பாநாட னரப்பமத ளான்பாந,
னபடா பந்யகபொ டன்ன,
காமனா சந்பனத டாபமனட,
காமன பானமாந்க டபாதபட்,
அதிர்கிறது அவன் குரல்;
எலும்புகள் நொருங்க
ஊத்தைத் துணிக் குவியலாய் நான்
வெடிப்புற்ற சுவர்களினூடு ஊடுருவும்.
கதவுகள் பிரமாண்டமாய் உயர
இறுகும் கைபிடிக் குமிழ்கள்.
தண்ணீர் குழாய்களிலும்
தொலைக்காட்சி, தொலைபேசிகளிலும்
அலை அலையாய் கசிந்து வரும்.
இடைவெளியற்று கனவுகளில்
புகைப்போக்கிப் புகையாய் அச்சமூட்டும்.
இரவுகள் இறக்கும்.
பனி மலைகள் உருகி,பதுங்கி
இடம் மாறும்.
செவிப்பறைக்கள் வெறுப்பேறி
கேட்பதை நிறுத்த கைகளால் அழுத்தும்.
விரல்களின் இடைவெளிகள்
அதிர்ந்து, அதிர்ந்து இடம்விடும்
மொழி மறந்து சிலிக்கும் உடலில் நரம்புகள்
வாய்க்கியம் எழுதும்.
கூரைகள் உயர, கதவுகள் வளர
தொடுதலுக்காய் ஓடி, ஓடி
களைத்து நான் நிமிர
நிறுத்துவாய் உன் குரலை ஒருநாள்
அப்போது
அடங்கியிருக்கும் என் உடல்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment