Monday, June 27, 2005
அன்நியன் - கறுப்பியின் பங்கிற்கு
இது அன்நியன் சீசன். வலைப்பதிவில ஒரே அந்த வாசனைதான். கறுப்பியும் தன் பங்கிற்கு ஏதாவது எழுதுவம் எண்டு வெள்ளி இரவு ஒருமாதிரி ticket பெற்று போய் பார்த்தேன். ஹெவுஸ் புல்லா அன்நியன் ரொறொண்டோவில் ஓடிக்கொண்டிருக்கின்றது.
முன்பெல்லாம் கறுப்பி ஒரு தமிழ் படத்திற்குப் போகும் போது மிக இனசென்டாக ஒரு பொழுது போக்கிற்கான மட்டும் பார்ப்பதற்குச் செல்வேன். சங்கரின் படம் என்றால் இப்படியிருக்கும், மணிரத்தினத்தின் படம் என்றால் இப்படியிருக்கும் என்று மனதுக்குள் ஒரு வடிவம் இருப்பதால் அதை எதிர்பார்த்துப் போய் அது கிடைக்கும் பட்சத்தில் சந்தோஷித்து, கிடைக்காவிட்டால் "ப்ச்" கொட்டி அதிகம் வருந்தாமல் கழித்து விடுவேன். ஆனால் எப்போ வலைப்பதிவிற்கு வந்தேனோ அன்றிலிருந்து கறுப்பியின் பார்வை மாறிவிட்டது. இது நல்லதுக்கா கெட்டதுக்கா தெரியவில்லை. கறுப்பு வெள்ளையாய் தமிழ்ப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு தற்போது மல்டிகலரின் லுக்கு விடும் குணம் வந்து விட்டது. பாவம் கறுப்பி தன்னுடைய இனெசென்ஸை இழந்து விட்டாள். பூந்து, பூந்து பிழை பிடிக்கத் தொடங்கிவிட்டாள்.
சங்கரின் படங்களில் நிறம்ப கிராபிக்ஸ் இருக்கும், பாடல் காட்சிகள் அமர்க்களப்படும்,
நாயக நாயகிகளின் உடைகள் அந்த மாதிரி இருக்கும், காதல் காட்சிகள் ரசிக்கக் கூடியதாக இருக்கும், நகைச்சுவைகள் சலிக்காதவை, இவை நான் ரசிப்பவை. பிடிக்காத பக்கத்தில் சண்டை இருக்கும், ஒரு மசாலாக் கதை இருக்கும், இவை அனைத்தையும் கொண்டதாகத்தான் அன்நியனும் இருந்தது. இருந்தும் பாடல்கள் என் மனதில் பதியவில்லை. ஏ.ஆர் ரகுமான் இல்லை என்பது தெரிகின்றது. போனஷாக விக்கிரம் வியக்கும் வகையில் அழகாகவும், நடிப்பில் சிறப்பாகவும் இருக்கின்றார். சதா வெறும் சாதா.
வலைப்பதிவில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை நானும் கண்டு கொண்டேன் என்பதோடு இன்னும் சிலவற்றையும் என் பார்வையான இணைக்கலாம். (சமூகநலவிரும்பிப் பார்வை என்று வைத்துக்கொண்டு)
பார்ப்பண்ய இளைஞர்கள் தமிழ் திரைப்படங்களில் அனேகமாக ஒரு “நேட்” போல்தான் சித்தரிக்கப்படுவார்கள். சிறுவயதிருந்து பூஜை, புனஸ்காரங்கள், மந்திரம், தந்திரம் என்று வாழ்வதாலோ என்னவோ வெறும் ஜடமாகப் புத்தப் பூச்சியாகத்தான் பார்பண்யர்களைக் காட்டுவதும், தற்போதைய நாயகிகளுக்கு “ரேமோ” போன்ற cool guyஐதான் பிடிக்கும் என்றும் பார்பண்ய இளைஞர்களை மட்டம தட்டியிருக்கின்றார்கள். அத்தோடு பார்பண்ய குடும்பம் எப்போதும் அட்வைஸ் பண்ணும் வெறும் அறுவை போல் அம்மா, அப்பா, பாட்டி என்று ஒரே பார்பண்ய அட்வைஸ். குழந்தைகள் தங்கள் சுயத்தில் சிந்திப்பது, வாழ்வது, வாழ்வை அமைத்துக் கொள்வது இப்படியான சுதந்திரங்கள் குழந்தைகளிடமிருந்து பறிக்கப்படுகின்றது என்பதையும் காட்டுகின்றார்கள்.
