சனி மாலையை வலைப்பதிவாளர்களுக்கு என்று ஒதுக்கி வைத்தாலும் கோடை வந்து விட்டாலே தமிழ் நிகழ்வுகளால் நிரம்பிவிடும் ரொறொண்டோவின் வழமையான ஒரு மிகவும் பிஸியான சனிதான் அன்றும். காலை 10 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை கவிதை மொழிபெயர்புப் பட்டறை, அதே மண்டபத்தின் இன்னுமொரு பகுதியில் வாழும் தமிழின் புத்தகக் காட்சி, அதன் முடிவில் நாடக எழுத்தாளர் ஜெயகரனின் நாடகப்பிரதி வெளியீட்டு விழா, அதே நேரம் வெளியே பூங்காவில் வலைப்பதிவாளர்கள் சந்திப்பு என்றும் மூச்சு விட நேரமற்ற ஒரு நாளாக நான் எண்ணியிருந்தேன். நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்?
குளிர்காலங்களில் யன்னல் கதவுகள் திறக்கப்படாத குடில்களிலெல்லாம் ஸ்பிரங் கிளீனிங் என்று வேண்டாத பொருட்கள் அகற்றுதல் மும்மராக இடம்பெறும். கறுப்பி கொஞ்சம் லேட். காலை சில கழிவுகளை அகற்ற முனைந்து காலில் போட்டு, கால் வீங்க, அழுது, ஐஸ் வைத்து நொண்டி நொண்டிப் படுத்து விட்டேன். ஐயோ எல்லாவற்றையும் கோட்டை விடப்போகின்றேனே என்று திடுக்கிட்டெழுந்து நான் போகப் போறேன் என்று வீட்டில் வாங்கிக்கட்டிக் கொண்டு மாலை ஐந்த மணி அளவில் மொழிபெயர்ப்பு பட்டறைக்குள் முகத்தைக் காட்டி, புத்தக வெளியீட்டிலும் முகத்தைக் காட்டி, ஒரு மாதிரி வலைப்பதிவாளர்களைச் சந்திக்க எனது நண்பரும் பல கால வலைப்பதிவு வாசகரும், எனது படங்களுக்கு கமெரா, எடிட்டிங் செய்பவருமான ரூபனுடன் பூங்காவிற்குப் போய்ச் சேர்ந்தேன்.
இச் சந்திப்பில் வெங்கட், கிஸோ, நக்கீரன், தான்யா, பிரதீபா, வசந்திராஜா (வாசகி), சக்தி, டீசே, சத்யா (வாசகி), ரூபன் (வாசகன்), கறுப்பி போன்ற ரொறொண்டோ வாழ் நபர்களும், வேற்று மாநிலத்தில் இருந்து பாலாஜிபாரி, மதி கந்தசாமியும், சுந்தரவடிவேல், அவரது மனைவி ஜானகி, மகன் மாசிலன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். இதில் சக்தி, நக்கீரன், பாலாஜி பாரி, மதிகந்தசாமி, சுந்தரவடிவேல், அவரது மனைவி ஜானகி, மகன் மாசிலன் மட்டுமே எனக்குப் புதியவர்கள் ஏனையோர் ஏற்கெனவே அறிமுகமானவர்கள். இரண்டு பூங்கா இருக்கைகள் அருகருகே இருந்ததால் அமர்ந்து கொண்டோம். கொஞ்சம் நெருக்கமாக இருந்ததால் தாம் வேறு இருக்கைகள் எடுத்து வருவதாக டீசே, கிஸோ, பாலாஜி பாரி(யும் என்று நினைக்கின்றேன்) ஆண்களுக்கே உரிய மிடுக்கோடு எழுந்து சென்று, இருக்கைகளை அசைக்க முடியாமல் வெறும் பூக்கள் சிலவற்றை பேக்காட்டக் கொண்டு வந்தார்கள் (பூ என்றால் புல்லுக்குள் இருக்கும் களையின் பூ)
அவர்களைக் குத்திக் காட்டுதல் தவறென்று உணர்ந்ததால் எல்லோரும் புற்தரையில் இருக்க முடிவெடுத்தோம்.
