Tuesday, March 08, 2005

“Million dollar baby”உலக அழகிப் போட்டியைப் போலவே Red Carpet "ஒஸ்கா" விருது வழங்கும் விழாவும் அமெரிக்கத் தலைகளில் ஒரு களியாட்ட நாள். எங்கும் எதிலும் நுழைந்து விட்ட அரசியல் இதற்குள்ளும் நுழைந்து விட்டது. இருந்தும் வடஅமெரிக்கர்களின் மிக முக்கியமான நாட்களில் இந்த "ஒஸ்கா" விருது வழங்கும் நாளும் முன்நிலையில் நிற்கின்றது. முன்னணி நடிகர், நடிகையர் இயக்குனர்களிலிருந்து முன்நாள் கலைஞர்களும் மிகவும் கவர்ச்சியாகக் கலந்து கொள்ளும் இந்நிகழ்வை கண்கள் அகல, வாய் திறந்து பார்க்கும் கூட்டமே உலகில் அதிகம். (கனவுக்கன்னிகளையும், காளைகளையும் அவர்களின் மிக உயர்ந்த உடை அலங்காரத் தெரிவில் பார்ப்பதற்கு யாருக்குத்தான் பிடிக்காது)


“ஒஸ்கா” விருது பெற்ற திரைப்படங்கள் எல்லமே எல்லோருக்கும் பிடிக்கும் என்பதற்கில்லை.. ஒஸ்கா 76 இல் சிறந்த திரைப்படமாகத் தெரிவு செய்யப்பட்ட “Lord of the Ring Return of the King” தொழில்நுட்பம் பிரமாண்டம் போன்றவற்றாலும், 75 இல் சிறந்த திரைப்படமாகத் தெரிவு செய்யப்பட்ட "Chicago” புதிய யுக்தியைப் பாவித்து (மிகச்சாதாரணமான திரைக்கதை) இசைத் திரைப்படமாகத் தந்திருந்ததாலும் பரிசுகளைத் தட்டிச் சென்றுள்ளன. "American Beauty” “Beautiful mind” போன்ற திரைப்படங்கள் தரமான திரைக்கதையைத் தாங்கி வந்து விருதுகளைப் பெற்றுச் சென்றிருக்கின்றன.

இனி இந்த ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான ஒஸ்கா விருதைப் பெற்ற “Million Dollar Baby” எனது பார்வையில் -

நான் Clint Eastwood இன் ரசிகை அல்ல (The Good The Bad and The Ugly பார்த்த பின்பும்) இருந்தும் ஒஸ்கா வென்ற திரைப்படங்களை அனேமாகத் தவற விடுவதில்லை. (“Lord of the Ring Return of the King” ஐத் தவிர)

தனது 74வது வயதில் மிகவும் நுணுக்கமாக பொருட் செலவு பிரமாண்டம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்காது காட்சியமைப்பு கதை நடிப்பு போன்வற்றை முன்னிறுத்தி இப்படத்தை இயக்கியுள்ளார் Clint Eastwood.


மனிதாபிமானம் கொண்டவர்கள் இந்தக் காலத்தில் பிழைக்க முடியாது என்பதுதான் இப்படத்தின் கரு. அனுபவம் நிறைந்த ஒரு முன்னணி boxing trainer Frankie தனது முன்னாள் மாணவனும் நண்பனுமான eddie ஒரு கடுமையான போட்டியின் போது கண் ஒன்றை இழந்து விட அதற்குக் காரணம் தான் என்ற குற்ற உணர்வில் தொடர்ந்து வரும் அவரது மாணவர்களை பணம் சம்பாதிக்கக் கூடிய கடுமையான போட்டிகளில் பங்கு பற்றுவதற்குத் தடையாக நிற்கின்றார். இதனால் பல தரமான மாணவர்களை அவர் இழக்க நேருகின்றது.
இந்த வேளை அங்கே வந்து சேருகின்றாள் Maggie. காத்திரமான குடும்பப் பின்னணி இல்லாததால் தன் ஒரே பிடிப்பான boxing ஐக் கனவாகக் கொண்டு trainer Frankie யின் பெண்களைச் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்ற உதாசீனத்தையும் மீறி அவரின் மனதை மாற்றி அவரின் மாணவியாகித் தனது திறமையால் தொடர்ந்து பல வெற்றிகளைக் கண்கின்றாள். அவளது திறமை அவளை மிக உச்சிக்குக் கொண்டு போகும் என்று நம்பியும் தனது மேற்பார்வையில் அதனைச் செய்யத் தயங்கிய Frankie அவளை வேறு ஒரு மனேஜரிடம் அறிமுகப்படுத்தி வைக்கின்றார். Maggie அதற்குச் சம்மதிக்காமல் அவரின் மேற்பார்வையில் பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுகின்றாள். விட்டுச் சென்ற தன் மகளின் நினைவோடு பாசமாய் நெருங்கும் Frankie அவளை Women's Boxing Association நடாத்தும் Million Dollar போட்டிக்காக அழைத்துச் செல்கின்றார், அவளுடன் போட்டி போட்ட உலக சம்பியனின் சதித் தாக்குதலால் கழுத்திற்குக் கீழ் உணர்வற்று கட்டிலில் கிடக்கும் Maggie தனது கனவு நிறைவேறி விட்டதாக Frankie இடம் சொல்லித் தன்னைக் கருணைக் கொலை செய்யுமாறு கேட்கின்றாள். மீண்டும் தன் தவறு என்று தடுமாறிப் போகும் Frankie இடம் அவனது நண்பன் eddie ஒன்றுமில்லாதவளை உலகப் புகழ் பெறச் செய்து அவளின் கனவை நிறைவேற்றியிருக்கின்றாய். ஒரு நிறைவான வாழ்க்கையைக் காட்டியிருக்கின்றாய் என்று அறிவுரை கூற Maggie இன் விருப்பப்படியே அவளைக் கருணைக் கொலை செய்கின்றார் boxing trainer Frankie.

