Monday, April 25, 2005

ரஜனியின் கொம்பிரமைஸ்

பலரும் பத்தும் :-சந்திரமுகியின் அலை இன்னும் ஓயவில்லை. கனடாவில் சந்திரமுகி எனும் தலைப்பைக் கவனிக்க கறுப்பி முன்வந்திருக்கிறன். ரோசாவசந்தின் பதிவைப் பார்த்துவிட்டு (சயந்தன் மௌனித்ததால்) வெள்ளி இரவு நண்பர்களுடன் பொப்கோன் கோப்பி சகிதம் (படம் போர் எண்டால் கவனத்தை வேறு ஏதாவதில் செலுத்தலாம் என்று) சென்று பார்த்தேன். விஜெயின் சச்சின் உம் சந்திரமுகியும் ஒரே திரையரங்கில் ஓடுவதால் சனக்கூட்டம் நிறைந்து வழிந்தது. விசாரித்ததில் சச்சினுக்கு வரும் கூட்டம்தான் அதிகம் என்றார்கள். காரணம் புரியவில்லை. (இளையவர்கள் அதிகம் என்பது ஒருகாரணமாக இருக்கலாம்)

திரையரங்கு அரைவாசியாக நிறைந்திருந்தது. பதிவுகளில் படித்துப் படித்து ஓரளவுக்குத் திரைக்கதை தெரிந்திருந்ததால் அதிகம் எதிர்பார்க்காமல் பார்க்கத்தொடங்கினேன்.
எழுத்தோட்டத்தின் போது வடிவேலுவின் பெயருக்கு அதிக வரவேற்புக் கிடைத்தது. சயந்தன் குறிப்பிட்டிருந்தது போல் சண்டைக் காட்சியில் ரஜனியில் கால் அடிப்பில் திரையரங்கு சிரிப்பால் நிறைந்தது. அடிக்க உயத்தியகாலை நிலத்தில் வைக்காமல் கொடுத்த மூவ் இற்கு காலுக்க கூளுக்கப் போகுது சு10ப்பர் ஸ்டார் கீழ விடுங்க என்ற குரல் திரையரங்கை மீண்டும் சிரிக்க வைத்தது.
பாபா திரைப்படத்தின் தோல்விக்குப் பின்னர் வெளியான ரஜனி திரைப்படம் இது. நடிகராக திரைஉலகத்திற்குள் புகுந்த பின்னர் உழைத்தது போதும் என்று விலகி ரசிகர்களின் மனதைப் புண்படுத்தக் கூடாது என்ற ஒரே நோக்கத்தோடு அவ்வப்போது திரையில் கடமைக்காகத் தலைகாட்ட எண்ணிவிட்டார் ரஜனி என்றே கறுப்பிக்குப் படுகின்றது.
அண்ணாமலை அருணாச்சலம் காலத்தில் இருந்த சுறுசுறுப்பு போய்விட்டது. பாபாவின் தோல்வி ஒரு பயத்தையும் கொடுத்திருக்கக் கூடும். எனவே கொஞ்சம் கொம்பிரமைஸ் பண்ணலாம் என்று எண்ணி விட்டாரோ என்றும் படுகின்றது.
காரணங்கள். ரஜனி சு10ப்பர் ஸ்டாரான பின்பு வந்த திரைப்படங்கள் எல்லாமே நாயகனின் பெயரில் வெளிவந்தவை. நாயகனைச் சுற்றியே திரைக்கதையும் அமைந்திருக்கும். சந்திரமுகி சு10ப்பர் ஸ்டார் ரஜனிக்காந்தின் வழமையான திரைப்படமில்லை. இது கங்கா எனும் பெண்ணிற்கு உண்டாகும் மனஅழுத்தம் சம்பந்தமான நோயைப் பற்றிய திரைக்கதையைக் கொண்டது. இதில் மனோதத்துவ நிருணராக (வைத்தியராக) வரும் நடிகன் வழமையான தமிழ்த் திரைப்படமாக இருப்பின் நிழல்கள் ரவிக்கோ நாசருக்கோ போயிக்கும். எனவே பல ஆண்டுகளின் பின்னர் வேறு ஒருவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு திரைப்படத்தில் மிகச்சாதாரணமாக ஒரு பாத்திரத்தை எடுத்து நடித்து ஒரு கொம்பிரமைஸ்சைப் பண்ணியிருக்கின்றார் சு10ப்பர ஸ்டார் அதற்குப் பாராட்டலாம் என்று மனதில் பட்டாலும் ஒரு பெயர் போன வைத்தியர் வடிவேலுவின் மனைவியுடன் விடும் ஜொள்ளு மிகக் கேவலமாக இருக்கின்றது. இப்படி இரண்டாந்தர நகைச்சுவையில் நடிக்க எதற்காக ரஜனி ஒத்துக் கொண்டார். புரியவில்லை.
அடுத்து திரைப்படத்தின் கதையைப் பார்ப்பின் விஞ்ஞானம் மருத்துவம் போன்றவற்றிற்குக் கொடுக்கும் முக்கியத்துவம் பேய் பிடித்தல் ஆவி உலவுதல் போன்றவற்றிற்கும் கொடுத்து ஒரு பெயர் போன சாமியாரை வரவழைத்து ஆவியை விரட்டும் விளையாட்டில் இரு விதமாக பார்வையாளர்களையும் திருப்திப்படுத்தும் எண்ணம் நிறைந்து நிற்கின்றது.

