Wednesday, April 27, 2005

இனியும் அழவேண்டாம் சகோதரிகள்

மழைத் தூறல்களையும் மீறி நீண்ட வரிசையில் பல நிறத்து மக்கள் கால் கடுக்க நின்று, மண்டபம் நிறைந்த காட்சியாக ஆரம்பிக்கப்பட்டது, ஈழத்தமிழ் பெண்ணொருத்தியின் இலட்சிய வாழ்வின் விவரணப் படம். துக்கம் நெஞ்சை அடைத்தாலும் கூடவே பெருமையும் வந்து முட்டிக்கொண்டது.

ராஜினி சைக்கிளில் செல்கையில் சுட்டுக்கொல்லப்பட்ட காட்சியுடன் படம் ஆரம்பிக்கின்றது. தொடர்ந்து பின்நோக்கிச் சென்று அவரின் குடும்ப அங்கத்தவர்கள் ராஜினியுடனான தமது அனுபவங்களைப் பகிர்ந்து செல்கின்றார்கள். முக்கியமாக அவரது மூத்த சகோதரி நிர்மலாவும் அவரது கணவர் தயபாலாவும் பல தகவல்களைத் தந்து விவரணப்படத்தை நகர்த்திச் செல்கின்றார்கள். கட்டுப்பாடும் மதவழிபாடும் நிறைந்த குடும்பத்தில் வளர்ந்த தனது பெண்கள் பெரியவர்களா வளர்ந்த போது தமக்கான வழியைத் தேர்ந்தெடுத்து தடைகளின்றி முன்னேறியதைப் பெருமையுடன் கூறினார் ராஜினியின் தந்தை. எனது சமூகம், எனது மக்கள் என்ற பார்வையோடு சுயநலமற்றுப் போர் சு10ழலில் பாதிக்கப்படும் மக்களுக்காக உதவும் வகையில் தனது சொந்த வாழ்வைத் தியாகம் செய்யத் துணிந்தார் என்பதை கணவர் தயபாலாவும் கண்கலங்கக் கூறினார்.
மூத்த சகோதரியான நிர்மாலா நித்தியாணந்தன் தங்கையின் மரணத்திற்கு மறைமுகமாகத் தானும் ஒரு காரணம் என்று கூறினார். ராஜினி மருத்துவராக இருந்த போது தான் விடுதலைப் புலிகளுடன் இணைந்து வேலை செய்ததால் காயப்பட்ட பல போராளிகளை ராஜினியிடம் அழைத்துச் சென்று சிகிச்சை செய்திருக்கின்றார் என்றும் பின்னர் ஐந்து வருட சிறைத்தண்டனை அனுபவித்து வந்த தன்னை விடுவிப்பதற்காக ராஜினி தனித்து நின்று போராடிய போது சிறையில் இருந்து விடுதலைப்புலிகளால் நிர்மலா விடுவிக்கப்பட்டு இந்தாயாவிற்குச் சென்றதும் ராஜினிக்குள் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்து விடுதலைப்போராளிகளுடன் தன்னை இணைத்துக் கொண்டு அவர்களுக்குப் பல உதவிகளைச் செய்து வந்தார் என்றும் கூறினார்.

ராஜினியின் இரு மகள்களும் தமது தாயைப் பெருமையுடன் நினைவு கூர்ந்தனர். ராஜினி மருத்துவத்துறையிலும் சமூகசேவையிலும் அதிகம் ஈடுபட்டிருந்தமையால் அவரது குழந்தைகள் ராஜினியின் பெற்றோருடனே வசித்து வந்தார்கள். இடதுசாரியான ராஜினியின் கணவனும் இலங்கை ராணுவத்தால் தேடப்பட்டு வந்தமையால் பலகாலமாக மறைமுகமாக வாழ்ந்து வந்திருக்கின்றார். ராஜினியும் குழந்தைகளும் அவரைச் சந்திப்பது மிகவும் அரிதாகவே இருந்திருக்கின்றது. பல சிங்கள நண்பர்கள் தமிழ் மக்களுக்கு உதவப்போய் உயிர் விட்டிருக்கின்றார்கள் என்று தயபாலா அவர்களையும் நினைவு கூர்ந்தார்.

இந்தியாவில் இருந்த போது போராளிகளாக இருந்தவர்களுக்கு போராட்டம் பற்றிய குறைந்த பட்ச அறிவு கூட இல்லாமல் தலைமை இடும் கட்டளைகளைக் கேள்வி இன்றி நிறைவேற்றும் வெறும் இயந்திரமாக இருந்தார்கள் என்றும் இயக்கம் சம்பந்தமாக நிர்மலா எழுப்பிய கேள்விகள் நிராகரிக்கப்பட்டதும், உதாசீணம் செய்யப்பட்டதும் தந்த ஏமாற்றம் நிர்மலா நித்தியாணந்தன் இயக்கத்தில் இருந்து தன்னை விடுவித்து லண்டன் செல்லக் காரணமாக இருந்து என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து வந்த காலங்களில் விடுதலைப்புலிகளின் நடத்தை ராஜினிக்கும் ஏமாற்றங்களைத் தரத் தொடங்கியதால் அவர் தன்னை இயக்கத்தில் இருந்து விடுவித்துக் கொண்டு போரால் பாதிக்கப்பட்ட (முக்கியமாகப் பெண்களுக்கு) மக்களுக்கு உதவி செய்யத் தொடங்கினார். விடுதலைப்புலிகள், இலங்கை இராணுவம், இந்திய ராணுவம் போன்றவற்றின் நடவடிக்கைகளை கேள்வி எழுப்பும் வண்ணம் ராஜினியும் அவரது நண்பர்களும் (பெயர்கள் குறிப்பிடப்படவில்லை) இணைந்து ஒரு தொகுப்பாக "முறிந்த பனை" எழுதிய காலத்தில் வேலை விடயமாக ராஜினி லண்டன் சென்றிருந்த போது அவரது வீடு நுழைந்து இந்திய ராணுவம் அவரது பல எழுத்துக்களை அழித்துச் சென்றதால் அவரை ஊர் திரும்ப வேண்டாம் என்று பலர் கேட்டுக்கொண்ட போதும் தனது மாணவர்களின் கல்வியை முதன்மைப் படுத்தி ஊர் திரும்பிய ராஜினி திருநெல்வேலியின் வைத்து செப்டெம்பர் மாதம் 21ம் திகதி துப்பாக்கிச் சு10ட்டினால் கொல்லப்பட்டார். இந்தத் தகவலைத் தந்த அவரது சகோதரி நிர்மலா விடுதலைப்புலிகள் ராஜினியின் கொலைக்குத் தாம்தான் காரணம் என்று தன்னிடம் ஒத்துக்கொண்டதாகவும் கூறினார்.

இந்தியப்படை இன்ரலக்சுவல்சுடன் பிரச்சனை பற்றிக் கதைக்க வேண்டும் என்று பல்கலைக்கழகத்திற்குச் சென்ற போது எல்லோரும் தயங்கி நிற்க ராஜினி துணிந்து அவர்களுடன் உரையாடினார் என்றும் மேலோட்டமாகக் கூறப்பட்டது.

