசோவின் அதிமிகுந்த அழகு மீராவை ஒரு போதும் சங்கடப்படுத்தியதில்லை. மாறாக பெருமைப்பட்டாள். அக்காவை எந்த ஒரு ஆண் வாடையும் நெருங்கிவிடாமல் பாதுகாப்பதில் அவளிற்கு மிகுந்த பெருமை. யசோவும் தன் அழகு பற்றி அலட்டிக் கொள்ளாதவள். யசோவையே சிறிய சிறிய கோணல்களுடன் வடித்தது போலிருந்தாள் மீரா. யசோவிற்கு முன்னால் அவள் அழகற்றவள். இருந்தும் மீராவின் திறமை, துணிவு சிலவேளைகளில் யசோவை மிரளச் செய்யும். அவளிடம் ஏதோ அசாத்திய சக்தி இருப்பது போல் யசோ சில நேரங்களில் எண்ணிதுண்டு. தன் பாதுகாப்பிற்கு மீராவின் பின்னால் ஒதுங்குவதற்கு அவள் தயங்குவதுமில்லை.

கல்வி இயல்பாக வந்தும், ஏனோ சுவாரசியமாக இருக்கவில்லை யசோவிற்கு. அவள் இரவுகள் நீண்ட நித்திரையைத் தொலைத்தவையாயின. தலை வரை போர்த்துக் கொண்டு கண்களை மூடிக் கனவுக்குள் திளைக்கத் தொடங்கினாள். மிகப் பிரமாண்டமான மண்டபத்திற்குள், பட்டுச் சரசரக்க உறவினர்கள், நண்பர்கள் என்று கலர் கலராக வந்து போயினர். முற்றிலும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மணவறையில் வெட்கத்துடன் தலைகுனிந்திருந்தவளை, முகம் தெரியாத ஒருவன் தாலி கட்டி மனைவியாக்கினான். மண்டபத்தில் தொடங்கி தாலி கட்டும் வரை அவள் கனவுகள் அவசர அவசரமாக இருக்கும், அதன் பின்னர் அதிக நுணுக்கங்களுடன் கனவு தொடரும், அவள் முதலிரவு எப்போதும் தமிழ் சினிமா முதலிரவுகளை ஒத்திருக்கும். இறுகப்பட்டுடுத்தி, தலை நிறைந்த பூவுடன் கையில் பால் கிண்ணம் என்று தலை குனிந்து அறைக்குள் நுழைந்து, முகம் தெரியாக் கணவனின் காலில் விழுந்து எழுந்து.. அதன் பின்னர் கனவு மேலும் நுணுக்கமாக.. பல மணி நேரங்கள் நகரும்.. உடல் சிலிர்க்க, தொடைகள் விறைக்க வெட்கித்துப் புரளுவாள்.. தொடரும் வெட்கத்திலும் வேட்கையிலும் திணறி முடிவில் யசோ காதலித்தாள். தான் கனவில் கண்டது அவன்தான் என்றும், பெண்ணாய் பிறந்தால் திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கணவனுடன் குடும்பம் நடாத்துவதுதான் என்பதில் அவளுக்கிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையின் பேரிலும், தனது காதல் பற்றிப் பெற்றோரிடம் கூறி படிப்பை நிறுத்தித் திருமணமும் செய்து கொண்டாள். அப்பாவிற்கும் மீராவிற்கும் உண்டான ஏமாற்றம், அத்தானிடம் ஏற்பட்ட நெருக்கத்தால் மறைந்து போனது.

3
கல்வியை ரசித்து முன்னேறினாள் மீரா. அவளின் திறமை தரப்படுத்தலையும் மீறி அவளை பல்கலைக்கழகத்திற்குள் கொண்டு சென்று ஒரு மருத்துவராக வெளியே கொண்டு வந்தது. பொதுவாகவே தான் பிறரைப் பாதுகாக்கப் பிறந்தவள் என்ற அவளது நம்பிக்கை யாழப்பாணத்து குற்றூர்களுக்கெல்லாம் சென்று மருத்துவம் பார்க்க வைத்தது. இருந்தும் வருடம் ஒரு முறையாவது பெற்றோருடன் குடும்பமாகச் சேர்ந்து கொட்டமடிப்பதை அவளோ யசோவோ மறந்து விடவில்லை. தந்தையின் கனவை மீராவும் தாயாரின் கனவை யசோவும் நிறைவேற்றி விட்டிருந்தார்கள். மீரா யாரையும் காதலிக்கவில்லை.. உன்ர விருப்பம் போல படிச்சு வேலையும் எடுத்திட்டாய் இனிக் கலியாணம் செய்யலாம் தானே என்ற தாயாரின் இம்சை தாளாமல் அத்தானின் நண்பனான கனடாவில் வசிக்கும் முகுந்தனைத் திருமணம் செய்யச் சம்மதித்து கனடாவிற்கும் வந்து சேர்ந்து விட்டாள் அவள். வெறுமனே பெண்ணாகத் தான் உருமாறிக்கொண்டிருக்கின்றோமோ என்ற அச்சம் குழந்தைப் பேற்றைத் தள்ளிப்போட்டு அவளை ஒரு சமூகசேவகியாக மாற்றி விட்டது. மீண்டும் கனடாவில் ஒரு மருத்துவராக அவளிற்கு அதிக சிரமங்கள் இருக்கவில்லை. படிப்பு, சமூகசேவை வேலை என்று சக்கரம் போல் சுழன்றவளுக்கு வருடம் ஒரு முறை ஊர் வந்து பெற்றோரையும் யசோவையும் பார்ப்பேன் என்ற உறுதி வார்த்தையோடு அழிந்து போனது. அவ்வப்போது தொலைபேசியில் அழாத குறையாக இந்த வருஷமாவது ஒருக்கா வந்து எங்களைப் பாத்துவிட்டுப் போ என்ற யசோவின் குரலைக் கேட்கும் போது ஏதோ உந்தும் பின்னர் ஏனோ நிறைவேறாமலே தள்ளியும் போகும்.