ரஜனிக்காந்;த் தோற்றத்தில் நிறம்பவே மாற்றம் தெரிகின்றது. வேகம் குறைந்து விட்டது எவ்வளவுதான் மேக்கப் போட்டாலும் முகத்தில் முன்பிருந்த அந்தக் குறும்பைக் காணவில்லை. (மேக்கப் அளவிற்க அதிகமாக லிப்டிக் சில காட்சிகளில் உறுத்துகின்றது)

சிவாஜி புரடக்ஷன் ஆகையால் பிரபுக்கு ஒரு சான்ஸ். பிரவுவோடு வந்து போன குஷ்பு இப்போது அக்கா அம்மா வேடத்திற்குப் போய் விட சின்னப் பெண் ஜோதிகா வந்து விட்டார்.
சந்திரமுகி முற்று முழுதாக ஜோதிக்காவின் நடிப்புத் திறமையைப் பரீட்சித்துப் பார்க்க எடுக்கப்பட்ட திரைப்படம். ஜோதிகாவின் இடத்தில் சிம்ரன் நடிப்பதாக இருந்ததாம். நிச்சயமாக ஜோதிகா அளவிற்கு சிம்ரன் எடுபட்டிருக்க மாட்டார் என்பது கறுப்பியின் கருத்து. சந்திரமுகியாக மாறும் போது ஜோதிகாவின் அந்தப் பெரிய கண்கள் மிகவும் பொருத்தமாக இருக்கின்றன. "Exorcist" திரைப்படத்தைப் பார்த்த போது ஏற்பட்ட உணர்வை ஜோதிகாவும் தந்திருக்கின்றார். இது அவரின் நடிப்பிற்குக் கிடைத்த வெற்றி.

சந்திரமுகி முக்கால்வாசி நேரம் வெறும் அறுவையாகப் போயினும் பின்பகுதிக்காக் பார்க்கலாம். வினித் ஜோதிகாவின் நடனக் காட்சி மனதில் நிற்கின்றது. மற்றவர்களும் மற்றவையும், வெறும் வேஸ்ட்.

13 comments:

நாடோடி said...

கறுப்ப்பி:

கடைசியாக நீங்களும் சந்திரமுகி பார்த்து விட்டீர்கள். நன்றி,

கறுப்பி said...