சின்ன வயதில் தாம் களித்த சந்தோஷமான நாட்களை மீட்டுப்பார்த்தனர் அவரது மற்றைய சகோதரிகளான வாசுகியும், சுமதியும். இளம் வயதிலிருந்தே தாம் மாக்ஸையும், சே குவோராவையும், மாவேசேதுங்கையும் படித்து ஒரு நாட்டிற்கும் மக்களுக்கும் எது தேவை என்பதைப் புரிந்து வைத்திருந்ததாகவும் அவர்கள் கூறினார்கள்.

நிர்மலா விடுதலைப்புலிகள் மேல் பல குற்றச்சாட்டுக்களை வைத்தார். இங்கே நான் அதை விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால் தனது சகோதரியைக் கொன்றது விடுதலைப்புலிகள் என்பதை மிகவும் திடமாகச் சொன்னார். கேள்வி பதில் நேரத்தில் அவரிடம் வைத்த கேள்விகளுக்குத் தயங்காமல் பதிலளித்தார்.

"இனியும் அழவேண்டாம் சகோதரிகள்" என்ற இந்த விவரணப்படம் எம் மக்களால் எப்படிப்பார்க்கப்படுகின்றது. கனேடிய மக்களால் எப்படிப்பார்க்கப்படுகின்றது என்பதை விமர்சனங்கள் வரும் போதுதான் நாம் தெரிந்து கொள்ள முடியும்.

என் பார்வையில் ராஜினி திரணகம வை படித்ததில் மூலம் மட்டும் அறிந்து வைத்திருந்தேன். ஆனால் இப்போது நேராக ஒரு பெண்ணின் கல்வித் தகைமை, சமூகசேவை, இலட்சியம், எதற்கும் தயங்காமல் அடி எடுத்து வைக்கும் துணிவு என்பனவற்றைப் பார்த்துக் கண்கலங்கிப் பெருமை கொள்ள முடிகின்றது. இருந்தும் ஈழத்தில் வாழ்ந்து ஈழமக்களுக்காத் தன் உயிரைக் கொடுத்த ஒரு பெண்ணைப் பற்றிய உண்மைகளை வெளியில் கொண்டு வருவதற்கு வேறு ஒரு நாட்டை நாம் சார்ந்து நிற்க வேண்டிய அவலமான நிலை. இத்திரைப்படத்தை இயக்கிய Helene Klodawsky பேசுகையில் ராஜினியைப் பற்றித் தகவல்களைத் திரட்ட முயன்று அவர்களை அறிந்தவர்களிம் சென்று கேட்ட போது அவர்கள் கண்களில் மரண பயம் தெரிந்தது. எனவே ராஜினியின் குடும்பங்களை மட்டும் வைத்து இந்த விவரணப்படத்தைச் செய்ய வேண்டிய கட்டாயம். அது மட்டுமல்ல புலம்பெயர்ந்து இருக்கும் ராஜினியின் நண்பர்கள் கூட தம் முகத்தை மறைத்தே தகவல்களைத் தர முன் வந்திருக்கின்றார்கள் என்றும் கூறினார். இப்படியாக இருக்கிறது எமது நாட்டு நிலமை.

ஈழத்தமிழ்பேசும் மக்கள் மத்தியிலுள்ள அநேகமான புத்திஜீவிகள் கொல்லப்பட்டுவிட்டார்கள்.சராசரியாக 80 வீதமான புத்திஜீவிகள் படுகொலை செய்யப்பட்டபின் இப்போது 'ஊரோடு ஒத்தோடும்; கூட்டம'; மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இரஜினியை வெளியுலகுக்குக் காட்டும் படம் நிச்சியம் ஜனநாயகத்துக்கான புதியபோரை ஈழத்தில் புதியவடிவில் தோற்றுவிக்கும்.
ப.வி.ஸ்ரீரங்கன்

42 comments:

-/பெயரிலி. said...

கறுப்பி, பதிவுக்கு நன்றி.
மீதி பின்னால்.

-/பெயரிலி. said...

நிர்மலாவுக்கும் நித்தியானந்தனுக்குமிடையே மணமுறிவு ஏற்பட்டு ஆண்டுகள்; நிர்மலா பாண்டிபஜாரிலே பிரபாகரனுடன்கூட நின்று உமாமகேஸ்வரன் & சிவனேசன் (இவர் பின்னாளிலே உமாமகேஸ்வரனினாலேயே கொல்லப்பட்டார் என்று கூறுகிறார்கள்) உடன் சூட்டுச்சம்பவத்திலே ஈடுபட்ட ராகவனை மணம் செய்து கொண்டார் என்று எங்கோ வாசித்தேன். அஃது உண்மையானால், நிர்மலா நித்தியானந்தன் என்று இன்னுங்கூறுவது சம்பந்தப்பட்ட எவருக்குமே விருப்புக்குரியதானதாக இருக்காதல்லவா?

கறுப்பி said...

தாங்கள் கூறுவது சரி பெயரிலி. தற்போது நிர்மலா ராகவன் தான். இருந்தாலும் அந்த சந்தர்பத்தில் நிர்மாலா விடுதலைப்புலிகளுடன் இருந்த போது தானும் நித்தியாணந்தனும் இணைந்து செயல்பட்டதாகக் கூறினார். ராகவன் பற்றி அவர் கூறத்தேவையில்லைத் தானே. அந்தக் கால கட்டத்தைக் குறிப்பிடும் போது மட்டுமே நானும் நித்தியாணந்தனை இணைத்துக் கொண்டேன். மற்றும் படி வெறும் நிர்மலாதான்.
பெயரிலி நிச்சயமாக தாங்கள் இந்த விவரணத்தைப் பார்க்க வேண்டும். நான் இந்தக் கால கட்டங்களில் நாட்டில் இருக்கவில்லை. நான் வெறும் வாசிப்பில் மட்டுமே இவர்களை அறிந்தவள். ஒரு முறை இலங்கை சென்று பல பெண்களைச் சந்தித்து வரவேண்டும் என்று ஆர்வமாக இருக்கின்றது. என்ன செய்வது திருமணம் குழந்தைகள் என்று பந்தத்திற்குள் புகுந்து விட்டேன். பார்ப்போம்.

ஈழநாதன்(Eelanathan) said...

நன்றி கறுப்பி சில விடயங்களைத் தெளிவு படுத்திக்கொண்டு இதுசம்பந்தமாக எழுதுகிறேன்.நிச்சயமாக பார்க்கவேண்டிய படம்

Venkat said...

கறுப்பி - தகவல்களுக்கு நன்றி! படம் தனித்திரையிடல்களுக்குத் தயாரானால் பல்கலைக்கழகத்திலும் வரும் என்று சொல்கிறார்கள் எனவே நம்பிக்கை இருக்கிறது.

க்ளோப் அன் மெயிலில் வந்த கட்டுரையில் நிர்மலா ராஜ்சிங்கம் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

ரமணி - ராகவன் என்பதுகூட இயக்கப் பெயர்தான் என்று எங்கோ படித்ததாக நியாபகம்.

-/பெயரிலி. said...

/ ராகவன் என்பதுகூட இயக்கப் பெயர்தான் என்று எங்கோ படித்ததாக நியாபகம்./
வெங்கட், நீங்கள் சொல்வது சரியே; அவர் இயக்கத்தினைவிட்டு ஒதுங்கியிருக்கின்றார் என்பதாகத் தெரிகிறது; எதற்காக அவருடைய மெய்யான பெயரென்று விட்டுவிட்டேன். நிர்மலா ராஜசிங்கமென்று குறிப்பிடுவது ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களினாலே மிகச்சரி.