முதல் ரவுண்டாக எம்மை நாம் அறிமுகம் செய்து கொண்டதோடு, எப்படி வலைப்பதிவின் அறிமுகம் கிடைத்தது என்று எமது திருவாய் திறந்து மொழிந்தோம். (இந்த வேளை வெங்கட் எஸ்கேப்)
இரண்டாவது ரவுண்டாக எமக்குப் பிடித்த, நாம் படிக்கும் வலைப்பதிவுகள் பற்றிக் கூறினோம். (யார் யார் எவருடையதைக் கூறினார்கள் என்று கறுப்பி தகவல் தருவது தவறென்றுணர்ந்து)
ஒட்டு மொத்தமாக எல்லோரையும் கவர்ந்ததாக
நாராயணன்
மாண்டிரீஸர்
தங்கமணி
பெயரிலி
பத்மா அரவிந்த் என்று ஒத்துக் கொண்டோம்.
பெயரிலி தற்போது படங்களைப் போட்டு வாசகர்களில் கண்ணில் பூச் சுத்துவதும், இது ஒரு தொத்து நோயாப் பலரின் வலைப்பதிவுகளில் பரவ முயல்வதால் வன்மையாகக் கண்டிக்கப்பட்டது. காசியின் சேவை பாராட்டப்பட்டது. சக்தி தான் வலைப்பதிவிற்குப் புதிது என்றும் கதைப்பதற்குப் பயமாக இருக்கிறது என்று வெட்கப்பட்டு முகத்தை கைகளால் மூடிக் கதைத்தார். வேறு என்ன புதியவை செய்யலாம் என்று மதி கேள்வியை வைத்தார். பெரிதாகப் பதில் அதற்கு வரவில்லை. (போதும் என்ற மனமே பொன் செய்யும்)
எப்படி வலைப்பதிவுகளை படிப்பதற்கு தேர்ந்தெடுக்கின்றோம் என்ற ரவுண்டில், எமக்குப் பிடித்த வலைப்பதிவாளர்களைத் தவிர்த்து கவர்சியான தலைப்புகளைப் பார்த்தும், பின்னூட்டங்களின் எண்ணிக்கையைப் பார்த்தும் தெரிவு செய்வதாகக் ஒட்டுமொத்தமாகக் கூறினார்கள் என்று நினைக்கின்றேன். (கறுப்பி தலைப்பிடுவதற்காக கவர்ச்சி நடிகைகளின் பெயர்களை சேகரிக்கத் தொடங்கிவிட்டேன்)
அடுத்த ரவுண்டுக் கிடையில் மீண்டும் ஆண் சிங்கங்கள் ரீ வாங்கி வர எழ (கிஸோ டீசே) பாலாஜி பாரி தானும் வருவதாக எழுந்தார். டீசே ஏதோ அதட்டி அவரை இருத்தி விட்டுச் சென்று விட்டார். எனது காதில் பெரிதாக விழவில்லை. (பாவம் பாலாஜி பாரி) சில நிமிடங்களின் பின்னர் உல்லாசப்பயணிகளைத் தன் வசம் இழுத்துக் கொள்ளும் சுவை மணம் மிக்க கனேடிய பேமஸ் "ரிம்ஹோட்டன்" கோப்பி "டோனட்ஸ்" உடன் வந்தார்கள்.
இதற்கிடையில் சக்தி, சத்யா எஸ்கேப் ஆகிவிட்டதால் மீண்டும் நாம் இருக்கைகளில் இருந்து கொண்டோம்.
டீசே கமெராவைத் தூக்க, முகத்தை வெட்டி ஒட்டும் வேலை அறம்புறமாக வலைப்பதிவில் இடம் பெறுவதால், சும்மா கலாம் புலாமாக ஏதாவது எடுத்துப் போடுவதாக முடிவெடுக்கப்பட்டது. பல படங்களை டீசே தட்டினார். கறுப்பிக்கு பெயரிலியில் இருக்கும் நம்பிக்கை டீசேயின் புகைப்பிடிப்பில் இருக்கவில்லை. பல படங்கள் மிஸ்ஸிங். (என்னத்தைத் தட்டினாரோ தெரியவில்லை) இந்த வேளை கிஸோவும் கிளம்பி விட்டார். அவருக்குத் தான் நட்சத்திரம் என்ற திமிர் அப்போதே வந்துவிட்டதை உணரக் கூடியதாக இருந்தது.