கறுப்பி ஒரு சினிமாப் பைத்தியம். பரீட்சாத்தமாக எல்லாவற்றையும் பார்ப்பேன். சில திரைப்படங்கள் சிறிது நேரத்தின் பின்னர் எழுந்து வந்து விடுவேன். அப்படிப் பணத்தை வீணடித்த திரைப்படங்களுள் பாபாவும் சரத்குமாரின் மாயாவையும் சொல்லலாம்.

Boston Bala said...

>>நிச்சயமாக ஜோதிகா அளவிற்கு சிம்ரன் எடுபட்டிருக்க மாட்டார்--

கறுப்பியின் கருத்தை 'வலையுலக சிம்ரன் ரசிகர் மன்றம்' சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்! அப்படியே, வாலி, அவள் வருவாளா, நியூ (?!) போன்ற சிம்ர காவியங்களையும் கண்டு மனம் மாற வேண்டுகோள் விடுக்கிறேன்.

கறுப்பி said...

பாலா கண்டியுங்கள். நான் சிம்ரனின் ரசிகை. இருந்தும் சந்திரமுகியாக நடிப்பதற்கு சிம்ரனிலும் விட ஜோதிகாதான் பொருத்தமானவர் என்பது என் தனிப்பட்ட கருத்து. கண்கள் பெரிதாக இருப்பது பொருத்தமாக இருக்கும் என்று நம்புகின்றேன். மற்றப்படி நானும் சிம்ரனின் ரசிகைதான். தாங்கள் குறிப்பிட்ட படங்களிலும் பார்க்க கன்னத்தில் முத்தமிட்டாளை நான் சொல்லுவேன்.

துளசி கோபால் said...

ஏங்க கறுப்பி,

'வினீத்'தை வேஸ்ட் செஞ்சது உங்களுக்கு அநியாயமாத் தெரியலை? நல்லா பரதம்
ஆடுவாரு. ஆனால் நம்ம ஜோதிகா? ஒரு வேளை அவருக்கு ஈடா ஜோதிகாவாலே ஆடமுடியாதுன்னு
அப்படி விட்டிருப்பாங்க. இல்லே?

சொல்லவேணாமுன்னு பார்த்தாலும், முடியலை! மணிச்சித்திரத்தாழுலே அந்த நடனம்
நம்ம ஷோபனாவோடது, கூட இன்னொருத்தர் ஆடுவாரு( அவர் பேர் தெரியலை!)
அற்புதம்ங்க!!!

என்றும் அன்புடன்,
துளசி.

கறுப்பி said...

துளசி கோபால்,
மணிச்சித்ரத்தாழுலே பார்க்கவில்லை. நடனம் ஆடத்தெரிந்ததால்தான் அந்தப் பாத்திரம் வினித்திற்குக் கிடைத்திருக்கின்றது என்று நம்புகின்றேன். எவ்வளவுதான் திறமை இருந்தாலும் ரஜனி சாரின் திரைப்படத்தில் ஒருமுறை முகம் காட்ட ஏங்குகின்றார்கள் எல்லாக் கலைஞர்களும். என்ன செய்வது காலம் இப்படி இருக்கின்றது. சிறிய நேரம் என்றாலும் வினித் மனதுக்குள் நிற்கின்றார்.

Mathan said...

//விஜெயின் சச்சின் உம் சந்திரமுகியும் ஒரே திரையரங்கில் ஓடுவதால் சனக்கூட்டம் நிறைந்து வழிந்தது. விசாரித்ததில் சச்சினுக்கு வரும் கூட்டம்தான் அதிகம் என்றார்கள்.//

இப்போ ரஜனி விஜய் தானே?

