Thursday, June 30, 2005

வலைப்பதிவில் ஒரு இலவசசேவை!கிட்டத்தட்ட ஐநூறு வலைப்பதிவுகளைத் தாண்டிவிட்டிருக்கும் நிலையில், சிலருக்குப் பல வலைப்பதிவுகள் இருந்தாலும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒரு முன்னூறாவது தேறும் என்று வைத்துக்கொண்டு, இந்த வலைப்பதிவாளர்களின் பல சங்கடங்களை அறிந்தவள் என்ற முறையில் ஒருவாரம் நான் விடுமுறைக்காய் செல்ல இருப்பதால் எனது வலைப்பதிவை வலைப்பதிவாளர்களின் நன்மை கருதி அவர்களின் உயயோகத்திற்காய் விட்டுச் செல்ல முடிவெடுத்திருக்கின்றேன். பணம் வசூலிக்கும் கெட்ட எண்ணம் எனக்கில்லை. தமிழ் மக்களுக்காய் உழைப்பதே என் லட்சியம். அந்த வகையில்

பெயரிலி – கதிர்காமாஸ் போன்றவர்கள் உப்புச் சப்பில்லாத எதையாவது கறுப்பியின் தளத்தில் வந்து வாதிடலாம்.

பெயரிலியைக் கெட்ட வார்த்தைகள் சொல்லித் திட்ட நினைக்கும் அனாமதேயர்கள் என் தளத்தை உபயோகிக்கலாம். ஆனால் தங்கள் உண்மையான அல்லது புனை பெயர்களில் மட்டுமே வருகை தரவேண்டும். என் தளத்தில் அனாமதேயர்களுக்கு இடமில்லை.

சக்தி, சினேகிதி போன்ற சின்னப்பிள்ளைகள். யாரையாவது காதலிக்கும் எண்ணமிருந்தால் தங்கள் வீட்டில் அனுமதிக்காத பட்சத்தில் கறுப்பியின் தளத்தை உபயோகித்து ஒருவாரம் காதலிக்கலாம்.

டோண்டு ஐயா V ரோசவசந்த் போன்றோர் சண்டையிட்டுக் கொள்ள என் தளத்தில் இலவச அனுமதியுண்டு.

மாண்டீரீஸர், புரியாமல் ஏதாவது எழுதப்போகின்றீர்களா? எடுத்துக்கொள்ளுங்கள் கறுப்பியின் தளத்தை

தங்கமணி, சுந்தரவடிவேல் படம் போட என் தளத்தில் தங்களுக்கு அனுமதியில்லை. முன்புபோல் ஏதாவது நல்லது எழுத முடிந்தால் எழுதுங்கள்.

முகமூடி, பெடியன்களுக்கும் வேண்டுமா ஒருவாரம் இலவச சலுகை இங்கே உள்ளது.

வசந்தன் சயந்தனா? இல்லை சயந்தன் வசந்தனா? என்ற சந்தேகத்தைத் என் தளத்தில் வலைப்பதிவாளர்கள் தீர்த்துக் கொள்ளலாம்.

ஈழநாதன் யாருக்காவது அட்வைஸ் பண்ண எண்ணினாலும் என் தளத்தில் இடமுண்டு.(*_*).

டீசே, கிஸோ சின்னப்பையன்கள் என்ற முறையில் காதலிக்க என் தளத்தைக் கொடுத்து உதவுகின்றேன்.

காவலனுக்கு யாராவது தமிழ் கற்றுக்கொடுக்க நினைக்கின்றீர்களா? உபயோகியுங்கள் கறுப்பியின் தளத்தை.

மற்றும் அனைத்துப் படம் காட்டும் நண்பர்களுக்கும் என்தளத்தில் இலவச அனுமதியுண்டு.

ஒருவாரம் நான் ஊரில் இல்லாததால் கறுப்பிக்குத் திருமணம் என்று வதந்தியைக் கிளப்பி விடாதீர்கள் மதி. அறுபதாம் கலியாணத்திற்கு வலைப்பதிவாளர்களுக்கு நிச்சயம் அழைப்புண்டு.