பார்பண்ய பெண்கள் திருந்தவே மாட்டார்கள். வெறும் தலைக்குக் குளித்து. ஈரச்சேலையோடு சாமி. சங்கீதம். சீடை. பட்டு என்று பிராணனை விடும் ஜந்துகளாவே வாழ்ந்து முடிக்கின்றார்கள் என்பதையும் காட்டுகின்றார்கள். இவைகளெல்லாம் பெருமைப்படும் விஷயமா வெறும் வேஸ்ட்.
மொத்தத்தில் பார்ப்பண்ய வாழ்க்கை முறையை நன்றாகவே நக்கலோ நக்கல் அடித்திருக்கின்றார்கள் சங்கர். இடையிடையே வரும் கள்ளச் சாராயமும், சோம்பேறி மனிதனும் சும்மா பார்பண்ய மக்களை திசை திருப்ப ஒரு ஊதல்.
ஒவ்வொரு சீசனுக்கு ஒவ்வொரு வியாதி தமிழ்பட நாயகர்களுக்கு வரும். இப்போதைய சீசன் ஸ்பிளிட் பேர்சனாலிட்டி.. அதைச் சொல்லி கதையை கேள்வி கேட்க முடியாமல் பண்ணி விட்டார்கள்.
தியேட்டரில் நல்ல சுவையான சமோசா கிடைத்தது. சட்ணியோடு சாப்பிட்டு ஒரு ரீயும் குடித்து கலர் புல்லா ஒரு படமும் பார்த்து வெள்ளி இரவு நன்றாகத்தான் கழிந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
29 comments:
கறுப்பி நேற்றைய பெண்கள் மலர் பற்றிய கூட்டம் நன்றாக நடைபெற்றதா?என்னால் கலந்து கொள்ள முடியவில்லை.
சினேகிதி, நன்றாக நடந்தது என்றுதான் சொல்ல வேண்டும். நல்ல விமர்சனங்கள் வைக்கப்பட்டன. தொடர்ந்தும் மாதம் ஒரு படைப்பை எடுத்து விமர்சிக்க உள்ளோம். உங்களால் முடியும் போது கலந்து கொள்ளலாம்.
/கறுப்பியும் தன் பங்கிற்கு ஏதாவது எழுதுவம் எண்டு வெள்ளி இரவு ஒருமாதிரி சிக்ரெக்ட் பெற்று போய் பார்த்தேன்/
பாத்தீங்களோ, புகைத்தீங்களோ? பிரெய்டின் சறூஊஊஊஊஊஉக்கல்.
;-)
/பார்பண்ணியர்களைக்/
பாத்துக்கொண்டே இருங்கோ... "இன்னாம்மே, சாட்டோட சாட்டா, பார், பண்ணின்னு லூஸ்மோஸன்ல ராங்கா திட்டிக்கின்னே கீறே"ன்னு யாராச்சும் ஒரு புண்ணூட்டம் குடுத்துட்டுப்போகப்போறாங்கள்.
/ஈர்ச்சேலையோடு/
ஈர்ச்சடை எண்டாலாச்சும் நம்பலாம்; ஆனால், ஈர்ச்சேலை. கறுப்பி தமிழுக்கு வாழ்வுதான் குடுக்கவேணாம்; கொஞ்சம் மூச்சுவிட வால்வெண்டாலும் குடுங்கோவன். இப்படி உங்களுக்கு, விரும்பினமாதிரி, தமிழிலை தட்டிக்கொன்றிருக்கிறியள். பெண்கள் மலர் கூட்டம் பற்றியும் எழுதினால், ஏதாவது சொல்லப் பிரியோசனப்படும்.