4
நடுச்சாமச் தொலைபேசியின் அழைப்பில் நித்திரை குலைய மீரா திடுக்கிட்டெழுந்தாள். நான்கு வருடங்கள் கனடாவில் கழித்த பின்னர் குடும்பமாய் ஓன்றாய் சேர மீண்டும் அவளுக்கு ஒரு சந்தர்ப்பம் வந்தது. கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு அடக்கத்திற்கு முன்பாவது தந்தையின் முகத்தை பார்த்து விடவேண்டும் என்று பிளேன் ஏறினாள். முதல் இழப்பில் அவளின் சீவன் நடுங்கியது. அது தொடர்ந்த போது விறைத்தது. அடுத்து வந்த வருடம் தாயாரின் முகத்தை கடைசியா ஒரு முறை பார்க்க ஊர் போய் வந்தாள். அக்கா யசோ துவண்டு போயிருந்தாள்.. தொடர்ந்த இழப்புக்கள் இருவரையும் உலுக்கி விட்டிருந்தது. இருந்தும் முழுமையான ஒரு வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து முடித்திருந்தார்கள் தமது பெற்றோர் என்று தம்மைச் சமாதானமும் செய்து கொண்டார்கள்.

பெற்றோரை அடுத்தடுத்து ஜமனுக்குக் கொடுத்த களை தீரா முன்பே நெற்றியில் பொட்டு வைத்தது போல் துப்பாக்கித் துளையோடு ரோட்டொரம் கிடந்த அத்தானின் வெறும் உடலை வீட்டிற்கு கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போனார்கள் என்று தொலைபேசியில் மீராவிற்குச் செய்தி வந்த போது அவள் அழவில்லை. கிளினிக்கிக்குப் போய் விட்டாள். முகுந்தன் மிரண்டான். வேலைக்கு லீவு போட்டு அவள் கிளினிக்கிற்குச் சென்று சாப்பிட வெளியே அழைத்துச் சென்றான். அவள் எதுவும் கதைக்காமல் “சரியா பசி” என்று விட்டுச் சாப்பாட்டில் கவனம் செலுத்த அவள் கைகளைத் தனது கைக்குள் அடக்கி “நான் என்ன செய்ய? என்ன வேணுமெண்டாலும் சொல்லுங்கோ நான் செய்யிறன்” என்றான் குரல் தழுதழுக்க. எப்படி முடியும்? எது சாத்தியம்? ஒன்றையும் சிந்திக்காமல் தூரப்பார்வையை எறிந்து விட்டு மீரா சொன்னாள் “யசோவும் ரிஷியும் அடுத்த மாதமே என்ர வீட்டில நிக்கவேணும்”. எப்படிச் சாத்தியமாயிற்று தெரியவில்லை அடுத்தமாசம் ரிஷியை அணைத்தபடி யசோ மீராவின் வீட்டில் கால் வைத்தாள். கலகலப்பான பழைய நாட்கள் மீட்டிப்பார்ப்பதற்கு மட்டும் சாத்தியமாயிற்று. மௌனம் நீள நாட்கள் நகர்ந்தன. யசோவின் சோகம் கேட்ட வந்த சொந்தங்கள் தாம் வாங்கி வந்த உணவைத் தாமே எடுத்துப் போட்டுச் சாப்பிட்டு காணாத பல சொந்தங்களைப் பார்ப்பதற்குக் கிடைத்த தளமாக மீரா வீட்டை மாற்றி ஊர் வம்பு அலம்பி அத்தான் சாவைப் பற்றிக் கேள்வி எழுப்பித் தாமே விடை சொல்லி விலகின. யசோ வெறுமனே வெறிப்பது மட்டும் தொடர்ந்தது. மரணம் பற்றிய மீராவின் விளக்கத்தையும் மீறி உளவியல் தாக்கத்திற்கு இருவரும் தள்ளப்படுவது அவளிற்குப் புரிந்தது. தனது குடும்பத்திற்கு என்ன நடந்தது விட்டது? ஏன் தனது குடும்பத்திற்கு மட்டும் இப்படியாக வேண்டும் என்ற கேள்வி மீராவைத் துளைக்க இழப்புகளற்று சந்தோஷிப்பவர்களைப் பார்க்கும் போது வெறுப்பு வந்தது. அவளது பொதுநலத்தொண்டிலும் “ஏன்” என்ற கேள்வி மிஞ்சி தான் சுயநலமாக மாறி வருவது போல் பட்டது அவளுக்கு. “என்ர பிள்ளைகளுக்கெண்டு நான் கையால் பிளிந்து அவித்த இடியப்பம்” என்று மாமி பெருமையுடன் கூறிச் சாப்பாட்டை எடுத்து வைக்க “ஏன் மாமி உங்கட் வீட்டில யாராவது செத்தா நான் செய்ய மாட்னே?” என்று மாமியை அதிர வைத்தாள் மீரா. மாமி விலகிக் கொண்டாள். இல்லை மீரா உறவுகளை விலக்கிக் கொண்டாள். தான், முகுந்தன், யசோ, ரிஷி என்று தனது உறவைச் சுருக்கிக் கொண்டாள். அக்காவை பழைய நிலைக்குக் கொண்டு வர வேண்டும் அவள் மாற வேண்டும் மீராவிடம் வீம்பு வந்தது.

