Saturday, May 30, 2009

இதுதான் தருணம்.

“வணங்காமண்” என்ற பெயரில் லண்டனில் இருந்து கப்பல் ஒன்றில் மருந்துப் பொருட்களையும், உணவுப்பொருட்களையும் வன்னிமக்களுக்கு அனுப்புவதற்காக சேகரித்திருந்தார்கள். மிகப்பெரிய தொகையில் பொருட்கள் சேகரிக்கப்பட்டதோடு பணமும் தொகையாகச் சேர்ந்து கொண்டதாக அறிகின்றேன். இதுவரை காலமும் போர் தீவிரமடைந்திருந்த நேரம் அப்பொருட்களை அனுப்புவதற்குப் பல தடைகள் இருந்திருக்கும். ஆனால் தற்போது போர் முற்றுப்பெற்ற நிலையில் வன்னி மக்களுக்கு மருந்து உணவுப்பொருட்களின் தேவை அதிகம் இருக்கின்றது. லண்டன் வாழ் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து செஞ்சிலுவைச்சங்கம், ஐநாசபை அங்கத்தவர்களுடன் தொடர்பு கொண்டு வணங்காமண் கப்பலுக்காகச் சேகரிக்கப்பட்ட பொருட்களையும், பணத்தையும் வன்னிமக்களுக்குச் சென்றடைவதற்கான ஒழுங்குகளைச் செய்யவேண்டும். பொருட்களையும் பணத்தையும் கொடுத்;துதவிய தமிழ் மக்கள் அப்பொருட்கள் வன்னிமக்களைச் சென்றடைவதற்கு ஒன்றாகக் கூடி செஞ்சிலுவைச் சங்கத்திடமும் ஐநாவிடமும் வேண்டுகோள் விடுத்தால் இது நிச்சயமாகச் சாத்தியப்படும். சாத்தியப்பட வைக்க வேண்டியது லண்டன் வாழ் மக்களின்; கடமை. தேசம் மின்தள உரிமையாளர்களும் வணங்காமண் ஒழுங்காளர்களுடன் தொடர்புகொண்டு அவர்களோடு இணைந்து இதனைச் செய்துமுடிக்கலாம். வன்னிமக்களுக்கு உதவுவதற்கு இதுதான் சரியான

3 comments:

Anonymous said...

வணக்கம் சுமதி ரூபன்
வணங்கா மண் தொடர்பாக சில விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இவ்வாரம் வரவுள்ள லண்டன் குரல் பத்திரிகையின் பிரதான செய்தியாக வணங்கா மண் அமைய உள்ளது. பத்தரிகை வெளியானதும் அக்கட்டுரை தேசம்நெற் இலும் பிரசுரமாகும்.
வணங்கா மண் தொடர்பாக உங்களுக்கு மேலதிக தகவல்கள் தெரியவந்தால் எனக்கு அறியத்தரவும்.
த ஜெயபாலன்.

ஸ்ரீ.... said...

இலங்கையில் தமிழர்கள் இழந்த உரிமையினை மீட்பர். நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

ஸ்ரீ....

கறுப்பி said...

ஜெயபாலன்

வெறுமனே செய்தியை வெளியிட்டால் போதாது. லண்டன் வாழ் தமிழ் மக்கள் ஒன்று கூடி குறிப்பாகப் பணம் மற்றும் பொருட்களைக் கொடுத்து உதவியவர்கள் உரியவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமே அப்பொருட்களையும் பணத்தையும் வன்னி மக்களிடம் முறையாகக் கொண்டு செல்ல முடியும். பொருட்களுக்கும் பணத்திற்கும் என்ன நடந்ததென்று தெரியாது என்றுவிட்டு இருப்பது வன்னி மக்களுக்கு நாம் செய்யும் துரோகம் அதற்கு லண்டன் வாழ் தமிழ் மக்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்