Wednesday, March 02, 2005

நனைவிடை “நோ” தல்

கறுப்பி அருவரி தொடக்கம் அஞ்சாம் வகுப்பு வரை அம்மான்ர பள்ளிக்கூடத்தில படிச்சவள். டீச்சரின்ர மகள் எண்டு சொல்லி அவளுக்குப் பள்ளிக்கூடத்தில நல்ல செல்லம். அதால படிப்பிலையும் நல்ல கெட்டிக்காரியாய் முதலாம்,ரெண்டாம் பிள்ளை எண்டு வந்து கொண்டிருந்தாள். (டீச்சரின்ர மகள் எண்டு மற்ற டீச்சர்மார் மாக்ஸ் கூடப்போட்டார்களோ தெரியவில்லை) பள்ளிக்கூடத்தில நடக்கிற பேச்சுப்போட்டி, ஓட்டப்போட்டி, பாட்டுப்போட்டி, நடனப்போட்டி எல்லாத்திலையும் கறுப்பி (டீச்சரின்ர மகள் உதுக்கு முக்கிய காரணம் எண்டு நினைக்கேலை கறுப்பி படிப்பிலும் பாக்க உதுகளில கெட்டிக்காறி) பங்கு பற்றுவாள்.
பள்ளிக்கூட முதலாவது இன்ரவெலுக்கு கறுப்பி டீச்சர்மார் கூடி இருந்து வம்பளக்கிற அறைக்குள்ள போய் பிஸ்கோத்துச் சாப்பிட்டு ரீ குடிச்சு வருவாள். சில வேளைகளில விளையாடிற பிஸியில கறுப்பி போக மறந்து போனால் அவளின்ர அம்மா ஆராவது ஒரு பெட்டையைப் பிடிச்சு கறுப்பிக்கு ரீயும், பிஸ்கோத்தும் குடுத்து விடுவார். கறுப்பி விளையாடுற அவசரத்தில (எல்லாப்பெட்டைகளும் பாத்துக்கொண்டு நிக்க) பிஸ்கோத்தைச் சாப்பிட்டு ரீயைக் குடிச்சுப் போட்டு கப்பை அந்தப் பெட்டையிட்டக் குடுத்து விடுவாள்.
மத்தியானச் சாப்பாட்டை வேலைக்காறன் (கறுப்பியின்ர வயசு) சமைச்சுக் கொண்டு வருவான். கறுப்பியும் அம்மாவும் சுடச்சுடச் சாப்பிடுவீனம்.

Every tide has its ebb

ஆறாம் வகுப்புக்கு கறுப்பி Town பள்ளிக்கூடத்துக்கு பஸ்ஸில போகத் தொடங்கினாள். பள்ளிக்கூடத்தில கன்னம் அப்பிள் பழம் போல மின்ன காரில வந்து இறங்கிற டொக்டர், என்ஜினியர்மாரின்ர பிள்ளைகளும் டீச்சர்மாரால் தூக்கி ஏத்தப்படுகிற டீச்சர்மாரின்ர பிள்ளைகளும் கறுப்பிக்கு மனஉளைச்சலைத் தந்துது. (அப்ப ஆருக்கு உதெல்லாம் தெரியும்) படிக்க விரும்பமில்லாமல் பத்தாம்,பதினஞ்சாம் பிள்ளை எண்டு பின்னால போனாள். எந்த ஒரு போட்டிக்கும் கறுப்பி எடுபடவில்லை. எல்லாத்துக்கும் டீச்சர்மாரின்ர பிள்ளைகளும் டொக்டர், என்ஜினியர்மாரின்ர பிள்ளைகளும்தான் எடுபட்டீச்சினம்.. (கெட்டிக்காரியாய் இருந்தும் சோதித்துப் பார்க்காமலே நிராகரித்து விட்டீனம்) கறுப்பிக்குப் பள்ளிக்கூடம் போகக் கள்ளத்தில அடிக்கடி வயித்துக் குத்து வந்துது. இப்பிடியா ஒருமாதிரி இழுபட்டு கறுப்பி A/L மட்டும் படிச்சு முடிச்சாள். Town பள்ளிக்கூடம் போனதால கறுப்பி செய்த ஒரே உருப்படியான காரியம் Boy Friend பிடிச்சதுதான். பேசாமல் அம்மான்ர பள்ளிக்கூடத்தில படிச்சிருந்தா இப்ப கறுப்பியும் வெங்கட்டு போல கனடாவில ஒரு விஞ்ஞானியா வந்திருக்கக் கூடும்.

இந்த எம்நாட்டுப் பள்ளிக்கூட முறை புலம்பெயர்ந்த பிறகும் எங்கட மக்களிட்ட இருந்து போகுதில்லை. கனேடிய தமிழ் பள்ளிகள் பல இதே நிலையில்தான் இன்னும் இயங்கி வருகின்றன.

4 comments:

கறுப்பி said...
This comment has been removed by a blog administrator.
`மழை` ஷ்ரேயா(Shreya) said...

என்ன சொல்ல வாறீங்கள்? கொஞ்சம் விரிவாகச் சொன்னால் விளங்கும் என நினைக்கிறேன்.

இளங்கோ-டிசே said...

//Town பள்ளிக்கூடம் போனதால கறுப்பி செய்த ஒரே உருப்படியான காரியம் Boy Friend பிடிச்சதுதான். பேசாமல் அம்மான்ர பள்ளிக்கூடத்தில படிச்சிருந்தா இப்ப கறுப்பியும் வெங்கட்டு போல கனடாவில ஒரு விஞ்ஞானியா வந்திருக்கக் கூடும். //
கறுப்பி, boy/girl friend பிடிக்கிறதுதான், விஞ்ஞானியாக வாறதைவிட கஷ்டமென்றெல்லோ நான் நினைத்துக்கொண்டிருக்கின்றேன். இதுக்கெல்லாம் போய் feel பண்ணலாமா :-)?

கறுப்பி said...

ம்.. ஆண்களுக்கு அது கொஞ்சம் சிரமம்தான் ஆனால் பெண்களுக்கு ரொம்ப ஈஸி. டிசே ரேக் இன் ஈஸி.