இந்தத்தமிழ்ப்பட நாயகிநாயகர்களின், இயக்குநனர்களின், கதாசிரியர்களின், தயாரிப்பாளர்களின் பிளவாளுமையைப் பற்றி, "மனக்கோலங்கள்" "கோர இரவுகள்" எழுத கோவூர் இல்லையே என்பதுதான் என்னுடைய கவலையெல்லாம் :-(
மேலே படத்திலை சதா வடிவாயிருக்கிறா. எனது இன்றைய பொழுதை இனிமையாக்கிய கறுப்பிக்கு நன்றி. பதிவை இனித்தான் வாசிக்கவேண்டும். சதாவைப் பார்த்தபிறகு அங்காலை நகரவே முடியாதிருக்கின்றது :-).
// பார்பண்ணியர்களை\\,//சிக்ரெக்ட் பெற்று\\,ஈர்ச்சேலை\\
யோவ் பெயரிலி என்னாய்யா இது பிரியலையே..
அடடடடடா எப்ப பாரு குத்தம் சொல்லிகிணு.. பெரிய ரோதனையா இல்லே போச்சு.
//புகைத்தீங்களோ? பிரெய்டின் சறூஊஊஊஊஊஉக்கல்\\
பாலாஜி பாரியின்ர அட்வைஸ்சுக்குப் பிறகு விட்டாச்சு.
ஏலேய் டீசே நான் படம் போட்டது விக்ரமுக்காக்கும். யப்பா.. இன்னா ஸ்டைலு, இன்னா ஸ்டைலு
இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம்.
அதுதானே சுந்தரவடிவேல் புளொக்குக்கு புளொக்கு எழுதித் தள்ளீட்டாங்க. பிறகெதுக்கு ரிப்பீட்டு
/// பார்பண்ணியர்களை\\,//சிக்ரெக்ட் பெற்று\\,ஈர்ச்சேலை\\
யோவ் பெயரிலி என்னாய்யா இது பிரியலையே../
அடடா அம்மா!! நீங்கள் எல்லாம் அமெரிக்காவில கோப்ரேட்டிலை வேலை செய்திருக்கவேண்டிய ஆக்கள்; ஓடிப்போய் மூலப்படிவத்திலேயே பொருட்பிழை, சொற்பிழை மாற்றார் அறியாமற் திருத்தி விட்டு மீண்டு வந்து, "என்ன குத்தம் கண்டீர் என் தமிழிலே?" என்கிறீரே... எனக்கு வேணும்! வேணும்!!
/இன்னா ஸ்டைலு, இன்னா ஸ்டைலு /
விக்ரத்தை இன்னா ஸ்டைலுன்னு சொன்னீங்களா, இனி ஆக, இணையத்தில மாயமாப் போய்வரத்தான் ஒரு வரம் உங்களுக்குத் தேவை
//விக்ரத்தை இன்னா ஸ்டைலுன்னு சொன்னீங்களா, இனி ஆக, இணையத்தில மாயமாப் போய்வரத்தான் ஒரு வரம் உங்களுக்குத் தேவை\\
பிரியலையே பெயரிலி.. டபுள் மீனிங்கில மனசு நோறமாதிரி ஏதாசும் சொல்றியா? (*_*)
//இது நல்லதுக்கா கெட்டதுக்கா தெரியவில்லை.//
சந்தேகமே இல்லை இது கெட்டதுக்குத்தான்.
kathirkamas,
//சந்தேகமே இல்லை இது கெட்டதுக்குத்தான்\\
(*_*)
/பிரியலையே பெயரிலி.. டபுள் மீனிங்கில மனசு நோறமாதிரி ஏதாசும் சொல்றியா? (*_*)/
இந்தச்சின்ன விசயத்துக்கெல்லாம் ஸ்டைலும் விக்ரமும் பிரியவேண்டியதில்லை. அதாகப்பட்டது படாததாய் நான் சொல்லவந்தது என்னவென்றால், ஸ்டைலுன்னா அதுக்கு ஒத்தர்தான்னு ஊருக்குள்ளே ஒரு கும்பல் சம்பல் அடிபோட்டுக்கொண்டு திரிகிறதா, இப்பொழுது, நீங்கள் ஸ்டைலு விக்ரம் என்று சொன்னீர்களோ, அந்தக்கும்பலுக்குத் தெரியாமல் இணையத்திலே மாயமாகப் போக வரத்தான் வேண்டுமென்ற நிலை. அதுக்கு எந்த (ஆ)சாமியிடமாவது வரத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். அல்லது ஸ்டைலாக விசிறி விடுவார்கள் விசீறி.
