Wednesday, June 15, 2005

உஷ்



Nirvana creation இன் குறும்படங்களில் ஒன்றான "உஷ்" தற்போது பார்வைக்கான இணையத்தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. 2000ஆம் ஆண்டு காலச்சுவட்டில் வெளியான "வடு" எனும் எனது சிறுகதையைத் தழுவியே இந்த "உஷ்" குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களிடமிருந்து விமர்சனங்களை எதிர்பார்க்கின்றேன். குறை நிறைகளை மற்றவர்கள் தெரியப்படுத்தும் போதுதான் குறும்பட உலகின் ஆரம்ப நிலையில் இருக்கும் எங்களல் முன்னேற முடியும் என்று நம்புகின்றேன். பார்க்க முடிந்தவர்கள் பார்த்து தயவுசெய்து தங்கள் விமர்சனங்களை தயங்காமல் தாருங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

www.nirvanacreations.ca

27 comments:

சயந்தன் said...

எங்கை இணைச்சிருக்கென்று சொல்லாமல்.. இதென்ன?

கறுப்பி said...

சயந்தன் தம்பி கீழ என்ர இணையத்தளத்தைப் போட்டிருக்கிறன் காணேலையோ?
www.nirvanacreations.ca

ஏன் எல்லாரும் சண்டை பிடிக்கிற "மூட்" இல இருக்கிறியள்?

-/பெயரிலி. said...

/சண்டை பிடிக்கிற "மூட்" இல இருக்கிறியள்?/
இனி நில்லுங்கோடா மக்காள் ;-)

மிச்சம் படத்தைப் பாத்துப்போட்டு வந்து..

சயந்தன் said...

போட்டிருக்கென்ன..

ஹி ஹி ஹி..

இளங்கோ-டிசே said...

கறுப்பி, நல்ல விடயம்!

கறுப்பி said...

கவனிக்க பெயரிலி, கதிர்காமஸ்!!!!

என் குறும்படத்தைப் பற்றி நன்றாக விமர்சிப்பவர்களுக்கு எனது குறும்படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

சயந்தன் said...
This comment has been removed by a blog administrator.
சயந்தன் said...

//என் குறும்படத்தைப் பற்றி நன்றாக விமர்சிப்பவர்களுக்கு எனது குறும்படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு வழங்கப்படும்//

சுப்பர் படம். அந்த மாதிரி.

(ஆனால் எனக்குத்தான் படம் வேலை செய்யுது இல்லை.)

கறுப்பி said...

Hi sayanthan you need quick time.
go to this web and download.

www.apple.com/quicktime

-/பெயரிலி. said...

மனுசியில வர்ற மனுஷன் மாதிரி வேசமில்லாட்டில், நடிக்கிறன். அதில, உங்களுக்கு ரெண்டு சாத்தும் காமாஸ்செர்ரீக்கு ரெண்டு சாத்தும் வர்ற மூண்டு சீன் இருக்கோணும். இது கட்டாயமான தண்ணியில்லாத குளியற்காட்சி, பௌதீகவிதி துறந்த சண்டைக்காட்சி மாதிரியான கட்டாயம்

கறுப்பி said...

//மனுசியில வர்ற மனுஷன்\\ he he

ரமணீதரன் தாங்கள் கே(கெ)ட்ட பாத்திரம் தருவதற்கு டபிள் ஓ.கே. எதற்கும் தங்கள் படங்கள் சிலவற்றை அனுப்பி வையுங்கள், கமெராமானிடம் கொடுத்து தங்கள் முகம் கமெராவிற்கு ஒத்து வருமா என்று கேட்க வேண்டும்.

SnackDragon said...

/ நன்றாக விமர்சிப்பவர்களுக்கு எனது குறும்படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு வழங்கப்படும்//
கறுப்பி என்ன எங்களை தீர்த்துக்கட்ட இதுதான் ஒரே வழி என்ற முடிவுக்கு வந்திட்டீர்களா?
(நல்ல வேளை இந்த விஷய்ம் செயமோகனுக்குத்தெரியாது; இல்லையெனில் யார் அவரோட போட்டி போடுவது நடிக்க ;-))
/ இது கட்டாயமான தண்ணியில்லாத குளியற்காட்சி, பௌதீகவிதி துறந்த சண்டைக்காட்சி மாதிரியான கட்டாயம்/
எனக்குச் சாத்துனா பரவாயில்லை. தரையில் ஒரு ஸ்பூன் தண்ணி ஊத்தி அதில் பெயரிலி நீச்சல் அடிக்கிறமாதிரிம், டூப் போடாமல் ஒரு 45 அடுக்கு மாட்யில் இருந்து குதிக்கிற மாதிரியும் முறையே 1+1 எண்டு 2 காட்சிவைத்தால் படத்தை 100 நாட்கள் நான் ஓட்டித்தரேன். :-p

கறுப்பி said...