வந்து படம் காட்டுறன்.

Byeeeeeeeeeeeeeee

42 comments:

சுட்டிப் பையன் said...

என் பெயரை எழுதாத கறுப்பியிடம் நான் இனி பேச மாட்டேன்.

-/பெயரிலி. said...

உப்பு என்று நாங்கள் பொதுவாகச் சொல்வது சோடியம் குளோரைட்டு என்ற NaCl ஆகும். கறியுப்பு என்றும் இதனையே சொல்லுவார்கள். மேசையுப்பு என்றும் ஒன்றுண்டு. ஆனால், வீதிகளிலே பனிக்காலங்களிலே பனியின் உருகுநிலையைக் குறைக்கப்பயன்படவுங்கூடும்.

சப்பு என்பது மிகவும் இலகுவிலே பழுதாகிப்போய்விடக்கூடிய பலகையை நாங்கள் ஆக்கிக்கொள்ள உதவும் மரம். சப்புப்பலகை என்று சொல்வார்கள்; விலைமலிவான பெட்டிகள், சுவரலுமாரிகள் செய்ய இது பயன்படும்.

கறிப்பியை.. சீ.. அறுப்பியை.. அடச்சீ.. கறுப்பியை எதிர்த்து எதிர்த்துப் பின்னூட்டியே பழகிப்போய்விட்டதால், கறுப்பி சொன்னதுக்கெதிராக உப்புச்சப்போடு பெயரிலி ஒரு பதிவு போடவிரும்பினதால், போட்டுவிட்டிருக்கு.

SnackDragon said...

//பெயரிலி – கதிர்காமாஸ் போன்றவர்கள் உப்புச் சப்பில்லாத எதையாவது கறுப்பியின் தளத்தில் வந்து வாதிடலாம். //
நீங்கள் தற்கொலை கவிதை எழுதினீர்கள். நாங்களும் உங்களுக்கு இன்ஸ்பிரேஷனுக்காக சிலதை எழுதினோ. நீங்கள் தற்கொலை பண்ணவில்லை எண்டால் உப்பு சப்பில்லாமல்தான் போகும். அதற்கு நாங்கள் என்ன செய்யமுடியும்?
அடுத்த முறையாவது, கவிதை எழுதினால் அதை காப்பாற்றும்படி எதையாவது செய்யுங்கள்.

அப்பாடா ஒரு வாரத்துக்கு எல்லோருக்கும் நிம்மதி, கறுப்பியிடமிருந்து விடுதலை.

காவலன் said...

நன்றி கறுப்பி அக்கா...

எனக்கு தமிழ் தெரியும்... அனால் எழுதுவது தான் கொஞ்சம் பிரச்சனை... இலக்கணம், இலக்கியத்தில் நாட்டம் குறைவு.... கவிதைகள், ஆய்வு (சின்ன) கட்டுரைகள்...அரசியல்

அப்புறம், பெண்களின் உரிமை பற்றி, உரிமைகள் பறிக்கப்படுகின்றனவாம்...
ஹ, இருந்தாள் தானே பறிப்பதற்கு?

-/பெயரிலி. said...

/அப்புறம், பெண்களின் உரிமை பற்றி, உரிமைகள் பறிக்கப்படுகின்றனவாம்...
ஹ, இருந்தாள் தானே பறிப்பதற்கு?/
அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ! உரிமை இல்லாட்டியும் பரவாயில்லை, ஆளையாச்சும் உயிரோட இருக்கவிடுமன், ராசா

கறுப்பி said...

சுட்டிப்பயலே நீர் யாரோ? என்தளத்தில் நீர் குறும்புகள் செய்யலாம்.