கறுப்பி said...

//கறுப்பி படத்தினைப் பார்த்துவிட்டு வந்து, ராஜினி- இந்திய அமேதிப்படை ஆகியவர்களுக்கிடையேயான தொடர்பு குறித்தும் ராஜினியின் முறிந்த பனைமரம் எழுதிய ஸ்ரீதரன், ஹூல் சகோதரர்கள் ஆகியோர் இன்று எவ்வாறு, எதற்காக இயங்குகின்றார்கள் என்று படத்திலே சொல்லப்பட்டிருக்கின்றதா என்று சொல்வதாகச் சொன்னார்.\\

பெயரிலி இது இந்தியஅமைதிப்படை பற்றி அதிகம் அவர்கள் கூறவில்லை. முறைந்தபனை எழுதிதுவதற்குக் காரணமானவர்கள் பற்றியும் காட்டப்படவில்லை. மனிதஉரிமைக்காக ராஜினியுடன் சேர்ந்து வேலை செய்ய இரு பெண்கள் கொல்லப்பட்டதாக தங்கை சுமதி கூறினார்.

Narain Rajagopalan said...

இப்போதுதான் இந்தப்படத்தினைப் பற்றி கேள்விப்படுகிறேன். இந்தியாவில் கண்டிப்பாக கிடைக்காது என்று தெரிகிறது. படம் பார்க்காமல் எதுவும் கருத்து சொல்லவிரும்பவில்லை. நல்ல பதிவு.

-/பெயரிலி. said...

/முறைந்தபனை எழுதிதுவதற்குக் காரணமானவர்கள் பற்றியும் காட்டப்படவில்லை./
முறிந்தபனை இரண்டு பகுதிகளாக வந்தது. முதலாவது, இந்திய அமேதிப்படையின் ஊடுருவலுக்கு முன்னால்; அடுத்த பகுதி, அந்த ஆக்கிரமிப்புக்குப் பின்னாலும் ராஜனி திரணகமவின் இறப்பினை அண்டிய காலகட்டத்திலும்.

கறுப்பி said...

யா யா யா முறிந்தபனை எழுத்துப் பிழை. ஆனால் பெயரிலி ரஜனி அரசியல் போராட்டம் மனிதஉரிமை மீறல்கள் போன்றவற்றில் தனக்குண்டான கேள்விகளை முன்வைத்து முறிந்தபனை எழுதத் தொடங்கினார் என்று நிர்மலா குறிப்பிட்டிருந்தாரே தவிர அது பற்றிய விளக்கங்கள் பெரிதாகத் தரப்படவில்லை.

~Nandalala~ said...

ஈழ விடுதலை போராட்டத்தின் மற்றொரு பரிமானத்தை இது பிரதிபளிக்கக்கூடும் என தெரிகிறது.

நாராயணன் இப்படம் இந்தியாவில் தடை செய்யப்பட்டதா? விவரணப்படங்களுக்கு இந்தியாவில் தனிக்கை அவசியமில்லை அல்லவா?
விவரம் அறிந்தால் சொல்லுங்கள்.

~Nandalala~ said...

பதிவுக்கு நன்றி கறுப்பி.

Thangamani said...

//பின்னர் ஐந்து வருட சிறைத்தண்டனை அனுபவித்து வந்த தன்னை விடுவிப்பதற்காக ராஜினி தனித்து நின்று போராடிய போது சிறையில் இருந்து விடுதலைப்புலிகளால் நிர்மலா விடுவிக்கப்பட்டு //

நிர்மலாவை சிறையில் வைத்திருந்தது இலங்கை அரசா, புலிகளா? விடுவித்தது அரசா, புலிகளா?

கறுப்பி said...

தங்கமணி
விடுதலைப்புலிகளுடன் இணைந்து வேலை செய்தமைக்காய் நிர்மலாவை சிறையில் வைத்திருந்தது சிங்கள அரசு. விடுவித்தது விடுதலைப் புலிகள் சிறையை உடைத்து.

-/பெயரிலி. said...

/விடுவித்தது விடுதலைப் புலிகள் சிறையை உடைத்து./
விடுதலைப்புலிகள் மட்டுமல்ல; பொதுவாகவே எல்லா இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் சேர்ந்தே இந்தச்சிறையுடைப்பைச் செய்தார்கள் என்று ஞாபகம். ஆனால், நிர்மலா + அருட்தந்தை ஒருவர் இருவரும் தப்பிப்போகவில்லை என்று ஞாபகம். நிச்சயமாகத் தெரியாது. ஷோபா சக்தி தனது 'ம்' இலும் இது குறித்து அவர் பார்வையிலே சொல்லியிருந்தார்.

-/பெயரிலி. said...

கறுப்பி & தங்கமணி, நான் இரண்டு சிறையுடைப்புகளைக் குழப்பியிருந்திருக்கிறேன். மன்னிக்கவேண்டும்
கே. ரி. இராஜசிங்கத்தின் கருத்துகளுக்கான நோக்கங்களோடு எனக்கு முரணிருப்பினுங்கூட, இங்கே மேற்படி செய்திக்காக இணைப்பினைக் கொடுத்திருக்கின்றேன்.
SRI LANKA: THE UNTOLD STORY Chapter 30: Whirlpool of violence
"...In the confusion during the Batticaloa jail break, Nirmala Nithyaandan was inadvertently left behind in her cell. Nine months later, the LTTE succeeded in gaining access to her cell and getting her out of prison. Though the security forces immediately launched an intense sea and air search, Nirmala Nithyanandan managed to reach Chennai safely after spending two torturous years in custody.

About Nirmala Nithyananthan, Adele Balasingham in her The Will to Freedom, writes as follows:

"Nirmala Nithyananthan was projected as a literary figure and feminist, illegally imprisoned for her political views and violation of her human rights and in danger of being subjected to inhumane treatment. An international campaign for her freedom was launched. Nirmala's continued imprisonment was a source of grave concern, particularly during the anti-Tamil riots of 1983 when Sinhala inmates and prison guards massacred Tamil political prisoners. Housed in the women's wing of the prison, she was lucky to escape the torment of the women prisoners and was eventually transferred to Batticaloa jail, along with the surviving Tamil detainees. The LTTE cadres in Batticaloa district planned a raid to free the remaining Tamil political prisoners. When I heard that she had been freed from the Batticaloa prison in the middle of 1984, by one of our cadre during a daring escape operation, I was thrilled and her boldness added to my respect for her. I received the news from Mr Pirabakaran that she would be coming to Chennai to work with the organization, with great expectancy. I looked forward to work with an English-speaking colleague with whom I could discuss many issues.