5
யசோவின் மனம் படபடவென அடித்துக் கொண்டது. “அக்கா வீட்டில சும்மா அடைஞ்சு கிடக்காமல் ஏதாவது படியுங்கோவன்” என்ற போது தனது கோபம் அனர்த்தமானது என்று தெரிந்தும் மீரா மேல் கோபம் எழுந்தது. சரளமாக நாலு வார்த்தைகள் ஆங்கிலத்தில் கதைக்கத் தயக்கம் அவளுக்கு. தனது கணவனை இழந்து மீராவிடம் அடைக்கலம் புகுந்து விட்ட வேதனை. பணத்தை மட்டும் குறிக்கோளாக வைத்து இயங்கும் கனேடிய வாழ்க்கை ஏற்படுத்திய பீதி.

ஊரில் உள்ளவற்றையெல்லாம் விற்று ரிஷியின் படிப்பிற்கு உதவும் என்று பாங்கில் கொஞ்சம் பணம் வைத்திருந்தாள் யசோ. கனடா வந்த தொடக்கத்தில் அதில் ஒரு சிறு தொகையை மீராவிடம் கொடுத்து எங்களுக்கான செலவுக்கு என்ற போது மீரா துடித்துப் போனாள். “என்னக்கா ஏன் என்னையும் உன்னையும் பிரச்சுப் பாக்கிறாய்.. கலியாணம் கட்டினா எல்லாமே மாறீடும் எண்டு ஏனக்கா நினைக்கிறாய்” என்று அவளைக் கட்டிக் கொண்டு கதறினாள். யசோ மீராவின் பின்னால் ஒடுங்கிக் கொண்டாள்.. மீண்டும் தன்னைக் காக்கப் போவது இவள் தான் என்று நம்பினாள்.. முகுந்தனின் பெருந்தன்மை மீராவின் அரவணைப்பு இதமாக இருக்க.. ரிஷியின் படிப்பு எதிர்காலம் அதுதான் தனது வாழ்க்கை என்ற திடமான முடிவுடன் அவள் தன் வாழ்க்கையைத் தயார் படுத்தி விட்டிருந்த பின்னர் இந்த வயதில் புத்தகத்தையும் தூக்கிக் கொண்டு பள்ளிக்கூடம் செல் என்ற மீரா மேல் யசோவிற்கு சொல்ல முடியதா கோவம். இன்னுமொருநாள் மீரா “அக்கா நான் உன்னேட கொஞ்சம் கதைக்க வேணும்” என்ற படி அறைக் கதைவைப் பூட்டியபோது நெஞ்சுக் குழிக்குள் கல்லடைத்தது அவளுக்கு. எப்போதும் எதற்கும் பதட்டம். எல்லாமே தனக்கு வேண்டாததாகத்தான் இருக்கும் என்று நம்பினாள். மீரா சொல்வதைப் புரிந்து கொள்ளும் பக்குவம் அவளுக்கில்லை.. மீரா கனடா வந்து மாறி விட்டாள் என்று மனதார நம்பினாள். ஏழு வயது மகனுக்கு அம்மா. காதலித்து ஆசையாசையாய் குடும்பம் நடாத்தியவன் குற்றுயிரில் போய் விட்டான். அவனை மறந்து விட்டு இன்னொருத்தனோடு.. தமிழ் சினிமாப் பாணியில் அவள் மனதில் இருந்து டயலாக்ஸ் வந்தது. முடிந்தவரை கதைத்துப் பார்த்துச் சோர்ந்து போனாள் மீரா.

6
மீரா கற்பமானாள்.. பல நாள்கள் ஆலோசனையின் பின்னர் முகுந்தனும் மீராவும் சேர்ந்து எடுத்த முடிவு அது. படிப்பு ஒன்றுக்கும் உதவாது அனுபவம் தான் வாழ்க்கை என்று மீராவிற்கு கற்பவதி பாடம் சொன்னாள் யசோ. அக்கா கொஞ்சம் கலகலப்பாவது போல் பட்டது மீராவிற்கு. சுருங்கிய கைவிரல்களை விறைத்த படியே கோணலாகப் பிடித்து சின்ன வாயைக் குருவி போல் திறந்து சிணுங்கும் பிஞ்சுக் குழந்தை ஆஷாவை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் யசோ. ரிஷியையும் ஆஷாவையும் பாதுகாப்பதில் தனது நேரத்ததை செலவு செய்தாள். அக்காவின் மாற்றம் மீராவிற்கு மகிழ்ச்சியைத் தந்தாலும் தன்னை விட ஒரு வயது மூத்தவள். இளம் வயதில் திருமணம் செய்து குழந்தை பெற்றதாலும் அடுத்தடுத்த வாழ்வு கொடுத்த கடுமையான அடிகளினாலும் கண்களுக்குக் கீழ் கரு வளையமும்.. தொய்ந்து போன உடலுமாக இருந்தாள். இருந்தும் இன்றும் அழகாகவே தோன்றினாள். அக்காவின் வாழ்க்கை இத்துடன் முடிந்து விட்டது என்று ஏற்க மீராவால் முடியவில்லை. பெண் என்பதற்கான யசோவின் வரைவிலக்கணத்தை மீறி அவளை அடுத்த படிக்குக் எப்படி ஏற்றுவது என்று தெரியாவில்லை மீராவிற்கு. தனது முயற்சிகளை விடவும் அவள் எண்ணவில்லை.