பகிடி காணும் கதிர்.. படத்தைப் பாத்திட்டு உண்மையான விமர்சனத்தைச் சொல்லும்

ரவி ஸ்ரீநிவாஸ் said...

i downloaded quicktime as well as the movie.but it does not seem to work.

Thangamani said...

படம் பார்த்தேன். நன்றாக இருந்தது. குழந்தைகளுக்கு செல்லம் கொடுப்பதைவிட அவர்களுக்கு செவி கொடுப்பது முக்கியம் என்பது ஒரு புறம். இருவரும் வேலைக்குச் செல்லும் சூழலில் புதிய ஆபத்துக்களை கண்டுணரவும், அதை தவிர்க்கவுமான அறிவினையும் பெற்றிருக்க வேண்டும் என்பதும் முக்கியமானது. மற்றபடி இதை தனிக்குடும்பம், பெண்கள் வேலைக்குச் செல்வது இவற்றைக் கண்டிக்கவும் சிலர் பயன்படுத்த முயலலாம். அதற்கு இம்மாதிரியான குழந்தை-பாலியல் முறைகேடுகள் கூட்ட்டுக்குடும்பத்திலும், குடும்ப உறுப்பினகளாலும் தான் பெருமளவில் செய்யப்படுகின்றன என்பதையும் நினைவில் கொள்ளுதல் நலம். மற்றபடி ஒளிப்பதிவு நன்றாக இருந்தது. திரைக்கதை கூட ஓகே.

கறுப்பி உங்களது முயற்சிக்கு பாராட்டுதல்கள்.

Maya said...

Hello
I have seen your movie "Manushi".I would like to give my comments in Tamil. But i don’t have Tamil fonts or other tools. Sorry for that .
First I will start with Positive comments.
1) Camera and editing are good.
2) The theme is good.
3) Heroine acted very well and showed her expression wherever and whenever needed.
4) Good start and i wish you all the best for the upcoming movies.
Suggestions/-ve points (i felt)
5) Almost all the scenes except the climax the guy who acted as husband always irritating with his silly action / mannerism’s Is it a director’s idea or the actor’s character??
6) It would be much more better and touching at the end if the same family with two kids and the women taking care of kids + the regular activities in the family.
7) Also the place of the theme would be good if you show a middle class family or low class family instead of a big house equipped with all the facilities.
8) What causes her hip pain?? Is it because of the workload?? If yes the number of shots taken for that are less.

I will post my comments for the rest of you movies later

Regards
Maya

இளைஞன் said...

வணக்கம் கறுப்பி,

உங்கள் மின்னஞ்சல் முகவரியை ilaignan at web dot de என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட முடியுமா?

Mookku Sundar said...

இனிய சுமதி,

இப்போதுதான் பார்த்தேன். நன்றாக இருக்கிறது. ஆனால் மனுசியில் இருந்த class இதில் இல்லை. கதாபாத்திரங்கள் வள வளவென்று பேசிக் கொண்டே இருக்கிறார்கள். முழுநீளப்படங்களை விட குறும்படங்களில் காட்சிப்படுத்தல் - visuals ரொம்ப முக்கியம் என்பது என் கருத்து. உங்களுக்கு கிடைத்த காமிராக்காரரை வைத்து, இதை இன்னும் கொஞ்சம் நன்றாக செய்திருக்கலாம். எனினும் உங்கள் முயற்சிக்கும் உழைஒப்புக்கும் வாழ்த்துகள்.

காமெடியன்/ வில்லன் வேடம் ஏதாவது இருந்தால், என்னை அணுகவும். இலவசமாக நடித்துத் தருகிறேன். :-)

தமிழில் பல நல்ல சிறுகதைகள்/கவிதைகள் குறும்படமாக்ககூடிய வகையில் உள்ளன. இது சம்பந்தமாக முன்னர் நான் கிறுக்கியது இங்கே:

http://www.geocities.com/sundar23/poems2.html

Mookku Sundar said...

மன்னிக்கவும்.

தவறான இணைப்பு

http://www.thinnai.com/poems/pm0525032.html

Ganesh Gopalasubramanian said...

வலைப்பதிவுகளில் புத்தக மீமீ நடப்பது தங்களுக்கு தெரிந்திருக்குமென்று நினைக்கிறேன். தங்களின் பெயரை நானும் பரிந்துரை செய்கிறேன்.தங்களின் அனுபவங்களையும் புத்தகங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அன்புடன்
கோ.கணேஷ்

என்னுடைய பதிவுக்கு இங்கே சுட்டவும்

Ganesh Gopalasubramanian said...

