Wednesday, March 30, 2005

புரிய முனைதல்

மூர்க்கமாய் திணிக்கப்பட்ட
நம்பிக்கைகளுடன்
சுருண்டு கிடந்த எனை
சிறகு விரித்து புள்ளினமாக்கி விட்டீர்கள்.

தேடலை தூண்டி விட்டு
வினாக்களை விழுங்கி
அராஜகத்தின் நிழலையும்
நிராகரிக்க கற்றுத் தந்தீர்கள்.

குனிந்த தலையை
நிமிர வைத்துப் பாராட்டி
ஆழ்கடலின் மௌனத்திற்கு இழுத்துச் சென்று
பேசவும் கற்றுத் தந்தீர்கள்

பரந்து!
விரித்த சிறகுடன்
மேலே பறந்து தூரமாய் மறைந்து
புள்ளியைக் காண முனைகையில்
மீண்டும் இழுத்து வந்து
மாராப்பு விலகுது
இழுத்து மூடு என்று
மூளியாக்கி
சிறகைத்
கத்தரிக்கின்றீர்கள்.

4 comments:

எல்லாளன் said...

மூர்க்கமாய் திணிக்கப்பட்ட நம்பிக்கைகளுடன் சுருண்டு கிடந்த எனை சிறகு விரித்து புள்ளினமாக்கி விட்டீர்கள். தேடலை தூண்டி விட்டு வினாக்களை விழுங்கி அராஜகத்தின் நிழலையும் நிராகரிக்க கற்றுத் தந்தீர்கள். குனிந்த தலையை நிமிர வைத்துப் பாராட்டி ஆழ்கடலின் மௌனத்திற்கு இழுத்துச் சென்று பேசவும் கற்றுத் தந்தீர்கள் பரந்து விரித்த சிறகுடன் மேலே பறந்து தூரமாய் மறைந்து புள்ளியைக் காண முனைகையில்மீண்டும் இழுத்து வந்து மாராப்பு விலகுது இழுத்து மூடு என்று மூளியாக்கி சிறகைத் கத்தரிக்கின்றீர்கள்.

எங்கையோ கேட்டமாதிரி இருக்கா? நீங்கள் எழுதியது தான். என்ன இது கதையா, கவிதையா, கட்டுரையா?
(டேய் எல்லாளா பதுங்கி இருந்து பாய்கிறாயோ! பாவி!)

கறுப்பி said...

நன்றி எல்லாளன். ஆமாம் நான் எழுதிய பழைய கவிதை இது. தங்கள் தளத்தை ஏன் இன்னும் தமிழ்மண முகப்புடன் தொடுக்கவில்லை. தாங்கள் ஏதாவது புதிதாக எழுதியிருக்கின்றீர்களா? என்று ஒவ்வொரு நாளும் தங்கள் தளத்திற்கே வந்து பார்க்க வேண்டியுள்ளது. கெதியாகத் தொடுப்பபைக் கொடுங்கள். நன்றி

இறக்குவானை நிர்ஷன் said...

சமுதாயத்தின் நிழலை கவிதையாக உதிர்த்திருக்கிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

இறக்குவானை நிர்ஷன் said...

வாழ்த்துக்கள். தொடர்ந்தும் எழுதுங்க.