Tuesday, March 15, 2005

கவனம் மிதிவெடி

உலகில் வாழும் அனைத்து மனிதர்களும் ஏதோ ஒருவகையில் மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள்தான். தாம் முழுமையான மனிதன் என்று ஒருவரும் தம்மைப் பிரகடனப்படுத்த முடியாது. என் பார்வையில் தற்போதைய ஹொட் நியூசில் மைக்கல் ஜக்சன் அதி உயர்ந்த மனநோயாளியாக எனக்குப் படுகின்றார். (பிய்ந்து போன மூக்கும் வெளுறிய முகமும்). ஆனால் உலகத்து மக்களுக்கு அவர் ஒரு சிறந்த பாடகர் பலருக்கு நல்ல மனிதர் (சிலருக்குக் கெட்ட- அதை விடுங்கள்) இதே போல் உலகெங்கும் பணம் புகழால் திக்குமுக்காடி மனநோயால் பாதிக்கப்பட்டுப் போனவர்களும் இருக்கின்றார்கள். அதே சமயம் அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் நபர்கள். அவர்கள் நடத்தைகள் ஏன் இவர்கள் இப்படியாக நடக்கின்றார்கள் என்று எம்மைச் சிந்திக்க வைக்க (அவர்களில் ஒருவர் இவர் ஏன் இப்படியான நடக்கின்றார் என்று என்னைப் பார்க்க) இதுதான் எமது யதார்த்த உலகம்.
இந்த மனநோயாளிகளில் பலவிதமானவர்களை (என்னைத் தவிர்த்து) இனம் காண்கையில்

1 தம்மை எப்போதுமே உயர்வில் வைத்துப் பார்த்தபடி ஆனால் அது மற்றவர்களுக்குப் புரிந்து விடக்கூடாது என்பதில் மிகவும் சிரத்தை கொண்டு (மற்றவர்களுக்கு இது எளிதில் புரிந்து விடும் என்பது தெரியாத பரிதாப நிலையில்) தம் ஒத்த மூத்த வயதினரையும் “செல்லம்” “குஞ்சு” என்று அழைத்து தமது மிக உயர்ந்த அறிவைக் கெட்டித்தனத்தை பிறருடன் பகிர்ந்து கொள்ளப் புகட்ட விளையும் ஒரு நல்ல சிந்தனைவாதியாத் தன்னைப் பிரகடனப்படுத்தி மற்றவர்களைச் சங்கடத்துக்குள் தொடர்ந்து தள்ளிவருவது அவருக்குத் தெரிந்தும் தெரியாதது போல் பாவனையில் - கடவுளே எவ்வளவு காலத்திற்குத் தான் இப்படியாக நடிக்க முடியும்.

2. இன்னும் மிகவும் நேர்த்தியாக இருமுகங்களைக் காட்டும் வல்லுனர்கள். இவர்களின் மிகத்திறமை என்று நான் வியந்தது எந்த ஒரு பொது இடத்திலும் இவர்கள் உணர்ச்சிவசப்படமாட்டார்கள். சிரித்த முகத்துடன் சாந்தமாக ஒருவனின் அருகில் சென்று கெட்டவார்த்தையில் திட்டி விட்டு அவனுக்குக் கோபத்தை வரவழைத்து விட்டு தாம் மீண்டும் அந்தச் சிரித்த புன்முறுவலுடன் நிற்க பேச்சுக் கேட்டவன் கோபத்தில் உணர்ச்சிவசப்பட்டு கெட்ட வார்த்தையைக் கொட்டிக் கெட்ட பெயரை வாங்கிக் கொண்டு சபையின் முன் அவமானப்பட்டு நிற்க. அவன் சாந்தமாக சபையை விட்டு நகர்வான்.

