Tuesday, June 14, 2005
கவிதை.
நான் பஸ்ஸிற்காக காத்து கிடக்கின்றேன்.
வார இறுதி நாட்களில்
வழமையிலும் விட பஸ் சேவை குறைவாகவே இருக்கும்.
கைக்குள் 2டொலர் 50 சதங்கள் குளிர்ந்தபடி.
இதயம் புரிந்து கொண்டு வேகமாக அடித்துக் கொள்கின்றது.
கிடைத்த நாட்களைக் கணித்தபடி
கோடையின் உச்சத்தில் திளைக்கும் சிறுவர்கள்
சைக்கிளில் சுத்திச் சுத்தி வட்டமிடுகின்றார்கள்.
அரைகுறை ஆடையில் பெண்களும் சிவந்தபடியே..
வீட்டு வாசல்கள் எல்லா வருடங்களையும் போல்
பூக்களால் நிறைந்திருக்கின்ற.
வீதியின் புழுதி மணம் ஊரை நினைவு படுத்துகின்றது.
எல்லோரும் அவசரமாக எங்கோ பயணித்துக் கொண்டிருக்கின்றார்கள்,
இவர்களில் யாருக்கேனும் தெரியுமா
எனது பயணத்திற்கான காரணம்?.
அவன் சொல்லுவான்;
இப்போதெல்லாம் என் பேச்சில்
மரணம் தட்டுப்படுவதாக.
நிச்சயம் வருந்துவான், தடுத்திருக்கலாம் என்றெண்ணி.
பெண்களின் தற்கொலைக்கு ஆயிரம் காரணமுண்டு,
என்னுடையதற்கானதை
உங்களுக்குத் தகுந்தபடி
நீங்களே பொருத்திக் கொள்ளுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
46 comments:
கறுப்பி "பெண்களின் தற்கொலைக்கு ஆயிரம் காரணமுண்டு. என்னுடையதற்கானதை
உங்களுக்குத் தகுந்தபடி
நீங்களே பொருத்திக் கொள்ளுங்கள்" எண்டு சொல்லியிருக்கிறியள்; ஆராவது வேணுமெண்டு வம்புக்கு வந்து "ஆண்களின் தற்கொலைக்கு ரெண்டு காரணமுண்டு; ஒண்டு, பெண்கள்; ரெண்டு, கறுப்பியின் கவிதை" எண்டு அறுவையா எழுதிப்போட்டுப் போனாலும் போயிடுவாங்கள்.
:-))
//ரெண்டு, கறுப்பியின் கவிதை//
:-)))
ஏதோ ஒரு விதத்தில ஒரு ஆணைக் கொண்ட திருப்தி எனக்குள் இருக்கும் பெயரிலி. அதற்காக நான் ஆயிரம் கவிதைகள் எழுதத் தயார்.
/ஏதோ ஒரு விதத்தில ஒரு ஆணைக் கொண்ட திருப்தி எனக்குள் இருக்கும்/
ஐய்யய்யோ! ஒரு ஆணை உங்களுக்குள் கொண்டிருக்கிறியளெண்டால், கவிதையை "ஆண்களின் தற்கொலைக்கு ஆயிரம் காரணமுண்டு. என்னுடையதற்கானதை
உங்களுக்குத் தகுந்தபடி
நீங்களே பொருத்திக் கொள்ளுங்கள்" எண்டெல்லோ முடிச்சிருக்கவேணும்?
கறுப்பியின் கவிதையிலிருப்பது சொற்குற்றமா, பொருட்குற்றமா எண்டு சொல்லுறவைக்கு ஒரு gmail விண்ணப்பமும் இலவசமாய்த் தரப்படாது ;-)
/ஆணைக் கொண்ட திருப்தி எனக்குள் இருக்கும/
பெயரிலி , அது "ஆணைக் கொன்ற திருப்தி எனக்குள் இருக்கும்" என்று நினைக்கிறேன்.
நியாமாய்,
" ஆண்களின் கொலைக்கு ஆயிரம் காரணமுண்டு
ஆனால் நான் கொன்ற ஆணுக்கு என் கவிதைகளே காரணம்
என்பதை நீங்களே பொருத்திக் கொல்லுங்கள் "
என்று முடித்திருக்கலாம். :-P
/பெயரிலி , அது "ஆணைக் கொன்ற திருப்தி எனக்குள் இருக்கும்" என்று நினைக்கிறேன்./
அதுசரி!! அது விளங்காமைத்தானே நான் எழுதினனான்!! ;-)
செர்ரீ, தம்பீ, என்னப்பூ இப்பிடி சீரியஸாகிப்போய்ச் சறுக்கிப்போட்டியே. :-(
கதிர்காமாஸ் பெரிய கண்டு பிடிப்பு. பெயரிலி சும்மா ஜௌ;ளு விடுறார் விளங்காத மாதரி நடிக்காதேம் சரியா. அது ஈழத்துத் தமிழாக்கும்.
