Thursday, March 24, 2005

படைப்புக்களும் பாதிப்புக்களும்..

பாதிப்பு இல்லாத படைப்புக்களே இல்லை. எந்த ஒரு கலைஞரும் தனக்கு ஆர்வமுள்ள துறையில் அதிக நேரம் செலவிட்டு அதனை ஊடுவிப்போகும் போது அங்கே தரமான படைப்புக்களால் அவனையும் அறியாமல் பாதிப்புக்கள் ஏற்பட்டு விடுகின்றன. சிறந்த ஆங்கில இயக்குனரான Steven Spielberg தனது ஒரு பேட்டியில் போது ஒரு படத்தை இயக்கத் தொடங்கு முன்னர் தான் தன்னைக் கவர்ந்த சில இயக்குனர்களின் படங்களை எடுத்துப் பலமுறை பார்ப்பதாகக் கூறியிருக்கின்றார். அதன் மொழி பெயர்ப்பு copy அடிப்பது என்பதல்ல ஒரு நல்ல படைப்பை நாம் அதிகம் படிக்கும் போதோ ஆராயும் போதோ அதன் பாதிப்பினூடான ஒரு புதிய படைப்பைத் தர முடியும் என்பதே. கனடாவில் வாழும் கவிஞர் செழியன் ஒருமுறை தனக்கு ஒரு நல்ல கவிதையைப் படித்துவிட்டால் தன் மனதில் ஒரு நல்ல கவிதைக்கான கரு வந்து ஒட்டிக்கொள்கின்றது, தன்னால் ஒரு நல்ல கவிதையை அப்போது படைக்க முடிகின்றது என்றும் கூறினார். சிலர் புகழ்பெற்ற கவிதைகளையோ, சிறுகதைகளையோ படிக்கும் போது அதில் வரும் நல்ல சொற்களையும் வசன நடைகளையும் கோடிட்டு விட்டுப் பின்னர் தமது படைப்புக்களுக்குள் அவற்றைப் புகுத்திக் கொள்வார்கள். இதுதான் தவிர்க்கப்பட வேண்டுமே தவிர பாதிப்புக்களை அல்ல.
அடுத்து - ஒருகாலமும் சொல்லப்படாத கருவை எடுத்துத்தான் படைப்புக்கள் படைக்கப்படல் வேண்டும் எனின் படைப்பாளிகள் உலகத்து அத்தனை படைப்புக்களிலும் பரீச்சயம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். இது நடைமுறைச் சாத்தியமாகாது. சொல்லப்படாத கருவென்று ஒன்று இல்லை. சொல்லும் முறையில் புதுமை இருக்க வேண்டும். புதிய யுக்திகள் பாவிக்கப்படல் வேண்டும். இசையை எடுத்துக் கொண்டால் ஏ.ஆர் ரகுமான், தேவா போன்றோர் பல மேற்கத்தையப் பாடல்களைக் copy அடிக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கின்றது. ஈரானிய மொழிப்பாடலையும், ஜப்பானியப் பாடல்களையும் நாம் எங்கே கேட்கப்போகின்றோம். அது தமிழ்பாடலுக்கான இசையாக்கப்பட்டு எமக்குச் சந்தோஷத்தை அளிக்கும் பட்சத்தில் அதனை வரவேற்பதில் தவறு ஏதுமில்லை.
ஓட்டுமொத்தமாக எல்லாப் படைப்பாளிகளையும், படைப்புக்களையும் தூக்கி எறிவது என்பது காலஓட்டத்துக்கு ஒவ்வாத பகுத்தறிவற்ற அறியாமையே ஆகும்.

6 comments:

jeevagv said...

சரியாகச் சொன்னீர்கள். இசையப்பொருத்தவரை என்கருத்தும் இதுதான். சில சமயம் ஒருவர் சுயமாக ஒரு ட்யூனை இயற்றியிருந்தாலும், அது ஏற்கனவே செய்த ஒன்றைப்போல் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
கறுப்பி said...
This comment has been removed by a blog administrator.
ஈழநாதன்(Eelanathan) said...

அன்பின் பிரதீபா எந்த வலைப்பதிவாவது உங்களைத் தாக்குவதாக இருந்தால் தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு முறையிடலாம் அவர்கள் அந்தப் பதிவை பட்டியலில் இருந்து மறைப்பார்கள்.மொத்தப் பதிவையும் முறையிடவேண்டுமானால் நீங்கள் Blogger இற்குத் தான் முறையிடவேண்டும்.

கறுப்பி உங்கள் வசதிக்காக ஒன்று இங்கே போய்(www.bravenet.com)Stat counter ஒன்றைப் பெற்று உங்கள் தளத்தில் போட்டுக்கொள்ளுங்கள் என்ன நேரத்தில் யார் உங்கள் தளத்தைப் பார்வையிட்டார்கள் என்று IP adress எடுத்துத் தரும் அதனை வைத்து யார் எழுதுவது என்று குத்துமதிப்பாகக் கண்டுபிடிக்கலாம்.

கறுப்பி said...

ஈழநாதன் தகவலுக்கு நன்றி.. முயன்று பார்க்கின்றேன்.

அது என்ன என்னைத் தாக்கி எழுதுபவர்களுக்கு மட்டும்தான் தளம் இல்லாமல் இருக்கின்றது. அத்தோடு அந்தப் பெயர்களில் வேறு ஒருவருக்கும் பின்னூட்டமும் வருவதில்லை.. ரொம்பத்தான் கவனிக்கப்டுகின்றேன். சந்தோசம்.