"Mr Pirabakaran was less than enthusiastic about the prospect of Nirmala joining the LTTE and a contradiction in feminist perception was clearly evident. For him, Nirmala's conception and projection of women liberation did not tally with his view or vision of Tamil women's liberation. In Mr Pirabakaran's ideological perspective, Nirmala's idea of a women's liberation represented more stereotyped conception of Western women's liberation than an emancipation which the masses of Tamil women could identify with and embrace as their own. Delegating the task of building the women's wing of the LTTE to Nirmala was not in Mr Pirabakaran's scheme of things. Mr Pirabakaran proved to be correct in his view of Nirmala as unsuitable for any role in the women's wing. Not only he, but also the girls who were with us, had difficulty in relating to and comprehending Nirmala's 'radicalism'. She was worlds apart from the village girls who had come to join the struggle and fight for their homeland and had no real idea of women's liberation, nor necessarily aspired for it. Indeed, Mr Pirabakaran was far more effective in tapping into the sentiments and thinking of the young Tamil women and winning their support and he persisted with his commitment to building a women's section and has subsequently assumed the role of leader and mentor of the wing. Not even Nirmal's gallant history or opposition to the state forces could dislodge alienation or inspire any confidence in women's emancipation. Nirmala revealed herself as a vehement critic of the organization but was totally incapable of offering any realistic, viable alternative which would mobilize the people to confront the mounting scale of oppression they were being subjected to. The young women's dislike of Nirmala, and many other issues that became controversial, ultimately resulted in her divorce from the organization. But while Nirmala's relationship with the LTTE was essentially underproductive, the role played by her husband Mr Nithyanandan [affectionately called Nithy] was creative and productive. As the editor of the organization's official newspaper "Viduthalai Puligal" [Liberation Tigers] he wrote several articles representing the LTTE's position and introducing other national liberation struggles to our cadres and readers. While the paper has survived since 1984 as the official organ of the LTTE, Mr Nithyanandan has not. He departed from the organization along with his wife at the end of 1984." - Pages 86-87 "


கெ. ரி. இராஜசிங்கம் போன்றவர்தான் டி. பி. எஸ். ஜெயராஜ்; அவருடைய ஒரு பதிவும்: Rajani Thiranagama: A true heroine of our times

ஜெயச்சந்திரன் said...

ரஜனி திரணகமவின் சகோதரி சுமதி நீங்களில்லை தானே................

கறுப்பி said...

பெயரிலி நன்றி நல்ல தகவல்கள். படம் பார்க்காதவர்களுக்கும் ராஜினியைப் பற்றித் தெரியாதவர்களுக்கும் இது உபயோகமாக இருக்கும்.

Sri Rangan said...

கருப்பி வணக்கம்!நிர்மலா சொல்லும் புலிதான் ரஜினியைக் கொன்றதென்பது பிர்ச்சனையைக் கனதிப் படுத்தவே.ரஜினியைப் புலிகளும் போடுதிட்டத்தில் இருந்தவர்களே.ஆனால் போட்டது:ஈ.பி.ஆர்.எல்.எப்.இதை ஆதாரப்படுத்தத் தேவையில்லை.ரஜினியை அழிக்க முற்பட்ட சக்தி ரோவ் என்பதும் நிதர்சனமான உண்மை.அதற்கான அரசியற் வியூகமெல்லாம் எல்லோருக்கும் தெரியும்.பின்னாட்களில் மண்டையன் குழுவை நிறுவிக்கொண்டு நடந்த கொலைகள் இதன் தொடாச்சிதாம்.புலியெதிர்பாளர்கள் பலவடிவிலுள்ளார்கள்.இன்றைய ஈழ அமைப்புகள்(பழைய அமைப்புகள் யாவும்)தத்தம் பங்குக்கு அதிகாரங்களைப் பங்குபோடுவதற்காகவே.மற்றும்படி... ஜனநாயகமென்பதெல்லாம் மக்களை ஏமாற்றிக்கொள்ளவே.ஈ.என்.டி.எல்.எப்...ராம்ராஜ்,ஆனந்தசங்கரி...இத்யாதிகளெல்லாம் எரியும் வீட்டில் பிடுங்கியது மிச்சம் என்பதாய்.ஆனால் அரசியற் கொலைகளை எல்லா அமைப்புகளுஞ் செய்துள்ளார்கள்.இதை வெறும் மனிதர்களாகிய நாம் எதிர்க்கிறோம்,மனிதநசிப்பால்.இயக்கங்கள் அதை வைத்து அரசியல் செய்கிறார்கள்.நாங்கள் பேசாமல்ஆகாயம்-இயற்கை-குடும்பப் பிரச்சயன மனதில் தோன்றும் அழுத்தங்களை எழுதுவதுமேல்போலத்தெரிகிறது.எல்லாம்...

suratha yarlvanan said...

27 April, 2005
-/பெயரிலி. said...
/அருட்தந்தை ஒருவர் தப்பிப்போகவில்லை என்று ஞாபகம். நிச்சயமாகத் தெரியாது.//

தப்பி போக உடன்படாத அந்த அருட்தந்தை சிங்கராயர்.வெரித்தாஸ்வானொலி ஆரம்ப கர்த்தாக்களில் இவரும் ஒருவராக இருக்கவேண்டும்.



முறிந்தபனை நல்லதொரு ஆவணம்.ஏன் தடை செய்தார்கள் என்பது மட்டும் புரியவில்லை.

இளங்கோ-டிசே said...

கறுப்பி பதிவுக்கு நன்றி.
.....
ராஜினின் மரணம் பற்றி சிறுவயதில் எனது அக்கா சொல்லக்கேள்விப்பட்டிருக்கின்றேன். மெடிக்கல் faculty வளாகத்தை விட்டு யாருடனோ கதைத்துக்கொண்டு வெளியே வரும்போது கேற்றடியில் வைத்துச் சுடப்பட்டார் ராஜினி என்பதாய் நினைவு. அதுவும் அந்தக்கொலையாளிகள் ஏற்கனவே ராஜினிக்கு பழக்கமானவர்கள் என்றுதான் (கொலையாளிகள் சாதாரணமாகப் பேசித்தான் ராஜினியைச் சுட்டனர்) எங்கேயோ வாசித்துமிருந்தேன்.

...
நிர்மலா கூறியது:
//ராஜினி திருநெல்வேலியின் வைத்து செப்டெம்பர் மாதம் 21ம் திகதி துப்பாக்கிச் சு10ட்டினால் கொல்லப்பட்டார். இந்தத் தகவலைத் தந்த அவரது சகோதரி நிர்மலா விடுதலைப்புலிகள் ராஜினியின் கொலைக்குத் தாம்தான் காரணம் என்று தன்னிடம் ஒத்துக்கொண்டதாகவும் கூறினார். //
சிறிரங்கன் கூறியது:
//ஆனால் போட்டது:ஈ.பி.ஆர்.எல்.எப்.இதை ஆதாரப்படுத்தத் தேவையில்லை//
ஒரே குழப்பமாக இருக்கிறதே!!! புலிகள் போட்டுத்தள்ளவில்லையென்பது உண்மையெனில் நிர்மலா முன்வைத்த பல கருத்துக்களின் அடிப்படையே தகர்கின்றமாதிரிக்கிடக்கின்றதே :-).
கிட்டத்தட்ட இதேயேதான் (புலிகள் ராஜினியைக் கொலைசெய்யவில்லையென) கொழும்பில் வசித்தபோது வாசித்த, ஈபிடிபியின் தினமுரசில் ரமேஷ் (அற்புதன்) எழுதிய அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை தொடரில் கூறியிருந்தார். எது உண்மையோ கொலையாளிகள் தான் அறிவர். எனினும் இறந்துபோன ஆளுமையான ராஜினிரினி திரும்பிவரப்போவதில்லை :-(.
....
வெங்கட், இராகவனின் பெயர், சி.புஸ்பராஜா எழுதிய 'ஈழப்போராட்டத்தில் எனது சாட்சி'யத்தில் வருகின்றது என்று நினைக்கின்றேன். சரியா என்று உறுதிப்படுத்த என் வசம் அந்தப்புத்தகம் தற்சமயம் இல்லை.

