Wednesday, February 16, 2005

கறுப்பிக்கு பரிசு



காதலர் தினத்தன்று
நீலத்தில் வெள்ளைப் பூப்போட்ட சேலை
பரிசாகத் தந்தார் கணவர்(ன்)
இதையும் மடிப்புக் குலையாமல்
அடிக்கி வைத்தேன் நான்

இன்னும் தேய்த்துக்
குளிக்கின்றேன்
நிறம் மாறலாம்
என்ற ஏக்கத்தில்

எனக்குப் பொருத்தமானதை
அம்மாவின் பின்
இவர் வாங்கி வருகின்றார்

மஞ்சள் சேலை
ஊகூம்! சான்ஸே இல்லை

தோழியில் மஞ்சள் சேலை
போர்த்திப் பார்க்கையில்
அழகாக இருக்கின்றேன் நான்.

2 comments:

Narain Rajagopalan said...

என்னத்துக்கு தேய்ச்சு குளிச்சு நிறம் மாறணும். அது நம்ம நிறம். வாழ்வும், மணமும், குணமும் சொல்லும் நிறம். என்றைக்காவது ஆப்ரோ-அமெரிக்கர்கள், தங்கள் நிறங்களை மாற்றிக் கொள்கிறார்களா. இந்த நிறம் ஒரு உலக நிறம் அதையெல்லாம் மாத்திக்கணும்மு நினைக்கிறது கூட இன்பீரியாரிட்டி காம்பெளக்ஸ் என்று நினைக்கிறேன்.

நிற்க. என்னுடைய பதிவில் ஒரு காரசாரமான விவாதம் ஒடிக்கொண்டிருக்கிறது. திருமணத்திற்கு பின் காதலிக்கலாமா கூடாதா என்பது பற்றி. ஒரே ஆண்கள் கூட்டமாய், கோடு கிழித்துக் கொண்டு அடித்து கொண்டிருக்கிறோம். நீங்கள் வந்து பெண்களின் பார்வையை பதித்தால், சரியாக விசயங்கள் பார்க்கப்படும் என்று தோன்றுகிறது. ஆகவே இதை சொடுக்குங்கள்

கறுப்பி said...

நரேன் நீங்கள் சொல்வது உண்மை. சின்ன வயதில் தேய்த்துக் குளித்ததாக ஞாபகம். தற்போது என் நிறம் எனக்குப் பெருமையாக இருக்கிறது. இருந்தும் இன்னும் திருமணப் பேச்சின் போது “வெள்ளைப் பெண்” கேட்பவர்கள் இருக்கின்றார்கள். ஹ ஹ ஹ..