Monday, May 09, 2005

கவிதை

ஏதாவது எழுது என்பாய்.
என்ன எழுதுவது என்பது தெரியாமல்
நீ கேட்டதற்காய் எழுதுகின்றேன்.
இந்த எழுத்து உனக்குத் திருப்தி தந்தால்,
அது எனக்கும் திருப்தியே.
நீ எதிர்பார்த்ததை நான் எழுதவில்லை என்று நீ நினைத்தால்,
நீ என்னிடம் எதிர்பார்த்தது தவறு.
எழுத ஒன்றுமில்லாத போது
இவ்வளவு எழுதியதே பெரிய விடயம்;
அதுவும்
உன் எழுதப்படாத மின்அஞ்சலுக்கு.
எனக்கு நிறையவே நேரம் இருப்பதாய் நீ குற்றம் சொல்லலாம்.
நேரம் மட்டும் போதுமானதல்ல எழுதுவதற்கு.
ஒருநாள் எழுதுவேன் நீ எதிர் பார்த்தவற்றையும்,
எதிர்பாராதவற்றையும்.

7 comments:

Muthu said...

கறுப்பி,
நல்லா கவிதை எழுதுறீங்க.

சுந்தரவடிவேல் said...

//திருப்பி//
தி?

Balaji-Paari said...

//நேரம் மட்டும் போதுமானதல்ல எழுதுவதற்கு.
ஒருநாள் எழுதுவேன் நீ எதிர் பார்த்தவற்றையும்,
எதிர்பாராதவற்றையும். //

அருமையான வரிகள்.

-/பெயரிலி. said...

/பெரிய விடையம்;/
ஒரு சின்ன விடயம்;
அது பெரிய விடயம்.

கறுப்பி said...

முத்து நன்றி
சுந்தரவடிவேல் மாற்றி விட்டேன் நன்றி
போஸ்டன் பாலா நன்றி
பெயரிலி – உம்மோட பெரிய பேஜாராப் போச்சு – மாற்றி விட்டேன் நன்றிகள்
வெளிச்சம் - என்ன ஏதோ ஒரு கவிதை என்று நான் சின்னதாக எழுதியதை அக்குவேறு ஆணி வேறாக ஆராய்ந்திருக்கின்றீர்கள். இதற்குள் இத்தனை அர்த்தமா என்று எனக்கு இப்போது ஆச்சரியமாக இருக்கிறது. நன்றிகள்.

கிஸோக்கண்ணன் said...

சொல்லிய சொல்லிற்கு ஓரர்த்தம்
சொல்லாத சொல்லுக்கு பல அர்த்தம்
என்று நானெழுதிய தமிழின் தலை சிறந்த கவிதை வரிகள் ஞாபகத்துக்கு வருகின்றன. :)

ஜெயபாலன் said...

நல்ல கவி மனசு. நல்வாழ்த்துக்கள்