//இப்படி இரண்டாந்தர நகைச்சுவையில் நடிக்க எதற்காக ரஜனி ஒத்துக் கொண்டார்//

இதை விட வடிவேலு வேறு நடிகர்களுடன் இணைந்து இரட்டை அர்த்தம் இல்லாமல் நல்ல நகைச்சுவையை தந்திருக்கின்றார். இந்த படத்தில் வடிவேலின் நகைச்சுவை பெரிதாக எடுபடவில்லை. பாபா ஓடவில்லை இந்த படத்தை கட்டாயம் ஓட்ட வேண்டும் வேறு வழியில்லை இப்படி எல்லாம் செய்திருக்கின்றார் ரஜனி. காலத்தின் கட்டாயம்?

//இதில் மனோதத்துவ நிருணராக (வைத்தியராக) வரும் நடிகன் வழமையான தமிழ்த் திரைப்படமாக இருப்பின் நிழல்கள் ரவிக்கோ நாசருக்கோ போயிக்கும்//

எனக்கும் அப்படிதான் தோன்றியது. இந்த கதைக்கு ரஜனி தேவையில்லை. ஆனால் ரஜனி படமாக இல்லாவிடில் சந்திரமுகியை கவனித்திருபோமா? படத்தை பார்க்க வைப்பதற்கு ரஜனி பெயர் தேவைப்படுகின்றதே? ரஜனி படங்களை பார்த்து பார்த்து நாம் ஒரு வட்டத்துக்குள் விழுந்துவிட்டோமோ? ரஜனியிடம் ஹீரோயிசத்தை மட்டுமே மனம் எதிர்பார்க்கின்றதோ?

//ரஜனிக்காந்;த் தோற்றத்தில் நிறம்பவே மாற்றம் தெரிகின்றது//

ம் வயது போய் விட்டது. இனி அமிதாப் பச்சன் போல மாறினால் அவருக்கும் நமக்கும் நல்லது.

//ஜோதிகா அளவிற்கு சிம்ரன் எடுபட்டிருக்க மாட்டார்//

ம் அப்படிதான் எனக்கும் தோணுகின்றது. ஜோதிகாவின் கண்கள் அதற்கு பொருத்தமாக இருக்கின்றது. படத்தில் சிறப்பாக நடித்தவர் ஜோதிகாதான். அவருக்கு தெலுங்கில் குரல் கொடுத்தவரும் (பேயாக மாறூம் போது) சிறப்பாக செய்திருக்கின்றார்.

//சந்திரமுகி முக்கால்வாசி நேரம் வெறும் அறுவையாகப் போயினும் பின்பகுதிக்காக் பார்க்கலாம்//

முன்பகுதியிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

rajkumar said...

திட்டி விமர்சனம் எழுதுவதற்காவது படம் பார்த்ததற்கு நன்றி.

சில மனிதர்களின்புகழைப் பார்த்து வயிறெரிவதும் ஒருவிதமான மனைசிதைவிதான்.

அதன் வெளிப்பாடுதான் இத்தகைய விமர்சனங்கள்.

கறுப்பி said...

மதன் தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. ரஜனி சந்திரமுகி நடிக்க ஒத்துக் கொண்டது அவரிடம் ஏற்பட்டுள்ள மாற்றம் என்றே நான் நம்புகின்றேன். இனிமேலாவது நல்ல பாத்திரங்களை வித்தியாசமானவற்றை முயல்வார் என்றும் நம்புகின்றேன்.

ராஜ்குமார் திட்டி எழுதுவதற்காக நான் சந்திரமுகி பார்க்கவில்லை. ரஜனியின் படங்களை நான் ஒரு போதும் தவற விடுவதில்லை. (பாபா மட்டும் பார்க்க முடியவில்லை) படத்தின் பிரமாண்டம் பாடல்காட்சிகள் நகைச்சுவைகள் நடிகைகள் என்று எப்போதுமே நல்ல ஒரு பொழுது போக்கு அம்சத்துடன்தான் ரஜனி படம் வரும்.. என்னுடைய கவலை எல்லாம் ரஜனி பணம் புகழ் எல்லாவற்றையும் தேவைக்கு மேல் சம்பாதித்து விட்டார். இனி அவர் செய்ய வேண்டியது புதிய புதிய பாத்திரங்களை எடுத்து நடித்துப் பார்ப்பது. பிரமாண்டம் தேவையில்லை. வாழ்வு முடிவதற்கு முன்னால் தான் எடுத்துக் கொண்ட வழியில் திருப்தியாக எதையாவது செய்யலாமே. ரஜனிக்கு சிறந்த நடிகனுக்கான விருது கொடுக்க ஒரு படமாவது இப்போது சொல்லும் படியாக இருக்கின்றதா?