3 மனநோயின் உச்சக்கட்டமாக (எமக்குள்) தன்னை முற்போக்குவாதியாக வெளியுலகிற்குப் பிரகடனப்படுத்தியபடியே மீண்டும் மிகச் சாந்தமாக முற்போக்கிற்கென்று மிகக்கவனமாகத் தெரிவுகளைச் செய்து மக்களைப் பிரேமைப்படுத்தி.. தன் மற்றைய முகத்தினுள் அடக்கி வைத்திருக்கும் அத்தனை வக்கிரங்களையும் எழுத்திலோ வேறு வகையிலோ புனைபெயர் கொண்டு வடித்துத் தீர்த்தல் - உதாரணத்திற்கு நான் கறுப்பு என்று எனக்கு தாழ்வுமனப்பான்மை இருக்கும் பட்சத்தில் நான் வெள்ளைச்சி என்ற பெயரில் ஒரு தளத்தை உருவாக்கி (வாசகர்கள் நிச்சயமாக என்னை அடையாளம் காணமாட்டார்கள் என்று கோழைத்தனமாக நம்பி) என்னை ஒரு வெள்ளைத்தோல் கொண்ட அழகியாக ஆண்கள் மத்தியில் ஒருவகை பிரமிப்பை உண்டு பண்ணி மன பாலியல் வக்கிரங்கள் அனைத்தையும் வடிகாலாக்கி என் உணர்வுகளுக்கு ஒருவகை விருந்தளித்து வருவது. படங்களின் தெரிவும் அப்படியே இருக்கும். இப்படியானவர்களுக்கு ஐ.கியூ ரொம்பவும் உயர்வாக உள்ளது. இதனால் பலர் இவர்கள் வலையில் மிக இலகுவாக விழுந்து விடுவர். அதே நேரம் இவர்கள் உணருவதில்லை. இவர்களிலும் ஐ.கியூ கூடிய மக்கள் உலகில் வாழுகின்றார்கள் அவர்கள் மிக இலகுவில் இவர்களை அடையாளமும் கண்டு பரிதாபமும் கொள்ளுகின்றார்கள் என்று.
இந்த மேற்கூறியவர்களின் மிக உச்சக் கோழைத்தனம் என்னவெனில் மற்றவர்களை ஸ்டுப்பிட் என்று நம்புதல். புரியவில்லையா புரியாது. அதுதான் எனக்கும் வேண்டும்

5 comments:

துளசி கோபால் said...

என்னங்க கறுப்பி,

1 தம்மை எப்போதுமே உயர்வில் வைத்துப் பார்த்தபடி ஆனால் அது மற்றவர்களுக்குப் புரிந்து விடக்கூடாது
என்பதில் மிகவும் சிரத்தை கொண்டு (மற்றவர்களுக்கு இது எளிதில் புரிந்து விடும் என்பது தெரியாத
பரிதாப நிலையில்).....

சரியாச் சொல்லிட்டீங்க! இப்படி ஒருத்தரோடு நான் பழகி, அதனாலே அடைஞ்ச மனசங்கடங்களை எங்கெ
போய்ச் சொல்றது?

அவுங்களுக்கு ஏதோ மனோவியாதின்னு நான் நினைச்சது சரிதான்!

என்றும் அன்புடன்,
துளசி.

ஈழநாதன்(Eelanathan) said...

கறுப்பி என்ன நொந்து நூடில்ஸ் ஆயிட்டீங்கள்

கறுப்பி said...

நொந்து நூடில்ஸ் இல்லை ஈழநாதன். சிரிப்பாக வருகிறது இந்த புளொக்சைப் பார்க்க இப்போது. மூன்று நான்று வருடங்களுக்கு முன்பு சும்மா பொழுது போவில்லை என்றால் Chat போய் இருந்து பொழுதைக் கழிப்பதுண்டு. அங்கு யாரும் உதாரணத்திற்கு ஒரு ஆண் பெண்ணாகவும். மிகவும் வயது கூடியவர் இளையவராகவும் பாவனை பண்ணி மற்றவர்களை ஏமாற்ற முடியும். அது ஒரு பொழுது போக்குத் தளமாக இருந்த போதும் பலர் பாதிப்பிற்குமுள்ளாகியிருக்கின்றார்கள். chat தமது பாலியல் வக்கிரங்களை தீரத்துக்கொண்டவர்கள் பலர் இருக்கின்றார்கள். வெளியில் யார் என்று தெரியாத சௌகரியம் அங்கு இருந்தது அதற்குக் காரணம். தற்போது சிலரின் எழுத்துக்களைப் பார்க்கும் போது புனைபெயரில் இதைத்தான் புளொக்கில் செய்கின்றார்களோ என்று படுகின்றது. புளொக்கிலும் இணையத்தளங்கள் அளவிற்குக் கட்டுப்பாடுகள் இல்லை. இணையப்பொறுப்பாளர்கள் கவனிக்காகத மட்டில் வக்கிரங்கள் தீரும் வரை எழுதுவது. தெரியவந்து விட்டால் இருக்கவே இருக்கிறது முற்போக்குப் போர்வையில் ஒரு புளொக் அதில் தொடர்ந்து எழுதுவது. இதைத்தான் நான் கூறினேன். எனக்கு ஒரு பாதிப்பும் இல்லை. தற்போது நான் ரொம்பவும் பிஸியாகிப் போய்க்கொண்டிருக்கின்றேன். அதிகம் புளொக்கில் செலவிடமுடியாது. எனவே சில பின்னூட்டங்கள் மட்டும் தரமுடியும் நேரம் கிடைப்பதைப் பொறுத்து

Muse (# 01429798200730556938) said...

Karuppi, in the above list you have missed one more type - those who project them as highly moral and ethical. Ofcourse, this type resembles the first type, but differ in showing them as humble and polite. They consider indirect cheating is intelligence. These are also under the hallucination that what they indulge is good.

Muthu said...

கறுப்பி,
நிறைய ஐடியா கிடைக்கும்போல தெரியுதே உங்க வலைப்பதிவிலே... :-) .