சுந்தரவடிவேல் தான் படிக்க விரும்பாத சில வலைப்பதிவாளர்களின் பெயர்களைக் கூறினார். (அதை வெளியிட கொப்பி ரைட் என்னிடம் இல்லை). பின்னர் கலகலப்பாகப் பேசிச் சிரித்து கொண்டிந்தோம். நாம் சிரிக்கும் போது எம்மையும் மீறி மாசிலன் தனக்குப் புரிந்து போல் சிரித்து எல்லோரையும் கலகலப்பாக்கினார். பின்னர் பொதுவாக உரையாடிக் கொண்டிருந்தோம். பாலாஜி பாரியுடன் உரையாடும் சந்தர்ப்பம் கறுப்பிக்குக் கிடைத்தது (பாலாஜிக்குப் பிடிக்கிறதோ என்னவோ அவருடன் உரையாடும் போது ஜெயமோகனை அடிக்கடி நினைவிற்குக் கொண்டு வந்தார்) இப்படியே சும்மா கொஞ்ச நேரம் கடியில் போனது. பின்னர் இரவு உணவிற்காக எங்கு செல்லலாம் என்ற கேள்வி எழு, ஒரு இலங்கை உணவகத்திற்குப் போவோம் என்று பாலாஜி பாரியின் விருப்பமாக "ஹொப்ப கட்" எனும் அப்பத்திற்கு பேர் போன உணவகத்திற்குச் சென்றோம். சந்தோஷமா ஒரு பியர் அடிப்போம் என்றால் நொன்அல்கஹோல் என்றார் உணவகத்து உரிமையாளர். போய் இருந்து விட்டோம் என்ன செய்வது
சாப்பாட்டு ரவுண்டில்
அப்படைஸராக எல்லோருக்கும் ஒரு அப்பம் ஓடர் கொடுத்தோம்.
(எல்லோரும் கையில் மெனுவைத் தூக்க டீசே கொஞ்சம் ரென்சனாவது தெரிந்தது. பில் தன் தலையில் பொறிந்து விடும் என்ற பதட்டம் போலும்)
இரண்டாவது ரவுண்டாக
பலவிதமான உணவுகள் ஓடர் கொடுக்கப்பட்டது. (பகிர்ந்துண்ணல் முறைக்காக)
பாலாஜி பாரி எனக்கு அருகில் இருந்ததால் அவரின் ஓடர் மட்டும் ஞாபகத்தில் இருக்கிறது. முதலில் இட்டலி சட்னி சாம்பார் என்றார், அடுத்த பிளேட்டாக மசாலா தோசை என்று இரண்டு ஓடர்களைக் கொடுத்தார். பல வருடங்களுக்குப் பின்னர் இந்த உணவை உண்ணப் போவதாக மிகுந்த மகிழ்ச்சியோடு கூறினார். ரூபனிடமிருந்து கொஞ்சம் புட்டும் எடுத்துக் கொண்டார். பக்கத்தில் இருந்த இலங்கை வகை சம்பலைப் பார்த்து என்னென்று கேட்க, சத்யா சம்பல் என்றார். அப்படியென்றால்? என்ற அவரின் கேள்விக்கு தான்யா, இந்தியாவில் சட்னிபோல் ஈழத்தில் சம்பல் செய்வார்கள் கொஞ்சம் ரையாக இருக்கும் என்று விளக்கம் கொடுத்தார். அதன் பின்னர் சாம்பல் நன்றாக இருக்கிறது, சாம்பல் அப்படியிருக்கிறது என்ற பாலாஜியை சாம்பல் என்றால் Ash என்று அர்த்தம் என்று சத்யா பாலாஜிக்குக் குட்டு வைத்தார்.
சிக்கின் புரியாணி, புட்டு, பிறைட் ரைஸ், கொத்து ரொட்டி, கணவாய், சிக்கின், மட்டிண்கறி என்று பலவித உணவுகள் மேசைக்கு வந்தன.