அய்யோ கறுப்பி,
இலங்கைத்தமிளிலே 'ஜொள்ளு விடு' என்ன அர்த்தமோ எனக்கு தெரியாது.ஆனால் சென்னைசிங்காரத்தமிழிலே அதற்கு ஒரே அர்த்தம்தான், அது அவ்வளவு நாகரீகமானது அல்ல. அது என்னையோ பெயரிலியையோ பார்த்து சொல்லக்கூடியதல்ல என்பதால் தாங்கள் தயவு செய்து அதை கைவிட்டு வேறு ஏதாவது எழுதுங்கள் மன்றாடி மல்லாடிக்கொள்கிறேன்.
அய்யோ கதிர் செர்ரீ காமாஸ், இப்பிடியுமா, கறுப்பி சேம்சைட் கோல் உனக்குப் போடுவார். ஆனா, கறுப்பி எள்ளைத் தேவையில்லாமல் இங்கை இழுத்ததையிட்டு ஆர்தாரமெண்டு காட்டி விளக்கம் தர ஒரு மணிநேரம் அவமில்காசம் தாறன். சரியான எள்ளு விளக்கம் அவர் தாராமப்போனால், எள்ளுச் சார்பாக, மைக்கல் ஜக்ஸன் ஏறின கோட்டில வழக்குத் தொடுக்க இருக்கிறன்.
ஐயோ எனக்கினி நித்திரை வாராது அது என்ன என்று அறியமட்டும்.
அத எப்ப செய்யப்போறியள் எண்டு சொல்லவே இல்லை
/ஐயோ எனக்கினி நித்திரை வாராது அது என்ன என்று அறியமட்டும/
அப்பாடா.. இன்றிரவு நிம்மதியாய் தூங்குவேன் :-)
ஏதோ மனம் சரியில்லாமல் தற்கொலை செய்யலாம் போல இருந்துது. சரி வலைப்பதிவு நண்பர்களுக்கு ஜாடையில சொல்லிப் போட்டுச் செய்வம் எண்டா இப்பிடிப் போட்டுக் கொல்லுறியளே. என்ர தற்கொலைக்கு பெயரிலியும் கொஞ்சம் காரணம் என்பது யாவருக்கும் அறியத் தருகின்றேன்.
//ஆர் தாரமெண்டு//-/பெயரிலி ..இப்படி எழுதினால் அதே கோர்ட்டில் கறுப்பியெல்லோ கேஸ் போடினம்.
/ஐயோ எனக்கினி நித்திரை வாராது அது என்ன என்று அறியமட்டும்./
என்ன கறுப்பி, பகிடியே விடுகிறியள்?
நீங்கள்தான் துடக்கத்தில, "பெண்களின் தற்கொலைக்கு ஆயிரம் காரணமுண்டு. என்னுடையதற்கானதை
உங்களுக்குத் தகுந்தபடி
நீங்களே பொருத்திக் கொள்ளுங்கள்" எண்டு எழுதியள்.
இப்ப பத்து நிமிசத்தில என்னடாவெண்டால், சூசைட் மிஸனைக் நடிகை கோல்சீட் அடாவடித்தனமாக் கான்ஸல் பண்ணினது போல கான்ஸல் பண்ணிப்போட்டு, "ஏன் தற்கொலை பண்ணப்போனனானெண்டு காரணம் தெரியாமப்போனால், எனக்கினி நித்திரை வாராது அது என்ன எண்டு அறியுமட்டும்" எண்டு பிளேட்டை மாத்திறியள்?"
உந்தப்பகிடி சரிவராது. சொன்னா சொன்ன சொல்லுக்கு ஒரு நியாயம் வேணும். அதுதான் மரியாதை. நீங்கள் தற்கொலை செய்யத்தான் வேணும். நீங்கள் கேட்டுக்கொண்டபடி, நாங்கள் ஒண்டென்ன ஒம்பதினாயிரமே கொன்ப்ரன்ஸ் போட்டு, உங்கட தற்கொலைக்குக் காரணகாரியம் கண்டுபிடிப்பம். எங்கட நலத்துக்காண்டி தற்கொலை செய்யப்போற உங்களுக்காண்டி, இதுகூடச் செய்யாட்டி, நாங்கள் இருந்தென்ன உங்களைப்போல சூசைட் பண்ணி இறந்தென்ன?
