Thursday, June 16, 2005

ரொறொன்ரோ பல் வைத்தியர் மீதான தடை நீக்கம் - வைகறை.

இவ்வார வைகறை இதழில் 8ம் பக்கத்தில் வெளிவந்திருக்கும் கட்டுரையில் அதிருப்தி அடைந்த சிலர் வைகறை விநியோகிக்கப்படும் நிறுவனங்களுக்கச் சென்று பத்திரகையை அப்புறப்படுத்தி வருகின்றனர். இதனால் இவ்வாரப்பத்திரிகை தங்கள் கைகளுக்குக் கிடைப்பது சிரமமாக உள்ளது என வாசகர்கள் எமக்குத் தொலைபேசியூடாகத் தெரிவித்துள்ளனர். இதனை ஓரளவுக்கு நிவர்த்தி செய்யும் வகையில் அப்பத்திற்கான இணைப்பை இத்துடன் தருகின்றோம்.

http://vaikarai.com

12 comments:

-/பெயரிலி. said...

பத்திரிகைமீது தடைநீக்கமா? பல்வைத்தியர்மீது தடை நீக்கமா? குழப்புகிறீர்களே

கறுப்பி said...
This comment has been removed by a blog administrator.
கறுப்பி said...

"வைகறை" இணையத்தளத்தில் வெளிவந்திருக்கும் செய்தியை அப்படியே எனது வலைப்பதிவில் போட்டிருக்கின்றேன். எனவே இச் செய்தியில் எனது சொந்தக் கருத்துக்கள் எதுவும் எழுதப்படவில்லை என்பதை அறியத் தருகின்றேன். வைகறையின் இணையத்தளத்தைப் படிப்பதன் மூலம் விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

மு. மயூரன் said...

karuppi,

please read my blogging on Open Cinema.

http://mauran.blogspot.com/2005/06/blog-post_15.html

-M.Mauran

கறுப்பி said...

yes mayuran I will. thanks.

கிஸோக்கண்ணன் said...

மின் தளத்திலை அது எட்டாவது பக்கத்திலை இல்லை. தேடியும் கிடைக்கலை. எட்டாமலே போச்சு

கறுப்பி said...

கிஸோ, வைகறையின் முதல் பக்கத்தில் பெரிய எழுத்தில் இருப்பதை சுட்டவும் அது உங்களை தகவல் உள்ள பக்கத்திற்கு எடுத்துச் செல்லும்.

கறுப்பி said...

http://vaikarai.com/46/Page8.pdf

I think this will do. try now

முகமூடி said...

கறுப்பி, நான் ஒன்னு கேட்டா கோச்சிக்க மாட்டீங்களே. இலங்கை தமிழ் பழக்கமில்லாததால் இந்த சந்தேகம். வார்த்தைகளின் ஒலிக்குறிப்பும் உச்சரிப்பும் வட்டார வழக்குக்கு ஏற்றவாறு மாறும் என்பது எனக்கு தெரியும்... ஆனால் பெயர்களும் மாறுமா? torontoவைத்தானே நீங்கள் தலைப்பில் ரொறொன்ரோ என்று சொல்கிறீர்கள்... அதை நான் டொரோன்டோ என்றுதான் உச்சரிக்க வேண்டும் என எண்ணியிருந்தேன்... ஆங்கில அகராதியிலும் அப்படியே குறிப்பிடப்பட்டுள்ளது. விளக்குவீர்களா?

கறுப்பி said...

நான் கோவிக்கின்றேன். கோவிக்கின்றேன், கோவிக்கின்றேன்.

நான் வசிப்பது ரொறொண்டோவில் டொரொன்ரோவில் இல்லை

கிஸோக்கண்ணன் said...

நன்றி கறுப்பி

கறுப்பி said...

13 வயதுச் சிறுமி ஒருத்தி பல் வைத்தியரால் பாலியல் உபாதைக்கு ஆளாகி இருக்கின்றாள். பல பிரபல வர்த்தகர்கள் வைத்தியரின் பெயர் கெட்டுப் போக்கக் கூடாது என்பதற்காய் இச் செய்தியை வெளியே வரவிடாமல் தடுக்கின்றார்கள். அதையும் மீறி "வைகறை" இச் செய்தியை வெளியே கொண்டு வந்திருக்கின்றது. இது பற்றி அதிகம் ஒருவரும் கண்டுகொள்ளாமல் இருப்பது சங்கடமாக இருக்கின்றது. ரொறொண்டோவில் வசிக்கும் வலைப்பதிவாளர்கள் வைத்தியர் இளங்கோவிடம் செல்லாமல் பகீஷ்கரிக்குமாறு கறுப்பி கேட்டுக் கொள்ளகின்றேன்.