//சில மனிதர்களின்புகழைப் பார்த்து வயிறெரிவதும் ஒருவிதமான மனைசிதைவிதான்.

அதன் வெளிப்பாடுதான் இத்தகைய விமர்சனங்கள்.\\
hehehehe

Raja said...

//இனி அவர் செய்ய வேண்டியது புதிய புதிய பாத்திரங்களை எடுத்து நடித்துப் பார்ப்பது. பிரமாண்டம் தேவையில்லை.//. இதுமாதிரி வித்தியாசமான கதையில் நடித்தால் ஏன் இப்படி நடிக்கிறார் என் கேட்கிறார்.

//ரஜனிக்கு சிறந்த நடிகனுக்கான விருது கொடுக்க ஒரு படமாவது இப்போது சொல்லும் படியாக இருக்கின்றதா?
ரஜினி படமே பார்க்கிறதில்லையா.? ரஜினி படத்த எல்லாம் பாத்திட்டு சொல்லு மாப்பு.
சரி நாய குளிப்பாட்டி நடு வீட்டுல வச்சாலும் நாய் நாய்தான்ங்கிற மாதிரி ரஜினிய திட்டுறதுனு முடிவு எடுத்த பிறகு உங்கள்கிட்ட நேர்மையான விமர்சனத்த எதிர்பார்க்காலாம?

//விஜெயின் சச்சின் உம் சந்திரமுகியும் ஒரே திரையரங்கில் ஓடுவதால் சனக்கூட்டம் நிறைந்து வழிந்தது. விசாரித்ததில் சச்சினுக்கு வரும் கூட்டம்தான் அதிகம் என்றார்கள்.//

பொய் சொல்ல கொஞ்சம் கூட வெட்கப்படுறதில்லாயாட்டுக்கு.

எப்படியோ இனையதளத்தில் ரஜினியை(சந்திரமுகி)விமர்சித்து இவ்வளவு பிளாக்குகள் வருவதே சொல்லுகிறது ரஜினிதான் எப்பவும் என்கேயும் நம்பர் 1 என்று.

கொழுவி said...

"ஹேராம்" கமலுக்கோ "சேது" விக்ரமுக்கோ கொடுக்காமல் அந்த ஆண்டு சிறந்த நடிகர் விருது "படையப்பா" ரஜனிக்குக் கொடுத்ததே தமிழக அரசு. அதைவிடவா ரஜனி படத்துக்கு விருது வேண்டும்? (தமிழக அரசின் விருதைப்பற்றி யாராவது தலையிலடித்தால் நான் பொறுப்பல்லன்.)

ஜோ/Joe said...

படையப்பாவுக்கு ரஜினி-க்கு விருது கொடுத்தது வெறும் அரசியல்..அதைக்கேட்டு ரஜினியே சிரித்துக்கொண்டு தலையிலடித்திருப்பார்

ஜோ/Joe said...

வீரபாண்டிய கட்டபொம்மன் -க்காக நடிகர் திலகம் ஆசிய ஆப்பிரிக்க சிறந்த நடிகராக கெய்ரோ-வில் விருது பெற்ற ஆண்டில் கூட இங்கு அவருக்கு தேசிய விருது கொடுக்கவில்லை..அதற்கும் அப்போதைய அரசியல் தான் காரண்ம் என்று எல்லோருக்கும் தெரியும்.