வன்னியன் said...

நிர்மலாவை சிறையிலிருந்து மீட்ட போராளியின் பெயர் ஜெயம். (மேஜர் ஜெயம்.) தனியாளாகச் சென்று மீட்டு வந்தார். பின் வீரச்சாவடைந்த இவர் கவிஞர் காசி ஆனந்தனின் இளைய சகோதரன்.
டி.சே. நானும் அற்புதனின் கட்டுரையை வாசித்தேன். அதை முன்பே பின்னூட்டங்களில் கூறிவிட்டேன். இப்போது நிர்மலா இப்படிச் சொல்கிறார். நீங்கள் சொல்வதுபோல் கொலையாளிகளுக்கே அது வெளிச்சம். (சிறிரங்கனுக்கு நோர்வேயிலிருக்கும் ஒருவனைத் தெரியுமாமே?)
ஆனால் ஒன்று. முறிந்தபனை வாசிப்பவர்களுக்கு, யார்யாருக்கெல்லாம் ராஜினியைக் கொல்ல வேண்டிய தேவையிருந்தது என்பது ஓரளவு புரியும். அதைவிட மேலும் நடந்த சில சம்பவங்கள் இன்னும் துணைபுரியும்.

ROSAVASANTH said...

கறுப்பி, இந்த பதிவிற்கு மிக மிக நன்றி.

ஈழநாதன்(Eelanathan) said...

.
ராஜனி மிகவும் மதிப்புக்குரியவர்,அவரின் ஆரம்பகாலச் செயற்பாடுகள் இயக்கங்களோடு இணைந்திருந்தாலும் மக்களுக்காக நிறையச் செய்தவர்.ராஜனி ஆரம்ப காலத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் ஆதரவாளராகவும் புலிகளின் ஆதரவாளராகவும் இருந்தார். முறிந்தபனை வாசித்த ஒருவருக்கு ஈ.பி.ஆர்.எல்.எவ் மீது ராஜனி வைத்திருந்த நம்பிக்கையும் அது சிதைந்தது பற்றி அவர் கொண்டிருந்த விசனமும் புரியும்.

இந்திய இராணுவக் காலத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் உம் இந்திய இராணுவமும் இணைந்துகொண்டு ஆடிய நரவேட்டைகள்தான் முறிந்த பனை நூலில் அதிகமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.விடுதலைப்புலிகள் மேல் ஒப்பீட்டளவில் குறைந்த விமர்சனமே வைக்கப்பட்டுள்ளது.விஜிதரன் கடத்தல் இயக்க உட்கொலைகள் தலைமை வழிபாடு போன்றவை அவற்றுள் சில.
ஆக ஒப்பீட்டளவில் ராஜனியைக் கொல்வதால் புலிகளுக்குக் கிடைக்கக் கூடிய இலாபத்தை விட அந்தவேளையில் இலங்கையில் நிலை கொண்டிருந்த இந்திய இராணுவத்திற்கும் அவர்களது ஒத்தூதிகளாகவிருந்த ஈ.பிக்கும் இலாபம் அதிகம்.

www.sangam.org இணையத் தளத்தில் ராஜனியை யார் கொன்றது என்று ஒரு கட்டுரை இருக்கிறது.
அதிலே குறிப்பிடப்படுபவை.
கடைசி காலத்தில் ராஜனி ஈ.பி.ஆர்.எல்.எப் உடன் நிறைய முரண்பட்டார்.
அற்புதன் எனப்படும் முன்னைநாள் ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினரும் பின்னைநாள் ஈ.பி.டி.பி உறுப்பினருமான நடராசா அற்புதராசா தான் ஆசிரியராக இருந்த பத்திரிகையான தினமுரசுவில் ஒரு தொடர் எழுதினார் அது அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை என்று இயக்கங்களின் உட்கொலை பற்றியது.அதில் ராஜனியை கொன்றது புலிகள் அல்ல ஈ.பி.ஆர்.எல்.எப் என்று சந்தர்ப்ப சூழ்நிலைகளுடன் எடுத்துக் கூறியிருந்தார்.
முறிந்த பனை நூலின் ஆசிரியர்களில் ஒருவர் கொழும்பில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் ராஜனி புலிகளால் கொல்லப்படவில்லை என்று சொன்னார்.எனது ஞாபகம் சரியெனில் சிறீதரன் என நினைக்கிறேன்

இங்கே புலிகளால் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகதையும் நான் நிராகரிக்க விரும்பவில்லை.ஆனால் சிறீரங்கன் சொல்வதையும் வைத்துப் பார்த்தால் என்ன நடந்திருக்கும் என்பது புரிகிறது.

ஆக இந்த விவரணப் படம் சில விடயங்கள் வெளிச்சமாவதற்கு உதவியிருக்கிறது.நிர்மலா தான் விடுதலைப்புலிகள் மீது கொண்டிருக்கும் கசப்புணர்வைத் தீர்த்துக் கொள்ள இதனைப் பயன்படுத்தியிருக்கிறாரா அல்லது வேறு சில பின்புலச் சக்திகளால் தூண்டப்பட்டுச் சொன்னாரா தெரியவில்லை.

ஆதலால் இந்தப் படம் கனடாவில் வெளிவந்திருக்கும் காலத்தைப் பார்க்கையில்(கனடா புலிகளுக்கு ஆதரவான ஒரு நிலை எடுக்க ஆரம்பிக்கையில்-புலிகளைத் தடை செய்ய மறுத்த நேரத்தில்) நோக்கத்தைச் சந்தேகிக்கிறேன்.

சுரதா நீங்கள் கூறும் சிங்கராயர் தான் டேவிட் ஐயாவா?

ஈழநாதன்(Eelanathan) said...

நிர்மலாவின் கதையும் இங்கே அடிபடுவதால் அந்தச் சிறையுடைப்புப் பற்றிய செய்திக்கு தொடுப்பு
http://www.nitharsanam.com/public/viduthalaipulikal/vp03.PDF

-/பெயரிலி. said...

/சுரதா நீங்கள் கூறும் சிங்கராயர் தான் டேவிட் ஐயாவா?/

காந்தீயம் டேவிட் ஐயா வேறாள்; அடிப்படையிலே கட்டிடக்கலைஞர்; அவரும் சிறையிலிருந்து தப்பினார்; தற்போது சென்னையிலே வாழ்கிறார். ஆங்கிலவகுப்புகள் எடுத்து வாழ்கிறார் எனச் சென்னைச்சஞ்சிகை ஒன்றிலே வாசித்தேன். பெரியாரின் கட்டுரைகளைத் தொகுக்கும் ஆனைமுத்து அவர்களுடன் சேர்ந்து மொழிபெயர்த்தார் என்ரு சில ஆண்டுகள் முன்னால் நண்பர் ஒருவர் சொன்னார்; 'புதியதோர் உலகம்' வாசியுங்கள் ;-)

Thangamani said...