இறுதியாக வட்டிலப்பம், பீடா மேசைக்கு வந்தன. வட்டிலப்பம் என்றவுடன் ஏதோ அப்பவகை என்று எண்ணியதாக பாலாஜி பாரி கூறினார். சிறிது எடுத்து வாயில் போட்டு விட்டு நன்றாக இருப்பதாகவும் கூறினார். மாசிலன் ஓடியோடி பல உணவுவகைகளை சுவைபாத்துக் கொண்டிருந்தார்.
மாலை ஆறுமணிக்கு ஆரம்பித்த வலைப்பதிவாளர்கள் சந்திப்பு இரவு 11:30க்கு நிறைவிற்கு வந்தது. அடுத்த வலைப்பதிவாளர் சந்திப்பு அடுத்த வருடம் பாலாஜி பாரி வசிக்கும் நீயூ ப்ரோன்ஸ்விக்கில் நடத்தலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. (சும்மா)
எல்லாவற்றையும் கவர் பண்ணினேனா தெரியாது. ஏனையோர் அதனைச் செய்யலாம் என்ற நம்பிக்கையுடன்
(நல்ல முறையில் இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தாலும் கறுப்பிக்குச் சில மனக்குறைகள் இருக்கத்தான் செய்தன. கறுப்பியுடன் மோதும் ஈழநாதன், கறுப்பியைப் பிடிக்காது என்று மொழிந்த ரோஸாவசந்த், கறுப்பிக்காகப் பிரத்தியேக தளம் போட்ட எல்லாளன், வன்னியன், இன்னும் சும்மா ஜள்ளு விடும் வசந்தன், சயந்தன், அருகில் இருக்கும் தங்கமணி, தூர இருக்கும் நாராயணன் போன்றோரும் கலந்து கொண்டிருந்தால் இன்னும் சந்தோஷமாக இருந்திருக்கும் கறுப்பிக்கு)
Subscribe to:
Post Comments (Atom)
30 comments:
அச்சச்சோ பாலாஜி சரியா சாப்பிடலன்னு டிசே பதிவுல போட்டிருக்கேன், நீங்க இங்க இப்படி எழுதிட்டீங்களே. எங்கேயோ உதைக்குதே! பாலாசீ...பகருமய்யா...:))
//இன்னும் சும்மா ஜள்ளு விடும் வசந்தன், சயந்தன், //
என்னாது? ஜொள்ளு விடுறோமா..?
தமிழ் இலக்கிய உலகையே சும்மா பிரட்டிப் போட இருக்கிறம் எண்ட திமிரில நானும் வசந்தனும் இருக்கிறம். நீங்கள் இப்பிடி எழுதுறியள்.. நல்லதுக்கில்லை..
மற்றது.. வெகு விரைவில எது மாதிரியும் இல்லாத புது மாதிரியா மெல்போணில் வலைப்பதிவாளர் வலம் ஒன்றை நடத்த இருக்கிறம். மெல்போணின் முக்கிய சுற்றுலாத்தளங்களை பார்வையிட்டுக்கொண்டே இந்த இந்த வலம் நடக்கும். இம்முறை இன்னும் சிலர் இணைக்கிறார்கள். (விபரங்கள் விரைவில்..)இத்தகவலை வெளியிட தனது வலைப்பதிவை தந்துதவிய கறுப்பிக்கு நன்றி..
கறுப்ப்பி, சந்திப்பு என்று அறிவிப்பு எல்லாம் போட்டாங்க, ஆனால் ரிப்போர்ட்டைக் காணுமே என்று நினைத்து, இந்த மாதிரி விவரமான பதிவுக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தேன். டிசே பதிவிலும் மறுமொழிகளிலும் இருந்த குழூஊக்குறிகளும்:-) புரியலை. படத்தில் இருந்த ஆசாமிகளும் ஆரென்று தெரியவில்லை. ஒரே கன்பூஸன் :-). ரொம்ப தேங்ஸ¤
சுந்தரவடிவேல் ஆப்பக்கடை பிடித்திருந்தமைக்கு நன்றி. சயந்தன் என்ன தலைகீழாக நின்று நடத்தப் போகின்றீர்களா? நாங்களும் அடுத்த வருடம் பெரிய பிளானில இருக்கிறம். சொல்ல மாட்டன். பிரகாஷ் நன்றி. மேலதிக படங்கள் டீசேயிடம் வாங்கி இணைக்கின்றேன்.