காட்சிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்துப் படமாக்கப்பட்டுள்ளது. நடிகர்களின் உடைகளின் சிறிய கிழிசல்கள் கூட அந்தக் குத்துப் பயிற்சி நிலைத்து முகாமையாளர்களின் வசதியைக் கூறுவதாக அமைத்திருக்கின்றது.
சிறிது மனவளர்ச்சி குறைந்தவன் போல் காணப்படும் மிகவும் ஒல்லியா ஒருவன் தானும் குத்துச் சண்டை பழகி வெற்றி பெற வேண்டும் என்று ஆர்வத்துடன் தவறாமல் உடற் பயிற்சி செய்ய அவனைக் கிண்டலடித்து eddie அங்கு இல்லாத நேரம் பார்த்து அவனை வம்புக்கிழுத்து அடித்து நொருக்கும் ஒரு கறுப்பு இன மாணவன் என்றும், உணவகத்தில் வேலை செய்யும் Maggie வாடிக்ககையாளர்கள் விட்டுச் சென்ற இறைச்சியைத் தனது நாய்க்கு என்று கூறி எடுத்து வந்து சாப்பிடுவது என்றும் வழமையான பாணி காட்சிகள் பலவும் இடம் பெற்றிருக்கின்றன இருந்தும் அண்மைக்கால Hollywood திரைப்படங்களுள் சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளது.


Frankie – Clint Eastwood
Eddie – Morgan Freeman - சிறந்த துணை நடிகன் 2005
Maggie - Hilary Swank – சிறந்த நடிகை 2005

8 comments:

-/பெயரிலி. said...

/மீண்டும் தன் தவறு என்று தடுமாறிப் போகும் Frankie இடம் அவனது நண்பன் eddie ஒன்றுமில்லாதவளை உலகப் புகழ் பெறச் செய்து அவளின் கனவை நிறைவேற்றியிருக்கின்றாய். ஒரு நிறைவான வாழ்க்கையைக் காட்டியிருக்கின்றாய் என்று அறிவுரை கூற Maggie இன் விருப்பப்படியே அவளைக் கருணைக் கொலை செய்கின்றார் boxing trainer Frankie. /

முடிவை உடைத்துப்போட்டீர்களே! ஆரம்பத்திலே "சொல்லப்போகிறேன்" என்றாவது சொல்லியிருக்கவேண்டும். இந்தக் கருணைக்கொலை முடிவுக்காகத்தான், அமெரிக்காவின் துப்பாக்கிப்பழமைவாதிகளாலே (NRA) ஓரளவுக்குச் சின்னமாகப் பார்க்கப்பட்ட Dirty Harry, சமயப்பழமைவாதிகளினாலே இப்போது trainer Frankie ஆக எதிர்ப்பினைச் சம்பாதித்துக்கொண்டிருக்கின்றார்.

கறுப்பி said...

ஐயே தெரியாமல் போய் விட்டது (*_*)
பரவாயில்லை சரி போய் பாருங்கள் நிச்சயம் பிடிக்கும்

-/பெயரிலி. said...

/ஐயே தெரியாமல் போய் விட்டது (*_*)/

எனக்கு முடிவு முதலே தெரியும். மற்றவர்களுக்காகச் சொன்னேன். spoiler என்று போட்டுக்கொள்ளலாமே மேலே என்பதாகத் தோன்றியது.

கறுப்பி said...

hmm next time. so பார்த்து விட்டீர்கள். மற்றவர்களுக்காக? Frankie போல் நீங்களும் மனிதாபி மானிதான்

-/பெயரிலி. said...

படம் இன்னும் பார்க்கவில்லை; பார்க்க பொழுதும் களமும் வசதிப்பட்டால், பார்ப்பதிலும் எதுவித தயக்கமுமில்லை. இதுக்கெல்லாம் மனிதாபிமானம் எதற்கோ? ;-) ஒஸ்கார் படமென்றால், - அது நல்லதாக இருக்குமா இல்லையா என்ற அபிப்பிராயம் எதுவாக இருந்தாலுங்கூட - பார்க்கக்கூடாதென்றேதும் தற்கட்டுப்பாடேதுமில்லை.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

Wow what a cool blog you have here! I am impressed. You really put a lot of time and effort into this. I wish I had your creative writing skills, progressive talent and self discipline to produce a blog like you did. Your blog really does deserve an honest compliment. If you have some time, stop by my site, it deals with stuff like, click here: bux and then feel free to e-mail me with your words of wisdom.

P.S. I'll sure put the word out about your site and I would appreciate any business you may send my way...

Later, Scott ;-)

Anonymous said...

Wow what a cool blog you have here! I am impressed. You really put a lot of time and effort into this. I wish I had your creative writing skills, progressive talent and self discipline to produce a blog like you did. Your blog really does deserve an honest compliment. If you have some time, stop by my site, it deals with stuff like, click here: dollar and then feel free to e-mail me with your words of wisdom.

P.S. I'll sure put the word out about your site and I would appreciate any business you may send my way...

Later, Scott ;-)