//இந்தப் படம் கனடாவில் வெளிவந்திருக்கும் காலத்தைப் பார்க்கையில்(கனடா புலிகளுக்கு ஆதரவான ஒரு நிலை எடுக்க ஆரம்பிக்கையில்-புலிகளைத் தடை செய்ய மறுத்த நேரத்தில்) நோக்கத்தைச் சந்தேகிக்கிறேன்.//

அதுவும் குறிப்பாக புலிகள் தங்களது மேலை நாட்டு பயணத்தை மேற்க்கொண்டு, சுனாமி போன்ற பல்லாயிரக்கணக்கான மக்களை பலிகொண்ட இயற்கை அனர்த்ததிலும், அதற்குப்புபின்னும் தமிழ் மக்களைக் காப்பாற்ற இலங்கை அரசும், இனவாத சக்திகளும் தயாராக இல்லை என்ற உண்மையை சொல்லி, மேற்குலகம் இவர்கள் அடிக்கும் கூத்துக்களையெல்லாம் பார்க்கத்தொடங்கிய காலமொன்றில், மேற்குலகத்தை வெகுவாகக் கவரக்கூடிய விதத்தில் அமைந்த (மேலைக் கல்வி கற்ற பெண்ணொருவர், மனித உரிமைகளைப்பற்றிய அக்கறை கொண்டவர் கொல்லப்பட்டார் என்ற) புலியெதிர்ப்பு பிரச்சாரமாகவே இதைப்பார்க்கிறேன். நிகழ்காலத்தில் இன்னும் சுனாமி பாதிப்பால் தவிக்கும் மக்களையும், செயலற்ற அரசின் நிலையையும், இனவெறி இடதுசாரிகளையும் மறைக்க விரிக்கப்படும் கடந்தகால திரையாகவே என்னால் பார்க்கமுடிகிறது.

-/பெயரிலி. said...
This comment has been removed by a blog administrator.
Sri Rangan said...

ஈழநாதன் பாதர் சிங்கராயர் எனது ஊரவர்.அவர் இல்லாதிருந்தால் இன்றைக்குத் தேசிவிடுதலையமைப்பின் தலைவரே இலங்கையரசால் வேட்டையாடப் பட்டிருப்பார்.நீர்வேலி வங்கி... 85 இலட்சம்... ஞாபகமிருக்கா? ஒரு இரவு சிங்கராயர் வீட்டிலிருந்து பெரும் பாதுகாப்பாக அந்தத் தலைவரை இந்திய அனுப்புவதற்கு பாதர் சிங்கராயரும் அவருக்குப் பின்னால் இருந்த பல ஊர்காரரும்தாம் காரணம்.இன்றோ சிங்கராயர் யாரெனக்கேட்கும் காலத்தில்-அதை உங்களுகுச் சொல்லக்கூடிய நேரம் வந்துள்ளது.இளைஞர்கள் தெரிந்துகொள்ளுங்கள்.

கறுப்பி said...

எல்லோரது கருத்திற்கும் நன்றி மிகவும் அவதானமாகவும் ஆறுதலாகவும் வாசிக்க வேண்டி உள்ளது. சிறிரங்கனின் நேற்றைய பின்னூட்டத்திற்குப் பதில் உடனே எழுத முடியாமல் போய் விட்டது.

சிறிரங்கன் எனக்குத் தெரிந்ததை இங்கே குறிப்பிடுகின்றேன். ஈபிடிபியின் ஆரம்ப உறுப்பினரான ரமேஷ் தினமுரசில் தொடர்ந்து எழுதி வந்த கட்டுரையில் ஈபிடிபி தான் ராஜினியைக் கொன்றது என்ற அவரின் எழுத்தே பலரைத் திசை திருப்பி விட்டிருந்தது. தான் தான் கொன்றது என்று ஒருவர் நேரடியாக வந்து கூறும் வரை எல்லாமே சந்தேகமானதுதான். இருந்தும் ராஜினியுடன் மிக நெருங்கியவர்களும் அவரது குடும்பமும் மிகவும் திடமாக எந்த விதக் கருத்து மாற்றமும் இன்னி விடுதலைப்புலிகள் தாம் இதனைச் செய்தார்கள் என்று அன்றும் இன்னும் கூறி வருவதற்கு நிச்சயமாக ஒரு காத்திரமான காரணம் இருக்க வேண்டும் என்று தங்களில் ஒருவரும் நம்பவில்லையா? இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் கனேடித் திரையரங்கு மேடையில் ஏறி நின்று சிறிதேனும் சந்தேகமில்லாமல் நிர்மலா விடும் அறிக்கையை நாம் அசட்டை செய்து விடமுடியாது என்பது என் கருத்து.

யார் கொன்றிருந்தால் என்ன கொல்லப்பட்டவர் மனிதாபிமானம் நிறைந்த கல்வித் தகமையில் எம் நாட்டிற்கு இப்போது மிகவும் தேவைப்படும் மருத்துவ பீடத்தின் தலமையில் இருந்த ஒரு இளம் தமிழ் பெண். கொன்றவர்கள் தமிழர்.

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்

வன்னியன் said...

சிங்கராயர் அடிகளாரைப்பற்றி இங்கே பலருக்கும் தெரியாதது எனக்கும் ஆச்சரியம்தான். அவர் ஒரு விடுதலைப்புலியாகவே பார்க்கப்பட்டார். அவரின் மரணச்சடங்குகூட புலிகளின் சடங்குபோல நடத்தப்பட்டது. புலிகளின்குரலிலும் நிகழ்ச்சி போடப்பட்டது. மேலும் சிங்கராயர், அவருடன் சிறையிருந்த ஜெயகுலராஜா ஆகியோரின் பதிவுகள் ஒளிவீச்சிலும் வந்திருந்தன.

கறுப்பி said...

ஈழநாதன்
//ஆதலால் இந்தப் படம் கனடாவில் வெளிவந்திருக்கும் காலத்தைப் பார்க்கையில்(கனடா புலிகளுக்கு ஆதரவான ஒரு நிலை எடுக்க ஆரம்பிக்கையில்-புலிகளைத் தடை செய்ய மறுத்த நேரத்தில்) நோக்கத்தைச் சந்தேகிக்கிறேன்.\\

இப்படியென்று யார் கூறினார்கள். அடுத்து விவரணப்பட முடிவில் இப்படத்தின் இயக்குனரான Helene Klodawsky விடம் ஒருவர் தொடுத்த கேள்வி எத்தனையோ நாடுகள் இருக்கையில் ஏன் ஈழத்தைச் சேர்ந்த ராஜனியின் வாழ்வை படமாக்க நினைத்தீர்கள்? என்பது. அதற்கு அவர் வைத்த பதில் தன்னிடம் போர் சம்பந்தமான ஒரு விவரணப்படத்தை எடுக்க முடியுமா? என்று கனேடிய திரைப்பட நிறுவனம் கேட்ட போது தான் பல நாடுகளை மனதில் கொண்டு ஆராய்ந்ததாகவும் ஈழப்போராட்டம் பற்றியும் அது பற்றிய விவரணப்படங்கள் அதிகம் வெளிவரவில்லை என்பதால் "போரும் சமாதானமும்" என்ற தலைப்பில் பீஸ் ரோக் பற்றி எடுக்க நினைத்து தனது ஈழத்து மாணவர்களிடம் இது பற்றிக் கேட்ட போது அவர்கள் நகைச்சுiவாயாகக் கிண்டலடித்துச் சிரித்தார்கள் என்றும் அப்போது ஒரு மாணவி ராஜனி பற்றிக் கூறி அவரைப் பற்றி எடுங்கள் என்று சொன்ன போது பொதுவான பிரச்சனைகளை எடுப்பதிலும் விட ஏதாவது ஒரு நாட்டில் ஒருவரின் தனிப்பட்ட தாக்கத்தை அவரின் உழைப்பை எடுப்பது நல்லது என்று தோன்றியதால் பின் ராஜனியைப் பற்றி ஆராய்ந்து அவரின் சகோதரி நிர்மலாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டி உரையாடிய போது தனக்கு மிகவும் சுவாரஷ்யமாக இருந்ததென்றும் கூறினார். எனவே ஈழநாதன் கூறியது போல் இதில் சந்தேகிக்க ஒன்றும் இல்லை. கனேடிய திரைப்பட நிறுவனம் ஒரு இயக்குனரிடம் மிகவும் சுதந்திரமாக அவரின் விருப்பத்திற்கு ஏற்ப போர் சு10ழல் பற்றி எடுக்கக் கேட்டுக் கொண்டதற்கிணங்க வெளி வந்ததுதான் இந்த விவரணப்படம்.

