Tuesday, March 29, 2005

i am Sam

ஒரு குழந்தைக்குத் தந்தையாக இருப்பதற்கு வேண்டிய தகுதி என்ன என்று கேட்பின் பல பதில்கள் வரும். "i am Sam" திரைப்படத்தில் வரும் தந்தை சாம்மிற்கு(Sean Penn) பாசத்தைத் தவிர வேறு தகுதிகள் இல்லை. பிறந்த அடுத்த நிமிடமே தாயினால் புறக்கணிக்கப்பட்ட தனது மகள் லூசியை (Dakota Fanning) பாசத்தைக் கொட்டி வளர்க்கும் 40 வயது autistic தந்தையிடம், லூசிக்கு 7 வயது ஆன போது, உன் மகளுக்குத் தந்தையாக இருக்கும் தகுதி உனக்கல்லை என்று கூறி லூசியை சமூகபாதுகாப்பாளர்கள், தத்தெடுக்கும் ஒரு பெற்றோரிடம் கொடுத்து விடுகின்றார்கள்.

லூசியைத் தன்னிடமிருந்து பிரித்ததற்கான முழுமையான காரணத்தைக் கூடப் புரிந்து கொள்ள முடியாத நிலையில் சாம் நல்ல ஒரு லோயரை வைத்து வாதாடி லூசியைத் திருப்பிப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற அறிவுரைகளைக் கேட்டுத் தன்னால் பொருளாதார ரீதியாக முடியுமா என்று கூடச் சிந்திக்காமல் மிகப்பிரபல்யமான ஒரு பெண் வக்கீலிடம் (Michelle Pfeiffer) சென்று "எனக்காக வாதாடி என் மகளைப் பெற்றுத் தா" என்று கேட்டு முதலில் அவளால் உதாசீனம் செய்யப்பட்டாலும், தன்னுடன் வேலை செய்பவர்களுக்குக் தான் கருணை உள்ளம் உள்ளவள் என்று நிரூபிப்பதற்காக இலவசமாக வாதாடச் சம்மதித்து வாதாடி தோற்றுப் போகின்றாள். லூசி தத்துப் பெற்றோரிடம் வளர்கின்றாள். சாம் இற்கும் லூசிக்குமான உண்மையான பாசத்தைப் புரிந்து கொண்ட தத்துப் பெற்றோர் லூசியைத் தந்தையிடமே ஒப்படைக்கின்றார்கள்.


மனதைத் தொடும் வகையில் கதை இருப்பினும் சாம் ஆக நடித்த Sean Penn உம் (இப்பத்திற்காக ஒஸ்கா சிறந்த நடிகருக்கா நொமினேட் செய்யப்பட்டவர்) லூசியாக நடித்த Dakota Fanning மிக மிகச் சிறப்பாக நடித்திருப்பினும் திரைப்படம் ஒரு தொலைக்காட்சி நாடகத்தைப் போல் அமைந்திருந்ததால் “Rain Man” ஐப் போலவோ “Beautiful Mind” ஐப் போலவோ பெயர் எடுக்கவில்லை.

தற்போது கனடாவில் பல ஈழத்துக் குழந்தைகள் Autism ஆலும் Down Syndrome ஆலும் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். இதற்குக் காரணம் தெரியவில்லை. குழந்தை பிறந்து ஒன்று அல்லது இரண்டு வயதிற்குப் பின்னர்தான் அவர்கள் autistic குழந்தைகள் என்பதைக் கண்டுபிடிக்கின்றார்கள். Down Syndrome போலல்லாது autistic குழந்தைகள் பார்வைக்கு மிகவும் சாதரணமாக இருப்பதால் தாயின் வயிற்றில் இருக்கும் போது ஸ்கானிங் முறையால் இவை கண்டு பிடிக்கப்படுவதில்லை. autistic குழந்தைகள் சாதாரண குழந்தைகளில் இருந்து சில வேறுபாடுகளைக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக உரத்துப் பேசுதல், உரத்துச் சிரித்தல், மற்றவர்களுடன் பழகும் முறை தெரியாது இருத்தல், அல்லது தனித்து எல்லாவற்றையும் செய்ய விரும்புதல் சு10து,வாது,வஞ்சகம் போன்றவை தெரியாமல் (இந்த உலகில் வாழ மிக முக்கியமான தகுதிகளான) இருத்தல். இதனால் பலரிடம் தொடர்ந்து ஏமாற்றப்படலும், தாம் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம் என்பதும் தெரியாமல் இருத்தல். இக்குழந்தைகளுக்கு அனேகமாக பாடசாலைகளில் தனிக்கவனம் வேண்டி தனியாகப் பாடம் எடுக்கின்றார்கள். இவர்களில் சிலர் படிப்பில் (முக்கியமாகக் கணிதத்தில்) மிகவும் சிறந்து காணப்பட்டாலும் குழுவாகச் சேர்ந்து வேலை செய்யும் பக்குவம் இவர்களுக்கு இல்லாததால் சாதாரண கல்வி முறையை இவர்கள் பூர்த்தி செய்ய முடியாத நிலையும் இருக்கின்றது.

கமலஹாசன் இன்னும் "I am Sam" ஐப் பார்க்கவில்லைப் போலும் பார்த்திருந்தால் நிச்சயமாகத் திரைப்படமாக்கியிருப்பார். கமல் எடுக்காவிட்டாலும் பரவாயில்லை எனக்கு வசதி வரும் போது எடுக்கும் எண்ணம் இருக்கின்றது. எனக்குப் பிடித்த திரைப்படங்களில் "I am Sam"
உம் ஒன்று.