தமிழன் எங்க போனாலும், அடுத்தவங்களை நினைக்காம இருக்க மாட்டான்றதை அருமையா நிரூபிக்கிறீர்கள். என் பெயரெல்லாம் இழுபட்டிருக்கிறதே? எனக்கென்னமோ இது உள்நாட்டு சதி திட்டமென்று தோன்றுகிறது ;-) ஆனா, எல்லோரும் செம வெட்டு வெட்டியிருக்கிங்க போல இருக்கு. யாரோட கிரெடிட் கார்டு அழிந்தது ? ;-)
வேறுயார் நாராயணன் எங்கள் தலைவர் டீசேயின் கிரெடிட் கார்தான் வெட்டப்பட்டது. திருமணமாகாதவர் கொடுத்துவிட்டுப் போகட்டும். தமிழுக்காக இதுவும் செய்யாட்டா?
கறுப்பி:
ஆனாலும் என்னை நீங்க இப்படி போட்டுத் தாக்குவீங்கன்னு நினைக்கலை.
:):)
கறுப்பி, ரொரண்ரோ வலைப்பதிவர் சந்திப்புப் பற்றிய நல்லதொரு பதிவு எழுதியிருக்கின்றீர்கள்.. கால் நோவோடும் கலந்துகொண்டமைக்கு நன்றி.
பாருக்குப் போகாததில் எனக்கும் கொஞ்சம் கவலைதான். ஆனால் அப்பம் கள்ளுவிட்டுத்தானே செய்திருந்தார்கள். அதனால்தானே மதி, சுந்தரவடிவேல் போன்றவர்கள் தங்களுக்கு இன்னும் சில அப்பங்கள் வேண்டுமென்று அடம்பிடித்தார்கள் என்பதை மறந்துவிட்டீர்களே :-) !
பாலாஜி பாரி ஆமா ஊர் போய்ச் சேர்ந்தாச்சா? ரொம்ப போர் அடிக்குமே?
தூரப் போயிட்டாத் துணிஞ்சு தாக்கலாம். இனிமேல் கவனமாக இருக்கவும்.
டீசே. ஒரு ரயில் வண்டிப் படம் எடுத்தமே அது எங்க? கொஞ்சம் கலர் காட்டி வசந்தன்னர வயிற்றெரிச்சலைக் கிளப்புவம். நினைச்சமாதிரி வரேலை அதுஇது எண்டு சவுண்டு விடுறார்.
அது சரி இப்பதானே சுந்தரவடிவேல் ஏன் ஆப்பம் ஆப்பம் கேட்டு வாங்கிச் சாப்பிட்டார் எண்டு புரிகிறது. அவரின் வார்த்தைகள் புரண்டதற்கும் இதுதான் காரணமோ?
கறுப்பி, விரிவான விவரிப்புக்கு நன்றிகள். பாலாஜி இப்பட்டி சாப்பிட்டு என் கண்ணில் ஆனந்தக் கண்ணீர வரவச்சுட்டீங்களே! நல்லாருங்க.
//ஆண்களுக்கே உரிய மிடுக்கோடு எழுந்து சென்று, இருக்கைகளை அசைக்க முடியாமல் வெறும் பூக்கள் சிலவற்றை பேக்காட்டக் கொண்டு வந்தார்கள் (பூ என்றால் புல்லுக்குள் இருக்கும் களையின் பூ) //
ஹா, ஹா..
மாசிலன் தான் போனதிலேயே ஆக்டிவான வலைப்பதிவர் போல இருக்கு.
பட்ட காலிலேயே படும் என்பது போல காலில் அடிப்பட்டு, பாலாஜி பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட்டு (அதுவும் குடிக்க பச்சைத் தண்ணீரோடு) மிகுந்த சிரமப்பட்டு இதை எழுதியிருக்கிறீர்கள். நன்றிகள்!
