Thursday, July 07, 2005

"ம்"

ஒரு சின்ன விடுமுறைக்குப் பின்னர் மீண்டும் வலைப்பதிவில் வலம் வந்து, நுனிப்புல் மேய்ந்து விட்டு, மீண்டும் உள்ளே நுழைகின்றேன். உருப்படியா ஏதாவது எழுதிக் கனகாலம் ஆகுது. இப்ப எல்லாம் உருப்படி எழுதுறதுக்கே ஒண்டும் இல்லாத மாதிரியும் படுகுது.

காட்டுக்குள்ள கழிச்ச அந்த நாட்கள், மீண்டும் கட்டிடக் காட்டுக்குள் நுழைந்து மின்கணனி, வேலை என்று இயந்திரமாக மறுக்கிறது. உடுப்பில அப்பியிருக்கிற சேறு, இழுக்காத தலைமயிர், வெந்ததும் வேகாததுமான சாப்பாடு, மரங்களுக்கு அடியில், இயற்கையின் எச்சங்களுக்கு மத்தியில் தூங்கி எழுவது, தொழில்நுட்பங்களை மறந்து பூச்சிகளையும், நெருப்பையும், தண்ணியையும், காட்டையும் ஓடியோடி ரசிக்கும் குழந்தைகள். இருந்ததை அழித்து கட்டிடக்காடாக்கி விட்டு இப்போது பணம் கொடுத்து இயற்கையை ரசிக்கின்றோம், ம்..

ரொறொன்டோவிலிருந்து கிட்டத்தட்ட 150 மைல் தொலைவில் மூன்றரை மணித்தியாலங்கள் கார் ஓட்டத்தில் Port Elgin எனும் இடத்தில் New Fairway Family Campground , Lake Huron இற்கு அருகாமையில் இருக்கின்றது. பல குடும்பங்கள் Trailer இல் கழித்தார்கள் நாங்கள் Tent போட்டு இரவைக் கழித்தோம். அனேகமாக எல்லோருமே வெள்ளை இனத்தைச் சேர்ந்தவர்கள்தாம். ஒரு இந்தியக்குடும்பத்தைக் கண்டதாக ஞாபகம்.

அங்கு என்ன செய்தீர்கள் என்று கேட்டீர்களானால் லேக்கில் குளித்தல் (தண்ணீர் பேக்குளிர்) குழந்தைகள் தண்ணீரை அதிகம் அனுபவித்தார்கள் என்று கூறலாம். பெரியவர்கள் மற்றத் தண்ணீரைத்தான் அதிகம் அனுபவித்தார்கள். நன்றாகச் சாப்பிட்டோம். இரவு நேரங்களில் நெருப்பை எரித்து விட்டு சுத்தியிருந்து பாட்டுச்சமா வைத்தோம். ரொறொண்டோவில் சத்தம் போட்டுக் கதைக்க முடியாத அரசியல்கள் விவகாரங்கள் எல்லாம் பலத்த சத்தத்துடன் அலசப்பட்டது. மனஉளைச்சல்கள், தொல்லைகள் எல்லாவற்றையும் ஒரு மூலையில் தூக்கிப் போட்டு விட்டுக் கழித்த நாட்கள் இவை. உண்மையாகப் பார்த்தால் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. போனதே ஒன்றும் செய்யாமல் சில நாட்களைக் கழிகத்தானே. எனவே அதனை நிறைவாகச் செய்தோம். எனது நண்பர் ஒருவர் (வலைப்பதிவின் வாசகர்-ஒன்று இரண்டு கொமெண்ட் மட்டும் போடுவதற்கு நேரம் கொண்டவர்) டிஜிடல் கமெரா மூலம் பல கிளிக்குகள் செய்தார் அவர் ஏதாவது படத்தை எனக்கு அனுப்பி வைத்தால்தான் உண்டு.

இந்தமாதக்கடைசியில் வரும் Canadian Civic holiday ற்கு Algonquin lake site இற்கு மீண்டும் ஒருமுறை மனஉளைச்சல்களைக் கழற்றி வைக்கச் செல்ல உள்ளோம். இதுதான் எனக்கு மிகமிகப் பிடித்த இடம். மிக ஆழமான வாவியின் நடுவே இருக்கும் சின்னச்சின்னத் தீவுகளின் நடுவில் நாம் இருப்போம். எம்மைத் தவிர எவரையும் அங்கே காணமுடியாது. அவசரத்திற்கு வெளியே போக வேண்டும் என்றால்கூட அரைமணித்தியாலங்கள் மோட்டர் போட்டில் ஓடித்தான் கரை செல்ல முடியும். மான், கரடி, பாம்பு (நச்சு அற்ற) போன்றவை இருப்பதாகவும் அவற்றிற்குத் தொந்தரவு கொடுக்காத வகையில் மனித மிருகங்கள் நடந்து கொள்ள வேண்டும் என்பதும் அரசாங்கத்தின் வேண்டுகோள்.

13 comments:

SnackDragon said...

ஐயகோ. வந்தாச்சா?

மயிலாடுதுறை சிவா said...

கறுப்பி
புகைப் படங்கள் எங்கே? தனிமையில் இருந்த மனநிலையில் நீங்கள் என்ன நினைத்தீர்கள் என்பதை எழுதுங்கள்.
எல்லாவற்றையும் மறந்து காட்டில் கழித்த நாட்களை மேலும் சுவைப் பட எழுதுங்களேன்.
எதிர்காலத்தில் நம் வலைப் பூ மக்களை(அமெரிக்கா, கனடா) அங்கு வரவழைத்து கூட்டம் போடலாமே?
நன்றி
மயிலாடுதுறை சிவா...