இந்த வேளை நிர்மலா கூறியது. ஒரு சிங்கள இயக்குனர் ராஜினியின் வாழ்வைத் திரைப்படமாக்க வேண்டும் என்ற கேட்டு தாம் சம்மதித்த போது ராஜனியின் வாழ்வென்று சொல்லிக் கொண்டு ஒரு சாதாரண ஜனஞ்சக திரைப்படத்தைத் தந்தது தமக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது என்றும், பின்னர் கனேடியர்கள் தன்னுடன் தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டபோது தான் பல சந்தேகங்களை கேட்டுத் தெளிவு படுத்திய பின்னரே நம்பிக்கையின் பெயரில் சம்மதித்ததாகவும் தற்போது திருப்தியாகவும் சந்தோஷமாகவும் இருப்பதாகக் கூறினார்.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

very informative.thanks to karuppi and the respondents.i noted that this got 6 stars only while some other post that was an exercise in disinformation got more than 15 stars.what an irony.

கறுப்பி said...

இன்னுமொரு விடையத்தைக் குறிப்பிடலாம் என்று விரும்புகின்றேன். கேள்வி பதில் பகுதியில் பல இயக்கங்கள் இயங்கிக்கொண்டிருந்த காலத்தில் ஏன் விடுதலைப்புலிகளுடன் இணைந்து கொண்டீர்கள். தற்போது அவர்களைப் பற்றிக் குறை கூறுகின்றீர்கள்? என்று நிர்மலாவிடம் கேட்கப்பட்ட போது தான் தமிழ் மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அது பற்றி உரையாடுவதாகவும் அப்போதெல்லாம் பல இயக்கத்தையும் சேர்ந்தவர்கள் தம் வீட்டிற்கு வந்து போய்க் கொண்டிருந்ததாகவும் உதாரணமாக புளொட் போன்றவர்கள் நிறம்ப உலக அறிவு கொண்வர்களாக பேச்சுத் திறமை கொண்டவர்களாக இருந்தார்கள் அவர்களுடன் சேர்ந்து இருந்து இன்ரலக்சுவல்ஸ் தன்மையில் உரையாடலாம் ஆனால் விடுதலைப்புலிகளிடம் செயற்பாட்டுத் திட்டம் ஆவேசம் இருந்தது. அவர்கள் கொடுத்த திட்டம் தன்னைக் கவர்ந்திருந்தது அதனால் இணைந்து கொண்டேன். அதன் பின்னர் அது ஒரு குழுவாக இயங்கும் எல்லோரும் கருத்துப் பரிமாறி நல்ல திட்டங்களைச் செயல்படுத்தலாம் என்ற தன் நம்பிக்கை போய் இது ஒரு தனிமனிதனின் தலமையில் இயங்கும் இயக்கம். தனிமனிதனின் ஆணைக்குக் கட்டுப்பட்டுக் கேள்விகள் இன்றி இயங்கத் தன்போன்றோருக்கு உடன்பாடு இல்லாததால் விலகிக் கொண்டோம் என்றும் கூறினார். அவ்வப்போது தவற விட்டவை நினைவில் வரும்போது பதிவில் போடுகின்றேன்.

suratha yarlvanan said...

ஈழநாதன் said...
.

//சுரதா நீங்கள் கூறும் சிங்கராயர் தான் டேவிட் ஐயாவா? //

மட்டக்களப்பு சிறையுடைப்புக்கு திட்டம் வரைந்தவர் டேவிட் ஐயா என்று சொல்வார்கள்.
பெயரிலி சொன்னதுபோல் விகடனிலும் இவரது செவ்வி வந்திருந்தது.

இவர் தற்போது ஒரு புத்தகம் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார்.ஒரு பேப்பரில் இது பற்றிய ஒரு அறிமுகம் கண்டதாக ஞாபகம்.

சிங்கராயார் வேறு டேவிட் ஐயா வேறு என்று
சிறீரங்கன் விளக்கிவிட்டார் .இந்த அருட் தந்தை ஒரு காலத்தில் குருநகர் பாஷையூர் மக்களுக்கு கடவுள் மாதிரி இருந்தவர்

ஈழநாதன்(Eelanathan) said...

கறுப்பி நான் நோக்கத்தைச் சந்தேகிக்கிறேன் என்று சொன்னதற்கு பெயரிலி பதிலளித்திருக்கிறார்.ராஜனி என்ற பெண் செய்த அத்தனை நல்ல காரியங்களையும் அவருக்கு ஏற்பட்ட தடங்கல்களையும் விமர்சிப்பதை விடுத்து அவரைக் கொன்றது யார் என்ற புள்ளியைப் பெரிதுபடுத்துகிறார்களோ என்று தோன்றியது.அத்தோடு வெளிநாட்டவர் ஒருவர் படம் எடுத்திருப்பதால் அது நிச்சயம் நடுநிலையாக இருக்குமென்று நம்பத் தயாரில்லை.தயவுசெய்து இதனைப் புலிகள் செய்யவில்லை என நிரூபிக்க நான் முனைவதாக நினைக்கவேண்டாம் வேறும் பல புள்ளிகள் இருக்ககூடும் என நினைக்கிறேன்.சிறீரங்கன் கூற்றுக்கு என்ன ஆதாரம் என்று அவரே சொன்னால் தெளிவாகலாம்.

பெயரிலி,சிறீரங்கன்,வன்னியன்,சுரதா நன்றி
காந்தியம் டேவிட் ஐயாவையும் வண.பிதா சிங்கராயரையும் போட்டுக் குழப்பிவிட்டேன்.சிறீரங்கன் நீங்கள் குறிப்பிட்ட சம்பவம் வாசித்திருக்கிறேன் மறந்துவிட்டது சுட்டியதற்கு நன்றி

கறுப்பி said...