ஏற்கனவே பதிவு போட்டுட்டீங்க அதனால வேற ஒருத்தரை என் சார்பில பரிந்துரைக்க வேண்டியது உங்க பொறுப்பு

கறுப்பி said...

விமர்சனங்களுக்கு நன்றிகள்.

பெற்றோர் தமது இயந்திர வாழ்க்கையில் பிள்ளையின் மனவலியை உணரமுடியாமல் போய் விட்டார்கள் என்பதைச் சொல்ல முனைந்தேன். தாயின் பாத்திரத்தை வீட்டிற்குள் இருந்து அலுத்துப் போய் விட்ட ஒரு பெண்ணாகக் கொண்டு வர முனைந்தேன். தாய் தந்தை இருவருமே நல்லவர்கள். ஆனால் உலகம் தெரியாதவர்கள். எல்லோரையும் நல்லவர்களாக நம்புபவர்கள் என்பதைக் காட்ட முனைந்ததால் அதிக வசனங்களை எழுதி விட்டேன். குறும்படத்தை வெளியிட்ட பின்னர் பார்க்கும் போது அந்தத் தவறு தெரிந்தது. நான் மேடை நாடகத்தில் இருந்து வந்தவள். அதன் தாக்கம் எனது தொடக்கக் குறும்படங்களில் இருப்பதை உணர்கின்றேன். பல மாதங்கள் செலவு செய்து எடுத்த குறும்படம் “உஷ்’ ஒரு சில நாட்களில் வந்த எனது ஐடியாவை வைத்து எடுத்த குறும்படம் “மனுஷி”. "உஷ்" ஐவிட "மனுஷி" பலரின் பாராட்டைப் பெற்றது. காட்சிப்படுத்தலும் முகபாவங்களும் இறுக்கமான காட்சியமைப்பும் மிகவும் முக்கியம் என்பதை தற்போது உணர்ந்து கொண்டுள்ளேன். படத்தைப் பார்த்த போது குறும்படங்கள் மட்டுமல்ல முழுநீளத்திரைப்படத்தைக் கூட மிகக் குறைந்த திரைவசனங்களுடன் தரமுடியும் என்பதை "Spring summer winter" பார்த்து அறிந்து கொண்டேன்.

மீண்டும் விமர்சனம் தந்த அனைவருக்கும் நன்றிகள்.
எனது குறும்படங்களின் வரிசை

மனமுள்
இனி
உஷ்
சப்பாத்து
மனுஷி

தற்போது இயக்கத்தில் மூன்று குறும்படங்கள் இருக்கின்றன. இரண்டு
10 நிமிடத்திற்குள்ளும், ஒன்று 30 நிமிட நேர அளவைக் கொண்டுள்ளது.

சினேகிதி said...

கறுப்பி நேற்று TVI ல் முல்லையூர் பாஸ்கரனின் ‘Blink of an eye’ ம் ‘Abuse’ ம் பார்த்தேன்.நீங்கள் உங்கள் படைப்புகளை அனுப்பினீர்களா ஒளித்தடம் நிகழ்ச்சிக்கு?

ஜெயச்சந்திரன் said...

கறுப்பி தங்கள் குறும் படம் பார்த்தேன். நன்றாக இருந்தது. குறும் பட இலக்கணம் எதுவும் தெரியாது. சொல்ல வேண்டிய விடயம் புரிகிறது.

கறுப்பி said...

சினேகிதி, கனேடியத் தமிழ் தொலைக்காட்சி எதற்கும் இப்போதைக்கு கொடுக்கும் எண்ணம் எங்களுக்கில்லை.

ரெஷி, நான் அந்தக் குறும்படத்தைப் பார்க்கவில்லை

குமிழி, எதற்கும் இலக்கணம் என்று ஒன்று இல்லை என்றே நம்புகின்றேன். படைப்புகள் மக்களால் அனுபவிக்கப்பட்டால் அவை தரமானது என்பது என் எண்ணம். இது கதை, கவிதை, நாவல்கள், குறும்படம், நீள்படம் எதற்கும் பொருந்தும்.

நிர்வாணாகிறியேஷனின் "மனமுள்",
"மனுஷி", "இனி", "உஷ்" ஆகிய குறுந்திரைப்படங்கள் தற்போது எமது இணையத்தளத்தில் பார்வைக்கு உள்ளன.

SnackDragon said...

http://karthikramas.blogspot.com/2005/06/blog-post_20.html

கறுப்பி said...

yes thanks