7
எல்லாமே ஒரு நொடியில் நடந்து முடிந்து விட்டது. ரிஷி மீராவின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்தான். வாழ்வின் அவலங்களை அறியாத ஆஷா கண்ணயர்ந்து நித்திரையில் கனவுகளின் இனிமையின் பிடியில் சிரித்தபடி இருந்தாள். மீராவின் கை ரிஷியின் தலையை அழைந்த படி இருக்க கண்கள் தூர வெறித்து நிலைத்திருந்தது. அவள் கிளினிக் சென்று நாட்களாகி விட்டது. முகுந்தன் மீராவின் முகம் பார்க்க அஞ்சி அறைக்குள் சுருண்டு கிடந்தான். முதல் முதலாக மூடநம்பிக்கைகள் மேல் மீராவிற்கு நம்பிக்கை வரத்தொடங்கியது. “யாரோ எங்கட குடும்பத்துக்குச் சாபம் போட்டு விட்டார்க”; அவள் வாய் புலம்பியது. இறுகிப் போன கலாச்சாரம் பண்பாட்டுக்குள் புதைந்து போயிருக்கும் எம்மவர். முக்கியமாக எமது பெண்களை வெளியே கொண்டு வரவேண்டும் என்று துடிப்பவர்கள் மேல் அவளுக்கு வெறுப்பு வந்தது. எத்தனை பேரால் முடியும்? அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதற்கிணங்க அடித்து அடித்து.. கடைசியில் நானே கொன்று புதைத்து விட்டேனே.. அவள் மனம் விம்மியது. “விசரி உன்னையும் என்னையும் எப்ப நான் பிரிச்சுப் பாத்திருக்கிறன். நீ, நான், முகுந்தன், ரிஷி, ஆஷா எண்டு என்ர உலக வட்டத்தை உனக்காகச் சுருக்கி உன்னைச் சிரிக்க வைக்க அல்லும் பகலும் பாடுபட்ட என்ர மனதை நீ புரிஞ்சு கொள்ளாமல் போயிட்டியே” விம்மினாள். “யாருக்கு யாரடி துரோகம் செய்யிறது.. பெரிய தியாகி எண்ட நினைப்பு.” மனம் கடுகடுத்தது. பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டு எழுந்து சென்று அறைக் கதவைத் திறந்தாள்.. இருண்ட அறைக்குள் கண்கள் கூச படுத்திருந்த முகுந்தன் எழுந்து கட்டிலில் இருந்தான். தலை குனிந்திருந்தது. அருகில் இருந்தவள் அவன் முகம் தூக்கி, கலங்கிய கண்களை தன் நெஞ்சோடணைத்து “சாப்பிட்டு எத்தினை நாளாச்சு வாங்கோ எங்கையாவது வெளியில போய்ச் சாப்பிடுவம்.. பாவம் ரிஷி அவனுக்கு என்னையும் உங்களையும் விட்டா இனி யார் இருக்கீனம்..” முகுந்தன் விம்மினான்.. அவன் கண்ணீர் மீராவின் நெஞ்சில் விழுந்து வழிந்தது. மீரா அவனை இறுக்கிக் கொண்டாள்.

Tuesday, April 05, 2005

பா பா பிளாக் ஷீப்

ஆந்திரப் பிரதேசத்தில் புட்டபத்தி என்னும் இடத்தில் 1926ம் ஆண்டு பிறந்தவர்தான் சத்யநாராயணன் ராஜூ. இவருக்கு 14 வயதாகிய போது மகராஷ்றா பிரதேசத்தில் இருபது வருடங்களுக்கு முன்பு இறந்து போன சாயி பாபா என்பவரின் ஆவி சத்யநாராயணனின் உடலுக்குள் புகுந்தது அவரை இறைவனின் தூதுவர் ஆக்கியது. (இல்லவிடின் இறைவன் ஆக்கியது எனலாம்) அன்றிலிருந்து இன்றுவரை பாபா பல அதிசயங்களைப் புரிந்து வருகின்றார்.
அந்த மாகானின் அதிசயங்களாக நான் அறிந்தவை -

இறந்தவர்களை உயிர்பித்திருக்கின்றார்.
நோய்களைத் தீர்திருக்கின்றார்.
பல பொருட்களை பக்தர்களுக்கு அருள் மூலம் பெற்றுக்கொடுத்திருக்கின்றார். – அனேகமாக ஏழைகளுக்கு விபூதி, குங்குமம் போன்றவை – செல்வந்தர்கள் அரசியல்வாதிகளுக்கு வைர மோதிரங்கள், தங்க நகைகள் போன்றவை.
காரில் போகும் போது பெற்றோல் தீர்ந்து போனதால் தண்ணீரைக் கொண்டு வரச்சொல்லி பெற்றோலாக்கி பிரயாணத்தை மேற்கொண்டிருக்கின்றார்

இப்படி இந்த மகானின் அருளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

பலர் இவரின் இந்த அருளைப் பொய் என்று கூறித் தம்மாலும் இப்படியாகப் பொருட்களை எடுத்துக் கொடுக்க முடியும் என்று சவால் விட்டிருக்கின்றார்கள். முக்கியமாக ஜோர்ஜ் கோபூர் சவால் விட்டது நான் அறிந்து கொண்டது. அதைவிட இவரைக் கொல்லப் பலர் முயன்று தமது உயிரை விட்டிருக்கின்றார்கள்.