அது ஆரு கறுப்பிக்குத் தெரியாமல் தமிழ் பிலிமில ஸ்டைலு காட்டிக்கிணு நிக்கிறது. நான் அப்புடேட்டா ஆம்பிள பசங்க ஸ்டைலு கண்டுகிணு இருக்கிறனாக்கும்.
யாரு ரசனிசாரா? அந்த ஆளு பாட்டனாப் பூப்போது.. இப்ப போயி அந்தாளை ஏன் இழுத்துக்கிட்டு.
நானும் ஒரு வழியா படம் பார்த்துட்டேன். பயங்கர போர். அதில கொஞ்சம் பார்க்கக்கூடின மாதிரி இருந்தது விக்ரம்தான். ஆனாலும் வழமையான விக்ரம் படம் மாதிரியே இல்லை. ரெமோவை இன்னும் கொஞ்ச நேரம் கூட விட்டிருக்கலாம்.
அன்னியன்/அய்யங்கார் மாறி மாறி வாறது சூப்பர். அதுக்கு பிரகாஷ்ராஜ் ரியாக்ஷனும் சூப்பர்.
இந்தப் படத்துல ஆனா, பிரகாஷ்ராஜை வேஸ்ட் பண்ணிட்டாங்கப்பா. :( மனுஷன் அந்த பெர்முட்டேஷன் காம்பினேஷன் வார்த்தை விளையாட்டுலதான் கொஞ்சம் பார்க்க வைத்தார். ம்த்தபடி ஒரே கண்ணாமூச்சி ஆட்டம்.
கடைசிக்காட்சி, முடிவெட்டின விக்ரம் கியூட். ;)
அதான் மஜா வரப்போகுதே எண்டு விட்டுட்டன். ;)
படம் பார்த்தபிறகுதான் ரொஸாவசந்தின் பதிவை இன்னும் கூட இரசிக்க முடிந்தது. தூள் கிளப்பிட்டாருப்பா!
-மதி
/அப்புடேட்டா ஆம்பிள பசங்க ஸ்டைலு கண்டுகிணு இருக்கிறனாக்கும்./
நீங்கள் அப்புடேட்டா ஆம்பிள பசங்கை ஸ்டைலு கண்ணுகீறிங்களோ இல்லை ஆச்சிலேட்டா பொம்பிள புள்ளிங்க ஒயிலு கேட்டுகிறீங்களோ எனக்குத் தெரியாது; ஆனா, ரசனியப் பாட்டன்னு ரசனையில்லாமச் சொல்லீட்டங்க இல்லே; இனி உங்கள எனக்குத் தெரியாது; என்னை உங்களுக்குத் தெரியாது... மகளே இனி மன்னார் & கும்பனியோட குஸ்தி போடுறது உன் சமத்து. ஆளை விடு...... ஒரே ஓட்டமாய் ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒடியே போயிடுறன்.
//நீங்கள் அப்புடேட்டா ஆம்பிள பசங்கை ஸ்டைலு கண்ணுகீறிங்களோ இல்லை ஆச்சிலேட்டா பொம்பிள புள்ளிங்க ஒயிலு கேட்டுகிறீங்களோ எனக்குத் தெரியாது; ஆனா, ரசனியப் பாட்டன்னு ரசனையில்லாமச் சொல்லீட்டங்க இல்லே; இனி உங்கள எனக்குத் தெரியாது; என்னை உங்களுக்குத் தெரியாது... மகளே இனி மன்னார் & கும்பனியோட குஸ்தி போடுறது உன் சமத்து. ஆளை விடு...... ஒரே ஓட்டமாய் ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒடியே போயிடுறன்.//
அட! அதுக்காக தாத்தாவ பேரன்னா சொல்ல முடியும்? ;)
-மதி
/பயங்கர போர்./
இன்னாடா இது; இன்னிக்குச சடையனுக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகணும்... விக்ரத்தோட தனிநபர் பயங்கரவாதப்படமா இல்லே தேசிய இராணுவத்தோட போர்ப்படமா, இது? ஆளுக்காள் காலுக்குக் கால் மாத்திப்போட்டுக் குழப்புறீங்களே!!! அயங்கார் எண்டாலும் ஒரு துப்பாகி வெச்சுத்தான் சுடுவான்; அபயங்கார் எண்டாலும் ஒரு துப்பாக்கிதான் வெச்சுச்சுடுவான். இந்தத்தனிநபர் பயங்கரவாததுக்கெல்லாம் போயி வாஞ்சிநாத ஐயர் லெவல்லையா படமும் பப்படமும் எடுப்பார்கள்? சடையன் ஏற்கனவே குழம்பிப்போயிருக்கிறான்; இன்னும் குழப்பாதீங்க கனடா தெய்வத்தாயிங்களா!