நீங்கள் கட்டாயம் நீங்கள் எழுதின கவிதைக்கு உயிர் கொடுக்கவேணும் (லிற்றரரியா).
;-)
///ஆர் தாரமெண்டு//-/பெயரிலி ..இப்படி எழுதினால் அதே கோர்ட்டில் கறுப்பியெல்லோ கேஸ் போடினம்./
அய்யோ அய்யோ அய்யோ! காமாஸ் உனக்கு என்ன ராசா இண்டைக்கு நடந்துது. போன திங்கள் ரெலிபோனில கதைக்கேக்ககூட, சரியா விளக்கமுள்ளது மாதிரித்தானே கதைச்சுக்கொண்டிருந்தாய். இண்டைக்கு என்ன நடந்துபோச்சு உனக்கு? ஒரு ஓவரிலையிலே என்னை ரெண்டு விக்கட் எடுக்க வைக்கிறியே.... ஆர் தாரமெண்டது தட்டான் இல்லை; தட்டினதுதான் ;-)
/எண்டா இப்பிடிப் போட்டுக் கொல்லுறியளே./
கறுப்பி இதுக்கு நீங்கள் எங்களை பாராட்ட அல்லோ வேண்டும?. உங்கலுக்கு எலி மருந்தோ, கயிற்றுச்செலவோ மிச்சம். வையுறீகளே?!!!
இஞ்ச பெயரிலி இது பகிடி இல்லை. நான் அக்சிடென்ரில, கிக்சிடென்ரில மண்டையப் போட்டிட்டா நீர் என்னைக் கொண்ட குற்ற உணர்வில வாழ்க்கை முழுக்க மனம் நோந்து துடிக்கப் போறீர். கவனம்.
உமக்கும்தான் கதிர்காமாஸ்
பெயரிலி, கறுப்பியின் சத்தத்தைக் காணோம் ; கதை முடிஞ்சிட்டத்தெண்டு நினைக்கிறன். ;-) மிஸ்ஸன் சக்ஸஸ்.
/போட்டுச் செய்வம் எண்டா இப்பிடிப் போட்டுக் கொல்லுறியளே. என்ர தற்கொலைக்கு பெயரிலியும் கொஞ்சம் காரணம் என்பது யாவருக்கும் அறியத் தருகின்றேன்./
உது நல்ல கதை; தான் தற்கொலை எண்டு வெளிக்கிட்டா, இப்ப பாத்தால், ஏண்டா இப்பிடிப் போட்டுக்கொல்லுறியளே எண்டு Gospel soul music இலையிருந்து Funky Rap Music இலை தாவிப் பாடி நிக்கிறா. உது பிழையான கதை. இத்தினை சனம் பாத்துக்கொண்டிருக்குது; ஆதாரமில்லாமலே நாங்கள் சொல்லுவம். கூட, பெயரிலியும் கொஞ்சம் காரணம் எண்டு சொன்னீங்கள்; கடவுளே கொஞ்சம் எண்டு எழுத்துப்பிழை அளவுப்பிழை இல்லாமல் எழுதினீங்கள். இல்லாட்டி, ஏற்கனவே வசந்தன் போடுற கேசுக்கு அவுஸ்ரேலியாவும் உங்களால வர்ற கேசுக்கு கனடாவும் அலைஞ்சே கேஸான ஈழத்தமிழனாப்போயிருப்பன்.
// நான் அக்சிடென்ரில, கிக்சிடென்ரில மண்டையப் போட்டிட்டா //
கறுப்பி இப்படி கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் பேசினால் எப்படி;நீங்கள் இடிக்கபோய் வண்டிக்கேதாவது ஆகிட்டால் இன்சூரன்ஸ் எகிறிடுமே அவனுக்கு. பாவம். வேறு ஏதாவது ஓசியுங்கள்.
/நான் அக்சிடென்ரில, கிக்சிடென்ரில மண்டையப் போட்டிட்டா நீர் என்னைக் கொண்ட குற்ற உணர்வில வாழ்க்கை முழுக்க மனம் நோந்து துடிக்கப் போறீர்./
ஆர் நானோ, உங்கட மண்டையை அக்சிடெண்டில இடிச்ச வாகனமெல்லோ தான் பட்ட அடியில வாழுங்காலம் முழுக்கத் துடிக்கும். அக்சிடென்ரைத் தவிர்க்க ஏலாது; ஆனா, kickசிடெண்டைத் தேவையிலாம டிஜேயை எங்கையடா bar பார் எண்டு வறுக்கிறதுமாதிரி இல்லாம நிதானமா இருந்தாத் தவிர்க்கலாமெல்லே?