//அத்தோடு வெளிநாட்டவர் ஒருவர் படம் எடுத்திருப்பதால் அது நிச்சயம் நடுநிலையாக இருக்குமென்று நம்பத் தயாரில்லை\\

நிச்சயமாக ஈழநாதன். படத்தின் இயக்குனர் ராஜனியின் அக்காவான நிர்மலாவின் உதவியுடன் தான் இயக்கியுள்ளார். எனவே நிர்மலாவின் கருத்துக்கள் பல அங்கே இயல்பாகவே நுழைய நிறைய சந்தர்பங்கள் இருக்கின்றன. முற்றுமுழுதாக விவரணப்படத்தைத் தனது உரையாடலால் கொண்டு சென்றவரும் அவரே. அது மட்டுமல்ல ராஜினி பற்றிய விவரணப்படத்தில் படம் தொடங்கிக் குறிப்பிட்ட நேரத்திற்கு நிர்மலா புராணமாகத்தான் இருந்தது. அதாவது அவர் கல்வித்தகைமை, ஸ்கொலஷிப் கிடைத்து அவர் அமெரிக்கா சென்றபோது அமெரிக்கர்கள் அவர் ஆங்கிலம் கண்டு வியந்தது. உண்மையைச் சொல்லப் போனால் கொஞ்சம் சுயவிளம்பரம் செய்தார் நிர்மலா. இது எனக்கு நெருடாக இருந்தது. இருந்தாலும் ஒருவரும் அதனைக் கண்டு கொள்ளாததால் நானும் மௌனமாகிவிட்டேன். மற்றைய சகோதரிகளான வாசுகியும் சுமதியும் ராஜனியின் கணவர் தயபாலாவும் முற்றுமுழுதாக ராஜினி பற்றிய நல்ல தகவல்களையும் அவரோடு தமக்குண்டான உறவையும் தந்தார்கள்.

Sri Rangan said...

கருப்பி, இந்த நிர்மலா-ரஜினி படப்பிரச்சனையை இத்தோடு விடுங்கள்.மனிதர்கள் தொடர்ந்தும் கொலையாகிறார்கள்.என்னசெய்வோம்?இது தேறாத இலங்கையை எடுத்தியம்புகிறது.தினமும் கொலையாகிவரும் இலங்கையருக்கு யாருதாம் என்ன செய்ய முடியும்?இலங்கைக்கு சுனாமி வந்து பாடஞ்சொல்லியும் திருந்தாத கேடுகெட்ட இழி மானுடர்களாக இலங்கைத் தமிழர்கள்-சிங்களவர்கள் இருக்கிறார்கள்.இந்த நாட்டை யாருமே காப்பாற்ற முடியாது.இது தேறாத நொண்டி நாடு.

கறுப்பி said...

நிச்சயமாக சிறீரங்கள் ஒருவித களைப்பு வந்து விட்டது. புளொக்கில் கூட தற்போதைக்கு புதிதாய் எதுவும் எழுதும் எண்ணமில்லை.

-/பெயரிலி. said...

http://www.orupaper.com/issue23/pages_K__9.pdf

கறுப்பி said...

thanks Payarili

Anonymous said...

ராஜினியைக் கொன்றது புலிகளா, ஈ.பி.ஆர்.எல்.எப்பா... என்று நீண்ட விவாதமே நடந்திருக்கிறது. 2005இல் நடந்த இந்த விவாதத்தை இப்போதுதான் எனக்குப் பார்க்கக் கிடைத்தது. இரண்டு தரப்புமே போதிய ஆதாரங்களின்றி தத்தம் மன விருப்பிற்கேற்ப விவாதித்திருக்கிறார்கள். ஈ.பி.ஆர்.எல்.எப்தான் சுட்டதென்பதற்கு விவாதித்தவர்கள் கொடுக்கும் ஆதாரம் தினமுரசில் அற்புதன் என்ற அற்புதராசா நடராசா ஆகிய ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் எழுதிய அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரையென்ற தொடர் கட்டுரைதான்.

இந்த அற்புதன் ஆசிரியராக இருந்த தினமுரசில் நாரதர் என்ற பெயரில் அவரே எழுதி வந்த எக்ஸ்ரே ரிப்போர்ட்டிலும் அவரின் தலைமையின்கீழ் இலங்கை வானொலியில் தயாரிப்பாகி ஒலிபரப்பப்பட்டு வந்த மக்கள் குரலிலும் வந்த இரண்டு உதாரணங்களைத் தருகிறேன்.

முதலாவது, யாழ்ப்பாணத்திற்கான அனைத்துப் பாதைகளும் மூடப்பட்டு கிளாலிக் கடற்பாதை மட்டும் போக்குவரத்துப் பாதையாக இருந்த சமயம் ஒருமுறை கிளாலியைக் கடந்துவந்த படகொன்றின் மீது படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் படகில் வந்தவர்கள் கொல்லப்பட்டார்கள். அந்தச் செய்தியை அற்புதன் நடத்திய மக்கள் குரலில் புலிகள் கொல்லப்பட்டதாகவே தெரிவித்திருந்தார்கள். கொல்லப்பட்டவர்களில் ஒருவர் எனது நண்பனின் தந்தையார். அரசாங்க உத்தியோகஸ்தர். அலுவலகக் கடமையின் நிமித்தம் கொழும்புக்கு வரப் புறப்பட்டவர். இதனை அன்றைய கால கட்டத்தில் வெளிவந்த சரிநிகர் பத்திரிகை அம்பலப்படுத்தியிருந்ததைப் பார்த்த ஞாபகம் எனக்குண்டு.

இதேபோல் நாரஹேன்பிட்டியிலுள்ள விகாரையில் தங்கியிருந்த ஓய்வு பெற்ற தபாலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்ட போது புலிகளுக்காக வேலை செய்த அரச ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக தினமுரசு எழுதியிருந்தது. கூடவே விகாரை வளவில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களையும் பொலிஸார் தோண்டி எடுத்ததாக அது எழுதியிருந்தது. ஆனால் பின்னர் விகாரையின் தலைமைப் பிக்கு இந்தத் தகவல் தவறு என்றும் அவ்வாறு ஆயுதங்கள் எதுவும் அங்கிருந்து எடுக்கப்படவில்லையென்றும் தொலைக்காட்சிக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். விசாரணைகளின் பின்னர் ஓய்வு பெற்ற தபாலதிபர் குற்றச் சாட்டெதுவும் சுமத்தப்படாமலேயே நிரபராதியென விடுதலை செய்யப்பட்டார். இதனையும் சரிநிகர் மிகத் தெளிவாக தினமுரசின் அரசியலை அம்பலப்படுத்தி எழுதியிருந்தது. இந்தக் காலகட்டம் ஈ.பிஆர்.எல்.எப்க்கும் புலிகளுக்கும் எதிராக ஈ.பி.டி.பி அரசியல் தினமுரசில் வெளிவந்த காலகட்டம்.

பின்னர் குமார் பொன்னம்பலம் ஊடாக புலிகளுடன் தொடர்பேற்படுத்திக் கொண்டு அவர்களிடம் பாவமன்னிப்புக் கேட்ட பின்னர் அற்புதன் புலிகளின் பிரச்சாரகராக மாறினார். அந்தக் காலகட்டத்தில் தான் அவர் ராஜினி கொலையை புலிகள் செய்யவில்லை ஈ.பி.ஆர்.எல்.எப்பே செய்தது என்றுஎழுதினார். இவ்வாறான அற்புதனின் திருகுதாளங்களை வைத்துக் கொண்டு வரலாற்றை ஆய்வு செய்தல் எவ்வளவு மடமையானது என்று நான் கூறத் தேவையில்லை.

எல்லா இயக்கங்களுமே தங்களுக்குபிடித்தமில்லாத கருத்துக்களை அழிக்க அயுதத்தைப் பாவித்தது என்பது தான் உண்மை. இதில் யார் கூட அல்லது யார் குறைய என்று பொழுது போகாவிட்டால் நீங்கள் வலையில் மயிர் பிடுங்கி விவாதிக்கலாம். அதற்கேது நமக்கு நேரம்.