கதிர்காமாஸ், இன்னும் சில மணி நேரத்தில் நான் போகப்போகின்றேன். சந்தோஷப்படாதேம். விடுமுறைக்காகப் போகப் போகின்றேன். இப்பிடியே காற்று வாக்கா என் தளத்தில் வந்து நான் திரும்பி வரும்போது பின்னூட்டம் ஒரு நூறைத் தாண்ட வையும் பாப்பம்.

பெயரிலி உப்புச் சப்பிலும் இவ்வளவு அர்த்தாமா? நீர் உண்மையிலேயே பெரிய ஆளுதான்யா.

காவலன்; என்ன சொன்னீர்? உரிமை இல்லையா? இப்ப உண்மோட சண்டை பிடிச்சு என்ர மூடை குழப்ப விரும்பேலை. போயிட்டு வந்து பேசிக்கிறன்.

இளங்கோ-டிசே said...

பெயரிலி உங்களின் இந்தப் 'பெரும் தத்துவம்' பிடித்திருந்தது. கறுப்பி காதலிக்க 'களம்' அமைத்துத் தந்த உங்களுக்கு நன்றி. சோகம் என்னவென்றால் நாம் மட்டுமே களத்தில் தனித்து நின்று வாளை காற்றில் சுழற்ற வேண்டியிருப்பது :-).

SnackDragon said...

பேசாமால் கறுப்பி,

""போகப்போகிறேன்.
பஸ் போகிறது
காரும் போகிறது
ரயிலும் போகிறது
எத்தனையோ பேர் போகிறார்கள்.
கையிலே டிக்கட்டுக்கு காசில்லை.
என்னிடம் ஏன் காசில்லை என்று யாருக்காவது தெரியுமா?
நான் எங்கே போகிறேன் என்று யாருக்காவது
தெரியுமா?
எத்தனையோ பெண்கள்
எங்கொ போவார்கள்?
பெண்கள் போவது அவர்கள் உரிமைஐஐஐஐ...
நான் போவதற்கு காரணத்தை
நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள்
உங்கள் வசதிப்பட . ""

என்று ஒரு கவிதை எழுதிப்போட்டிருக்கலாம்.

SnackDragon said...

//நாம் மட்டுமே களத்தில் தனித்து நின்று வாளை காற்றில் சுழற்ற வேண்டியிருப்பது :-)//

வாலை?

கிஸோக்கண்ணன் said...

நீங்கள் விரும்பும் வண்ணம் உங்கள் விடுமுறை அமைய வாழ்த்துக்கள்.

கறுப்பி said...

கதிர்காமஸ், டீசே உங்களப் பாக்க ஆசைப்படுறார். ஒருக்கா ரொறொண்டோ பக்கம் வாங்கோவன்.

SnackDragon said...

//நீங்கள் விரும்பும் வண்ணம் உங்கள் விடுமுறை அமைய வாழ்த்துக்கள்.//
நாங்கள் விரும்பும் வண்ணம் நீங்கள் விடுமுறைக்கு உடனே போக வாழ்த்துக்கள்.

-/பெயரிலி. said...

/கதிர்காமஸ், டீசே உங்களப் பாக்க ஆசைப்படுறார். ஒருக்கா ரொறொண்டோ பக்கம் வாங்கோவன்./
ஐயோ; அமெரிக்க-கனடிய போடரில நிலைக்குத்தா ஒரு நெடுத்த ஆடியை வச்சால், இதுவின்ரை மிரர் இமேஜ் மற்றது. ஒண்டோடையே படுகிறபாடு போதாதா? ராகு கேது ரெண்டும் சந்திக்கவேணுந்தானா?

கறுப்பி said...

சும்மா இரும் பெயரிலி.. இடையில புகுந்து குழப்பாதேம். (நான் இஞ்ச இருட்டடிக்கு ஆயத்தப்படுத்திக்கொண்டிருக்கிறன்)

கதிர்காமஸ் நீங்கள் வாங்கோ. டீசேயின்ர ஆசையைக் கெடுக்காதேங்கோ.

முகமூடி said...

