Thursday, April 14, 2005
எனக்கேன் வம்பு..
சந்திரமுகி, சந்திரமுகி, சந்திரமுகி.. எங்கை பாத்தாலும் சந்திரமுகி. பொழுது போக்கிற்காக ஆரம்பித்த சினிமாத்துறை தற்போது முக்கியமாக இந்தியாவில் ஒரு மாநிலத்தை ஆளும் சக்தியைப் பெற்றுக்கொண்டு விட்டது. ஒரு நாட்டின் வளத்தை மக்களை கட்டிக்காப்பதற்கு மக்களின் தேவை நாட்டு வளம் போன்றவற்றில் அக்கறை உள்ள பரிச்சயம் உள்ள ஒருவர்தான் தலைவராக வரவேண்டும் என்பது போய் கோடிகோடியாகப் பணம் சம்பாதிக்கும் ஒரு நடிகன் வரமுடியும் என்பது எவ்வளவு முட்டாள்தனம். நாட்டை ஆளுவதற்குப் கல்வி முக்கியமில்லை பேட்டை ரௌடியோ, ஒரு முன்னணி நடிகனோ வரமுடியும் என்பதைக் கிண்டலடித்து தமிழ் சினிமாவில்தான் காட்டுகின்றார்கள். அப்படியிருந்தும் இந்திய மக்கள் சினிமாக்காறரைத் தூக்கித் தலையில் வைத்துத் “தலைவன்” என்ற பெயர் சு10ட்டிக்கொண்டாடுவது சகிக்கமுடியாமல் இருக்கின்றது. பாமரமக்களை உபயோகித்து ரஜனி போன்றவர்கள் கோடிக்கணக்கில் தமது வங்கிக் கணக்கை நிறைத்துக் கொள்வதோடு மட்டுமல்ல அரசியலுக்குள் நுழைந்து இன்னும் தமிழ்நாட்டைக் குட்டிச்சுவராக்கும் எண்ணத்தோடு இருக்கின்றார்கள் என்பதை ஏன் மக்கள் புரிந்து கொள்கின்றார்கள் இல்லை.
நல்ல ஒரு நடிகனைக் கலைஞனை அவரின் திறமைக்காகப் பாராட்டலாம் மதிக்கலாம். ஆனால் ரஜனி? (முன்பு ஒரு காலத்தில் நடித்தார் “முள்ளும் மலரும் “ஆறிலிருந்து அறுபது வரை” “16 வயதினிலே” போன்ற படங்களில்) ஆனால் இப்போது அறுபதை அண்மித்த அல்லது தாண்டிய தலை நரைத்த, தாடி நரைத்த, ஒரு கிழவன் தன் மகளின் வயதான நடிகைகளுடன் நடிப்பது அதை மக்கள் ரசிப்பது அந்த வாக்கில் இன்னும் தன்னைக் கொழுக்க வைப்பது ஐயோ ஐயோ ஐயோ என்னத்தைச் சொல்ல? இதற்குக் காணரம்; தனது ரசிகர்கள் என்கிறார் ரஜனிக்காந்த். இளைஞனாக வந்து காதலித்து டூயட் பாடி சண்டை பிடித்து இதுதானாம் ரசிகர்களுக்குத் தேவை எனவே அவர் கொடுக்கின்றார். ரசிகர்கள் ஏன் இப்படிக் கோழைகளாக இருக்கின்றார்கள்?? இந்தியச் சினிமா ஏன் இப்படிச் சீர்கெட்டுப் போகின்றது. வெறுமனே வேகமாக நடப்பதற்கும் தலையைக் குலைப்பதற்கம் எறிந்து போட்டுச் சிகரெட் பிடிப்பதற்கும் ஏன் மக்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். எல்லாம் ரஜனியின் அதிஷ்டம். பஸ்ஸில் டிக்கெட் கிழிந்தவனுக்கு கோடீஸ்வரனாக வேண்டும் என்று தலையில் எழுதியிருக்கின்றது. தலையில் எங்கோ நல்ல இடத்தில சுளி இருக்குப் போல.
நான் இந்தியா சென்றிருந்த போது சாலிக்கிராமத்தில் விஜெயின் வீட்டைக் கண்டேன். வீட்டிற்கு முன்னால் குன்றும் குளியுமான வீதியில் மழை நீர் தேங்கிக் கிடக்கின்றது. அடுத்த தெருவில் வீதியில் மலம் கழிக்கும் குழந்தைகள். பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது. இந்த வீதியைக் கடந்து காரில் செல்வாராம் விஜெய் ஏ.சீ காருக்குள் ஏறிவிட்டால் வீதி பற்றிக் கவலை எதற்கு? இது சினிமாத்துறையால் தம்மைக் கொழுக்க வைத்த எல்லோருக்கும் பொருந்தும். பாமரமக்களின் டிக்கெட் பணம்தான் தமது வங்கிக் கணக்கை நிர்ணயிக்கிறது என்பதை இவர்கள் யாராவது சிந்தித்ததுண்டா?
இந்தியத் தமிழ் மக்களே என்னவோ பண்ணித் தொலையுங்கோ எனக்கேன் வம்பு நானும் சந்திரமுகி பார்க்க வேணும். ஜோதிகாவை எனக்குப் பிடிக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
40 comments:
இந்தியத் தமிழ் மக்கள்: "என்னவோ பண்ணித் தொலையுங்கோ எனக்கேன் வம்பு நானும் சந்திரமுகி பார்க்க வேணும். ஜோதிகாவை எனக்குப் பிடிக்கும்." ;-)
சூப்பரா சொல்லி இருக்கீங்க :) அடுத்து ஜேம்ஸ் பாண்ட் படங்கள், கேபிடலிஸம் என்றும் எடுத்து சொல்லுங்க :>
கதிர்காம ;-) போஸ்டன் பாலா நான் ஜேம்ஸ் போண்டை அப்படிப் பார்க்கவில்லை. றீகன் எப்படியோ நுழைந்து விட்டார். ஆனல்ட் உம் முயற்சி செய்தார். இந்தியா அளவிற்கு அமெரிக்கர்கள் சினிமாவையும் அரசியலையும் போட்டுக் குழைக்கவில்லை என்றே நம்புகின்றேன்.
அதென்னமோ தெரியல இந்த சினிமா நட்சத்திரங்கள் மேலே மட்டும் இத்தனை கோவத்தை எல்லோரும் காட்டுரீங்க... என்னமோ ஈசி சேரில் குந்திக்குனு லட்சம் லட்சமாக சம்பாத்திக்கிற மாதிரி குத்தம் சொல்லுரீங்க இது நியாயமா?
//எல்லாம் ரஜனியின் அதிஷ்டம். பஸ்ஸில் டிக்கெட் கிழிந்தவனுக்கு கோடீஸ்வரனாக வேண்டும் என்று தலையில் எழுதியிருக்கின்றது. தலையில் எங்கோ நல்ல இடத்தில சுளி இருக்குப் போல.//
ரஜினி எதோ ஓசி லாட்டரில சொத்து குவிச்ச மாதிரியில்ல சொல்லுரீக. அவரும் உழைச்சுத்தான் சோறு தின்னுராரு... அவரை உங்களுக்கு பிடிக்காம போவலாம்... அதுக்காக தரைமட்டத்திலேயிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மேலெழும்பிய அவரின் உழைப்பை கொச்சைப் படுத்தாதீங்க
//ஆனால் இப்போது அறுபதை அண்மித்த அல்லது தாண்டிய தலை நரைத்த, தாடி நரைத்த, ஒரு கிழவன் தன் மகளின் வயதான நடிகைகளுடன் நடிப்பது அதை மக்கள் ரசிப்பது அந்த வாக்கில் இன்னும் தன்னைக் கொழுக்க வைப்பது ஐயோ ஐயோ ஐயோ என்னத்தைச் சொல்ல?//
சினிமாவிலும் டிராமாவிலும் நடிக்கறுத்துக்கு வேஷம் கட்டுறது அப்படினுதான் அர்த்தம். அறுவது வயசு ஆலு மேக்கப் போட்டுகுனு இருவது வயசு பெண்னுடன் ஆட்டம் போடருதுல ஒரு தப்பும் எனக்கு தெரியல.