கனடாவிலிருந்து வருடாவருடம் பல பக்தர்கள் அவரின் அருள் வேண்டி புட்டபக்திக்குச் சென்று வருகின்றார்கள். பலர் நோயுற்ற போது கூட மருத்துவரின் செல்லாமல் விமானம் ஏறி புட்டபக்திக்குச் செல்லும் அளவிற்கு பாபாவின் மகிமை உலகெங்கும் பரவியிருக்கின்றது.

ஒரு தனி மனிதன் (கூட்டாகவோ) தன்னை கடவுள் என்றோ கடவுளின் தூதுவர் என்றோ கூறி பக்தர்களிடமிருந்து அனைத்தையும் பெற்று (பாலியல் இன்பங்கள் உறவுகளைக் கூட) வாழ முற்படல் எப்படிச் சாத்தியமாகின்றது. என்னோடு வேலை செய்யும் கயானா நாட்டுப் பெண்ணொருத்தி பாபாவின் தீவிர பக்தை. அவள் பாபா இறக்கமாட்டார் என்பதை முற்றுமுழுதாக நம்புகின்றாள். ஆனால் பாபா தளர்ந்து விட்டாரே இறைவன் எனின் இளமையாகவே இருந்திருக்கலாமே என்ற என் கேள்விக்கு மனிதருக்கு வாழ்வின் ஒவ்வொரு தளத்தையும் உணர வைக்கவே அவர் தன்னை உருமாற்றிக் கொள்கின்றார் அது உண்மையான முதிர்ச்சியல்ல என்பது அவள் வாதம். (நல்ல வாதம் போங்க)

கனேடியத் தொலைக்காட்சி ஒன்றில் சத்யசாயி பாபா எப்படிப் பொருட்களை எடுக்கின்றார் என்பதைப் புட்டு புட்டு அத்தாட்சியாக வீடியோ காட்சிகளோடு கூடிய ஒரு விவரணப்படத்தை ஒளிபரப்பியிருந்தார்கள். பலர் அந்த நிகழ்வை ஒளிப்பதிவு செய்து பலருக்குக் கொடுத்தும் இருக்கின்றார்கள். இருந்தும் பக்தர்களின் எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை. இதற்குக் காரணம் என்ன. அளவிற்கு மீறிய நம்பிக்கையா? சிந்தனை அற்ற தன்மையா? இல்லாவிட்டால் பழகிவிட்ட வாழ்வை மாற்றமுடியாத நிலையா?

ஒரு மதத்தை மனிதர்கள் மத்தியில் பரப்ப வேண்டும் எனின் முதலில் பல ஓன்று கூடல்கள் கலைவிழாக்கள் களியாட்டங்கள் கூட்டங்கள் போன்றவற்றை ஒழுங்கு செய்து கொஞ்சம் கலகலப்பாக உணவுப் பண்டங்களுடன் மக்களைச் ஒன்று படுத்தல் வேண்டும். இதனை கத்தோலிக்க சபைகளும் பாபா பக்த அமைப்புக்களும் மிகவும் சிரத்தையுடன் தவறாமல் செய்து வருவதுதான் அவர்கள் பக்தர்களைத் திரட்டிக் கொள்வதன் ரகசியம் என்பது என் கருத்து. தனிமைப்பட்டு இருக்கும் மக்களுக்கு இது ஒருவித ஆறுதலையும் மனமகிழ்ச்சியையும் கொடுக்கின்றது. இதுதானே வாழ்க்கைக்குத் தேவை.

ஓம் சாயி பாபா

இப்பிடியும் பாக்கலாம் தானே?