// ஒருவாரம் நான் விடுமுறைக்காய் செல்ல இருப்பதால் // என்றவுடன் கறுப்பி இணைய இணைப்பே இல்லாத இடம் போகிறார் போலருக்கு என்று ஒரு நிமிடம் ஆனந்த கூத்தாடினேன்... பின்பு பின்னூட்டம் கொடுப்பதை பார்க்கையில் உப்பு சப்பில்லாமல் ஆகிட்டுது

முகமூடி said...

// முகமூடி, பெடியன்களுக்கும் வேண்டுமா ஒருவாரம் இலவச சலுகை இங்கே உள்ளது. // முகத்திரை இலோர் என்று அழகான தமிழ் இருக்க வார்த்தை சிக்கனத்துக்காக என் பெயரை அல்லாரும் உபயோகப்படுத்துகிறார்கள்... முதல்ல என்னோட பெயரை மாத்தணும் அல்லது பேடண்ட் செய்யணும் போலருக்கு...

// யாரையாவது காதலிக்கும் எண்ணமிருந்தால் தங்கள் வீட்டில் அனுமதிக்காத பட்சத்தில் கறுப்பியின் தளத்தை உபயோகித்து ஒருவாரம் காதலிக்கலாம் // ஆஹா... இடமிருக்கு... காதலிக்கு எங்கே போவேன்... கறுப்பியின் தளத்திலே காதலி கிடைக்குமா ??

முகமூடி said...

//முகத்திரை இலோர் // முகத்திரையாளர் என்று வந்திருக்க வேண்டியது... பக்கத்து வீட்டு பையன் கையிலை வைத்துக்கொண்டு அடிக்கவும் தவறாக வந்திட்டுது.

முகமூடி said...

// பக்கத்து வீட்டு பையன் கையிலை வைத்துக்கொண்டு அடிக்கவும் தவறாக வந்திட்டுது // அடச்சே... பெயரிலி மாதிரி பையனை கையில் வைத்துக்கொண்டு தட்டச்சு செய்யும் போது என்றிருக்க வேண்டும். யாராவது பக்கத்து வீட்டு பையனை அடிக்கிறேன் என்று போலீஸை கூப்பிட்டுவிடாதீர்கள்

கறுப்பி said...

முகமூடி இன்னும் நான் போகவில்லை ஐயா. போவது மின்சாரமே இல்லாத இடத்துக்காக்கும். இன்னும் சில மணிநேரங்களில் பயணம். எனது வாகனத்துக்காக வெயிட்டிங்!

காதலிக்கத்தான் தளம் அமைத்துக் கொடுத்தேன். காதலியைத் தாங்கள் தான் தேடிக்கொல்ல வேண்டும்.

முகமூடி said...

தேடிக்கொல்ல வேண்டுமா தேடிக்கொள்ள வேண்டுமா... முந்தையது உங்கள் பகையாளியை பழி தீர்க்கும் உபாயம்... பிந்தையதும் அதே (வேறு வகையில்)

Shakthi said...

அடேங்கப்பா, கறுப்பி உங்கள் சேவை மீண்டும் மீண்டும் வளர வேண்டும்.

கறுப்பி said...

தாங்கள் காதலிக்கும் பெண் நிச்சயம் காதல் கொள்ளமாட்டாள். தங்கள் காதல் அறுவையால் கொல்லப்படுவாள் என்பதே அதற்கு அர்த்தமாகும்.

-/பெயரிலி. said...

/தேடிக்கொல்ல வேண்டுமா தேடிக்கொள்ள வேண்டுமா... முந்தையது உங்கள் பகையாளியை பழி தீர்க்கும் உபாயம்... பிந்தையதும் அதே (வேறு வகையில்)/
முகமூடி, கறுப்பியின் இடுப்பிலும் குழந்தையோ என்னவோ?

கறுப்பி said...

சக்தி, கறுப்பியின் சேவை நாட்டுக்குத் தேவை இல்லையா?