//ொஞ்சம் காரணம் எண்டு சொன்னீங்கள்; கடவுளே கொஞ்சம் எண்டு எழுத்துப்பிழை அளவுப்பிழை இல்லாமல் எழுதினீங்கள். // :-)))
பேசமா ப்ளொக் எழுதுவதுக்குப் பதிலா "சூசைட் ஃபார் டம்மிஸ்" எண்டு எழுதியிருந்தா இன்னேரம் கறுப்பியிடம் விற்றிருக்கலாம்.
பெயரிலி எனக்கொருக்கா ஒரு ஈ-மெயில் உடனடியாப் போடும். நான் வீட்டை போகப் போறன் அதுக்கிடையில ஒண்டு சொல்ல வேணம்.
பயப்பிடாமல் போடும் நான் வெறும் கறுப்பிதான்
sbalaram@ieccan.com
ஈமெயில் விலாசத்தை ஒருக்கால் அனுப்பி வையுங்கோ
peyarili1000 @ yahoo.com
Sumathy,
Thanks for the mail.
Sorry to hear your situation. I did not know that the situation is such serious.
I better stop joking on this issue.
Hope things will be better for you.
OOPS!
cut and pasted in a wrong place :-(
//I better stop joking on this issue.// me too :-(((
Sry Karuppy..
வலைப்பதிவில் கெட்ட வார்த்தைகள் பாவிப்பதற்கு அனுமதியுண்டா? அறியத் தரவும். எனது கைவிரல்கள் துடிக்கின்றன அடிப்பதற்கு (கெட்ட வார்த்தைகளை)
you guys are crazy..(*_*)
உங்கள் பதிவு; உங்கள் சொற்சுதந்திரம்; நீங்கள் விரும்பியதைச் சொல்ல வசஹ்டியுண்டு. நீங்களிருக்கும் மனநிலையில் இதிலே நாங்கள் என்ன சொல்வது? எல்லாம் சரியாகுமென்று நம்பிக்கையுடன் இருங்கள். உங்களுக்காக எங்கள் பிரார்த்தனை எப்போதுமுண்டு.
கறுப்பி... உங்கள் கவிதை அருமை (உங்கள் நண்பர்கள் உங்களை சீண்டினாலும்)
கறுப்பி... உங்கள் கவிதை அருமை (உங்கள் நண்பர்கள் உங்களை சீண்டினாலும்)
என்ன முகமூடி,
கறுப்பி இப்படியான ஆழமான கவலையிலே தற்கொலை எண்ணத்திலே இருக்கிறபோது, வந்து கவிதை நன்றாக இருக்கிறது என்று சொல்லி வாழ நம்பிக்கை கொடுக்கிறீர்கள். கறுப்பி, முகமூடி சொன்னதைக் கேட்காதீர்கள். சாகிறவளுக்கு சமுத்திரம் கணுக்காலளவு. துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே என்ற திடமனது உங்களுக்கு வர, எல்லாம் வல்ல அந்த காஞ்சி காமகோடியின் கேடிசிஷ்யர்கள் பார்தாரவிந்துகளைச் சேவித்துக் கொல்கிறேன்
kreep ur gr eat poe try flooring!!
முகமூடி நன்றி. உங்களுக்குக் கவிதை எழுதவாவது நான் உயிரோட இருக்கவேணும் எண்டு முடிவெடுத்திட்டன்.
பெயரிலி சிறீதரனை எனக்குச் சின்னப்பிள்ளையிலேயே தெரியும். இல்லையில்லை நான் சின்னப்பிள்ளையா இருக்கேக்க என்னைத் தூக்கி வளர்த்தவர்களில் அவரும் ஒருவர். ம்.. கேட்டுப் போடாதேங்கோ. அவர் எங்கட ஊர் தான். அவற்ற அம்மாவும் என்னர அம்மாவும் ஒரு பள்ளிக்கூடத்து வாத்திகள். நான் சிறீன்ர அம்மாட்ட சந்கீதம் படிச்சனான். நம்பாட்டிப் பாடிக்காட்டுறன். அடிக்கடி அவேன்ர வீட்டில போய் விளையாடுறனான். இப்ப எல்லாம் நினைவில வருகுது.
காதிர்காமாஸ் காலை வணக்கங்கள்.