கறுப்பி புலிக்கு எதிரானவ, போராட்டத்துக்கு எதிரானவ, தேசியவிடுதலையில அக்கறை இல்லாதவ எண்டு சிலர் பல இடங்களில துள்ளிக் குதிக்கிறத பாத்துக்கொண்டுதான் வாறன். கறுப்பிக்கு விதம் விதமாச் சாப்பிட வேணும். அனேகமா கனடாவில இருக்கிற எல்லா நாட்டு ரெஸ்ரோறண்டுக்கும் போய் ஒரு பிடி பிடிச்சிருக்கிறன். விதம் விதமா உடுப்புப் போட விருப்பம். கனடாவில என்னென்ன சௌபாய்க்கியங்கள் எல்லாம் இருக்கோ ஒரு ரவுண்டு போய் வர விருப்பம். வாழ்க்கை வாழத்தானே. இப்பிடிச் சுயநலமா உலாவிக்கொண்டிருக்கிற கறுப்பி “பொங்கி எழு தமிழா ஈழம் எமது கையில்” எண்டு கவிதையும், கட்டுரையும் எழுதினால் யாராவது பின்னால நிண்டு ஓங்கி உதைய மாட்டீனம் எண்டு என்ன நிச்சயம்.
கறுப்பிக்கு(ம்) மனச்சாட்சி இருக்கு. அந்த வெய்யிலுக்க கல்லு, முள்ளுப் பத்தைக்க எப்ப வெடிவெடிக்கும், உடல் சிதறும், தலை விழும் எண்டு தெரியாமலும் பெத்த அம்மாவை அப்பாவைச் சகோதரங்களை இனிப் பாப்பனா எண்டும் தெரியாமல் தலைமைக்கும், கடமைக்கும், உத்தரவுகளுக்கும் தலைவணங்கித் துவக்குத் தூக்கிற எங்கட இளைஞர்களையும், யுவதிகளையும் பற்றி ஏதாவது கருத்துச் சொல்ல கறுப்பிக்கு என்ன அருகதை இருக்குச் சொல்லுங்கோ. உயிரைக் கையில பிடிச்சுக்கொண்டு கையில காசிருந்ததால பிளேன் ஏறி இப்ப பிளானா வாழுற கறுப்பிக்கு என்ன யோக்கியதை இருக்கு போராட்டதைப் பற்றிக் கதைக்க. மனச்சாட்சி உறுத்துததால அப்ப அப்ப கொஞ்சம் காசை போரால பாதிக்கப்பட்ட யாருக்காவது கொடுத்து கறுப்பி தன்ர மனச்சாட்சிக்குத் தீனி போட்டுக் கொண்டு இருக்கிறா. அப்பதான குற்றஉணர்வு இல்லாமல் படங்களுக்கும் கலைநிகழ்சிகளுக்கும் போய் வரலாம்..
ஆனால் ஒண்டு மட்டும் சொல்லுறன் பிளேன் ஏறி வந்து முற்று முழுதான லௌகீக வாழ்க்கை வாழந்து தொலைக்கிற எங்கட தேசியபற்றுக்காறரிலும் விட கறுப்பி எவ்வளவோ மேல். லௌகீகத்தில் திளைத்த படியே வீரவசனங்கள எழுதிக் குவித்தும் குரல் உயத்திக் கத்தியும் ரீல் விடுகிற ரகம் இல்லக் கறுப்பி. சுயநலம் துலைந்தால் நிச்சயம் தளத்தில நிக்க வேணும். இல்லாட்டிக் கம்மெண்டு இருக்க வேணும். நல்லாத் திண்டு கொழுத்து எல்லா டாம்பீகங்களையும் அனுபவிச்சுக் கொண்டு யாருக்குப் படம் காட்ட வீரவசனமா எழுதித் துலைக்கிறியள். பேசாமல் தளத்தில போய் அந்தப் பிள்ளைகளுக்குத் தோள் குடுங்கோவன்.
ஐயோ ஐயோ ஐயோ.. அப்ப ஆர் காசு சேக்கிற பொறுப்பை ஏற்கிறது. வெளிநாட்டு உதவிய ஆர் பெற்றுக்குடுக்கிறது எண்டு கறுப்பியக் கவிக்கப் பாக்கிறீங்களாக்கும். கறுப்பி போல எத்தினை சுயநலவாதிகள் புலம்பெயர்ந்து வாழீனம் அவையளிட்ட அந்தப் பொறுப்பைக் குடுங்கோவன் (என்ன நம்பிக்கை இல்லையே- கறுப்பி கொஞ்சம் உருவினா என்ன? கண்டுகொள்ளாதேங்கோ) ஒரு குடும்பத்தில எத்தின பேர் இருப்பீங்கள் ஒருத்தர் இஞ்ச இருந்து உதவலாம் மற்றாக்கள் தளத்தில போய் நிண்டு எங்கள ஆட்டிப்படைக்கிற ஆராஜக அரசாங்கத்தை ஒளிக்கலாமே..
அட திடீரெண்டு "ஃபரனைட் 911" திரைப்படத்தின்ர கடைசிக் காட்சி மனதில ரீலா ஓடுது. "மைக்கல் மோர்" அதுதான் அந்தப்படத்தின்ர இயக்குனர் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களிட்ட நேராப் போய் உங்கட பிள்ளைகள ஆமியில சேக்கிறதுக்கு விண்ணப்பத்த நிரப்பித்தாங்கோ எண்டு கேக்க அவையள் துண்டக்காணம் துணியக் காணம் எண்டெல்லோ ஓடீனம். பின்ன என்ன சேத்து வைச்ச காசில பிள்ளைகள கேம்பிறிச்சுக்கும், கார்வேட் யூனிவேர்சிட்டிக்கும் அனுப்பிப் படிப்பிச்சு டாம்பீக வாழ்க்கையை பரம்பரை பரம்பரையாகத் தொடருவீனமா? இல்லாட்ட அப்பாவிப் போராளிகளோட தங்கட பிள்ளைகளையும் விட்டு அந்தக் கொடூரத்தை தங்கட பிள்ளைகள் அனுபவிக்க வைச்சு ஐயோ பெத்த மனசு பத்தியெல்லே எரியுது.. அவையின்ர பிள்ளைகள மட்டும்தான் தாய் பெத்ததாம் அப்பாவி போராளிகளைப் பெத்தது உணர்வற்ற இயந்திரமாம். (புஸ்சின்ர பெட்டைகளைப் பாத்தாலே தெரியுதே)
எப்ப புலம்பெயர்ந்தியளோ அப்பவே பேசாமல் கம்மெண்டு இருந்திட்டால் நல்லது. உண்மையிலையே உணர்சியால கொந்தளிச்சா வீட்டில ஒருத்தரை மட்டும் உதவிக்கு எண்டு இஞ்ச விட்டிட்டு மற்றாக்கள் தளத்துக்குப் போறது மேல். அதவிட்டிட்டு எத்தின மணித்தியாளங்களை புளொக்கிள விரையம் செய்யிறியள் அங்கை எங்கட பிள்ளைகள் செத்து மடியுதுகள். இந்த காதிலபூச்சுத்துற வேலைய விட்டிட்டு ரீல் விடுறாக்கள் உங்கட சொத்துப் பத்தை வித்திட்டு சொந்தங்களோட போய் தளத்தில இறங்கினால் எப்பவோ ஈழம் கிடைச்சிருக்கும். சத்தியமாச் சொல்லுறன். யாரோ ரெத்தம் சிந்தி, உடல் சிதற, உயிர் இழந்து, எடுத்த ஈழத்தை லௌகீக வாழ்க்கை வாழ்ற மானம் கெட்டு பிளேன் ஏறி வந்த கறுப்பி ஒருநாளும் சொந்தம் கொண்டாட மாட்டாள். அந்த எங்கட மாங்கொட்டைத் தீவில இருந்து கிடைக்கிற குட்டி ஈழம் ரெத்தம் சிந்தின அந்த அப்பாவிகளுக்கு மட்டும் தான் சொந்தம்.