விவரமாக எழுடியமைக்கு நன்றிகள். கால்பந்தாட்டம் விளையாட இருந்த திட்டம் என்னவாயிற்று?
ஐயோ.
நான் உங்களுக்காக எனது பூராயம் தளம் போடவில்லை. அதிலே உங்களுக்கா பதிவு எழுதினேன். இதையே உங்களுக்குரிய பெருமையாய் சொல்லிக் கொண்டு திரிவீர்கள் என்று தெரிந்திருந்தால் அந்தப்பாவத்தைச் செய்திருக்க மாட்டேன்.
நான் எந்தச் சந்திப்பிலும் கலந்து கொள்வதாயில்லை. கூப்பிட்டிருந்தாலும் வந்திருக்க மாட்டேன்.
அதுசரி, என்ன ஒருத்தரும் ஒழுங்காப் படம் போடேல. சிங்கைக் காரர் மாதிரி ஒழுங்காக சந்திப்பு நடத்தத் தெரியேல எண்டதுதான் என்ர கணிப்பு.
வன்னியன் ஏதோ போட்டிருந்தீர்கள். வந்திருந்தால் சண்டையை நேரிலேயே நடத்தியிருக்கலாம். அது சரி தாங்கள் மர்ம மனிதனோ?
தங்கமணி
பாலாஜி பாரி ஒருபுறம் மறுபுறம் சுந்தரவடிவேல் நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருக்க பாவம் நடுவில் நக்கீரன் ஒரு வார்தை பேசாமல் பட்ட அவஸ்தை? அடுத்;த வருடம் தாங்களும் வர இருக்கின்றீர்கள் என்று கேள்விப்பட்டோம். கட்டாயம் வாருங்கள். படங்கள் நிறம்பவே எடுத்தார்கள். எங்கே என்ற தெரியவில்லை. டீ.சேயிடம்தான் கேட்க வேண்டும்.
தேன்துளி – என் கால் முறிந்து போனதால் கால்பந்தாட்டம் தடைப்பட்டுவிட்டது.
/ஐயோ.
நான் உங்களுக்காக எனது பூராயம் தளம் போடவில்லை. அதிலே உங்களுக்கா பதிவு எழுதினேன். இதையே உங்களுக்குரிய பெருமையாய் சொல்லிக் கொண்டு திரிவீர்கள் என்று தெரிந்திருந்தால் அந்தப்பாவத்தைச் செய்திருக்க மாட்டேன்./
கண்மூடிப் பால் குடிக்கும் பூனைக்கு மணி கட்டிய வன்னிய சுண்டெலிக்குத் தீரவன்னியன் என்ற பட்டத்தினை இந்த சபையிலே வழங்குகிறேன்
;-))
//கண்மூடிப் பால் குடிக்கும் பூனை\\
(*_*)
\\இருக்கைகளை அசைக்க முடியாமல் வெறும் பூக்கள் சிலவற்றை பேக்காட்டக் கொண்டு வந்தார்கள் //
இதனை நான் மென்மையாகக் கண்டிக்கின்றேன். அந்த இருக்கைகள் நிலத்தோடு சேர்த்து அமைக்க்கப்பட்டிருந்தன. அப்படியாயின் நாங்கள் பூமியைத்தான் தூக்கி வந்திருக்க வேண்டும்.
ம்.. நான் சொன்னது ஆண்கள் எழுந்து போன தோறணையைத்தான். அனுமான் மலையைத் தூக்கவில்லையா? மனமுண்டானால் இடமுண்டு.
அது சரி அந்த ரதியக்கா யார்? செல்வரூபன் தாங்கள் தான் என்று எனக்குத் தெரியும்.
//அந்த இருக்கைகள் நிலத்தோடு சேர்த்து அமைக்க்கப்பட்டிருந்தன. அப்படியாயின் நாங்கள் பூமியைத்தான் தூக்கி வந்திருக்க வேண்டும்.//
உதவிக்கரம் நீட்ட வந்த நண்பா, நீ வாழ்க :-)
தோல்வியில் முடிந்த கனடா வலைப்பதிவர் மாநாடு.. பரபரப்புத் தகவல்கள்..