//இந்த வீதியைக் கடந்து காரில் செல்வாராம் விஜெய் ஏ.சீ காருக்குள் ஏறிவிட்டால் வீதி பற்றிக் கவலை எதற்கு?//
பியூனிலிருந்து பிரதமர்வரை எல்லோரும் மக்கள் வரிப் பணத்தில்தான் வாழ்ந்து வருகிறோம். ரோட்டில் மலம் கழிக்கும் நிலையிருப்பின் விஜய் தான் லெட்ரின் கட்டித்தரனுமுனு எதிர்ப்பார்ப்பது எந்தவிதத்தில் நியாயம்? இந்த விசயத்தை கண்டும் காணாததுபோல் நித்தமும் அதே தெருவில் நடந்துபோகும் நமக்கும் விஜய் மேல் நீங்கள் சாற்றும் குற்றமிருக்கிறது.
சினிமா அவர்களது தொழில். அவர்களை பிடிக்கவில்லையா... நீங்கள் அவர்களை புறக்கணியுங்கள் .. மத்தவனுக்கு ஏன் அவரை பிடிக்குதுனு மண்டையை குடையாதீங்க.
ரவிக்குமார் சொல்வதிலும் நியாயம் உள்ளது. என்ன கறுப்பி சரியா?
படத்தை அபத்தம் என்று விமர்சிப்பது தப்பே இல்லை. ஆனால், உங்களது பொதுவான சில கருத்துக்களில் எனக்கு ஒப்புதலில்லை.
//பாமரமக்களை உபயோகித்து ரஜனி போன்றவர்கள் கோடிக்கணக்கில் தமது வங்கிக் கணக்கை நிறைத்துக் கொள்வதோடு மட்டுமல்ல//
"உபயோகித்து" என்றால்? நடித்துச் சம்பாதிப்பது தானே? அவ்வளவு 'சம்பாதித்த'/சம்பாதித்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட லல்லு பிரசாத் யாதவ் என்ன சினிமா நடிகரா?
//அறுபதை அண்மித்த அல்லது தாண்டிய தலை நரைத்த, தாடி நரைத்த, ஒரு கிழவன் தன் மகளின் வயதான நடிகைகளுடன் நடிப்பது//
ஜாக் நிக்கல்ஸனின் பல படங்கள், Last Tango in Paris என்று பட்டியல் போடக்கூடிய இன்னபிற கணக்கற்ற படங்களெல்லாம்?
//பஸ்ஸில் டிக்கெட் கிழிந்தவனுக்கு கோடீஸ்வரனாக வேண்டும் என்று தலையில் எழுதியிருக்கின்றது. தலையில் எங்கோ நல்ல இடத்தில சுளி இருக்குப் போல.//
அங்கே நடந்தால் "சுழி", இதே இங்கே நடந்திருந்தால், "American Dream", இல்லையா? பஸ்ஸில் அடுத்தவன் பர்ஸுக்கு பிளேடு போடுவது வேண்டுமானால் கேவலமாக இருக்கலாம். பிழைப்புக்காக டிக்கெட் கிழிப்பது எந்தவிதத்தில் கேவலம்?
ரஜினியிடம் முட்டாள்தனம் இல்லையென்றில்லை. ஆனாலும், "சினிமாப் புகழை அரசியலுக்கு உபயோகித்துக்கொள்வது" என்று போட்டுத் தாக்குவது வரவர ஒரு சௌகரியமான க்ளிஷேவாகிப்போய்விட்டதென்று நினைக்கிறேன். சினிமாக்காரன்/காரிகள் என்ன சிகரெட்டைத் தூக்கிப்போடும், டூயட் பாடும், after all வெறும் கூத்தாடிப் பயல்கள்தானே என்று ஆழ்மனத்தில் உறைந்துபோய்விட்ட கசடுதான் பொதுவாக இப்படி வெளிவருகிறதோ என்று தோன்றுகிறது (பொதுவாகச் சொல்கிறேன்). அரசியலுக்கு வரும் வக்கீல்களையெல்லாம் குற்றவாளிகளின் தொண்டரடிப்பொடிகள், மருத்துவர்களையெல்லாம் நோயாளிக் கொலைகாரர்கள், பொருளாதார நிபுணர்களெல்லாம் ஹர்ஷத் மேத்தாக்கள் என்றுமட்டும் யாரும் ஏன் சொல்வதில்லை என்றும் யோசிக்கத் தோன்றுகிறது. லே வாலேஸா, ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்றபிறகு பழையபடி துறைமுக வேலைக்குப் போனாரென்று படித்திருக்கிறேன். அதை உதாரணமாக வைத்துப் பார்த்தால் தற்போதைய "அரசியல்வாதி" களில் ஒரு ஆள் கூடத் தேறாது. அதைச் சொல்லி அதை ஒரு நிர்ணயமாக வைக்கமுடியுமா என்ன?
ஏம்பா, இங்கே கருத்து சுதந்திரம் இல்லையா? அவுங்க கருத்தை அவுங்க சொன்னாங்க.இது தப்பா?
என்றும் அன்புடன்,
துளசி.
சினிமாக்காரர்களும் முதல்வராவதில் தவறில்லை.. சினிமாக்காரர்கள் மட்டுமே முதல்வர்கள் ஆக முடிவதென்ரால் எங்கோ தவறிருக்கிறது.
///றீகன் எப்படியோ நுழைந்து விட்டார். ஆனல்ட் உம் முயற்சி செய்தார். இந்தியா அளவிற்கு அமெரிக்கர்கள் சினிமாவையும் அரசியலையும் போட்டுக் குழைக்கவில்லை என்றே நம்புகின்றேன்.///
கறுப்பி,
எனக்கு அப்படித் தோணவில்லை.
அமெரிக்காவில் சினிமாவில் இருந்து ஜனதிபதியானவர்களும், கவர்னரானவர்களும் இல்லையா என்ன ?.
நாட்டின் எந்தக் குடிமகனுக்கும் தேர்தலில் போட்டியிடவும், மக்கள் அனுமதித்தால் ஆளவும் உரிமை உண்டு. எத்தனையோ கொள்ளைக்காரரகளும், கொடூரமான மனம் படைத்தவர்களும்கூடத்தான் அரசிலுக்கு வந்துவிடுகிறார்கள்.
சினிமாவில் நடிப்பதால் மட்டுமே ( ஆணோ அல்லது பெண்ணோ) அரசியலில் நுழையும் தகுதி குறைந்துவிடுவதில்லையே.
//சந்திரமுகி, சந்திரமுகி, சந்திரமுகி.. எங்கை பாத்தாலும் சந்திரமுகி.
Blah blah blah
more blah blah blah
எனக்கேன் வம்பு நானும் சந்திரமுகி பார்க்க வேணும். ஜோதிகாவை எனக்குப் பிடிக்கும்.//
இந்த முதல் கடைசி வரிகளை மட்டும் எழுதியிருந்தாலே effective ஆக இருந்திருக்கும். வேறெதிலும் ஒத்துப் போக முடியவில்லை.
அன்புள்ள சுமதி ரூபன் @ கறுப்பி,
//பாமரமக்களை உபயோகித்து ரஜனி போன்றவர்கள் கோடிக்கணக்கில் தமது வங்கிக் கணக்கை நிறைத்துக் கொள்வதோடு மட்டுமல்ல அரசியலுக்குள் நுழைந்து இன்னும் தமிழ்நாட்டைக் குட்டிச்சுவராக்கும் எண்ணத்தோடு இருக்கின்றார்கள் என்பதை ஏன் மக்கள் புரிந்து கொள்கின்றார்கள் இல்லை. //
உங்களுக்கே இது நல்லாயிருக்கா.குறும்படம் பெரும்படம்ன்னு இயக்கி நடிச்சிகிட்டு இருக்கிற நீங்க இப்படி ஒரு கேள்வியை போடுறீங்களே.உங்களுக்கு தெரியாதா படம் எடுப்பதும்,நடிப்பதும் பற்றி. ரஜினி ஒன்னும் மக்களை ஏமாத்தி பணத்தை பேங்குல போட்டுக்கிடல. நடிக்கிறார். அதற்கான ஊதியம். தமிழ்சினிமாவில் எத்தனையோ பேர் வருகிறார்கள். யாரும் மக்கள் மனதில் இந்த பெரிய இடத்தில் தங்கவில்லையே. அரசியலுக்கு வந்தால் மக்கள் குட்டிசுவர் ஆவார்களா இல்லையா என ஆருடம் சொல்லலாம். இப்போதைக்கு சொல்ல வேண்டாம்.