கறுப்பி said...

ஐயோ என்ர லிங்க் வேலை செய்யுதில்லை.. சரியாத்தானே போட்டன். பெரிய தொல்லையாப் போச்சு

சினேகிதி said...

மீண்டும் வருக கறுப்ப மேடம்…
காதலிக்க இலவச சேவை செய்திருந்தீர்கள் அதற்கும் நன்றி.Canadian Civic holiday க்கு நாங்களும் எங்காவது செல்வதாக இருக்கிறோம்.

கறுப்பி said...

கார்த்திக் இந்த ஜொள்ளுத்தானே வேண்டாமெண்டுறது. கறுப்பிய ரொம்பத்தான் மிஸ் பண்ணீட்டுப் இப்பிடி பொய் சொல்லக் கூடாது.

மணிக்கூண்டு அடுத்த விடுமுறையையும் முடிச்சுக் கொண்டு எழுதலாம் எண்டிருக்கிறன். அதுதான் கூட இன்ரஸ்டிங்கானது. படங்களும் அப்போது இணைத்து விடுகின்றேன்.

அப்ப சினேகிதியின் காதல் சக்சஸ் வாழ்க தமிழ்மணம் வாழ்க கறுப்பியின் சேவை

ramachandranusha(உஷா) said...

"//ஒரு சின்ன விடுமுறைக்குப் பின்னர் மீண்டும் வலைப்பதிவில் வலம் வந்து, நுனிப்புல் மேய்ந்து விட்டு//

ஆ..ஹா! என் உயிரினும் மேலான நண்பி கருப்பிக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி, நன்றி!

கறுப்பி said...

ஐயையோ நான் சமைத்ததைச் சாப்பிட்டு சுகயீனமுற்றதாக உங்கள் தந்தை என்மேல் வழக்குப் போடப் போகின்றார் தர்சன். (*_*)
உடம்பைக் கவனித்துக் கொள்ளுங்கள். நானும் இன்னும் அந்த அலுப்பில் இருந்து விடுபடவில்லை. படங்கள் எடுத்ததற்கும், அனுப்பி வைப்பதற்கும் நன்றிகள். அடுத்த விடுமுறைக்கும் நீங்கள் வந்தால் நன்றாக இருக்கும். படங்களுக்கு அவசரமில்லை. முடியும் போது அனுப்பிவையுங்கள்.
என் மின்அஞ்சல் thamilachi2003@yahoo.ca

கறுப்பி said...

usha I got it now. he he he //நுனிப்புல்\\ thanks

கரிகாலன் said...

//மான், கரடி, பாம்பு (நச்சு அற்ற) போன்றவை இருப்பதாகவும் அவற்றிற்குத் தொந்தரவு கொடுக்காத வகையில் மனித மிருகங்கள் நடந்து கொள்ள வேண்டும் என்பதும் அரசாங்கத்தின் வேண்டுகோள்//

மொத்தத்தில் எவை மிருக ஜாதி என்பதில் தான் சந்தேகம்.கருப்பி
ஒரு வாரம் சந்தோஷமாக கழித்திருப்பீர்கள்.எழுதுவதற்கு நிறைய
விடயங்கள் சேர்ந்திருக்கும்.எனக்கும்
இப்படி ஒரு ஆசை உண்டு இதுவரை
சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.பிரஷ்,பேஸ்ட் கூட இல்லாமல் ஒரு மாதம் ஒரு காட்டில் வசிக்கவேண்டும் என்று.
படங்களை போடுங்கள்.பார்க்க ஆவலாய் உள்ளோம்.மீண்டும் வலையுலகிற்கு வந்த உங்களை வரவேற்கிறேன்.

கறுப்பி said...

கரிகாலன், இது ஒன்றும் கடினமில்லை. கனடாவில்தானே வசிக்கின்றீர்கள். இன்ரநெற்றில் போய்ப் பாருங்கள் பல இடங்கள் அதன் விபரங்கள் அனைத்தும் இருக்கின்றன. கொஞ்சம் நண்பர்களைச் சேருங்கள். படுக்க ஒரு ரென்ட் சிலீப்பிங் பாங்உம் கொஞ்ச உடையும் சாப்பாட்டுப் பொருட்களும் இவை போதும் ஒரு வாரம் அமைதியாக வேறு எந்தச் சிந்தனையும் இன்றிச் சந்தோஷமாகக் கழித்து விட்டு வரலாம். என்ன ஒன்று கழிவறைகள் இல்லை. காடுதான் எல்லாவற்றிற்கும் சம்மதமா? குளிப்பதற்கு நிறம்பவே தண்ணீர் இருக்கும். பிறகென்ன கவலை.

முகமூடி said...

கறுப்பியின் வரவால் மிரண்டு போன மிருகங்களின் மனநிலை மற்றும் உடற் கோளாறுகள் பற்றிய அலசல்கள்தாம் காட்டில் வெளியாகும் வலைப்பதிவுகளில் இப்போது முக்கிய இடம் வகிக்கிறது...

கறுப்பி said...

நான் காட்டுக்குள்ள முகமூடியோடையாக்கும் அலைஞ்சன். அதால பெரிய பிர்ச்சனை இல்லை. இருந்தும் இந்தியக் காட்டின் சுகம் இங்கே இல்லை.

SnackDragon said...

ஐயோ கறுப்பி அங்கதானே நாங்களும் முகமூடிகளோடு சுத்திக்கொண்டிருந்தொம். எங்களை மிருங்கங்கள் என்று நினைத்துவிட்டீர்களா? :-)