Tuesday, June 21, 2005

வலைப்பதிவாளர் மகாநாட்டிற்கான ஆயத்தங்கள்

2006ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ரொறொண்டோவில் இடம்பெறவிருக்கும் உலக அனைத்து வலைப்பதிவாளர்கள் மகாநாட்டிற்காக ஆயத்தங்கள் இப்போதே தொடங்கி விட்டன என்பதை மகிழ்ச்சியுடன் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
அதற்கான சாட்சியங்களா மும்மரமாக வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் இலவச ஊழியர்களின் புகைப்படங்களை இங்கே இணைத்துள்ளேன்.சமையல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் - ஜிம்மிபாதுகாப்பிற்காக – ரெக்ஸ்ஆலோசகர்கள் - ஜானி, லல்லி, லில்லி, பேபி, ரெக்ஸிசுகாதாரப்பிரிவில் - ரோசிதிட்டங்களைக் கவனமாகச் செவிமடுக்கும் - பிளாக்கிஹொப்பஹட்டிற்குப் பயணம்கமெரா ரெடிஓய்வுப்பகுதி – ப்றொண்ணி


காதல் பிரிவு – லசி, சைறண்

14 comments:

SnackDragon said...

கறுப்பி உங்கள் நாயை பூனையாக்கும் முயற்சிக்கு வாழ்த்துக்கள். டீ சே வை விட நல்லாத்தான் சமைக்குமென்று நம்பிக்கை இருக்கு.

-/பெயரிலி. said...

கடைசியாக நீங்களும் ரொரோண்டோ சந்தித்த வலைப்பதிவாளரிண்டை படங்களைப் போட்டிருக்கிறியள். சொல்லி வச்ச மாதிரி, மற்றவை போலையே ஆரார் ஆரெண்டு சொல்லாமல்.

என்னுடைய அனுமானம்:
முதற்படம் மதி?
இரண்டாவது பேட்டை ரப் டிஜே
மூண்டாவது பலர் (ஜெயக்காந்தனும் இருக்கிறாரோ?)
நாலாவது பாரி-பாலாஜி?
ப்ளாக்கியின்ரை படத்தை மெல்லவாய் விட்டிட்டியள் :-(

SnackDragon said...

/நாலாவது பாரி-பாலாஜி?/
:-))))))))))

SnackDragon said...

இங்கே வந்து இந்த கமண்ட்-ஐ எழுதிவிட்டு பெயரிலி எப்படி சிரித்துக்கொண்டே நடனமாடினார் என்பதை பார்க்க விரும்புபவர்கள் இங்கே போகவும்

Shakthi said...

:-)))))))

கறுப்பி said...

பெயரிலி, பிளாக்கியை இணைத்துவிட்டேன் பாருங்கள். கதிரு! நன்றி பெயரிலி நன்னாக நடனம் ஆடுறார். ஆனால் அவரும் முகத்தைக் காட்டவில்லை பாருங்கள். (*_*)

Shakthi said...

கறுப்பி, திட்டங்களைக் கவனமாகச் செவிமடுத்துக்கொன்டிருப்பது நீங்களா

-/பெயரிலி. said...

/திட்டங்களைக் கவனமாகச் செவிமடுக்கும் - பிளாக்கி/
அம்மாவாணை உது வர்றவைக்கும் திட்டம் போடுறவைக்கும் கடிக்கிறதுக்குத்தான். பாக்கிற பார்வையைப் பாக்கவே தெரியுது. பொக்கிளைச் சுத்தி ஊசி சந்திப்பாளர் கணக்கிலை போடுவீங்களோ, இல்லை அதுக்கும் பம்பரம் விட்டுப் படமெடுக்கிற கோடம்பாக்கம் டிரக்ரர் வந்துதான் போடோணுமோ?

ப்ரவுணி: கிஸோகண்ணன்?

கறுப்பி said...

பிளாக்கி கறுப்பியேதான் சக்தி. கறுப்பிக்கு எல்லாத்துக்கும் பஞ்சி என்பது முந்தியே நான் சொல்லியாயிட்டுது. பேசாமல் படுத்துக்கிடந்து பார்வையிட்டால் சுகமா இருக்கும்.

பெயரிலி, தற்கொலையை விட்டுவிட்டு தற்போது கொலை ஐடியாவில பிளாக்கி இருக்கு. வந்து போடாதேங்கோ குதறி வைக்கும். (நீங்கள் சொன்ன அம்மாவாணை வாசிக்கச் சந்தோஷமாக இருந்தது..) பொக்கிளச் சுத்தி ஊசி இல்லை பம்பரம். (*_*)

இளம் வயது பிள்ளைகள எப்பிடி ஓய்வுப்பகுதியில் வருவார்கள் காதலர்கள் பிரிவில் கிஸோவைக் காணலாம். (*_*)

SnackDragon said...

//மூண்டாவது பலர் (ஜெயக்காந்தனும் இருக்கிறாரோ?)//
பெயரிலி ,

இதுதான் சாக்கென்று யாராவது வந்து,"ஜெயகாந்தன் சரியாத்தான் சொன்னாரு. தன்னையே நக்கிக்கொள்ளொன் நாய்கள் இவர்கள் என்று இவர்களே சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபித்து விட்டார்கள் " என்று கமண்ட் போடப் போகிறார்கள்.

கிஸோக்கண்ணன் said...

இதென்ன சின்னப்பிள்ளையளின்ரை விளையாட்டு.

இளங்கோ-டிசே said...

மனுஷர், ஐந்து நிமிசம் தமிழ்மணத்தை எட்டிப்பார்க்காவிட்டால், சமாதி கட்டி ஒரு 'ரோஜாப்பூவும்' வைத்துவிடுவியள் போல :-).
//இரண்டாவது பேட்டை ரப் டிஜே//
பெயரிலி சொன்னால் சரியாய்த்தான் இருக்கும். எனென்றால் அவரும் கூட என்னோடு இணைந்து டிஜே செய்பவர். எங்கட ரப் நிகழச்சி பார்க்கவேண்டுமென்றால், எல்லோரும் ஓடிப்போய் 'காதலன்' டிவிடியைப் போட்டு 'பேட்டை ராப்' பாடலைக் கண்டு இரசியுங்கோ. அந்தப்பாடலில் 'அம்மா பேட்டை, ஜயம்பேட்டை' என்று குஞ்சரம்மா ரேஞ்சில் குரல்கொடுத்தவர் நம்ம கதிர்காமஸ் என்பதையும் இரசிகப்பெருமக்கள் மறந்துவிடாதையுங்கோ :-).

கறுப்பி said...

கிஸோ, எமது குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கொஞ்சம் ஜாலியா இருக்கலாம் எண்டால் வயது போட்டுது எண்டு குத்திக்காட்டுறார்.

Thangamani said...

எல்லோரும் இப்படி ஒரே இடத்தில் இருக்கிறீர்களா? (நான் பின்னூட்டங்களில் சொன்னேன்)