நல்ல ஒரு கலைஞனாகத் தான் ரஜினி இருக்க வேண்டும் என்பதே என் ஆவல்.ரஜினியை பார்க்கும் அதே கண்ணோட்டத்தில் தான் கமலையும் பார்க்கிறேன். எண்டர்டெய்ன்மெண்ட் இல்லை என்றால் அவனவன் கிறுக்கு பிடிச்சி அலைவான். அந்த வகையில் எண்டர்டெய்ன்மெண்ட் கொடுக்கும் கலைஞர்கள் குறைந்தவர்கள் இல்லை.
//தனது ரசிகர்கள் என்கிறார் ரஜனிக்காந்த். இளைஞனாக வந்து காதலித்து டூயட் பாடி சண்டை பிடித்து இதுதானாம் ரசிகர்களுக்குத் தேவை //
ஆம். இது தான் தேவை. மனதுக்கு பிடித்தவர்கள் எப்போதுமே சந்தோசமாக/இளமையாக இருக்கவேண்டும் என்று நினைப்பதில்லையா?
//வெறுமனே வேகமாக நடப்பதற்கும் தலையைக் குலைப்பதற்கம் எறிந்து போட்டுச் சிகரெட் பிடிப்பதற்கும் ஏன் மக்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள்//
ரஜினி ஒரு ஆளுக்கு தானே முக்கியதுவம் கொடுக்கிறோம். நீங்களோ அல்லது நானோ படம் எடுத்து அதில் நடித்து சிக்ரெட்டை தூக்கி போட்டால் யார் தான் பார்ப்பார்கள் :-)
ரசிகனுக்கும், வெறிபிடித்த ரசிகனுக்கும் வித்தியாசம் இருக்குதுங்கோ. அந்த ரசிகனும் வெறிபிடித்த ரசிகர்கள் செய்யும் கோமாளி தனத்துடன் ரஜினி படத்தை பார்ப்பதே தனி சுகமுங்கோ.பர்ஸ்ட் டே ரஜினி படத்தை ரசிகர்களோட சேர்ந்து பாருங்கோ. ஜென்ம சாபல்யம் அடைஞ்சிருவீங்க, இப்படியெல்லாம் எழுத மாட்டீங்க :-)))
கறுப்பி : உங்கள் கருத்துக்களில் பலவும் அபத்தமானவை
இது இரவிக்குமாருக்கு –
//அதென்னமோ தெரியல இந்த சினிமா நட்சத்திரங்கள் மேலே மட்டும் இத்தனை கோவத்தை எல்லோரும் காட்டுரீங்க... என்னமோ ஈசி சேரில் குந்திக்குனு லட்சம் லட்சமாக சம்பாத்திக்கிற மாதிரி குத்தம் சொல்லுரீங்க இது நியாயமா?\\
சினிமா நட்சத்திரத்தில கோவத்தைக் காட்டுறது ரொம்ப ஈசி. காரணம் சினிமா நட்சத்திரங்களும் அரசியல்வாதிகளும் தான் (சினிமாவால் வந்த) கடல் தாண்டியும் மற்றவர்களுக்குக் கஷ்டத்தைக் கொடுப்பவர்கள். மற்றைய தில்லுமுல்லுக்கள் எங்களை வந்து அடைவதில்லை. அடைந்தவற்றை அலசலாம் தானே? சினிமாக்காறர்களில் எனக்குக் கோபம் இல்லை. நல்ல நடிகர்களிலும் கலைஞர்களிலும் எப்போதுமே கறுப்பிக்கு மரியாதை உண்டு.
//ரஜினி எதோ ஓசி லாட்டரில சொத்து குவிச்ச மாதிரியில்ல சொல்லுரீக. அவரும் உழைச்சுத்தான் சோறு தின்னுராரு... அவரை உங்களுக்கு பிடிக்காம போவலாம்... அதுக்காக தரைமட்டத்திலேயிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மேலெழும்பிய அவரின் உழைப்பை கொச்சைப் படுத்தாதீங்க\\
ஆமாம் ரஜனி ரொம்பக் கஷ்டப்பட்டுத்தான் உழைக்கின்றார் இல்லையென்று சொல்லவில்லை. இந்த வயதில் சண்டைக்காட்சிகளில் நடிப்பதும், சின்னப் பொண்ணுகளுடன் டூயட் பாடுவதும் ரொம்ப ரொம்பக் கஷ்டம் ஒத்துக் கொள்ளுகின்றேன். இருந்தும் அவரின் உழைப்புக்குக் கிடைக்கும் ஊதியம் ரொம்ப உசத்தியோ எண்டு எண்ணத்தோன்றுது. (ஆமா பொண்ணுகளுக்கு ரஜனியில் ஊதியத்தில் பாதியாவது கிடைக்குமா? ம் அவர்கள் எங்கே நடிக்கின்றார்கள் சும்மா அழகு பொம்மையா எல்லோ வந்து போகின்றார்கள்.
//சினிமாவிலும் டிராமாவிலும் நடிக்கறுத்துக்கு வேஷம் கட்டுறது அப்படினுதான் அர்த்தம். அறுவது வயசு ஆலு மேக்கப் போட்டுகுனு இருவது வயசு பெண்னுடன் ஆட்டம் போடருதுல ஒரு தப்பும் எனக்கு தெரியல.\\
ஆமாம் ஆமாம் ஒத்துக்கொள்ளுகின்றேன். நடிக்கிறதுக்கு எண்டு வந்திட்டால் எந்த வேஷமும் கட்டத்தான் வேணும். அதுதான் நல்ல நடிகனுக்கு அழகு. அதைத்தான் கமல் சார் பல வருடங்களாகப் பல படங்களில் செய்து கொண்டிருக்கின்றார். ரசிக்கலாம். ஆமாம் நம்ம ரசனி ஒருக்காச் செய்யலாம் ரெண்டு வாட்டி செய்யலாம்.. அதையே நுர்றுவாட்டி செய்தா.. கறுப்பி என்ன பேமானியா? ஓ.. ரசனி சார் முந்தி ஒருநா சொன்னார் "ஒரு தடவை சொன்னா நூறுதடவை சொன்ன மாதிரி" எண்டு.. இப்ப கறுப்பி சொல்லுறாள் "ரசனி நூறு படம் நடிச்சா ஒரு படம் நடிச்சமாதிரி.." ஹ ஹ ஹ இது எப்பிடியிருக்கு?
//ரோட்டில் மலம் கழிக்கும் நிலையிருப்பின் விஜய் தான் லெட்ரின் கட்டித்தரனுமுனு எதிர்ப்பார்ப்பது எந்தவிதத்தில் நியாயம்? இந்த விசயத்தை கண்டும் காணாததுபோல் நித்தமும் அதே தெருவில் நடந்துபோகும் நமக்கும் விஜய் மேல் நீங்கள் சாற்றும் குற்றமிருக்கிறது\\
இதுவும் வாஸ்தவம் தான். ஆனால் இந்தியாவில சினிமாவும் அரசியலும் பின்னிப்பிணைஞ்செல்லே இருக்கு.. சினிமாக்காறன்கள் ஒண்டு சேந்து தமிழ்நாட்டு ரோட்டு மேல கொஞ்சம் பார்வையைத் தூக்கிப் போட்டா நடக்காதா எண்டு கறுப்பிக்கு ஒரு நப்பாசைதான். கடைசி தங்கட வீட்டுக்கு முன்னால இருக்கிற ரோட்டையாவது றிப்பயர் பண்ணச்சொல்லி அம்மாக்கிட்ட ரிப்போட் கொடுக்கலாம் தானே. கறுப்பி எங்க கண்டாள் தமிழ் நாட்டு அரசியலைப் பற்றி.. ஒரு சின்னக் கனவுதான்.