இவ என்னைத்தான் சொல்லுறா எண்டு தலையச் சொறியாதேங்கோ. தொப்பி அளவா இருந்தா ஆரும் போட்டுக் கொள்ளலாம்

Monday, April 04, 2005

ஆண்களும் "Appreciation" உம்

ஓ நல்லாச் செய்தீங்கள்.. நல்லா எழுதுறீங்கள், நல்லா வாசிக்கிறீங்கள், நல்லாக் கதைக்கிறீங்கள், நல்லா நடிக்கிறீங்கள், நல்ல யோசிக்கிறீங்கள், இவை கொஞ்சம் மேல் தளத்து தம்மை முற்போக்கு என்று பிரகடனப்படுத்தும் ஆண்களிடம் இருந்து பெண்களுக்குக் கிடைக்கும் பாராட்டுக்கள்

ஒ நல்லாச் சமைக்கிறா, நல்லாக் கிளீன் பண்ணுறா, நல்லா ரீ போடுறா, நீங்கள் சுட்ட வடை நல்ல்ல்லா இருக்கு. இத்யாதிப் பாராட்டுக்கள் இன்றொரு ரகம். அதை விடுவம்.

அடுத்து இந்தச் சனியன் என்னத்தைச் செய்தாலும் -- அந்த ரகத்தையும் விட்டு விடுவம்.

இப்ப முதல் ரகத்தைக் கொஞ்சம் ஆராய்வம்.

கறுப்பி போன கிழமை ஒரு மேடை நாடகம் நடித்தாள். கிட்டத்தட்ட ஏழெட்டு வருஷமா உதைத்தான் செய்து கொண்டு இருக்கிறாள். முதல் மேடை ஏற்றத்தின் பின்னர் நிலத்துக்கு வந்தபோது கைகொடுப்புக்களும் பாராட்டுக்களும் (முக்கியா ஆண்களிடமிருந்து) வந்து குவிந்த போது கறுப்பி மெய் சிலிர்க்க உணர்ச்சிவசப்பட்டது என்னவோ உண்மைதான். தொடர்ந்து வந்த காலங்களில் கறுப்பி நடிப்பதும் அதே ஆண்கள் வர்க்கம் பாராட்டுவதும் கேட்டுக் கேட்டுச் சவத்துப் போச்சு. இனி அடுத்த படிக்குப் போக வேணும். ஆனால் படி எங்கையிருக்கெண்டு தெரியாமல் தடுமாறேக்கதான்.. இரண்டு வாரங்களுக்கு முன்பு கறுப்பி நடித்துக் கிழித்த ஒரு நாடகத்திற்கு நல்ல ஒரு ஆண் விமர்சகர் விமர்சனம் வைத்துவிட்டுத் தனியாகக் கறுப்பியிடம் வந்து “அதிகாரத்திற்கு எதிரான.. தலைமைகளைக் கேள்விக்குறியாக்கும் ஒரு நாடகத்தில் பெண்ணாகிய தாங்கள் துணிந்து சிறப்பாக நடித்ததையிட்டு நான் பெருமைப் படுகின்றேன். பாராட்டுகின்றேன்” என்றார் கறுப்பிக்கு சுள்ளென்று எதுவோ தைத்தது. நாடகத்தில் கறுப்பியுடன் இன்னும் இரு ஆண்கள் நடித்திருக்கின்றார்கள், அவர்கள் ஆண்கள் துணிந்தவர்கள், எதையும் செய்வார்கள், குரல் கொடுப்பார்கள், தயங்க மாட்டார்கள் ஆனால் கறுப்பி கோழை வர்க்கத்தில் பிறந்தவள்.