பெயரிலி,

//கறுப்பியின் இடுப்பிலும் குழந்தையோ என்னவோ?\\ What do you mean by this?

இளங்கோ-டிசே said...

கறுப்பி உண்மையிலேயே விடுமுறைக்கு போறியளா? எது நிசம் எது பொய் என்று தெரியாமல் ஒரே 'மப்பாய்' வரவர வலைப்பதிவுகள் வந்துவிட்டன :-). ஒரு வாரம் விடுமுறை என்றால் பொறாமையாய்த் தானிருக்கிறது. நல்லாய் enjoy பண்ணுங்கோ. நல்ல வெக்கைக்காலம் என்றபடியால் மறக்கமால் அடிக்கடி 'தண்ணி' அருந்தி உடல்நலத்தையும் கவனிக்கவும்.

சரி 'ராகுவும்' 'கேதுவும்' சேர்ந்து ஒன்று சேர்ந்து போய் ஒரு 'சனியனை'ப் பிராண்டுவது என்று முடிவுசெய்துள்ளோம். முடிகிறதா பார்ப்போம் இந்த 'சமருக்குள்'! :-).

கறுப்பி said...

உண்மையாத்தான் டீசே. எங்கள் நண்பர்களுடன் சேர்ந்து காம்பிங் போகின்றேன். நாடக நண்பர்கள் உங்களுக்கு அனைவரையும் தெரிந்திருக்கும். இது வருடா வருடம் போவதுதான். புல்லாத் தண்ணியில்தான் இருப்போம். வாவிப்பக்கமல்லோ போறம்.

பிறாண்டாதீர்கள் பாவம் அவர்

SnackDragon said...

கறுப்பி அது ஒண்ண்ண்டுமில்லை,
பெயரிலி கையிலே குழந்தைவச்சுக்கொண்டு தட்டச்சு செய்தாராம். முகமூடியும் பக்கத்து வீட்டு குழந்தையை இடுப்பிலே வைச்சிக்கொண்டு தட்டச்சு செய்தாராம். அதனால் இருவருக்கு தட்டச்சு பிழை வருகிறதாம்.

நீங்கள் முருங்கையை விட்டு இறங்குங்கோ.

கறுப்பி said...

கதிர்காமஸ், அதுதானே பாத்தன்.. பெயரிலி ஏதோ டபுள் மீணிங்கில பேசுதோ எண்டு ஒருக்காப் பயந்திட்டன்.
இஞ்ச எங்க முருகை. மேப்பிள்ளதான் ஏறி நிக்கிறன்.

SnackDragon said...

// பெயரிலி ஏதோ டபுள் மீணிங்கில பேசுதோ எண்டு ஒருக்காப் பயந்திட்டன். //
அங்கதான் தப்பு செய்றீங்க.பெயரிலி
எப்பவுமே 5 அல்லது 6 மீனிங்-க்கு மேலேதான் பேசும். 3 க்கீழே வருவதே இல்லை. ;-)

Moorthi said...

காதலிக்கத் தாளம் அமைத்துக் கொடுத்த எங்கள் கறுப்பிக்கு வாழ்த்துக்கள்!

Moorthi said...

மன்னிக்க:- தளம் அமைத்துக் கொடுத்த...

Muthu said...

///உப்பு என்று நாங்கள் பொதுவாகச் சொல்வது சோடியம் குளோரைட்டு என்ற NaCl ஆகும். கறியுப்பு என்றும் இதனையே சொல்லுவார்கள். மேசையுப்பு என்றும் ஒன்றுண்டு.///

பெயரிலி,
மேசையுப்பும்,சோடியம் குளோரைடும் ஒன்றெனவல்லவா இத்தனைகாலம் நினைத்துக்கொண்டிருந்தேன்.

சன்னாசி said...