//சினிமா அவர்களது தொழில். அவர்களை பிடிக்கவில்லையா... நீங்கள் அவர்களை புறக்கணியுங்கள் .. மத்தவனுக்கு ஏன் அவரை பிடிக்குதுனு மண்டையை குடையாதீங்க.\\
கறுப்பியும் சு10ப்பர் சாரோட விசிறியா இருந்தவள்தான். அதெல்லாம் ஒரு காலம். ம் இரவிக்குமார் சார் கறுப்பி என்ன பண்ணுவாள் மண்டைய குடையத்தான் முடியும்.
You too மாண்டுரீசரு?
//"உபயோகித்து" என்றால்? நடித்துச் சம்பாதிப்பது தானே?\\
நிஜத்தைப் பேசுவமா? சொல்லுங்க உங்கட நெஞ்சத் தொட்டுச் சொல்லுங்க ரஜனி நடிக்கிறாரா? கடந்த பத்துப் பதினைஞ்சு வருஷமா வந்த ரஜனியின்ர படங்களை எடுத்துப் பாருங்க? தொடர்ந்து சொதப்பல் படங்களைத் தந்தால் பீல்டில இருந்து எடுத்திட வேணும். பாமர மக்களை உபயோகித்து. கறுப்பிக்கு அப்பிடித்தான் படுது. எம்.ஜி ஆரைப் போல உழைக்கும் வர்க்கத்திற்கு சோறு போடுறமாதிரியெல்லே வந்து போறார் இது முதல் அமைச்சராவதுக்கான றூட்டுத்தானே? பாமர மக்களில அக்கறை போல் நடிக்கிறது எனக்குக் குற்றமாத்தான் படுது.
//ஜாக் நிக்கல்ஸனின் பல படங்கள், Last Tango in Paris என்று பட்டியல் போடக்கூடிய இன்னபிற கணக்கற்ற படங்களெல்லாம்? \\
ஐயையோ மாண்ட்ரீசரு ஜக் நிக்கல்சன் (கிளின்ரிஸ்வூட்) போன்றோரேடை (மில்லியன் டொலர் பேபி) எல்லாம் ரஜனிய ஒப்பிடுறீங்களா? மனச்சாட்சி இருக்கா? ரஜனி நடிக்கட்டும் வேண்டாமெண்டு யார் சொன்னா? தனக்கேற்ற கரெக்டறில நடிக்கட்டும். ரஜனிய நான் நடிக்கச் சொல்லித்தானே கேக்கிறன். ஆசையா இருந்தா ஒரு படத்தில சின்னப்பொண்ணோட டூயட் பாடட்டும். குற்றமில்ல. அதுக்காக இப்பிடியா? ரஜனியின்ர கடைசிப் பத்துப்படத்தை எடுத்துப் பாத்து ஒரு சின்ன ஆராய்சி செய்யுங்க. (நான் நினைக்கிறன் மாண்ட்ரீசர் ரஜனிப் படமே பாக்க மாட்டார் எண்டு) பிறகு பேசுங்க.
//பிழைப்புக்காக டிக்கெட் கிழிப்பது எந்தவிதத்தில் கேவலம்?\\
"சுழி", "சுளி" ஏதோ ஒண்டு அதுதான் உண்மை. பஸ்சில ரிக்கெட் கிழித்தவன் சு10ப்பர் ஸ்டாறாவது கேவலம் எண்டு கறுப்பி சொல்லேலை. ஆனால் முதலமைச்சராயிடுவாரோண்டு கொஞ்சம் நடுக்கமா இருக்கு ஒத்துக் கொள்ளுறன். ரஜனி ஒரு நடிகன் எண்டதைத் தவிர நல்ல மனிதன் தமிழ் நாட்டு மக்களில அக்கறை உள்ளவர் எண்டு நான் ஒரு போதும் கேள்விப்பட்டதில்லை. தவிர கன்னட மக்கள் பக்கம்தான் அவின்ர கவனம் இருப்பதாக முன்பு ஒருமுறை படித்திருக்கின்றேன்.
oo
//சினிமாக்காரர்களும் முதல்வராவதில் தவறில்லை.. சினிமாக்காரர்கள் மட்டுமே முதல்வர்கள் ஆக முடிவதென்ரால் எங்கோ தவறிருக்கிறது.\\
தாஸ் இந்தியாவின் நிலை இதுதானே?
மது
//சினிமாவில் நடிப்பதால் மட்டுமே ( ஆணோ அல்லது பெண்ணோ) அரசியலில் நுழையும் தகுதி குறைந்துவிடுவதில்லையே. \\
நான் அப்பிடிச் சொல்லவில்லையே. சினிமாவை (மக்களின் அறியாமையை) அரசியலுக்கு நுழைவதற்காக மட்டும் பயன்படுத்துவது தவறு. அதைத்தான் பல சினிமாக்காறர்கள் தமிழ்நாட்டில் செய்கின்றார்கள்
M.Sundaramoorthy
//இந்த முதல் கடைசி வரிகளை மட்டும் எழுதியிருந்தாலே effective ஆக இருந்திருக்கும். வேறெதிலும் ஒத்துப் போக முடியவில்லை.\\
தமிழ்நாட்டு அரசியலும் சினிமாவும் என்று தங்கள் தளத்தில் எழுதுங்கள்.
அல்வாசிட்டிக்கு இது –
//தமிழ் சினிமாவில் மட்டுமல்ல ஆங்கில சினிமாக்களிலும் வயதானவர்கள் இன்னமும் தம் மகள் ஒத்த வயதுள்ளவர்களிடம் குலாவிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஹாரிஸன் போர்டு, பியர்ஸ் போஸ்னன், மைக்கல் டக்லஸ், சில்வர்ஸ்டர்... ஆனால் அதையெல்லாம் நாம் குறைகூறுவதில்ல\\
ஒத்துக்கொள்ளுகின்றேன். அவர்களெல்லாம் அறுபதில் அறுபதாகவே வந்து குலாவுகின்றார்கள். தம்மை இருபதாக மாற்றுவதில்லை. காதலுக்கு கண்ணில்லை வயதில்லை என்பது அவர்கள் எண்ணம். ரஜனிக்கு இமேஜ் முக்கியம். அறுபதில் வந்து இருபதைக் காதலிக்க அவர் ஒத்துக்கொள்ள மாட்டார். தன்னை இருபதாக்கி (முயன்று) வந்துதான் இருபதுடன் குலாவுவார். கன்றாவி. ம்.. "நெற்றிக்கண்ணில்" அப்படியொண்டு ரசனிசார் பண்ணியதாக ஞாபகம். ம்.. அப்போது நடித்தார் ஒத்துக்கொள்ளுகின்றேன்.
உண்மையச் சொல்லுங்க அல்வா – ரஜனியின் திறமைக்கும் (இருந்தால்) அவருக்குக் கிடைக்கும் வரவேற்பிற்கும் கொஞ்சம் நீண்ட இடைவெளி இருக்கிறதல்லவா? இப்பிடி எதற்கு ஒருத்தரை தலையில வைத்துக் கொண்டாட வேணும்.
//ரஜினி ஒரு ஆளுக்கு தானே முக்கியதுவம் கொடுக்கிறோம். நீங்களோ அல்லது நானோ படம் எடுத்து அதில் நடித்து சிக்ரெட்டை தூக்கி போட்டால் யார் தான் பார்ப்பார்கள் :-)\\
இதுவும் சத்தியம்தான். நானும் தூக்கிப்போட்டுப்பாத்து முயன்று பார்த்தேன் ஒருவரும் ரசிக்கவில்லை. என்ன செய்வது. எனக்கு தலையில "சுளி" இல்லப் போல
//ரசிகனுக்கும், வெறிபிடித்த ரசிகனுக்கும் வித்தியாசம் இருக்குதுங்கோ. அந்த ரசிகனும் வெறிபிடித்த ரசிகர்கள் செய்யும் கோமாளி தனத்துடன் ரஜினி படத்தை பார்ப்பதே தனி சுகமுங்கோ.பர்ஸ்ட் டே ரஜினி படத்தை ரசிகர்களோட சேர்ந்து பாருங்கோ. ஜென்ம சாபல்யம் அடைஞ்சிருவீங்க, இப்படியெல்லாம் எழுத மாட்டீங்க :-))) \\
ஐயையோ அல்வா என்ன இது என்னை இந்த லிஸ்டில சேத்திடாதீங்க ப்ளீஸ் :-)))
//உங்களுக்கே இது நல்லாயிருக்கா.குறும்படம் பெரும்படம்ன்னு இயக்கி நடிச்சிகிட்டு இருக்கிற நீங்க இப்படி ஒரு கேள்வியை போடுறீங்களே.\\
ம்... ஏதோ பண்ணுறன். என்னையும் யாராவது கண்டு கொண்டு "தலைவி" பதவி தரமாட்டார்களா எண்ட நப்பாசைதான். :-))))))))))
//சினிமாத் துறை என்பது உலகை ஆளும் மீடியா அதை பயன்படுத்துபவர்களுக்கு (குறிப்பாக ரஜினி போன்ற பெரும் நடிகர்களுக்கு) கட்டாயம் சமூக பொறுப்பும் அக்கறையும் இருக்க வேண்டும். ஆனால் நிலைமை என்ன? வெறும் விட்டாலச்சார்யா சமாச்சாரங்களையே திரைகளில் சொல்லி - காட்டி மக்களை மடையர்களாக்கிக் கொண்டிருக்கிறார்கள். சமூக நலனற்ற இந்த நடிகர்கள் விமர்சிக்கப்படுவதில் தவறொன்றும் இல்லை. அந்த வகையில் விமர்சித்த அனைவரும் டாக்டர் ராமதாஸ் உட்பட பாராட்டுக்குரியவர்களே... \\
நன்றி சுடர் - இதைத்தான் நானும் சொன்னேன்.