அண்மையில் பலத்த எதிர்பார்ப்புக்களுடனும் ரொம்ப பில்டப்புக்களுடனும் ஆரம்பித்த கனடா வலைப்பதிவர் சந்திப்பு இறுதி நேரத்தில் பிசுபிசுத்துப் போனதாக நமது ரொறன்ரோ புலநாய்வாளர் தெரிவிக்கிறார்.
இக்குழுவினரின் சந்திப்புக்கு இறுதி நேரத்தில் பலர் வரவில்லையென்றும் ஆயினும் எல்லோரும் வந்தது போன்ற தோற்றத்தில் அது பற்றி எழுதுகின்றவர்கள் எழுதுகிறார்கள் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்தும் யார் யார் வந்தார்கள் என்பது குறித்தும் எக்ஸே றிப்போட் ஒன்றினை விரைவில் வெளியிட உள்ளோம். உள்ளிருந்து பெற்ற தகவல்களுடன்..
1) சுந்தரவடிவேல் & குடும்பம்
(2) பாலாஜி-பாரி
(3) மதி
(4) கறுப்பி
(5) வெங்கட்
(6) கிஸோக்கண்ணன்
(7) நற்கீரன்
(8) கார்த்திக் (ஆவியாக)
(9) வசந்தன் (பலாவிலை மூலமாக)
(10) டிசே
இவர்களில் கார்த்திக்கும், வசந்தனும் தவிர்த்து யாவரும் வந்தார்கள். மேலதிகமாய் இன்னும் கொஞ்சப் பேர் வந்திருந்தார்கள். Must Do, உங்கள் அளவுகோலின்படி பார்ப்பின் பெரும் வெற்றியில்தான் இம்மாநாடு முடிந்துள்ளது. :-)
கிஸோ பலரைத் தவற விட்டு விட்டீர்கள்.
தான்யா
பிரதீபா
சக்தி
வசந்திராஜா
ரூபன்
சத்யா
கறுப்பி
அடுத்தமுறை முன்கூட்டியே சொல்லுங்கள் நானும் வந்து விளையாட்டை துவக்கிவைக்கிறேன்.
Must do said:
//புலநாய்வாளர்//
உந்த நாய்கள் எங்கயிருக்கு?
இப்ப நாய்த்தொல்லைகள் கூடிப்போச்சு.
ஆனா ஜொள்ளு விடுறது எண்டு சொன்னத வன்மையாக் கண்டிக்கிறன்.
எனக்கும் சந்தேகம் தான். கிசோ கொஞ்சப் பேரச் சொல்ல, கறுப்பி பிறகு கொஞ்சப்பேர ஞாபகப்படுத்திறா. என்ன நடக்குது?
குறைஞ்ச பட்சம் ஒரு படம்கூடவோ சேந்து நிண்டு எடுக்கவில்லை.
'தீவார'யும் காணேல.
/
//புலநாய்வாளர்//
உந்த நாய்கள் எங்கயிருக்கு?
/
உதுதான் உந்தப்பெடியங்களோட பிரச்சனை; "கருத்துச்சுதந்திரமிருக்கு; கேள்வி கேக்கலாம்" எண்டு விட்டால், பாலவனச்சோலையில ஐனகராஜை வேலைக்கு இன்ரவியூ கண்டவர் "எட்டுக்காற்பூச்சிக்கு எத்தினை காலெ"ண்டு கேட்ட மாதிரி பேய்க்கேள்வி கேக்குறாங்கள்.
அதுதான் தெளிவாய்ச் சொல்லியிருக்கிறாரே MustDo; "புல நாய் வாளர்" எண்டு; "புலம்பெயர் நாய் வால்களெண்டு சொல்லியிருக்கிறாரோ? வடிவா ஒருக்கா வாசிச்சுச் சொல்லும்." வரவர உமக்குப் பகிடி கூடிப்போச்சோ, இல்லை, அவுஸ்ரேலியாவில குளிர்காலம் கூடிப்போச்சோ தெரியேல்லை. Must Do உம் நீரும் வேறவேற ஆக்களெண்டால், உமக்குத் தெளிவா விளங்கியிருக்கும் காணும். ;-))
புல நாய் வாலர் ஆகா ஆகா.