இந்தப் பாராட்டும் கைகொடுப்புக்களும் கறுப்பி பெண்ணாக இருப்பதால் பிரத்தியேகமாகக் கிடைக்கிறன என்பது கறுப்பிக்குப் புரிந்தது. அதாவது பெண்களால் ஒன்றும் ஏலாது, பெண்கள் கோழைகள், பலவீனமானவர்கள், ஒட்டு மொத்தமாக ஆண்களோடு ஒப்பிடும் போது அங்கவீனம் உற்றவர்கள் போல் இருக்கின்றீர்கள். இதற்குள் ஒருவர் கொஞ்சம் ஏதோ செய்கின்றார் எனவே பாராட்டி ஊக்குவிப்போமாகுக…
பெண்கள் சிலர் சேர்ந்து பட்டறை நாடகம் போட்டார்கள். நாடகம் பல நல்ல அம்சங்களைக் கொண்டிருந்தாலும் ஒட்டு மொத்த mess என்பதைப் பட்டறைப் பெண்களே மனம் நொந்து ஒத்துக் கொண்டு அடுத்து வரும் காலங்களில் நன்றாகச் செய்ய வேண்டும் என்று சிந்தித்தாலும், நாடகத்தில் எந்த ஒரு குறையும் சொல்லாமல் ஆண்களிடமிருந்து பாராட்டோ பாராட்டு (கொஞ்சம் ஏதோ விமர்சனம் வைத்தவர்களுக்கு சாட்டை அடியோடு) காரணம் பெண்கள் ஏதோ செய்கின்றார்கள் ஊக்குவிப்போம் என்று மிகுந்த நற்பண்புடன் பெண்களுக்கு மனம் நோகக்கூடாது என்ற பெருந்தன்மையில் பாராட்டுப் பிச்சை போடுகின்றார்கள் முற்போக்கு மேல் மட்ட ஆண்கள். இப்படி ஒரு பட்டறை நாடகத்தை ஆண்கள் போட்டிருந்தால் கேலிக் கூத்தாகச் சிரித்திருப்பார்கள். “ஐயோ என்ன இது எத்தனை தரமான ஆண் எழுத்தாளர்கள் இயக்குனர்கள் இருக்கின்றார்கள் இப்பிடியொரு ஒழுங்கற்ற நாடகத்தை மேடை ஏற்றலாமா என்ற கேள்விதான் மிஞ்சியிருக்கும்”.

பாஸ்மதி அரிசியையும், பட்டுச் சேலையையும், பாவற்காயையும், பேசுவதை விட்டு பெண்கள் வேறு ஏதாவது செய்தால் முற்போக்கு மேல்மட்ட ஆண்கள் பாராட்ட அள்ளி வீசப்போகின்றார்கள் என்பது வெளிச்சம்.

Friday, April 01, 2005

குடும்பம் ஒரு கரடகம் 2

சமதர்ம அரசின் தோற்றத்தில் பெண்கள் பொருளாதார பலத்தை பெற்று உற்பத்தியில் ஈடுபடும் போது சமத்துவமாகவே நடத்தப்டுவார்கள்” இது மாக்ஸின் கூற்று. ஆண்டுகள் கடந்தாயிற்று சமதர்ம அரசு மூழ்கி முதலாளித்துவம் தலை தூக்கி ஆட்டம் காணும் நிலையில் பெண் விடுதலை என்பது வெறும் பேச்சோடு மறைந்து விடும் ஒன்றாகிப் போய்க்கொண்டிருக்கின்றது.
தமிழ் சு10ழலைப் பார்க்கும் போது படிப்படியாக பெண்களின் சிந்திக்கும் திறன் பெருகி பெண்நிலைவாதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது என்பது ஒரு புறம் மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் இது மிகக் குறைந்த வீதத்திலேயே இன்னும் இருக்கின்றது. இந்தப் பெண்நிலைவாதிகள் கூட ஒரே கோணத்திலான பிரச்சனைகளை மட்டுமே அடையாளம் காண்கின்றார்கள். உதாரணத்திற்கு கணவனை இழந்தவளைப் (விதவை) புறக்கணித்தல், பெண் குழந்தை வளர்ப்பில் வேறுபாடு, உயர்கல்வி, சீதணப் பிரச்சனை, பூப்புனித நீராட்டுவிழாக் கொண்டாட்டம், சமனற்ற சம்பளம், இத்யாதி,.. இத்யாதி இப்படியாப் பலராலும் ஏற்கெனவே அடையாளப்படுத்தப்பட்ட பிரச்சனைகளை மீண்டும் மீண்டும் சமூகத்திற்கு எடுத்துச் சொல்வதனால் பெண் ஒடுக்கு முறைக்காக அடித்தளங்கள் அடையாளம் காணப்படாமலே போய் விடும் அபாயம் இருக்கின்றது. இன்னும் பெரும்பாலான பெண்கள் ஆண்-பெண் அசமத்துவ நிலையை உணராதவர்களாகவே இருக்கின்றார்கள்.

பெண் அடிமைத் தனத்தின் வேராய் இருப்பது குடும்பம் என்ற நிறுவனமே. இது எப்படியாக பெண்களை அடிமைப் படுத்துகின்றது என்று பார்ப்போம் ஆனால் -

"ஆதிகம்யூன்" காலத்தில் (காட்டு மிராண்டிக் காலம்) தாய்வழிச் சமூகமாகவே இருந்தது. அதாவது பெண்கள் எந்த ஒரு அடக்குமுறைக்குள்ளும் ஆளாகாமல் முழுச்சுதந்திரமாக வாழ்ந்து வந்தார்கள். அதன் பின்னர் தோன்றிய "அநாகரீக காலத்தில்" குடும்பம் என்ற இரத்த சொந்தங்களான கட்டமைப்புக்குள் பெண்களை வீட்டு வேலைகள் விவசாயம் குழந்தை பராமரிப்பு போன்றவற்றால் வெளி உலகை விட்டு ஒதுக்கும் நிலை ஏற்பட்டது. அடுத்து "நாகரீக காலம்" என்று கூறப்படும் தற்கால அமைப்பு குடும்பம் அரசு தனிச் சொத்து போன்றவையின் தோற்றம் (இவை ஆண்களின் உருவாக்கம்) பெண்களை முற்று முழுதான அடிமைத் தனத்துக்குள் தள்ளி விட்டிருக்கின்றது. இந்தக் காலத்தில் உறவுகள் மிகச் சுருங்கி கணவன் மனைவி குழந்தைகள் (சில இடங்களில் பெற்றோர்) என்று மிகுந்த சுயநல சமுதாயமாக உருப்பெற்றிருக்கின்றது.


தொடரும்..