நன்றி - icarus
//(நான் நினைக்கிறன் மாண்ட்ரீசர் ரஜனிப் படமே பாக்க மாட்டார் எண்டு)//
!!என்ன இது!! கிட்டத்தட்ட 50-60 படங்கள் இருக்கலாம் மொத்தமாக.
முதலில் கறுப்பி சொன்னது மட்டையடி (யாரு சொல்லிக்குடுத்தது இந்தெல்லாம் எனக்கு, நம்ம சொல்வளம் பெரிசாகிட்டேபோகுது) போல இருந்தாலும் மறுமொழியில் பொறுமையாக இததனை ஆளுகளை 'ஒவ்வொண்ணா வா'ன்னு அடிச்சுத்தூள் கிளப்பிட்டீங்க.
//ஒத்துக்கொள்ளுகின்றேன். அவர்களெல்லாம் அறுபதில் அறுபதாகவே வந்து குலாவுகின்றார்கள். தம்மை இருபதாக மாற்றுவதில்லை. காதலுக்கு கண்ணில்லை வயதில்லை என்பது அவர்கள் எண்ணம். ரஜனிக்கு இமேஜ் முக்கியம். அறுபதில் வந்து இருபதைக் காதலிக்க அவர் ஒத்துக்கொள்ள மாட்டார்.//
இதை யாரும் புரிஞ்சிகிட்டமாதிரித் தெரியலை. ரஜினியை சிலாகிக்கும் எல்லாரும் மாயையை விரும்பி ரசிக்கும் கூட்டம். இயற்பியல் விதிகளை மண்ணோடு புதைத்துவிட்டுத்தான் ரஜினி படம் பார்க்கணும். ஜாக்கி சான் பல சமயம் வித்தை காட்டினாலும், அதில் இயற்பியல் விதிகள் மதிக்கப்பட்டிருக்கும். கோடியில் ஒரு முறையே நடக்க வாய்ப்பிருப்பதை அவருக்கு எப்போதுமே நடப்பதாகக் காட்டுவது அவர்கள் பாணி. வாய்ப்பே இல்லாத ஒன்றை நடத்திக்காட்டுவது ரஜினி(இன்னும் பல தமிழ் தாதாக்கள்) படம். கஞ்சாவும், சாராயமும் போல இதெல்லாம் ஒரு போதை. சரியா தவறா என்று சொல்லவரவில்லை. ஆனால் இந்த பாணி படங்கள் நம் சமூகத்தின் பிணி என்பது உண்மை. என்னையும் போட்டு சாத்துங்க. ஆனாலும் இதையேதான் சொல்வேன்.
//தமிழ்நாட்டு அரசியலும் சினிமாவும் என்று தங்கள் தளத்தில் எழுதுங்கள்.//
கறுப்பி,
சென்ற ஆண்டு இதே தேதியில் இதே விஷயத்தைக் குறித்து 'திண்ணை.காம்' இல் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். சுட்டி இங்கே: http://www.thinnai.com/pl0415043.html
சரி பாக்கிறீங்க ஒத்துக்கொள்ளுறன். கடைசியா வந்த அஞ்சாறு படங்கள ஒருக்கா திருப்பிப் பாருங்க. என்னத்தைப் பெரிசா சு10ப்பர் ஸ்டார் சொல்லீட்டார். எல்லாமே "Lion King" போலல்லோ கிடக்குது.
மேலே உள்ளது மாண்ட்ரீஸருக்கு.
காசி சு10ப்பர் ஸ்டார் அலை ஒரேயடியா சுனாமி போல அடிச்சுது. நல்ல காலம் காப்பாற்றீங்க. நன்றி.
சுந்தரமூர்த்தி வாசிக்கின்றேன். நன்றி மீண்டும்.
அது சரி அடுத்த வருஷம் இந்தியாவிற்கு விடுமுறைக்கு வர இருக்கிறன். அடியொண்டும் விழாதே?
:-)))))
கறுப்பி அம்மணி, சுனாமியாவது சுண்டைக்காயாவது?
நீங்கள் வலைப்பதிவகளுக்கு கொஞ்சம் லேட்டாக்கும். இதையும் கொஞ்சம் ப(பு)டிங்கோ!
http://valaippoo.yarl.net/archives/000327.html
இந்த மறுமொழி கறுப்பிக்கு அல்ல, காசிக்கு
1. ரஜினிகாந்தும், அவருடைய தயாரிப்பாளர்களும், பௌதிகப் பாடத்தை படிக்காதவர்களாக இருந்திருக்கலாம்.
2. ரஜினிகாந்த் திரைப்படத்தைப் பார்த்து விட்டு, ரசிகர்கள் சிகரட்டுப் பிடிப்பது, தண்ணி அடிப்பது ஊர் சுற்றுவது என்பது போன்ற வேலைகளில் மட்டும் தான் ஈடுபடுகிறவர்கள், ரசிகர்கள் என்கிற கேவலமான் ஜந்துக்கள் என்பது உங்கள் நினைப்பாக இருக்கலாம்.
3. பௌதிக விதிகளை மீறுவது ரஜினி படங்கள் மட்டுமல்ல, ஏனைய பிற படங்களும் தான் என்று தெரிந்திருந்தாலும்.,
" இந்த ஆளை வர்ஜா வர்ஜியமில்லாமல், இத்தனை பேர் தூக்கிப் பிடிக்கிறார்களே, என்ன கருமத்துக்காக?" என்பது உங்கள் கேள்வியின் அடிப்படையாக இருக்கலாம்.
4. ரஜினிகாந்த், இந்த ரசிகர் பட்டாளத்தை வைத்துக் கொண்டு ஆட்சியைப் பிடித்து விடப் போகிறாரோ என்கிற, ரஜினிகாந்த்தின் ரசிகர்களே நம்பாத, ஆதாரமற்ற சந்தேகம் காரணமாக இருக்கலாம்.
சினிமா வரலாறு என்னவென்றால், ஆயிரத்து தொள்ளாயிரமாவது ஆண்டுகளின் துவக்கத்தில், நம் நாட்டுக்கு திரைப்பட்ங்கள் வந்தன. சில ஊமைப்படங்கள் எடுக்கப்பட்டன. ராஜா சாண்டோ, நடராஜமுதலியார், கோவை பட்சிராஜா ஸ்டுடியோ, தேவகோட்டை ரஸ்தாவில் மெய்யப்பச் செட்டியார் போன்ற சிலர் முன்னே கொண்டு சென்றனர். ஆனால், அப்போது நாடகங்கள் மிகப்பிரபலமாக இருந்தன. அந்த காலத்து sunrise industry ஆக இருந்த சினிமாவை கூத்தாடிகளின் தொழிலாகத்தான், நாடக நடிகர்கள் உள்பட, கருதினார்கள். அரசு உயர்பதவிகளில் இருந்து கொண்டு, ச்சீச்சீ...சினிமாவா என்று இகழ்ந்தவர்கள், சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பு இருந்த அரசாங்கத்தின் எலைட் மக்கள், கோல்·பும், ப்ரிட்ஜும் ஆடுகின்ற, சேக்ஸ்பியர் நாடகம் பார்க்கிற, அரியகுடியின் கச்சேரி கேட்கின்ற அதி உன்னதமான் ப்ர்சூட்களுக்கு எதிரான கலாசாரமாகத்தான் சினிமாவைப் பார்த்தனர். சினிமாக்காரர்கள் என்றாலே கூத்தாடிகள் என்ற நினைப்பைத் தோற்றுவித்தவர்களும் இவர்கள் தான். இந்த மனோபாவத்தினால் தான், ஐரோப்பிய, ஈரானிய சினிமா போல நம்மவர்களால் வர இயலவில்லை.
சினிமாவா...அய்யே என்பது ஒரு மனப்பான்மை என்றால், ரஜினிகாந்தா....? சீச்சீ என்பது, அத்துடன் தொடர்பு கொண்ட ஒரு மனப்பாங்கு.
உங்களுக்கு ரஜினிகாந்த் தான் தெரியும். அதுக்கு ரொம்ப முன்னாலே, எம்.கே.தியாகராஜ பாகவதர்னு ஒர்த்தர் இருந்தார். சியாமளா .. சியாமளா...ங்கற அவர் பாட்டைக் கேட்டா, தேவகானம்னுவாங்களே, அதுக்கு அர்த்தம் என்னன்னு புரியும். அவருடைய சந்திரவதன பிம்பத்துலே மயங்கிய பெண்கள் லட்சோப லட்சம். கேட்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும் , அது தான் உண்மை. அவர் காரிலே வரும் போது, வழியெங்கும் காத்திருக்கும் மக்கள், அவரைத் தொட்டுப் பார்க்க விரும்புவார்கள் என்பதற்காக, எம்.கேடி போலவே ஒருத்தருக்கு உடை அணிவித்து, கை மட்டும் காரின் சன்னலில் தெரியுமாறு உட்கார வைத்து, மெதுவாக வலம் வருவார்கள். ஜனங்களும், அவருடைய சில்க் ஜிப்பா கையைத் தொட்டுப் பார்த்து ஆனந்திப்பார்கள். அதுக்குப் பிறகு பி.யு.,சின்னப்பா என்கிற சூப்பர்ஸ்டார். அதுக்குப் பிறகு, நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி, பின்னர் எம்.ஜி.,ராமச்சந்திரம்., சிவாஜிகணேசன், என்று சினிமா ரசிகர்களின் பின்னால், ஓடியவர்கள் யார் தெரியுமா? நம்ம முன்னோர்கள் தான். நீங்களும் நானும் அந்தச் சமூகத்தின் மிச்ச சொச்சம் தான் நாம்.
ரஜினிகாந்த்தின் திரைப்படங்களை, வெறுமனே ஒரு எண்டர்டெயின்மெண்டாக மட்டுமே தான் பெரும்பான்மையானவர்கள் பார்க்கிறார்கள், வேற எந்த காரணத்துக்காகவும் இல்லை என்கிறதை என்றைக்கு இந்த ரஜினிகாந்தின் எதிர் கோஷ்டி புரிந்து கொள்ளப் போகிறது? ஒரு காலத்துலே, ரஜினிகாந்த் நல்ல படங்களில் நடித்தார் ( முள்ளும் மலரும், 16 வயதினிலே ) இப்பக் கேவலம் என்று கறுப்பி சொல்லி இருந்தார். அதுக்கு யார் காரணம்? ரஜினிகாந்தா அல்லது, முரட்டுக் காளை, போக்கிரிரஜா போன்ற மசாலாப் படங்கள் எடுத்து, மொத்த சினிமா உலகையும் திசை திருப்பிய ஏவிஎம் நிறுவனமா? அப்போது திரை உலகை, ஆட்டிப்படைத்தவர்கள், பஞ்சு அருணாசலமும், எஸ்.பி. முத்துராமனும் தான். அவங்களுக்கு என்ன படம் எடுக்க வருமோ, அதை எடுத்தார்கள். பாலுமகேந்திராவுக்கு, ருத்ரையாவுக்கும், மகேந்திரனுக்கும் எங்கே இடம் இருந்தது திரை உலகில்? இருந்திருந்தால் நல்ல படங்கள் வந்திருக்கும்.
எந்த விதமான முன்னேற்பாடும் இல்லாமல், சும்மா ஜாலியாகச் சென்று, ஜாலியாக ரசித்து விட்டு, வருகிற அளவுக்கு, ஜாலியான ஒரு படத்தைக் கொடுக்கக் கூடிய ரஜினி மாதிரி ஒரு எண்டர்டெயினரை, இது வரை திரையுலகம் கண்டதில்லை என்பதுதான் உண்மை. என்ன அறிவுகெட்டத்தனமான படம் இது என்று நீங்கள் கோபப்படலாம். ஆனால், அந்த அறிவுகெட்டத்தனத்தை, யாரும், நம் குழந்தைகளின் பாடபுத்தகத்தில் incorporate செய்யப் போவதில்லை என்பதை உணர்ந்து கொண்டலே போதுமானது.
ரஜினி ஒரு சமூகக் கிருமி என்கிற முன்முடிவுக்கு ஏற்கனவே வந்து விட்ட பின்னர், விளக்கங்களும் வியாக்கியானங்களும் எவருக்கும் தேவைப்படுவதில்லை. என்றாலும் எழுதுகிறேன். அதற்குக் காரணம் உண்டு. உணர்ச்சிவயப்படாமல், பேசக்கூடிய/எழுதக்கூடியவரல்ல நீங்கள் என்று தெரிந்திருந்த போதும் கூட. ரஜினிகாந்தை உங்களுக்குப் பிடிக்காது என்பதால், கிடைத்த சந்தர்ப்பத்திலே ( கறுப்பி பதிவு இட்ட நேரம் பார்த்து ), ரஜினிகாந்த் படங்கள் மீதான வெறுப்பைச் சொல்கிறீர்கள் என்று நான் நினைக்கவில்லை. நீங்கள் அப்படி கிடைத்த சந்திலே பாய்பவர் இல்லை என்பதால் தான் இந்த நீண்ட பதிவு.
தங்கள் பின்னூட்டம் கறுப்பிக்கானது இல்லை என்றாலும் கறுப்பியும் கருத்து ஒன்றைச் சொல்ல விரும்புகின்றாள். காசியும் பதில் சொல்வார் என்ற எதிர்பார்க்கின்றேன். தியாகராஜபகவதர் பின்னர் எம்.ஜி.ஆர் இப்போது ரஜனிக்காந்த் இந்த நிலை இனியும் தொடரக்கூடாது என்பதுதான் கறுப்பியின் விருப்பம். ஏ.வி.எம் இன் தவறிருப்பினும் ரஜனிதானே நடிகன் என்ற பெயருடன் திரையில் வந்து போகின்றார். நல்ல திரைப்படங்களைத் தெரிவு செய்வது என்பது அவரின் தனிப்பட்ட விடையம். இதற்குப் போய் ரசிகர்களையும், திரைப்பட நிறுவனங்களையும் நாம் சாட முடியாது. ரஜனி ஒழுங்கான நல்ல ஒரு கதை அம்சம் கொண்ட படத்தை நடித்துப் பார்க்கட்டும் அவரின் ரசிகர்கள் ரசிக்காமல் விடுகின்றார்களா என்ற பார்ப்போம்.
//இந்த மறுமொழி கறுப்பிக்கு அல்ல, காசிக்கு//
நன்றி, பிரகாஷ்.