சதா போன்ற பெண்கள்தான் லஞ்சம் கொடுத்து, காரியமும் சாதித்து, அன்னியனிடம் இருந்தும் தப்பிச் செல்கிறார்கள். பெண்களை சாடியிருப்பதை தவற விட்டு விட்டீர்களே?
வர வர படம் பார்க்காமலே விமர்சனம் எழுதலாம் என்று எனக்குத் தோன்றுகிறது ;-)
//கனடா தெய்வத்தாயிங்களா!//
:))
தனிநபர் ஒழுக்கம் இந்தியாவுக்குதானே வேண்டும் எண்டு சங்கர் சொல்லியிருக்கிறார். இலங்கைக்கு இல்லையே. ஏன் வன்னி ஆளுங்க பின்னி எடுக்கிறாங்க?
போஸ்டன் பாலா, பெண்கள் லஞ்சம் கொடுத்துக் காரியம் சாதிப்பார்கள் என்பதிலும் விட எல்லாப் பொதுமக்களும் லஞ்சம் கொடுத்துக் காரியம் சாதிப்பார்கள். ஆனால் பெண்களின் குற்றங்களை அவர்களைக் காதலிக்கும் ஆண்கள் மிக இலகுவில் மறந்து போய் விடுவார்கள். பெண்கள் ஆண்களை மன்னிப்பதிலும் விட, ஆண்கள் பெண்களை மன்னிப்பது அதிகம் என்றே நான் நம்புகின்றேன். பெண்கள் கொஞ்சம் முகத்தைத் தூக்கிக் கொண்டாலே ஆண்களால் தாங்கிக்கொள்ள முடியாது. இது காதலிக்கும் வரைதான்.
பாலமுருகன், என்ன இப்படிக் கூறிவிட்டீர்கள். தனிநபர் ஒழுக்கம் எங்கும் வேண்டும்.
தங்கமணி //கனடாத் தெய்வங்களா?\\
பெயரிலி, அன்நியன் தனிநபர் ஒழுக்கத்துக்கான படம்தான். சங்கர் எல்லா லெவல்லேயும் இந்தியாவைத் திருத்த முயல்கின்றார் என்று நினைக்கின்றேன். சும்மா பாருங்க நல்ல கலர்புல்லா இருக்கு. உடம்புக்கு ஒத்துவராது எண்டு நினைக்காதீங்க. நாம பண்ணுற எல்லாமே உடம்புக்கு ஒத்துவருதா என்ன?
Mathy (*_*)
பெயரிலி... என்னை எதுக்காச்சும் இங்கே கூப்பிட்டீங்களா? கூப்பிட்டா மாதிரி தெரிஞ்சிச்சு.. அதான் கேட்டேன்.
Very nice critic.
Hello pretty young lady,
"மொத்தத்தில் பார்ப்பண்ய வாழ்க்கை முறையை நன்றாகவே நக்கலோ நக்கல் அடித்திருக்கின்றார்கள்"
பார்ப்பன சமுதாயத்தை ஓவராகவே தூக்கி நிறுத்துகிறார் சங்கர் என்று எல்லோரும் சாமி வந்து ஆடும் இன்னேரத்தில் நீங்கள் மாறுபட்டக் கருத்தை சொல்லியிருக்கிறீர்கள். நான் இன்னும் இப்படத்தைப் பார்க்கவில்லை. பார்த்ததும்தான் தெரியும் யார் சரியாக கூறியிருக்கிறார்கள் என்று.
"இனி ஆக, இணையத்தில மாயமாப் போய்வரத்தான் ஒரு வரம் உங்களுக்குத் தேவை"
இடாலிக்ஸில் எழுதியதை மட்டும் படியுங்கள். புரியும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment