டீசே கடைசி நேரம் ரொறொண்டோ வலைப்பதிவாளர்கள் சந்திப்பை ரத்துச் செய்து விட்டது எனக்குக் கொஞ்சம் சங்கடமாக இருந்தது. சரி டீசே கிடக்கட்டும் நான் ஏதாவது செய்ய வேண்டும் என்ற துடிப்பில் சிலரைத் தொடர்புகொண்டு கடந்த ஞாயிறு சந்திப்பு நிகழ்வை நடத்தினேன். மிகவும் ஆக்க பூர்வமான கருத்துக்களை கலந்து கொண்டவர்கள் தந்தார்கள். மிகவும் தரமான அந்தச் சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். நாம் அடிக்கடி சந்திக்க வேண்டும் என்ற ஆவல் தற்போது எனக்கு எழுந்துள்ளது. கலந்து கொண்டடவர்களின் படங்களை இங்கே இணைத்துள்ளேன்.
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
தகவலுக்கும் படத்திற்கும் நன்றி. இரண்டாவதாக உள்ள உங்களைத் தவிர மற்றவர்களை அடையாளம் காண முடியவில்லை. சொல்ல முடியுமா..?
அது நானில்லை சயந்தன். நான் உரையாற்றிக்கொண்டிருக்கும் போது
டீசே, அவருடைய நண்பி (நண்பி என்றார் ஆனால் மிகவும் நெருக்கமாக இருந்தார்கள் நான் காதலி என்று சந்தேகிக்கின்றேன்) சினேகிதி, தமிழ்நதி, இன்னுமொருவர் தான் புளொக்கில் எழுதுவதாகச் சொன்னார் ஆனால் பெயரை மறந்து விட்டேன். மற்றும் சிலர் எனது உரை போர் அடித்து மரத்தின் மேல் போய் விட்டார்கள் படம் எடுக்க முடியில்லை. அவர்கள் என்னை மன்னிப்பார்களாக.
கறுப்பி, நல்லவேளை குறூப் படம் மட்டும் போட்டீர்கள். 'நெருங்கிய' தோழியோடு தனித்து இருந்த படத்தைப் போடாதுவிட்டீர்களே. அந்தளவில் பெரும் சந்தோசம். :-). (அஸினுக்கு துரோகம் செய்கின்றேன் என்று மனதின் ஓரம் துடிக்கின்றது....).
ohh DJ Stil with Asin??(*_*)
கறுப்பி நீங்களாவது தமிழியல் மாநாட்டைப்பற்றி விரிவாக எழுதுவீர்கள் என்று நினைத்தேன்.ரொறன்ரோவிலதான் எல்லாம் நடக்குது ஜேர்மன்ல ஒன்றும் நடக்காதாம் என்று ஒராள் சொல்லிச்சு நான் நீங்கள் விரிவாக எழுதுவீர்கள் என்று சொல்லி வைத்திருக்கிறேன்.எழுதுங்கோ பிளீஸ்.
//ohh DJ Stil with Asin??//
No. DJ with Asin Stil (அதாவது என்னான்னா.. அசினோட ஸ்டில்..
கறுப்ஸ்,
படத்திலை யார் யார் எண்டு பெயர்களைப் போட்டால் குழப்பத்தை தவிர்க்கலாமெல்லோ
சினேகிதி
//ஜேர்மன்ல ஒன்றும் நடக்காதாம் என்று ஒராள் சொல்லிச்சு//
ஏனாம் காலில்லையா?
அது ரொறொண்டோ இல்லை டொராண்டோ. இதுகூடத் தெரியாமல் என்ன பதிவு எழுதறீங்களோ?
\\No. DJ with Asin Stil (அதாவது என்னான்னா.. அசினோட ஸ்டில்.\\
:-))
என்ன அற்புதமான சந்திப்பு!!!
/ohh DJ Stil with Asin??/
dj ever with asin stil :)
எங்கள் கவிஞர் தமிழ்நதி யை கிண்டலடித்த இப்பதிவை கடுமையாக கண்ணடிக்கிறேன்
கறிப்பி தான் அதுக்கு இப்படி இருப்பீர்கள் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை
சினேகிதி
எழுதத் தான் வேணும்
உண்மை என்னவெண்டால்
சில பேப்பர்களுக்கு நான் நித்திரை
சிலதுகள் எனக்கு விளங்கேலை
இன்னும் சிலதுகளின் நேரம்
வோஸ்ரூம் போக வேணும்
இப்ப போகலாமா வேண்டாமா
எண்டதையே யோசிசுக் கொண்டிருந்தன்
சில நேரங்களில பகல் கனவு கண்டன்
சில நேரம் பசிக்குது எண்டு நினைச்சன்
இதையும் தாண்டி சிலதுகள் மனதைத் தொட்டுது
அதுகளைப் பற்றி
அனேமாக அடுத்த கிழமை எழுதலாம் விடலாம்.