//1. ரஜினிகாந்தும், அவருடைய தயாரிப்பாளர்களும், பௌதிகப் பாடத்தை படிக்காதவர்களாக இருந்திருக்கலாம்.//
பௌதிகம் என்பது பாடத்தில் படிப்பது என்பது ஏட்டுச் சுரைக்காய்த்தனம். தமிழ் சூழலின் இன்றைய அப்பட்டமான நிலை. இயற்பியல் அய்யா அது. இயல்பு+இயல்=இயற்பியல். இப்படிப் 'பௌதிகம்' என்றெல்லாம் பூச்சாண்டிப் பேர் வைத்துதான் அதை ஏட்டுச்சுரைக்காயாக்கி இப்படி வியாக்கியானம் பேசிக்கொண்டிருக்கிறோம்;-) இயல்பாக நடப்பது, இயற்கையில் நடப்பது. அன்று ஒரு நாள் யோசிப்பவர் என்ற ஒருவர் கேட்டாரே, 'நாற்காலியில் உட்கார்ந்தபின் கையூன்றாமல் எழுந்திருக்க முடியுமா?' என்று. 'பௌதிக'த்தில் :P பட்டம் வாங்கினாலும் வாங்காவிட்டாலும் ஒரே சாத்தியம்தான். 'முடியாது' என்பதுதான் அது. அதைப் பட்டம் வாங்கினவர் சொன்னால்தான் நம்புவேன் என்பது ஏட்டுச் சுரைக்காய் மனோபாவம். அப்படிப்பட்ட, இயல்பில் நிகழமுடியாதவைகளை நிகழ்வுகளாகக் காட்டுவதைச் சொன்னேன். இது ரஜினி மட்டுமல்ல, எல்லா தமிழ் தாதாக்கள் படத்திலும் (பெருமளவுக்கு கமல் படத்தில் இராது) பார்க்கலாம்.
மிச்ச பாயிண்டுக்கு நான் ஒண்ணும் சொல்ல விரும்பவில்லை. சொல்லி ஒண்ணும் ஆகப்போவதில்லை, வெட்டியாக சணடைபோடலாம், அவ்வளவே.
நான் சொன்னது :'இந்த பாணி படங்கள் நம் சமூகத்தின் பிணி என்பது உண்மை' நீங்கள் சொல்வது என்ன? //ரஜினி ஒரு சமூகக் கிருமி என்கிற முன்முடிவுக்கு ஏற்கனவே வந்து விட்ட பின்னர், // ஏன் இப்படியான புரிந்துணர்வு. ஸ்டிரீயோ டைப் ஆட்களுக்குத்தான் இரண்டுக்கும் வித்தியாசம் புரியாது, நீங்கள் அப்படியில்லை என்று நினைக்கிறேன். தப்பா? சொல்லுங்க திருத்திக்கறேன்.:P
கறுப்பி என்ன உங்க காட்டில ஆமோகமா புயலடிக்குது......அட நம்ம ரஜனி தாத்தா பற்றி எழுதி இருக்கிறீங்களா. அப்ப நடக்கட்டும்
காசி : நன்றி. அடிப்படை கூடத் தெரியாமல், இயற்கைக்கு ஒவ்வாமல் படம் எடுக்கும் தமிழ்த்திரைப்படங்களைப் பற்றி குறை கூறியிருந்தீர்கள் என்றால், நானும் நாலு அடி சேத்துப் போட்டிருப்பேன். ஆனால், ரஜினிகாந்தை மட்டும் முன்வைத்துக் கூறியதாலே, நான் எழுதினேன். ரஜினிகாந்தை பிடிக்கும் பிடிக்காது என்பது ஒருவரது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்தது. அதிலே குறுக்கிட எனக்கு உரிமையில்லை. ஆனால் தங்கள் விருப்பு வெறுப்புகளை அடிப்படையாக வைத்து பொது மதிப்பீடுகளை உருவாக்க முனையும் போது, அதன் மீது கேள்விகள் எழுப்பலாம். 'சொல்லி ஒண்ணும் ஆகப் போவதில்லை, வெட்டியாக சண்டை போடலாம்' என்னும் போது நிறுத்திக் கொள்ளுதலே நலம்.
//நான் சொன்னது :'இந்த பாணி படங்கள் நம் சமூகத்தின் பிணி என்பது உண்மை' நீங்கள் சொல்வது என்ன? //ரஜினி ஒரு சமூகக் கிருமி என்கிற முன்முடிவுக்கு ஏற்கனவே வந்து விட்ட பின்னர், // ஏன் இப்படியான புரிந்துணர்வு. //
இரண்டிற்கும் பெரிதாக வேறுபாடு ( எனக்குத்) தெரியவில்லை என்றாலும், வார்த்தைகளை மாற்றியது தவறுதான்.
//தியாகராஜபகவதர் பின்னர் எம்.ஜி.ஆர் இப்போது ரஜனிக்காந்த் இந்த நிலை இனியும் தொடரக்கூடாது என்பதுதான் கறுப்பியின் விருப்பம்//
அம்மணீ, எனக்கும் தான், இந்த வலைப்பதிவாளர்கள் எல்லாம் சண்டை போட்டுக் கொள்ளாமல், பின்னூட்டங்களில், ஆபாசமாகப் பேசாமல், ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. அடுத்த தேர்தலிலாவது, ஒரு நல்ல ஆசாமி, எங்கள் தொகுதியில் நிற்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. எல்லா விருப்பங்களும் நிறைவேறிவிடுகிறதா என்ன? எல்லாக் காரியமும் அவ்ளோ ஸ்மூத்தா இருக்க இது என்ன போரிக் ஆசிட் தூவின காரம்போர்டா? தமிழ்நாடுங்க அம்மணீ...எல்லாந்தான் இருக்கும். பஸ்ஸ¤ல ஏறினா பிக்பாக்கட் அடிப்பாய்ங்க, ரங்கநாதன் தெருவிலே நீந்திகிட்டுத்தான் போவாங்க. தூத்துக்குடியிலே தேவர் செலையை ஒருத்தன் ஒடைச்சா, சுத்துபட்ட ஏரியா முழுக்க நாசம் பண்ணுவாங்க, ரஜினி படத்துக்கு முதல் நாள் முதல் காட்சி போய், போலீஸ் காரன் கிட்ட லத்தி அடி வாங்குவாங்க. அப்படித்தான் இருக்கும். அதுக்கோசரம் குமட்டிகிட்டு வந்தா என்ன பண்ண முடியும்? " we don't see tamil pictures... only english " அப்படின்னு சொல்ற காதலிக்க நேரமில்லை காஞ்சனாவுக்கும், " rajinikant????? ... yuck..." ன்னு முகத்தைச் சுளிக்கிற உங்களுக்கும், அதிக வித்தியாசமில்லை, குறைந்த பட்சம் என் பார்வையிலே. இதுக்கு மேலே சொல்ல ஒண்ணுமில்லை. ஆளை விடுங்க....
எனக்கு அசை ஒண்டு இருக்கு.
ரஜனி தனக்கிருக்கும் ரசிக ஆதரவை வைத்து தமிழ் சினிமாவுக்கு ஏதாவது செய்ய வேண்டும். (மக்களுக்காக எதுவும் செய்யத் தேவையில்லை. தானிருக்கும் தளத்திலேயே முதலில் செய்யட்டும்).
அதாவது நல்ல படம் ஒன்று கொடுக்க வேண்டும். இங்கு "நல்ல" என்று சொல்வதற்குப் பல பதில்கள் கொண்டுவருவார்கள். தமிழ் சினமாவைத் தரமானதாக மற்றவர்கள் மதிக்கும் வகையில் வித்தியாசமாக ஏதாவது செய்யலாம். அவரே பெரிய ஒரு தயாரிப்பாளர். தானே தயாரிக்கலாம். எது நடித்தாலும் ஓடும் என்ற நிலையில் ரசிகர்களை வைத்திருந்தால் அருமையான படமொன்றை நடித்து மக்களின் சினிமா ரசனையை மாற்றலாம்.
கமல் போல அடிக்கடி வித்தியாசமாக முயற்சி செய்யலாம். (தோல்வி தான் என்று தெரிந்தாலும் முயற்சியை கைவிடக்கூடாது).
தன் ரசிக பலத்தை நம்பியாவது குறைந்த பட்ச வெற்றியை கலைப்படங்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
இது தான் என் ஆசை.