Director - Jessie Nelson
Cast - Sean Penn, Michelle Pfeiffer, Dakota Fanning, Dianne Wiest

5 comments:

நாலாவது கண் said...

கருப்பி,

நீங்கள் குறிப்பிட்ட ஆட்டிசக் குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க சென்னையில் டாக்டர் ஒருவர் இருப்பதாகத் தெரிகிறது.

''டாக்டர் கார்த்திகேயன் இவ்வகை குழந்தைகளுக்காக 'தோஸ்஢த்' என்ற காப்பகம், சென்னை கெல்லிஸில் நடத்துகிறார். அவர்களை யோகா, ஆயுர்வேத சிகிச்சை முறைகள் மூலம் குணப்படுத்த முடியும் என்று நம்புகிறார். ஆட்டிசத்துக்஢கு ஒரு 'ஸ்டெல்த் வைரஸ்' இருப்பதாகத் தெரிகிறது. உணவுப் பாதையில் ஏற்படும் வியாதிகளையும், இதையும் சம்பந்தப்படுத்த முடிகிறது என்று கண்டுபிடித்துள்ளார்களாம். மனசிலிருந்து, வயிற்றுக்கு வந்து, மூளையை பாதிக்கும் வியாதி என்பதுதான் ஆட்டிசத்தின் லேட்டஸ்ட். இதைக் குணப்படுத்த முடியும் என்கிறார் டாக்டர் கார்த்திகேயன். ஆரம்ப காலத்திலேயே கண்டுபிடித்தால் சிகிச்சை மிகுந்த பலன் அளிக்குமாம்''

இது எழுத்தாளர் சுஜாதா மேற்கண்ட நோய் குறித்து அண்மையில் எழுதியது. கனடாவில் இருந்து இதற்காக மருத்துவம் பெற சென்னை வரச் சொல்ல முடியுமா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் தமிழகத்தில் மற்ற இடங்களில் உள்ள நண்பர்கள் யாருக்கும் பலன் அளிக்கும் என்றால் சொல்லி வையுங்களேன்.

- சந்திரன்

கறுப்பி said...

சந்திரன் தற்போது பல ஈழத்து மக்கள் இந்திய மூலிகை வைத்தியங்களில் நம்பிகை வைத்து இந்தியா வந்து பல மாதங்கள் தங்கி நின்று சிகிச்சை பெற்று வருகின்றார்கள். (குழந்தை இல்லாத பெண்கள் பலர் இந்தியாவிற்க சிகிச்சைக்கு வந்தை நான் அறிவேன்) எனவே சிகிச்சைக்கான வழி இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக தமது குழந்தைகளுக்காக பெற்றோர்கள் முயன்று பார்ப்பார்கள் என்றே நம்புகின்றேன். முடிந்தால் டொக்டர் காத்திகேசனின் முழு விபரத்தையும் தர முடிந்தால் நான் இங்கே கனேடிய தமிழ் வானொலியில் இந்தத் தகவலை வெளியிடுவேன். டொக்டர் கார்திகேசனுக்கு இணையத்தளம் மின்அஞ்சல் இருப்பின் அது மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புகின்றேன்.
தங்கள் தகவலுக்கு நன்றி

Aruna Srinivasan said...

கறுப்பி,

சென்னையில் டாக்டர் வசுதா என்பவர் ஆடிஸ்டிக் மற்றும் இதர multiple disorder குழந்தைகளுக்காக ஒரு ஸ்பெஷல் பள்ளி நடத்துகிறார். இவர் அமெரிக்காவில், மருத்துவம் பயின்று பின்னர் இங்கு வந்து இந்தப் பள்ளியைத் தொடங்கியுள்ளார். இந்த நோயை முழுவதுமாக குணப்படுத்த முடியாதென்றாலும் சரியான முறையில் பெற்றோர் கவனிக்கவும், இவர்களுக்கு நல்ல விதத்தில் சுயமாக வாழ பயிற்சியும் இங்கு தரப்படுகிறது.

இவரது ஈமெயில் -
vasudha@v-excel.org
info@v-excel.org

இணைய தளம் - www.v-excel.org
தொலைபேசி - 91-44-24956373, 24953786

இவரைத் தொடர்பு கொண்டால் ஒரு வேளை alternative therapy மூலம் இந்த நோயைக் குணபப்டுத்த முடியுமா என்பதையும் கூறலாம்.

கறுப்பி said...

மிக்க நன்றி அருணா. இந்தத் தகவலை நான் கனேடியத் தமிழ் வானொலியில் அறிவிப்பேன். என் சொந்தத்திலும் ஒருவருக்கு ஆட்டிஸ்டிக் குழந்தை இருக்கின்றது. அவர்கள் தமது குழந்தையை தற்போது தனியார் பாடசாலையில் பெரும் பணச் செலவில் படிப்பிற்கின்றார்கள். கனேடி மருத்துவர்கள் கைவிரித்து விட்டார்கள். தங்கள் தகவல்கள் உதவினால் பலர் சந்தோஷப்படுவார்கள். மீண்டும் நன்றிகள்.

Adaengappa !! said...

AUTISM

IDD