அசினை அடையாளம் தெரியவில்லையா
முதலாவது அசின்
பின்னால் இருப்பது டீசே
ரொறொண்டோ டொரொண்டோ
ஆனியன் ஒனியன்
பொட்டேட்டோ பொட்டாட்டோ
ம்;ம்ம்ம...
தமிழ்நதி ஸ்புரோ எண்டு போட்டிருந்தா
நிச்சயமா வந்ததில் ஒண்டு அவவா இருக்கலாம்
நன்றி
கறுப்பி என்னால கேக்க முடிஞ்சது சேரன்ர அரசுவின்் மற்றது செல்வநாயகம் சேர்டயும் ஆனால் எனக்கு கதிரைல இருந்த உடனயே சாதுவா கண் சொக்கத் தொடங்கிட்டு அப்பிடி இருந்து கஸ்டப்பட்டு நீங்கள் கட்டிலைப் பற்றிய விவரத்துக்குச் சொன்ன கருத்தை கேட்டுக்கொண்டிருந்தன்.ஆமா அது என்ன புத்தகத்தைப் பற்றி சொன்னவர் செல்வா சேர்?? எனக்குச் சிதம்பரசக்கரத்்தைப் பேய் பாரத்த மாதிரி இருந்திச்சு!
அப்புறம் சேரன் சேர் சொன்னார் "தொரன்ரோ" தான் சரியாம்.
/ஆமா அது என்ன புத்தகத்தைப் பற்றி சொன்னவர் செல்வா சேர்?? /
மிஸ், அது நெடுநல்வாடை.
.....
ம்...நானும் பின்னுக்கு இருந்து எத்தனை பேர் நித்திரை கொள்கினம் என்டு பார்த்துக்கொண்டுதானிருந்தன்.
அடுத்த முறையாவது கலந்து கொள்ளலாம் என்று இருந்தேன்....
ம்ம்ம்..சந்தேகம்தான்..(நீங்க உண்மையான புகைப்படத்தை போட்டுவிட்டீர்களென்றால்....)
//நீங்க உண்மையான புகைப்படத்தை போட்டுவிட்டீர்களென்றால்....//
அப்போ இப்ப போட்டிருப்பது பொய்யான புகைப்படங்களா.. கறுப்பி எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்..
கறுப்பி,
உங்க இமேஜ் ஹோஸ்டிங் பக்கம் அலுவலகத்தில் திறக்காதென்ற காரணத்தால், வீட்டுக்கு வந்து அவசர அவசரமாக திறந்து பார்த்தேன்.. சரியாக ஏமாற்றிப்போட்டிங்கள் :((
அசினுக்கும் டிசேவுக்குமிடையில் சிண்டு முடிந்துவிடும் உம் வேலையைக் கண்டிப்பாக கண்டிக்கிறேன் :))) (எதையாவது கண்டிக்க வேண்டுமே, அய்யனாரைப் பின்பற்றி :-D )
ஆனந்த விகடனில் தமிழ்நதியின் படம் வந்திருக்குங்க... என்னமா ஸ்மாட்டா இருக்காங்க.
Hello karuppi ungal group patam mikavum arumaiyaka irukkirath..
nandri.. vanakkam....
I really liked ur post, thanks for sharing. Keep writing. I discovered a good site for bloggers check out this www.blogadda.com, you can submit your blog there, you can get more auidence.
எங்கெங்கோ சுற்றும்போது தற்செயலாக இந்தப் பக்கத்தை வந்தடைந்தேன். எனது படத்தை எடுக்கும்போது பொழுது சாய்ந்துவிட்டது. வெளிச்சம் குறைவாக இருக்குமென்று நினைத்தேன். பரவாயில்லை. முகம் தெளிவாகத்தான் வந்திருக்கிறது. சும்மா சொல்லக்கூடாது. குறும்படம் மட்டுமல்லாது குரங்குப்படமும் நன்றாகத்தான் எடுக்கிறீர்கள்:) இந்தக் குரங்கு மே யில் ரொறன்ரோ வரும்போது உங்களைச் சந்திக்கும்.
Post a Comment