கமலோடு ஒப்பிடுவதற்கு மன்னிக்க வேண்டும். விருமாண்டியிலும் மகாநதியிலும் தான் கமல் சிலரை அடிப்பார், வெட்டுவார். ஆனால் யாருக்காவது விசிலடிக்கத் தோன்றியிருக்கா? யாருக்காவது சிரிப்பு வந்திருக்கா? யாருக்காவது "நடிப்ப"தாகத் தெரிந்திருக்கா? அவ்வளவு யதார்த்தமாய் இருக்கும். அது கதையோடும் அந்தப் பாத்திரத்தின் வலுவோடும் சம்பந்தப்பட்டது. ஆனால் ரஜினி அடித்தால் அது சிரிக்க மட்டுமே. அது எல்லாம் பொய் என்று அந்த இடத்திலேயே உறைக்கும். இப்பிடியே வாழ்நாள் முழுவதும் கடத்திவிடத்தான் எண்ணமா? கமல் கூட இந்தச் சாயலில் நிறையப்படம் நடித்துவிட்டார். ஆனால் நிச்சயம் அவர் அதற்குள் சிக்கிவிடவில்லை. நிறைய நல்ல படங்கள் தந்துவிட்டார்.
இப்போதய நிலையில் கமலோ ரஜனியோ தாம் நடித்து வெளிவரும் எந்தப் படத்துக்கும் இயக்குநரை கைகாட்டும் தகுதியை இழந்துவிட்டார்கள். அப்படங்களுக்கு அவர்களே பொறுப்பேற்கும் கட்டாயம் அவர்களுக்கு இருக்கிறது.
தேவுடா தேவுடா
இன்றுதான் பின்னூட்டம் பார்த்தேன். என்னுடைய குறுந்திரைப்படப் படப்பிடிப்பில் நான் பிஸியாகிப் போய் விட்டதால் நேரம் கிடைக்கவில்லை.
//இதுக்கு மேலே சொல்ல ஒண்ணுமில்லை. ஆளை விடுங்க.... \\
பின்னூட்டத்தை நீளமாக எழுதிவிட்டு ஆளை விடுங்கள் என்றால்? எமது முக்கியமாக இந்தியச் சு10ழலில் இருக்கும் பல கோணல் பக்கங்களைச் சுட்டிக்காட்டினீர்கள். காட்டிவிட்டு உலகம் இப்படியாகத்தான் இருக்கிறது விமர்சிக்காமல் கம்மென்று இருவென்றால்?
//" we don't see tamil pictures... only english " அப்படின்னு சொல்ற காதலிக்க நேரமில்லை காஞ்சனாவுக்கும், " rajinikant????? ... yuck..." ன்னு முகத்தைச் சுளிக்கிற உங்களுக்கும், அதிக வித்தியாசமில்லை,\\
ம். நிறம்பவே வித்தியாம் இருக்கின்றது. தரம், தரமற்ற மொழிகளுக்கும் அப்பால் சென்று திரைப்படங்களைப் பார்ப்பவள் கறுப்பி. பின்னர் விமர்சிப்பவள். ரஜனி தமிழ்நாட்டு அரசியலுக்குள்ளும் தொடர்பானவர் என்பதால் தனிப்பட்ட விமர்சனமும் வைத்தேன் அவ்வளவே. இப்போது என்னை விடுங்கள்.
வன்னியன் நன்றி. தங்களுடைய ஆசைதான் தமிழ் நாட்டு மக்களின் கனவும் என்று நம்புகின்றேன். அதனால்தான் முதல்வன் உருவானது என்றும் நம்புகின்றேன். பாமரமக்களை அணைப்பது அவர்களை உயர்த்தி விடுவது என்று நாயகர்கள் நடித்துச் செல்ல அதை நிஜமாக நம்பி கனவுக்குள் மூழ்கிப்போகின்றார்கள் தமிழ் நாட்டு மக்கள்.
அப்பாடி, இப்பதான் எல்லா பின்னூட்டங்களையும் தின்னு முடிச்சேன். இதற்கு கறுப்பிக்கு நன்றி.
சுமு சொன்னதில் பாதியாய் கறுப்பியின் கடைசி வரியும், மாண்ட்ரீஸர், இகாரஸ் சொன்னதுடனும் பெருமளவு ஒத்து போகிறேன். ஆனால் அவர்களும் (மாண்ட் + இகாரஸும்) கூட ரஜினியை மற்றதுடன் ஒப்பிட்டு வக்காலத்து வாங்கிகிறார்களே(அதை நானும் ஒப்புகொள்கிறேன்) தவிர, ரஜினியையே நேர்மறையாய் பார்க்க முடியவில்லை. இங்கேதான் நான் வேறுபடுகிறேன். என்ன இருந்தாலும் ரஜினி ட்ரெண்டும் மாறி 'ஆரோக்கியமாக' வேண்டும் என்பதாகவே அவர்கள் கருத்து இருக்கிறது. அதுதான் எனக்கு புரியவில்லை.
ரோசாவசந்த் பின்னூட்டத்திற்கு நன்றி. இருந்தும் தாங்கள் இன்னும் கொஞ்சம் விளக்கமாக தங்கள் பார்வையைத் தந்திருக்கலாம் என்றே தோன்றுகின்றது.
//ரஜினியை மற்றதுடன் ஒப்பிட்டு வக்காலத்து வாங்கிகிறார்களே(அதை நானும் ஒப்புகொள்கிறேன்) தவிர, ரஜினியையே நேர்மறையாய் பார்க்க முடியவில்லை. இங்கேதான் நான் வேறுபடுகிறேன்.//
ரோசா: நேர்மறையாய் பார்ப்பது என்றால் என்ன? எனக்கு விளங்கவில்லை.
என்ன இகாரஸ், நேர்மறையாய் பார்பது என்றால் பாஸிட்டிவாய் பார்பது;-) ரஜினியை முன்வைத்து பிரச்சனையாய், எதிர்மறையாய் இங்கே சொல்லப்பட்டு உள்ள பிரச்சனைகளை, பிரச்சனைகள் அல்ல எனபதாய் பார்ப்பது. நான் புரிந்துகொண்ட வரையில், உதாரணமாய் " தமிழ்நாடுங்க அம்மணீ...எல்லாந்தான் இருக்கும். பஸ்ஸ¤ல ஏறினா பிக்பாக்கட் அடிப்பாய்ங்க, ரங்கநாதன் தெருவிலே நீந்திகிட்டுத்தான் போவாங்க. தூத்துக்குடியிலே தேவர் செலையை ஒருத்தன் ஒடைச்சா, சுத்துபட்ட ஏரியா முழுக்க நாசம் பண்ணுவாங்க, ரஜினி படத்துக்கு முதல் நாள் முதல் காட்சி போய், போலீஸ் காரன் கிட்ட லத்தி அடி வாங்குவாங்க. அப்படித்தான் இருக்கும். " என்று சொல்லும்போது, ரஜினியை எதிர்மறையாகவே நீங்களும் பார்க்கிறீர்கள், ஆனால் ரஜினியை மட்டும் குற்றம் சொல்ல என்ன இருக்கிறது என்ற தொனியில் கேட்பதாக எனக்கு தெரிகிறது.இதையே நேர்மறையாய் பார்க்கமுடியவில்லை என்றேன். நான் தவறாய் புரிந்துகொண்டிருந்தால் சொல்லவும்! (ஆனால் "தூத்துக்குடியிலே தேவர் செலையை ஒருத்தன் ஒடைச்சா, சுத்துபட்ட ஏரியா முழுக்க நாசம் பண்ணுவாங்க, "என்று சொல்லியிருப்பது சரியல்ல, தூத்துகுடியில் அது நடப்பதில்லை, தேவர்தொகையும் மிக மிக குறைவு, திருநெல்வேலியை சொல்ல வந்தீர்களோ?)
கறுப்பி, விரிவாய் கருத்து சொல்ல வேலை மற்றும் குடும்ப சூழல் இடம் தர மறுக்கிறது. கருத்து சொல்வது இன்றியமையாதது என்று நினைத்தால் ஒழிய பொதுவாய் சொலவதில்லை. கேட்டதற்கு நன்றி.
ரோசா : பாஸிடிவாய் சொல்லலாம்தான். ஆனால், ரஜினிகாந்த், அரசியல் ஆசை பிடித்து அலைகிறார், பாமரர்களை கிளாறிவிட்டு வேடிக்கை பார்க்கிறார் என்று சொல்லுபவர்களிடம், என்ன பேசுவது என்ற காரணத்தால் தான், ஒரு வெறுப்பிலே அப்படிச் சொன்னேன். ஒரு நீளமான பதிவு ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறேன், என் பதிவில் போடுவதற்காக...
Any comments??
Post a Comment