/ நான் சிறீன்ர அம்மாட்ட சந்கீதம் படிச்சனான். நம்பாட்டிப் பாடிக்காட்டுறன/
அப்படி என்றால் கவிதை மட்டும் உங்கள் கொலை ஆயுதம் இல்லையோ; நிறைய இருக்கு கைவசம் ம்ம்.
/காதிர்காமாஸ் காலை வணக்கங்கள்./
என்ன டைப்போவா? கொலை வணக்கங்கள்? அதே இங்கும் :-)
காதிர்காமாஸ்,
இஞ்ச காலமை வெள்ளணைத் துவங்காதேம். எனக்கு நிறைய வேலை இருக்கு. நான் ஒரு பாட்டுப் பாடி விரைவில பதிவில ஏத்தப் போறன் என்பதைத் தாழ்மையுடன் வலைப்பதிவாளர்களுக்கு அறியத் தருகின்றேன்.
Good
/நம்பாட்டிப் பாடிக்காட்டுறன். அடிக்கடி அவேன்ர வீட்டில போய் விளையாடுறனான்./
அப்ப அவைவீட்டில அக்கா, தம்பிமார் எல்லாரையும் தெரியுமெண்டிறியள். தனியக் கடிதம் போடுறன்.
இஞ்சை கார்காலன்தாஸ், காலமை கறுப்பிக்குக் கரைச்சல் குடுக்காதை தம்பி. நேற்று கவிதை தற்கொலை; இண்டைக்குப் பாட்டு கொலை; நாளைக்கு எதுக்கு massmurder எண்டு தெரியாமல், சீரியல்கொலையானால், மஹாபலி நான், அடுத்த பலி நீர். வேலியல சும்மா போற ஓணானை ஏன் வேலையில்லாமப் பிடிச்சு சட்டைக்கழுத்துக்குள்ளை போடுறீர்? ;-)
கறுப்பி, உங்கள் நிலைமை இப்படி இருக்கும் என்று எனக்கு தெரியாது. என்னை மன்னித்து விடுங்கள். ப்ளீஸ்!!!!
எனக்குத் தெரியும் கார்த்திக் உங்களுக்குப் பயம் வந்திட்டுது. கறுப்பி உயிரோடை இருக்கிறனோ இல்லையோ எண்டு செக் பண்ணிப் பாக்கிறீங்கள் என்ன?
cheque எண்டால், என்ரை எக்கவுண்டுக்கு
செக்கெண்டால், கறுப்பி வைச்சிருந்தாலுஞ் சரி, காமாஸ் வச்சிருந்தாலுஞ் சரி. எனக்குக் கவலையில்லை.
கறுப்பி, செர்ரீகாமாஸ் எழுதத்தான் ஞாபகம் வந்துது. உங்கட நேற்றைய பிரச்சனை ஒரு சிக்கலுமில்லாமற் தீர்ந்திருக்குமெண்டு நினைக்கிறன். எதுக்கும் மனதைத் தளரவிடாதீங்கோ. காலம் எல்லாத் துக்கங்களையும் ஆற்றும் மருந்து.
பெயரிலி என்ன இருந்தாலும், கறுப்பிக்கு இப்படி ஆகியிருக்ககூடாது; சே எவ்வளவு வேதனையாக இருக்கிறதுஎனக்கு தெரியுமா? கறுப்பி மனதை திடப்படுத்திக்கொள்ளுங்கள். மனிதன் இப்படித்தான் பரிசோதிக்கப்படுவான். உங்களுக்கு என் மனமார பிராத்தனை உண்டு.
காருண்யன், தற்போதுதான் தங்கள் வலைப்பதிவைப் பார்த்தேன். தாங்களும் சாவைப் பற்றி எண்ணுகின்றீர்களோ என்று படுகின்றது. எல்லாவற்றையும் ஒருமுறை அனுபவித்துப் பார்க்க வேண்டும் என்பது என் விருப்பம். "சா" என்பதை நான் ஒரு போதும் கவலையான விடையமாகக் கொள்ளவில்லை. அது ஒரு கலை. என் சாவை ஒரு விபத்தோ, கொலையோ, தீராத நோயோ செய்வதற்கு முன்னால் நானாக அனுபவித்துச் செய்ய வேண்டும் என்ற ஒரு ஆசை இருக்கிறது. அது எப்போது என்று தெரியவில்லை. தற்போது தற்கொலையை விட்டு விட்டு கொலையை ஒருக்கால் அனுபவித்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணுகின்றேன். ஆனால் கதிர்காமாஸ்சும், பெயரிலியும் கையில் அகப்படமாட்டேன் என்கின்றார்கள். தங்கள் சௌகரியம் எப்படி?
Post a Comment