இரண்டு பேர் ஒரே சந்தேகம்.நான் அப்பவே நினைச்சேன்.
பெயரிலி சீடப்பிள்ளைகளுக்கு வடிவாகச் சொல்லிக்குடுங்கோ.
கறுப்பி நானும் வசந்தகுமாரனும் வருவதாகத் தான் இருந்தோம்.பிறகு நீங்கள் தண்ணியடிச்சிட்டு எங்களோடை சண்டைபோட்டால் என்ன செய்யுறதெண்டு அதைக் கைவிட்டிட்டம்.
எல்லாருக்கும் ஒரு அறிவித்தல்.
என்ர பக்கத்தில ஒரு பதிவு போட்டிருக்கிறன். இனியும் சும்மா இருக்க என்னால் முடியாது.
//'தீவார'யும் காணேல.//
ஏற்கனவே ஒருவரிற்கு கலியாணம் செய்து அனுப்பிவிட்டவையள். நீரும் கூட சேட்டை விட்டீரென்றால், ஒரேமிக்க பாடையே கட்டி பரலோகத்துக்கு அனுப்பிவிடுவினம். கவனம்.
....
அதுசரி, நாங்கள் கூழ் குடிக்க பலாவிலை அனுப்பச்சொன்னால், ஏனப்பா, புளியமிலை அனுப்பினனீர். நீர் அவுஸ்திரேலியாவுக்குப் போனாப்பிறகு, கங்காரு அணிலாக மாறியபோல, பலாவிலையும் புளியமிலை ஆகிவிட்டதோ தெரியவில்லை. உம்மட தொல்லைதாங்கமுடியாமல், அவுஸ்திரேலியாப் பெண்கள் எந்த் ரூபத்தில் நட்மாடுகின்றார்களோ என்று கன்னத்தில் கைவைத்த்படி கப்பல் தாண்ட சோகத்தைப்போல யோசித்துக்கொண்டிருக்கின்றேன்.
//Must Do உம் நீரும் வேறவேற ஆக்களெண்டால், உமக்குத் தெளிவா விளங்கியிருக்கும் காணும்.//
தமது குட்டு எங்கே உடைந்து விடுமோ எனக் கருதிய அமெரிக்க கனேடிய முதலைகள் திட்டமிட்டு திசைதிருப்பும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளமையை எமது அமெரிக்க புல நாய் வாலர் கண்டுபிடித்திருக்கிறார்.
அவர்கள் தமது கருத்துக்களை மீள் பரிசீலையணை செய்வதற்கு வாய்ப்பனாக நல்லெண்ணை நடவடிக்கையாக கனடா வலைப்பதிவாளர் சந்திப்பு தகவல்களை வெளியிடுவதை ஒத்திவைத்துள்ளோம். சம்பந்தப் பட்டவர்கள் எமது நல்லெண்ணை முயற்சிகளை புரிந்து கொண்டு தாமும் ஏதாவது தேங்காயெண்ணை முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென மேற்கு உலக நாடுகளிடம் கோரிக்கை வைக்கிறோம்.
\\கிஸோ பலரைத் தவற விட்டு விட்டீர்கள்//
மதியின் பதிவில் உள்ளேன் ஐயா/அம்மா என்று சொன்னவர்கள் என்று 10 பேரை வரிசைப்படுத்தியிருந்தாங்க யாரோ. அதனைத்தான் நான் குறிப்பிட்டேன். அனுமதியில்லாமல் எப்படி மற்றவர்களின் பெயர்களைப் போடுவது என்ற குழப்பத்தில்தான் அவர்களது பெயர்களைக் குறிப்பிடவில்லை.
நியாயமாப் பாத்தா 0.75 வெங்கட், 0.90 சத்தி என்றுதான் சொல்லவேணும். அவர்கள்தான் இடையிலேயே கிளம்பிட்டார்களே.
Post a Comment