//மாண்டீரீஸர், புரியாமல் ஏதாவது எழுதப்போகின்றீர்களா? எடுத்துக்கொள்ளுங்கள் கறுப்பியின் தளத்த//
என்ன செய்வது, விட்டல விட்டல பாண்டுரங்க என்று அவ்வப்போது வந்து மினி-பஜன் வேண்டுமானால் பாடிவிட்டுப் போகிறேன். விடுமுறையை நல்லமுறையில் கடிக்க ... மன்னிக்க மன்னிக்க, கழிக்க வாழ்த்துக்கள்! :-)

காவலன் said...
This comment has been removed by a blog administrator.
சினேகிதி said...

ஐயோ இவ்விடம் என்னா நடக்குது?

dondu(#11168674346665545885) said...

Hello pretty young lady, have a great holiday.
Regards,
Dondu Raghavan

-/பெயரிலி. said...

/என்ன செய்வது, விட்டல விட்டல பாண்டுரங்க என்று அவ்வப்போது வந்து மினி-பஜன் வேண்டுமானால் பாடிவிட்டுப் போகிறேன். /
;-)))))

Garunyan said...

கறுப்பி காம்பிங் போறன் என்றுபோட்டு அங்காடியிலை நின்று
முருக்கங்காயை நசித்துப்பார்க்கிறியள் என்ன?
சமைக்கவா..... இல்லை , ஆத்துக்காரருக்கு சாத்தவா?
கறுப்பி பன்றி இறைச்சிக்கறியை சமைக்கும் ஜோரைப் பார்த்தால்
நன்றாய் இருக்கும்போலத்தான் தெருகிறது.
கனடாவுக்கு வந்தால்
எமக்கும் கிடைக்குமா?

விடுமுறை என்றதும் ஒரு சின்ன ஞாபகம்.
தஸ்லீமா நஸ்ரீன் கொஞ்சக் காலம் வந்து சுவீடனில்
மறைஞ்சிருந்தாரல்லவா?
அப்போது ஒருநாள் எங்கவூர் டிவியில் வந்தார். அவரது
எக்ஸில் வாழ்க்கையில் அதிக நேரத்தை ஓவியம் வரைவதில்தான்
கழித்தாராம். பல ஓவியங்களையும் காட்டினார், பேட்டிமுடிவில் சொன்னார்
தான் சில நாட்கள் விடுமுறையில் போவதாகச் சொன்னார்.
பார்த்தால் மற்றநாள் நம்ம ஊரில் ஒரு கடையருகில் சிகரெட்டும்கையுமாக
நின்று Window Shopping செய்துகொண்டு நிற்கிறார். டிவியில் தெரிந்ததைவிட
ஒரு சுத்து ( என்னவிட)பெரிதாக இருந்தார். கிட்டப்போய் ஒரு 'ஹலோ'
சொல்லவேணும்போல் இருக்கிறது. முன்பின் தெரியாதவரிடம் எப்படிப்பேசுவது?
அவ்ர் பயந்துபோகலாம். எதிரியல்ல நண்பன்தானென்று எப்படி நம்பவைப்பது?
அவர் இன்னொரு பேட்டியில் பங்களாதேச அரசின் உளவு ஆளொன்று வந்து
''காப்பிகுடிக்கக் கூப்பிட்டு என்னை மடக்கப்பார்த்தான்" என்றுஞ்சொல்லலாம்.
'காப்பிகுடிக்க கூப்பிடுவது' பற்றி சந்திரவதனாதான் சொல்லியிருக்காரே?
சரி யாராவது 'லஜ்ஜா' வாசித்திருந்தால் சொல்லுங்களன். மொழியும் நடையும்
மகா மட்டம் (ஜமுனா ராஜேந்திரன்) என்கிறார்களே?

கறுப்பி said...

//Hello pretty young lady, have a great holiday.
Regards,
Dondu Raghavan\\
I like this comment. (*_*) thanks Dondu. thanks you very much.

சினேகிதி said...

y y y karupy?? is it b.coz he called u pretty young lady?

கறுப்பி said...

Pls be quiet snehethi (*_*)

சினேகிதி said...

Snegethy - Chatterbox... since u asked i'll be quite.